“குரைக்கிற ஒவ்வொரு நாயின் மீதும் நின்று கல்லெறிந்து கொண்டிருந்தால் நீ உன் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது”
-வின்ஸ்டன் சர்ச்சில்
இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சிலின் தலைமை அலுவலகம்…
தமிழக முன்னேற்ற கழகத்திற்காக அமைக்கப்பட்ட ‘நாளை நமதே’ என்ற தேர்தல் முழக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்த இணையதளத்தின் செயல்பாடு ஆரம்பித்த தினம் அன்று!
அந்த இணையதளமானது மக்களுடன் நேரடியாக கட்சியை இணைக்கும் ஒரு முயற்சி! அதில் அவசர உதவி எண்ணுடன் தளத்தில் பயனராக பதிவு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்றால் தங்களை முகப்புத்தகம், ட்விட்டர் மற்று இண்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் மிளிர்ந்த இணையதளம் யாழினியின் நன்மதிப்பை பெற்றுவிட அதன் சோதனை ஓட்டம் முடிந்து புழக்கத்திற்கு வந்துவிட்டது.
அதில் மக்கள் தங்கள் பகுதியிலிருக்கும் குறைகளை பதிவு செய்யலாம். வேண்டும் நபர்கள் தங்களை தன்னார்வலராக பதிவு செய்து கொள்ளலாம். கூடவே அந்த தளத்திற்கென மொபைல் செயலி ஒன்றும் அடுத்த வாரம் செயல்படவிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அது குறித்த விளக்கத்தை தள வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அளிக்க யாழினி அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினாள்.
அந்தக் கூட்டம் வழக்கம் போல வானதியின் தலைமையில் நடந்தேற கூட்டத்தின் முடிவில் யாழினி சொன்ன மாற்றங்களுடன் மொபைல் செயலி அடுத்த வாரம் முதல் புழக்கத்திற்கு வரும் என்ற உறுதிமொழியை அளித்துவிட்டு தளவடிமைப்பு பொறுப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
யாழினிக்குக் காபி கொண்டு வருமாறு தனது உதவியாளரிடம் பணித்த வானதி
“மக்கள் குறை கேட்பு பயணம் எப்பிடி போகுது மேம்?” என்று வினவ
“இட்ஸ் கோயிங் நைஸ்… இன்னைக்கு மதுரைல இருக்குற சில கிராமங்களுக்குப் போகுறதா அருளோட பி.ஏ கால் பண்ணுனார்… இது வரைக்கும் போன வில்லேஜஸ்ல அவனுக்குக் கிடைச்ச மரியாதையும் மக்கள் அவன் மேல வச்சிருக்குற க்ரேசையும் நியூசா பாக்குறப்ப சந்தோசமா இருக்கு… ஒரு பக்கம் ரூலிங் பார்ட்டி இத வழக்கம் போல கிண்டல் பண்ணுறாங்க… வெறும் நடைபயணம், மனு வாங்குறதுனு மட்டும் இருக்குறதால எந்த ஆட்சிமாற்றமும் வந்துடாதுனு நேத்து கூட அவங்க தரப்புல ஸ்டேட்மெண்ட் விட்டாங்களே! எனக்கு அவங்கள பத்தி கவலை இல்ல… இது மூலமா மக்கள் மனசுல அருள் சீக்கிரம் இடம்பிடிச்சிடுவான்… சோ அவங்க பயத்துல உளறுறதா தான் எனக்குப் படுது… நான் யோசிக்கிறதுலாம் அவனோட சேஃப்டிய பத்தி மட்டும் தான்” என்றாள் யாழினி.
வானதி வருவித்த காபியை மெதுவாய் அருந்தியவளின் முகமும் அந்தக் கவலையைப் பிரதிபலிக்க வானதியின் கண்கள் அவளது வதனத்தைக் கணக்கிட்டது.

பின்னர் சாதாரணக்குரலில் “அவரோட பாதுகாப்புக்குத் தான் உங்க கட்சியாட்கள் இருக்காங்களே மேம்! நீங்க அப்கமிங் எலக்சனை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” என்றாள்.
யாழினியின் தலை ஆமோதிப்பாய் அசைந்தது. காபியை முழுவதுமாக அருந்தி முடித்தவள்
“தேங்க்ஸ் ஃபார் திஸ் காபி… காபி தான் என்னோட லெவன் ஓ க்ளாக் சிம்ப்டம்கு எனக்கு மெடிசின் மாதிரி” என்கவும் வானதி புரியாமல் விழித்தாள்.
“இப்பிடி ஒரு சிம்ப்டமை நான் கேள்விப்பட்டதே இல்ல”
“லெவன் ஓ க்ளாக்ங்கிறத நீங்க மானிங்லயும் சேர்த்துக்க முடியாது… அத நூன்னும் சொல்ல முடியாது… இந்த ரெண்டுங்கெட்டான் நேரத்துல எனக்கு ஒரு டயர்ட்னெஸ் வரும்… அது மானிங் பாத்த வேலையால வருதா இல்ல நூன்ல ஆரம்பிக்கப் போற வேலைக்கு அறிகுறியானு மண்டை காயுற நேரத்துல ஸ்ட்ராங்கா காபி குடிச்சா மனசுக்கும் மூளைக்கும் இதமா இருக்கும்” என்றாள் யாழினி கண்கள் ரசனையில் மின்ன.
வானதி அவளது காபி காதலை புரிந்து கொண்டவள் “இன்னொரு கப் ஆர்டர் பண்ணட்டுமா?” என்று வினவ மறுத்த யாழினி அங்கிருந்து கிளம்ப எழுந்தாள்.
“ஓகே! ஆப் செயல்பாட்டுக்கு வந்ததும் அகெய்ன் உங்கள மீட் பண்ணுறேன்” என்றவளின் பேச்சு வானதியின் அலுவலக அறையில் ஓடிக்கொண்டிருந்த செய்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பான செய்தியைக் கண்டதும் நின்றது.
“தமிழக முற்போக்கு கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் ரெய்டு. கட்சித்தலைவர் திரு அருள்மொழி மதுரை மாவட்டத்தில் மேற்கொண்டிருக்கும் சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு சென்னக்குத் திரும்புமாறு அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தரப்பிலிருந்து அவருக்குச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவரது தந்தை சுந்தரமூர்த்தி ஆட்சியில் இருந்த போது தந்தையின் பதவியைப் பயன்படுத்தி தனது தலைமையின் கீழிருக்கும் நிறுவனங்களுக்கு முதலீட்டைக் கொண்டு வந்ததாகவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசு கார் விவகாரத்திலும் வருமானத்திற்கு பொருந்தாத சொத்துக்களை வைத்திருப்பது குறித்தும் அவர் மீது புகார்ப்பட்டியலை அடுக்குகின்றன சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள்”
யாழினி அதிரும் போதே வானதியின் இதழில் சிரிப்பொன்று முகிழ்த்தது. அதை மறைத்துக்கொண்டு முகத்தைப் பதற்றமாகக் காட்டிக்கொண்டவள்
“அவ்ளோ சீக்கிரமா அரசியல்ல ஒருத்தரை வளரவிட மாட்டாங்க மேம்… நீங்க எவ்ளோ சீக்கிரம் லீகலா மூவ் பண்ணுறீங்களோ அவ்ளோ சீக்கிரம் அருள்மொழி சார் அரெஸ்ட் ஆகுறத தடுக்க முடியும்… இல்லனா நோ யூஸ்” என்று உரைக்க யாழினி உடனே அங்கிருந்து கிளம்பினாள்.
அடுத்த சில மணிநேரங்களில் சுந்தரமூர்த்தியின் இல்லம், அருள்மொழியின் யூனிகார்ன் குழும தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினரும் சி.பி.ஐ அதிகாரிகளும் காவல்துறையோடு வந்து குவிந்தனர்.
அகத்தியனின் அறிவுரைப்படி மதுரை மாவட்ட சுற்றுப்பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு விமானத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தான் அருள்மொழி.
நேரே யூனிகார்ன் குழுமத்தின் தலைமை அலுவலகத்தை அடைந்தவன் அங்கே சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினரோடு போராடிக் கொண்டிருக்கும் அகத்தியனையும் தனது நிதி ஆலோசகரையும் சற்று நேரம் அமைதி காக்கும்படி வேண்டிக்கொண்டு அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆரம்பித்தான்.
அவனது தலைமையின் கீழிருக்கும் நிறுவனங்களில் சுந்தரமூர்த்தியின் பதவிகாலத்தில் வந்த முதலீடுகள் குறித்து வைக்கப்பட்ட கேள்விகளுக்கு நிதி ஆலோசகர் துணையோடு பதிலளித்தான் அருள்மொழி.
“யூனிகார்ன் குரூப்புக்குக் கீழ ஆரம்பிக்கப்பட்ட சிமெண்ட் ஃபேக்டரில கெட்வெல் குரூப் இன்வெஸ்ட் பண்ணுறதுக்காக டூ தவுசண்ட் ஃபோர்ட்டின்ல நடந்த மைன் டெண்டரை அவங்களுக்கு தான் அலாட் பண்ணும்னு அரசியல் ரீதியான அழுத்தம் குடுக்கப்பட்டதுக்கும், அதனால தான் கெட்வெல் குரூப்புக்கு அந்த டெண்டர் கிடைச்சதுக்கும் எங்க கிட்ட எவிடெண்ஸ் இருக்கு… அதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க மிஸ்டர் அருள்மொழி?”
அருள்மொழி புருவம் சுருக்கி யோசித்தவன் இரண்டாயிரத்து பதினைந்திலிருந்து தான் அவனது தலைமையின் கீழ் யூனிகார்ன் குரூப் செயல்படுவதாகவும் அதற்கு முன்னர் அதன் தலைமையைக் கவனித்தது மூத்த சகோதரன் ஆதித்யன் என்றும் தெரிவித்தான்.
கூடவே அப்போதைய பணப்பரிவர்த்தனைகள் பற்றி தனக்குத் தெரியாது என்றவனை அதிகாரிகள் நம்பவேண்டுமல்லவா!
“நீங்க இம்போர்ட் பண்ணுன லக்சரி காருக்கு பே பண்ணுன டாக்ஸ் ரிலேட்டட் டாக்குமெண்ட்ஸை பாக்கணும்”
இப்படியே விசாரணை மாலை வரை நீண்டது. அன்றைய தினம் எந்த முடிவுக்கும் வர முடியாததால் நாளைய தினம் மீண்டும் விசாரணை தொடரும் என்று சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட அருள்மொழிக்குள் இனம்புரியாத கலவரம் ஆரம்பித்தது.
யாழினியும் அகத்தியனும் பாதுகாப்பு கவசங்களாய் நின்று அவனைக் காக்க போராடுவதை பார்த்தாலும் அவன் மனம் ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்று அவனுக்கு அறிவித்தது.
வீட்டிற்கு திரும்பியவனைக் கட்டிக்கொண்டு மீனாட்சி விசும்ப ஆரம்பித்தார்.
“உன்னையும் என்னை விட்டுப் பிரிச்சிடுவாங்களா அருள்?”
அவரது கண்ணீரைத் துடைத்தவன் “அவ்ளோ ஈசியா உங்களையும் என்னையும் பிரிக்கமுடியாதும்மா… தைரியமா இருங்க” என்றவன்
“ஆனா உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்கனு ராமு தாத்தா சொன்னார் மாமா” என்ற தமக்கை பெற்ற புத்திர செல்வங்களின் பேச்சில் அதிர்ந்தான்.
“சித்தப்பா வீட்டுக்கு வந்தாராம்மா?”
“ஆமா அருள்… அவரும் வருணாவும் வந்து ஆறுதலா பேசிட்டுப் போனாங்கப்பா”
வெறுமெனே தலையாட்டி வைத்தவன் இரவு முழுவதும் உறங்கவில்லை. நிதி ஆலோசகர் மற்றும் சட்ட ஆலோசகருடன் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியவன் சொல்லப் போனால் களைத்து தான் போனான்.
அரசியல் பயணத்தின் ஆரம்பமே இவ்வாறென்றால் இன்னும் வரப் போகிற சவால்களை எப்படி சந்திக்கப் போகிறோம் என்று திகைத்துப் போனவனுக்கு ஆறுதலாய் தோள் கொடுத்தவன் அகத்தியன் தான்.
“இது கண்டிப்பா அரசியல் காழ்ப்புணர்ச்சில நடக்குற ரெய்ட் தான் அருள்… யூனியன் கவர்மெண்ட் நினைக்கிறத டிப்பார்ட்மெண்ட் ஆட்கள் செய்யுறாங்க… ஸ்டேட் கவர்மெண்ட் சைடுலயும் உன் மேல நிறைய எரிச்சல் இருக்கு… இத நினைச்சு நீ ஒரி பண்ணிக்காத… வீ வில் ஓவர்கம் திஸ் சிச்சுவேசன்”
“புரியுது மாமா… கால் வச்சாச்சு, இனிமே என்ன நடந்தாலும் ஏத்துக்குற மனப்பக்குவம் எனக்கு இருக்கு… ஆனா ஒன்னு, இப்பிடி கேஸ் போட்டு ஜெயில்ல அடைக்க நினைக்கிறவங்களுக்குப் பாடம் கத்துக் குடுக்காம நான் ஓயமாட்டேன்”
தீர்மானத்துடன் உரைத்தவனை தூரத்திலிருந்து கவலையுடன் ஏறிட்டாள் யாழினி.
மறுநாளும் விசாரணை தொடர்ந்தது. யூனிகார்ன் குழுமத்தின் முன்னே பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். தமிழ்நாடு முற்போக்கு கழகத்தின் தலைமை அலுவலகம் கலவரப்பூமியாக காட்சியளித்தது.
தங்களது புதிய தலைவரைக் கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சம் தொண்டர்களை அங்கே திரள வைத்திருந்தது.
கட்சிப்பிரமுகர்கள் அவர்களைச் சமாளிக்க யூனிகார்ன் தலைமை அலுவலகத்திற்கு வந்த யாழினி பத்திரிக்கையாளர்கள் இடையே சிக்கிக் கொண்டாள்.
“இது மனி லாண்டரிங் கேஸ்னு சொல்லுறாங்களே மேம்… இத பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க?”
“மனி லாண்டரிங் நடந்திருந்தா அந்த வருசமே ஆக்சன் எடுத்திருக்கலாமே! டூ தவுசண்ட் ஃபோர்ட்டீன்ல நடந்ததா அவங்க சொல்லுற இன்சிடெண்டுக்கு இப்போ எங்களை என்கொயரி பண்ணுறத பாத்தா இது அரசியல் காழ்ப்புணர்ச்சில நடக்குற காரியமா தான் நான் நினைக்கேன்… இத நாங்க சட்டரீதியா ஃபேஸ் பண்ணுவோம்.. நன்றி”
சொன்னதோடு உள்ளே சென்றவள் அலுவலகத்தின் பரபரப்பில் தன்னை தொலைத்துவிட்டாள். அருள்மொழியிடம் தனியறையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேரம் தான் கடந்ததே தவிர விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே விசாரணையின் முடிவில் தங்கள் தரப்பு திருப்தி அடையாததால் அருள்மொழியைக் கைது செய்யும் முடிவுக்கு வந்தனர் அமலாக்கத்துறையினர்.
அதை கேட்டு அருள்மொழியின் உடன் இருந்த அகத்தியன் பதற்றமடைந்தான்.
“வெய்ட்! எங்க லாயர் சார் வந்துட்டே இருக்கார்… அவர் வந்ததும் லீகல் ப்ரொசீடிங் ஆரம்பிச்சிடலாம்”
“வீ காண்ட் வெய்ட் ஃபார் எனிபடி… நேத்ரன் அரெஸ்ட் ஹிம்”
அடுத்த நொடி அந்த அதிகாரியின் கரம் அருள்மொழியின் புஜத்தைப் பற்றியது.
“எதுவா இருந்தாலும் நாளைக்கு சி.பி.ஐ ஸ்பெஷல் கோர்ட்ல ஆஜர் பண்ணுவோம், அங்க வந்து பேசிக்கோங்க…. லெட்ஸ் கோ” என்றதோடு அவனை இழுத்து செல்ல முயல அருள்மொழி இரும்பாய் இறுகி நின்றான்.
அதிகாரி அவனது தோற்றத்தில் திகைக்க “உங்க கூட வரணும்… அவ்ளோ தானே? என்னால நடக்க முடியும்… நானே வர்றேன் சார்… எனக்கு ஓ.சி.டி கம்ப்ளெண்ட் இருக்கு… சோ அன்வான்டட்டா டச் பண்ணாதிங்க” என்று கடினக்குரலில் அவன் உரைக்கவும் கரத்தை புஜத்திலிருந்து எடுத்தார் அந்த அதிகாரி.
அடுத்த சில நொடிகளில் யூனிகார்ன் குழும தலைமை அலுவலகத்திலிருந்து சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வெளியே வந்தான் அருள்மொழி.
வெளியே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் மைக் மற்றும் புகைப்படக்கருவிகள் சகிதம் முண்டியடிக்க அவர்களை விலக்கியபடி அதிகாரிகள் அருள்மொழியை அழைத்துச் செல்ல பத்திரிக்கையாளர்கள் கிடைத்த அந்தச் சிறு வாய்ப்பை கூட விடவில்லை.
“சார் இந்தக் கைது நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியால நடந்ததா?”
“சி.பி.ஐயும் அமலாக்கத்துறையும் உங்க மேல வச்சிருக்குற குற்றச்சாட்டுகளை ஏத்துக்கிறிங்களா சார்?”
“ஆளுங்கட்சி செயலாளர் இந்த ரெய்ட் முன்னாடியே நடந்திருந்தா உங்கள தலைவர்னு நம்பி மக்கள் ஏமாந்திருக்க மாட்டாங்கனு சொல்லிருக்கார்… அத பத்தி உங்க கருத்து என்ன சார்?”
“உங்க கட்சியோட இருக்குற கூட்டணிய முறிச்சிக்கிட்டத நினைச்சு இப்ப சந்தோசப்படுறதா ஒன்றிய இணையமைச்சர் சொன்னத பத்தி உங்க கருத்து?”
அருள்மொழி நடப்பதை நிறுத்தியவன் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுவிட்டு தன்னிடம் நீட்டப்பட்ட ஒரு மைக்கில் பதில் கூற ஆரம்பித்தான்.
“என்னோட கைது நடவடிக்கையால நிம்மதியானவங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லிக்க விரும்புறேன்… கொஞ்சநாள் இந்த நிம்மதிய அனுபவிச்சிக்கோங்க… உங்களால இன்னும் எவ்ளோ அறிக்கை விடமுடியுமோ விட்டுக்கோங்க… இந்தக் கேஸை சட்டரீதியா ஃபேஸ் பண்ணி என் மேல எந்தத் தப்புமில்லனு நிரூபிக்கிற வரைக்கும் என்ஜாய் யுவர் டேய்ஸ் அண்ட் ப்ரிப்பேர் யுவர்செல்ஃப்… ஐ வில் பி பேக்”
அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அதிகாரிகளுடன் அவர்களது வாகனம் நோக்கி நடந்து சென்றவனை தூரத்தே நின்று கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி. அவளருகே தோளணைத்தபடியே நின்றிருந்த அகத்தியன் ஆறுதலாய் அவளது சிரத்தில் தனது தாடையை வைத்து அழுத்தியவன்
“அருள் ரொம்ப தைரியமா இருக்கான் யாழி… யூ டோண்ட் ஒரி… இப்ப நீ என்ன செய்யணும்னு உனக்குத் தெரியும்ல?” என்று கேட்க கண்ணீரை விழுங்கிக் கொண்டு தலையசைத்தாள் யாழினி.
அதே நேரம் அருள்மொழியின் கைது சம்பவமானது காற்று வாக்கில் பரவி தொலைக்காட்சி நேரலை செய்திகளின் மூலம் மக்களைச் சென்றடைந்ததன் விளைவு அவர்களின் கட்சி தலைமை அலுவலகத்தின் முன்னே நின்றிருந்த தொண்டர்கள் உரத்தக்குரலில் கோஷமிட ஆரம்பித்து விட்டனர்.
அவர்களை அமைதிப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட இக்காட்சிகளை கட்சி அலுவலகத்தின் மாடியறையிலிருந்து கண்டு ரசித்துக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி. கூடவே அவரது கைத்தடியான ஒரு நபர் ஜால்ராக்கள் வழக்கமாய் செய்யும் பணியைச் சிறப்பாய் செய்து கொண்டிருந்தார்.
“ரொம்ப சந்தோசமா இருக்குய்யா… உங்களுக்கு இருந்த ஒரே ஒரு தடையும் இப்ப ஜெயிலுக்குப் போயாச்சு… இனிமே கட்சியில நீங்க தான் எல்லாமே… உங்களை அசைக்க எவனும் வர முடியாது தலைவரே”
ராமமூர்த்தி அகம்பாவப் புன்னகையுடன் திரும்பியவர் “முதல்ல இந்த ஆட்டுமந்தைங்கள அடிச்சுத் துரத்தணும் செழியா… நம்மாளுங்கள இறக்கு… எவனும் கேட்டா ஆளுங்கட்சியாளுங்க கூட்டத்துல புகுந்து நம்ம கட்சியாளுங்கள தாக்குனாங்கனு சொல்லிடலாம்… முடிஞ்சா போலீஸ் மேல ரெண்டு கல்ல எடுத்து அடிக்க சொல்லு… அப்புறம் அவங்க பாத்துப்பாங்க… அருள்மொழி வெளிய வராம நான் பாத்துக்கிறேன்” என்று கூற அவரது ஜால்ராவும் தனது கடமையை ஆற்ற சென்றுவிட்டது.
இனி அருள்மொழியின் அரசியல் வாழ்வு அஸ்தனம் ஆகிவிடும் என்ற அதீத நம்பிக்கையுடன் தனது சட்ட ஆலோசகரை மொபைலில் அழைத்துப் பேச ஆரம்பித்தார் ராமமூர்த்தி.
நேருக்கு நேர் நின்று தாக்கும் எதிரியை விட, கூடவே இருந்து நண்பனைப் போல நடித்து அசரும் நேரத்தில் முதுகுக்குப் பின் தாக்கும் துரோகி ஆயிரம் மடங்கு ஆபத்தானவன்.
எதிரே நிற்கும் எதிரிகளைத் தாக்குவதில் முனைப்பாயிருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் இம்மாதிரி துரோகிகளை அடையாளம் காணுவதில் தாமதிப்பதன் விளைவால் அடையும் துன்பங்கள் கணக்கிலடங்காதவை!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction