NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

அந்தி நேரத்து அட்சரங்கள் - டீசர் 2

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

மழை பெய்து ஓய்ந்த மாலை வேளையில் அந்த மொட்டைமாடியும் அதை அழகாக்கும் பசுமைப்போராளிகளான செடிகொடிகளும் ஃப்ரெஷ்சாகக் காட்சியளித்தன.

அங்கே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள் அட்சரனும் வேதவதியும்.

முந்தைய தினம் அவள் கொடுத்த நாவலின் மேனுஸ்க்ரிப்ட் அவனது கையில் அச்சு பிரதியாக. ஸ்பைரலின் பக்கங்களைப் புரட்டிவிட்டு அவளை ஏறிட்டவனின் விழிகளில் ஏகத்துக்கும் அதிருப்தி.

வேதவதிக்கோ உள்ளுக்குள் பரபரப்பு!

‘ஏன் இவன் முகத்தில் இப்படி ஒரு அதிருப்தியான பாவனை? ஒருவேளை எனது எழுத்துநடை சொதப்பிவிட்டதா? அல்லது மொழியை என்னால் இலாவகமாகக் கையாள முடியவில்லையா?’

பரிதவிப்புடன் பெண்ணவள் நோக்க ஸ்பரைலை மூடிவிட்டு அவளை இன்னும் ஆழ்ந்து நோக்கியவனின் இதழோரம் வெடிக்கத் துடித்தது குறுஞ்சிரிப்பு.

“லுக் வேதா! உன்னோட மொழி நடை ஒரு கவிதை மாதிரி இருக்கு. ஆனா...” அவன் இழுத்ததில் வேதவதியின் இதயத்தில் சூறாவளி!

“ஆனா என்ன அட்சரன்? கதை நல்லா இல்லையா? நான் இன்னும் கத்துக்குட்டி மாதிரி எழுதுறேனா? எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க ப்ளீஸ்”

குரலில் இருந்த இறைஞ்சுதல் தொனி அவளது விழிகளிலும்.

அட்சரனின்  இதழில் இப்போது குறுஞ்சிரிப்பு முழுமையாய் விரிந்திருந்தது.

“சரி! ஓபனாவே சொல்லிடுறேன். உன் கதை நல்லா இருக்கு. மேலோட்டமா பாத்தா எனக்கும் பிடிச்சிருக்கு. ஆனா கதையில வர்ற ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் கல்யாணமான தம்பதிகள். அவங்களோட காதலை அழகா படம்  பிடிச்சுக் காட்ட  முடிஞ்ச உன்னால கல்யாண வாழ்க்கைய சரிவர எழுத முடியல. லவ்ல இருந்த ஸ்பார்க் கல்யாணத்துக்கு அப்புறம் மிஸ்சிங். ரொம்ப ஓப்பனா சொல்லணும்னா ‘லவ் மேக்கிங் காட்சிகள்ல’ நீ ரொம்ப திணறுற”

அவன் சொன்னதும் வேதவதியின் முகம் கன்றி சிவந்து போனது. பார்வையை அவனிடம் வைக்க முடியாமல் எங்கெங்கோ மாற்றினாள்.

அவளால் எப்படி திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையைக் கச்சிதமாகக் கதைகளில் சொல்ல முடியும்? மணமாகாத வரை அது ஒரு அழகான கற்பனை மட்டுமே! ஊடல் காட்சிகளில் பூவையும், நதியையும், கடலையும் உவமையாகச் சொல்லி ஏதோ ஒப்பேற்றிக்கொண்டிருந்தாள் என்பது அவளுக்கே தெரிந்த உண்மை.

காதலை வரையறுக்கத் தெரிந்த மனதுக்கு அதன் அடுத்தக் கட்டத்தை யோசித்துப் பக்குவமாக எழுத்துகளில் வெளிப்படுத்தத் தெரியவில்லை.

கைகளைக் கோர்த்து கோர்த்துப் பிரித்தவள் “அது... நான் இன்னும் அந்த வாழ்க்கைக்குள்ள போகல இல்லையா? அதான் ஒரு லிமிட்டைத் தாண்டி என்னால யோசிக்க முடியல. சிலர் எல்லாம் மத்தவங்க கதைய  படிச்சு அதுல இருக்குற வார்த்தைகளைப் பட்டி டிங்கரிங் பாத்து தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட சீனை எழுதிடுறாங்க. என்னால அதைச் செய்ய முடியல அட்சரன். அது என் கற்பனைக்கும், எழுத்துக்கும் அவமானம்னு நினைக்குறேன்.” என்றாள் நிதானமாக.

அட்சரன் அவளை மெச்சுதலாகப் பார்த்ததை அவள் எங்கே அறிவாள்? பார்வை முழுவதும் அவளது கரத்தில் அல்லவா பதித்திருந்தாள்!

சன்னச்சிரிப்பு அவனிடம். நிமிர்ந்து பார்த்தவளுக்குள் ஒரு கலக்கம். இதைக் காரணம் காட்டி எனது கதையை நிராகரித்துவிடுவானோ?

ஆனால் அட்சரனின் விழிகளில் இருந்ததோ அக்கறை மட்டுமே!

தலையைச் சரித்தவன் “இது உடல்சார்ந்த விசயம் இல்ல வேதா. இது ஒரு ஃபீலிங். இங்க பாரு, நீ எப்பிடி எழுதிருக்கனு…” என்றவன் காகிதங்களைப் புரட்டி அவளிடம் காட்டினான் ஒரு காட்சியை.

அவன் அவளைத் தொட்டான். அவள் வெட்கத்தில் சிவந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் பார்த்துக்கொண்டனர். பார்வையின் நீட்சியாய் அவர்களுக்குள் அழகிய உறவொன்று பூவின் இதழைப் போல மலர்ந்தது'

“இது என்னமோ ஸ்கூல் டெக்ஸ்ட் புக் மாதிரி இருக்கு பாரு. ஒரு ஆணும் பொண்ணும் இணையுற தருணத்தை வார்த்தைகளால விவரிக்கமுடியாதுதான். ஆனா வெறுமெனே ‘பார்வை’ ‘வெட்கம்’னு எழுதுறது ரொம்ப ஃப்ளாட்டா இருக்கு. அது தேடலுக்கானத் தருணம் வேதா.

அவனோட தீண்டல் அவளுக்குள்ள உண்டாக்குற மாறுதல்களை நீ சொல்லல. அவனோட கை அவ தோள் மேல படுறப்ப அங்க ஒரு நடுக்கம்  இருக்கனும். அந்த ஸ்பரிசம் அனல் காத்தா அவ உடம்புக்குள்ள ஊடுருவணும். இந்த இடங்கள்ல வசனம் கம்மியா இருக்கணும். வர்ணனை அதிகமா இருக்கணும். நீ இந்த இடத்தை அந்நியப் பார்வைல இருந்து எழுதுற. அந்தப் பொண்ணோட  உணர்வுகளுக்குள்ள இறங்கி அந்த ஸ்பரிசத்தோட ஆழத்தை உணர்ந்தா மட்டும்தான் உன்னால இந்தச் சிக்கலான பகுதிய நல்லபடியா எழுத முடியும்.”

வேதவதிக்குள் இப்போதும் குழப்பமே! அறியாத ஒன்றை எழுதுவதே சிரமம். அதை உணர்ந்து எழுது என்றால் எப்படி சாத்தியம்? என்ன தான் கற்பனை என்றாலும் அதற்கும் எல்லை இருக்கிறதே! கண்கள் காணாததை, காதுகள் கேட்காததை, மனம் உணராததை எப்படி கற்பனைக்குள் புகுத்தி அதற்கு வார்த்தை வடிவம் கொடுப்பது?

இருப்பினும் அவன் சொன்ன விதத்தில் நம்பிக்கையும் துளிர்த்தது அவளுக்குள். அதன் அடையாளமாய் கண்களில் நன்றியுணர்ச்சியோடு அவனை ஏறிட்டாள். இம்முறை தயக்கமோ பரிதவிப்போ இல்லை வேதவதியின் பார்வையில்.

அவளைக் கண்கள் கனியப் பார்த்தான் அட்சரன்.

"கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற காதல், வெறும் முத்தமும், கட்டில்ல கட்டிப் புரளுறதும் மட்டும் இல்ல மித்ரா. அது ஒருத்தரோட இன்னொருத்தரோட கரையுற வித்தை. உன்னோட ஹீரோயின் ஏன் இன்னும் ஹீரோவ யாரோ ஒரு வேத்து மனுசன் மாதிரியே பாக்குறா? அவன் விரல்கள் அவ கூந்தலோட விளையாடுறப்ப, அவளோட உலகமே அந்த ஒரு புள்ளியில ஸ்தம்பிச்சு நிக்கணும். இதெல்லாம் ஒரு பொண்ணுக்கு ஆணோட நெருக்கத்துல இயல்பா வரக்கூடிய உணர்வு. அந்த உணர்வை நீ புரிஞ்சிக்கிட்டு எழுது"

தன்னிடமிருந்த அச்சு பிரதியை வேதவதியிடம் நீட்டினான் அட்சரன்.

“எப்பவுமே உணர்வுகளைத் தீண்டாத கதைகளை வாசகர்கள் விரும்ப மாட்டாங்க. நான் ஒன்னும் செக்சை பட்டவர்த்தனமா காட்டுற மாதிரி உன்னை அடல்ட் ஒன்லி டைப் காட்சியை எழுதச் சொல்லலை. ஏன்னா செக்ஸ் வேற, 'Intimacy' வேற. உன்னோட கதைக்குத் தேவை ஆழமான ஆத்மார்த்தமான நெருக்கம். லவ் மேக்கிங் சீன்ஸ்ல அந்த ஆத்மார்த்தமான நெருக்கம் மிஸ் ஆகுது. அதைச் சரி பண்ணுனு சொல்லுறேன். புரியுதா?”

“ம்ம்! கொஞ்சமா புரியுது” கண்களில் குழப்பத்தோடும் மிரட்சியோடும் சொன்னாள் வேதவதி.

“போ… இந்தச் சீனை எல்லாம் மறுபடி எழுது. அப்பிடி எழுதுறப்ப உன் மூளையால யோசிக்காத. மனசால யோசிச்சு உணர்வுகளைச் சரிவர எழுத்துல கொண்டு வா. அந்தப் பெண்ணோட மனசுக்குள்ள இறங்கிப் பாரு, வார்த்தைகள் தானா வரும். கண்டிப்பா உன் கதை வாசகர்களோட மனசைத் தொடும்”

வேதவதி மெல்லத் தலையாட்டினாள். அவள் கைகள் தன்னிச்சையாக அவளது அச்சுப் பிரதியை வருடின. அட்சரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் ஒரு காட்சியாய் விரிந்தது.

************

கதை ஜனவரி இறுதி வாரம் வரும் மக்களே! அப்பப்ப டீசர் வரும் இது போல. 

 

1766759975-WhatsApp-Image-2025-12-26-at-80419-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : December 26, 2025 8:09 PM
(@crvs2797)
Reputable Member Member

இந்த கதையிலயும் ஹீரோயினை வைச்சு செய்யப் போறான்னு நல்லாவே தெரியுது.

😀😀😀

CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : December 26, 2025 8:29 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

வாவ். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : December 26, 2025 8:43 PM
(@kothai-suresh)
Honorable Member Member

கதைல மட்டும் தான் லவ்வா?

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 5:07 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images