சொந்தமானவர்களைக் கைநழுவ விட்டே பழகியதாலோ என்னவோ சொந்தமானது கைநழுவி விடுமோ என்ற பதைபதைப்பு; அது அஃறிணையாக இருந்தாலும் கூட! மதுரவாணி எப்போதும் அவள் தங்கும் மாடியறைக்குள் சரணடைந்தவள் அந்த ஊரின் குளிரையும் தாண்டி பயணத்தால் உண்டான கசகசப்பைப் போக்க குளிக்கச் சென்றாள். வெதுவெதுப்பான நீரில் நீராடி உடை மாற்றியவள் நீண்ட கூந்தலை நீவி விடுகையில் குடும்பத்தினரின் நினைவு மெதுவாய் அவள் மனதில் எட்டிப் பார்த்தது. இந்நேரம் அவளது வீடு அல்லோலப்பட்டிருக்கும். அம்மாவையும் அழகியையும் நினைத்தால்தான் கண்ணைக் கரித்துக் […]
Share your Reaction

