“அரசியலைப் பொறுத்த வரை எந்த ஒரு நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் அது கட்டாயமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்குமென நீங்கள் அறுதியிட்டுக் கூறலாம்”
-ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்
வானதி அருள்மொழியிடம் அளித்திருந்த கட்சிப்பிரமுகர்கள் பற்றிய அறிக்கையானது அவனுக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இருந்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து வேட்பாளர் தேர்வு நடைபெறுமாயின் கட்டாயம் அது கட்சிக்குள் அதிருப்தி அலையை உண்டாக்கும் என்று யூகித்தவன் அவள் இரண்டாம் கட்ட அறிக்கையை அளித்த பிறகு யாழினியிடம் கூட தெரிவிக்காது அகத்தியனை அவனது நியூஸ் டி.என் செய்தி தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் இரகசியமாகச் சந்தித்தான்.
அவனிடம் இரண்டு அறிக்கைகளையும் கொடுத்தவன் “இதுல இருக்குற சம் பாயிண்ட்ஸ் ரொம்ப நெருடலா இருக்கு மாமா… முக்கியமா சித்தப்பா அண்ட் ஹிஸ் சப்போர்ட்டர்ஸ் பத்தி ஐ.பி.சி குடுத்த ரிமார்க்ஸ் எல்லாமே அவங்க கட்சிய பிரிக்க கங்கணம் கட்டிட்டு அலையுறாங்கங்கிற எண்ணத்த தான் எனக்குக் குடுக்குது… நீங்களே கொஞ்சம் பாருங்க” என்று அயர்ச்சியாக கூற அகத்தியனும் அவற்றை வாங்கி படிக்க ஆரம்பித்தான்.
படித்தவனது நெற்றியிலும் யோசனைக்கோடுகள்! இது ஒரு இக்கட்டான நிலை தான்! சுந்தரமூர்த்தி ஆதித்யனின் மறைவிலும் சரி, அருள்மொழியின் கைதிலும் சரி, வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் ராமமூர்த்தியின் நாற்காலி ஆசை ஆங்காங்கே தெரிந்ததை அகத்தியனும் அறிவான்!
ஒன்று அவரை அருள்மொழி கட்சியை விட்டு நீக்கவேண்டும். அப்படி நீக்கிவிட்டால் கட்சித்தலைமைக்கு பழைய தலைமுறை தலைவர்களிடம் இருந்த நம்பிக்கையும் விசுவாசமும் போய்விட்டதென மூத்த தலைவர்கள் ராமமூர்த்தியுடன் அணி திரளும் வாய்ப்பு உள்ளது. அது அருள்மொழிக்கு தான் ஆபத்து.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எனவே அவரை அமைதியாக்கி அவனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது தான் அருள்மொழிக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு. அதையும் தான் ஆரம்பித்து விட்டதாக அகத்தியனிடம் அவன் தெரிவிக்க அகத்தியனோ அவனது எச்சரிக்கையை எல்லாம் ராமமூர்த்தி பொருட்படுத்தமாட்டார் என்றான்.
அருள்மொழி பொருள்விளங்காது நோக்க தனது சுழல் நாற்காலியிலிருந்து எழுந்த அகத்தியன் அவனருகே கிடந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.
ஆதரவாய் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தபடி “நீ பாலிடிக்ஸுக்கு வந்து முழுசா அறுபது நாள் ஆகிருக்குமா? அப்பிடிப்பட்ட உனக்கே அரசியலோட ருசி பிடிச்சுப் போயி தானே நீ எல்லாத்தையும் உன்னோட கண்ட்ரோல்ல கொண்டு வரணும்னு ஆசைப்படுற… இப்ப உன் சித்தப்பா விசயத்துக்கு வருவோம்… அந்த மனுசன் அரசியல்லயும் சரி, அனுபவத்திலயும் சரி, உனக்கு சீனியர்… நீ தந்திரமா யோசிச்சனா அவர் ராஜதந்திரமா யோசிப்பார்… இப்ப நீ அவரை வார்ன் பண்ணிருக்க, அதுக்கான ரியாக்சனை கட்டாயம் அவர் கிட்ட நீ எதிர்பாக்கலாம்… ஒன்னு மட்டும் சொல்லுறேன் அருள், அவரை கட்சிய விட்டு அனுப்புறது ஒன்னும் கஷ்டமில்ல… ஆனா அவர் போனா அவரை ஃபாலோ பண்ணிட்டு பெருவாரியான மெம்பர்ஸ் வெளிய போவாங்க… சோ அவரை பகைச்சுக்குறதுக்கான நேரம் இது இல்ல… முதல்ல நம்ம எலக்சன்ல ஜெயிச்சு உன் கைக்கு பவர் வரணும்… அது வரைக்கும் உன் மேல யாருக்கும் அதிருப்தி வராத படி நடந்துக்க…
உன்னோட சித்தப்பாவ பத்தி நீ ஒரி பண்ணிக்காத… அவரை கண்காணிக்க நான் சில ஆட்களை செட் பண்ணிருக்கேன்… அவங்க குடுத்த தகவலை வச்சு பாத்தா இன்னும் கொஞ்ச நாள்ல அவர் மதுரைல தன்னோட ஆதரவாளர்கள திரட்டி கூட்டம் நடத்துற ஐடியால இருக்கார்… கட்சித்தலைமைக்கு அதாவது உனக்கு அவரோட செல்வாக்கை காட்டுறதுக்கான அவரோட இந்த அட்டெம்ப்டை நீ உனக்குச் சாதகமா யூஸ் பண்ணிக்கணும் அருள்” என்றான்.
எப்படி என்று புரியாமல் கேட்ட அருள்மொழியிடம் “சிம்பிள்! நீ ஒரு கன்சர்ன்ல ஒர்க் பண்ணுற… அங்க இருக்குற மத்த எம்ப்ளாயிஸ்லாம் சேர்ந்து ஒரு யூனியன் மாதிரி வச்சிருக்காங்க… என்ன மாதிரி சிச்சுவேசன்ல நீ அந்த யூனியன்ல ஜாயின் பண்ணுவ?” என்று வினவினான் அகத்தியன்.
“என்னோட ஜாப் செக்யூரிட்டி கேள்விக்குறி ஆச்சுனாலோ, மேனேஜ்மெண்ட் மேல எனக்கு நம்பிக்கை குறைஞ்சுதுனாலோ ஜாயின் பண்ணுவேன்” என்றான் அருள்மொழி.
“அதையே பார்ட்டிக்கும் யோசிச்சு பாரு… இப்ப ராமமூர்த்திய ஏன் சிலர் ஃபாலோ பண்ணுறாங்க? அவரோட ஆதரவாளரா இருந்துட்டா கட்டாயம் கட்சில தனக்குனு ஒரு இடம் கிடைக்கும், எலக்சன்ல கட்சி ஜெயிச்சா அத வச்சு ஆதாயம் கிடைக்கும், எலக்சன்ல போட்டி போட சீட் கிடைக்கும்னு அவங்களுக்கும் சில எதிர்ப்பார்ப்பு இருக்கும்… அந்த எதிர்பார்ப்பை உன் சித்தப்பா நிறைவேத்துவார்ங்கிற நம்பிக்கைல தான் அவர் பின்னாடி அவங்க போறாங்க… அந்த நம்பிக்கைய நீ உன் பக்கம் திருப்பணும் அருள்… அதுல கான்சென்ட்ரேட் பண்ணு… யாழினி உனக்கு உதவியா இருப்பா”
அகத்தியன் கூறியவற்றை கவனமாய் கேட்டவன் அவனிடமிருந்து விடைபெற்றான்.
அதே நேரம் அருள்மொழியின் தலைவர் பிம்பத்தை வலுவாக்கும் முயற்சியின் அடுத்தடுத்த கட்டங்களை தனது குழுவினரிடம் விளக்கி கொண்டிருந்தாள்.
“தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கு வாழ்வாதாரம் அடிக்கடி கேள்விக்குறி ஆகுறது ஃபார்மர்ஸ், வீவர்ஸ் அன்ட் ஃபிஷர்மென்னுக்குத் தான்… அதான் எந்தக் கட்சியா இருந்தாலும் இந்த மூனு பேருக்குப் பிரச்சனை வந்தா உடனே குரல் குடுப்பாங்க… அவங்க பிரச்சனைய தீர்க்குறாங்களோ இல்லையோ அத வச்சு அரசியல் லாபம் பாக்காத கட்சியே இல்லனு சொல்லலாம்… இப்ப அருள்மொழி சந்திக்கப் போறதும் இந்த மூனு கேட்டகரி மக்களை தான்! ஸ்டூடண்ட்ஸ் கூட அவரோட இண்ட்ராக்சன் முடிஞ்சதும் இந்த சுற்றுபயணத்த ஸ்டார்ட் பண்ணிடலாம்… இப்ப நாளை நமதே சைட்ல வந்திருக்குற பெட்டிசன்ஸ் கவுண்டிங் பத்து லட்சத்த நெருங்கிடுச்சுல்ல… அதுல கான்சென்ட்ரேட் பண்ணி மக்களோட தேவைகளை புரிஞ்சிக்கிட்டா அதுக்கேத்த மாதிரி எலக்சன் மேனிஃபெஸ்டோ ரெடி பண்ணுறதுக்கான ரிப்போர்ட்டையும் நம்ம ப்ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிடலாம்”
அப்போது அருள்மொழியின் களப்பயணங்களை கவனிக்கும் குழுவிலிருந்து ஒரு பெண் எழுந்து “அருள்மொழி சார் அடுத்து மீட் பண்ணப் போறது காலேஜ் ஸ்டூடண்ட்சை தான் நதி… அவர் படிச்ச காலேஜா இருந்தா அந்த மீட் இன்னும் எமோஷ்னலாவும் யூஸ்ஃபுல்லாவும் இருக்கும்ங்கிறது மை ஒபீனியன்” என்றாள்.
உடனே அந்தக் குழுவினரில் ஒரு இளைஞனும் அதை ஆமோதித்தான்.
“யெஸ்… அவர் படிச்ச மவுண்ட் காலேஜ்ல அவர் நோட்டபிள் அலும்னி தானே… சோ அங்க மீட்டிங்கை வச்சா ஸ்டூடண்ட்ஸ் மத்தியில அவர் நல்லா ரீச் ஆயிடுவார் நதி”
மவுண்ட் காலேஜ் என்ற வார்த்தையில் இவ்வளவு நேரம் வேலை பரபரப்பிலிருந்த வானதியின் வதனம் இறுக்கமாக மாறியது. அவளருகே அமர்ந்திருந்த நிதர்சனா நிலமையை உணர்ந்து கொண்டாள்ள்.
வானதியின் அமைதியைக் குழுவினர் கவனிக்கும் முன்னர் சுதாரித்தவள் புன்னகையுடன்
“வாவ்! இந்த ஐடியா நல்ல ஒர்க் அவுட் ஆகும்… முக்தா அண்ட் முரளி, தேங்க்யூ சோ மச் கய்ஸ்… சோ அடுத்து அருள்மொழி சார் மீட் பண்ணப் போறது மவுண்ட் காலேஜ் ஸ்டூடண்ட்சை தான்” என்று அவர்கள் இருவரையும் பாராட்ட குழுவினரும் வானதியைக் கவனியாது அந்தச் சந்திப்பு குறித்த பேச்சுவார்த்தையில் மூழ்கிப் போயினர்.
இதை உணராதவளாக வானதியோ அவளது பழைய நினைவுகளில் தொலையத் துவங்கினாள்.
“நான் மதுரையிலயே படிக்கேன்பா… ஊட்டிக்குலாம் போகமாட்டேன்… மா! நீயாச்சும் சொல்லு ப்ளீஸ்”
சிணுங்கிய வானதி மலர்விழியின் தோளைக் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள். ஆனால் மகேந்திரனோ
“அது தமிழ்நாட்டுலயே பெஸ்ட் காலேஜ் நதிம்மா… என் கொலீக் செந்தில்நாதன் இருக்கார்ல…” என்று விளக்க முற்படும் முன்னர் இடைவெட்டினாள் வானதி.
“அவர் அங்க தான் படிச்சாரா?” இல்லையென மறுத்தார் மகேந்திரன்.
“அவரோட சன் யுவராஜ் அங்க தான் படிக்கிறான்டா”
“படிக்கட்டும்… சோ வாட்? அதுக்குனு நானும் அங்க போய் படிக்கணுமா? அவனுக்கு அம்மா இல்லனு சொன்னிங்கல்ல, அதான் அந்த அங்கிளால அவனைத் தனியா வளக்க முடியலனு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுருப்பார்” என்ற வானதியின் தலையில் நறுக்கென்று குட்டு வைத்தார் மலர்விழி.
அவள் தலையைத் தடவிக்கொண்டு “பாருங்கப்பா” என்று அழுவது போல நடிக்க ஆரம்பிக்கவும்
“போதும்டி… அடுத்தவங்களோட கஷ்டத்த காரணம் காட்டி அலட்சியமா பேசக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்? அந்தப் பையன் யுவி எவ்ளோ தங்கமானவன் தெரியுமா? அதோட செந்தில் அண்ணன் சொன்னா கரெக்டா தான் இருக்கும்… நீங்க ஏன் இவ கிட்ட தர்க்கம் பண்ணுறிங்க? எப்பிடியும் உங்களுக்கு டிரான்ஸ்ஃபர் வரப் போறது உறுதி… அதுக்கு முன்னாடி இவள நல்ல காலேஜா பாத்து சேத்துட்டா நம்ம நிம்மதியா அடுத்த ஊரை பாக்க போகலாம்” என்று மலர்விழி அவளது கல்லூரி பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படி தான் மவுண்ட் காலேஜும் யுவராஜும் அவளுக்குக் கடந்த காலத்தில் பரிச்சயமானார்கள். ஒரு கட்டத்தில் அவளுக்கு எல்லாவுமாய் மாறிப்போன கல்லூரியையும் யுவராஜையும் இப்போது நினைக்கும் போது கூட ஒரு குட்டிச்சிரிப்பொன்று அவளது இதழில் உதயமானது.

அந்தச் சிரிப்பின் ஆயுட்காலமும் அவளது இனிய நினைவுகளின் ஆயுட்காலத்தைப் போல குறைவு தான் போல! எனவே உதயமான சில நிமிடத்தில் அஸ்தமனமானது வானதியின் புன்னகை!
இதை நிதர்சனா ஓரக்கண்ணால் கவனித்தபடியே தோழிக்குப் பதிலாக குழுவினரிடம் கலந்தாலோசிக்க ஆரம்பித்தாள். இந்தக் குழுவில் இருப்பவர்கள் வானதியுடன் நீண்டநாட்கள் பயணித்தவர்கள் என்பதால் அவளது திடீர் மௌனத்தை அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.
அந்த மௌனம் கூட வேறேதும் யுக்திக்கான யோசனையாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒருவழியாக அந்தக் கலந்தாலோசனையின் முடிவில் அருள்மொழியின் மவுண்ட் காலேஜ் மாணவர் சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கான வேலையை ஆரம்பிக்குமாறு களப்பணியாளர்களின் பொறுப்பாளருக்கு வானதியின் சார்பில் கட்டளைகளைப் பிறப்பித்த நிதர்சனா அவர்கள் அனைவரும் வெளியேறியதும் தோழியை இயல்புநிலைக்குக் கொண்டு வர பேச்சை தேர்தல் வியூகம் குறித்து மாற்றினாள்.
“இந்த காலேஜ் மீட் முடிஞ்சதும் அருள் சார் யாரை சந்திச்சா நல்லா இருக்கும் நதி? ஃபார்மர்ஸ், வீவர்ஸ் ஆர் ஃபிஷர்மென்? என்னைக் கேட்டா வீவர்சை மீட் பண்ணுனா சரியா இருக்கும்னு சொல்லுவேன்… பிகாஸ் அவர் ஃபாதர் டெத்த காரணமா வச்சு டெல்டா ஏரியால அவர் மீட் பண்ணுன மெஜாரிட்டி குடும்பங்கள் விவசாயத்த தொழிலா கொண்டவங்க தான்… சோ அடுத்து நெசவாளர்கள மீட் பண்ணி அவங்களோட குறைகள கேக்குறது தான் ஆப்டா இருக்கும்… அதுக்கு அப்புறம் மறுபடியும் விவசாயிகள மீட் பண்ணுனா ரிப்பீட் ஆகுற ஃபீல் வராது… ஃபைனலா ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஏரியாக்கள்ல விசிட் அடிச்சு அங்க இருக்குற மீனவர்களை சந்திக்க வச்சிடலாம்… என்ன சொல்லுற?”
வானதியைக் கவனித்தவாறே படபடவென பொரிந்து தள்ளினாள் நிதர்சனா. ஆனால் வானதிக்கோ அவளது கடைசி வாக்கியமான ‘என்ன சொல்லுற?’ மட்டுமே செவியில் விழுந்து மூளையை அடைய, பேச்சுவார்த்தையின் முற்பாதியை அறியாதவளால் பதிலளிக்க முடியாது போகவும் அவளது நாவோ “ஹான், நீ என்ன சொன்ன சனா?” என்று கேள்வி கேட்டது.
நிதர்சனா அவளைப் பொய்யாய் முறைத்தவள் பின்னர் கல்லூரி காலங்களில் விளையாடுவது போல அவளது கன்னங்களை இருபுறமும் இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.
“எவ்ளோ லெங்தா ஒரு ப்ளானை சொன்னேன்? எதையும் கேக்காம இருந்துட்டு என் கிட்டவே பதில்கேள்வியும் கேக்குறியா? உன்னைய என்ன பண்ணுனா தகும்?” என்று அவளது கன்னத்தை அப்படியும் இப்படியுமாக ஆட்டவும் வானதி இறுக்கம் களைந்து சிரிக்கத் துவங்கினாள்.
அவளது கன்னத்தின் இருபக்கத்தையும் நிதர்சனா இழுத்துப் பிடித்திருந்ததால் வானதி சிரித்த அழகு நிதர்சனாவுக்கும் சிரிப்பை வரவழைத்தது.
அடக்கமாட்டாத சிரிப்பினூடே “ஆத்தா ப்ளீஸ் சிரிக்க மட்டும் செய்யாத! இதுக்கு உன்னோட முறைப்பே பரவால்ல… ப்பா! என்ன ஒரு க்ரீப்பி ஸ்மைல், அப்பிடியே கான்ஜூரிங் டூ நன் எஃபெக்ட் குடுக்குறடி” என்று பயந்தாற்போல நடித்தாள் அவள்.
வானதி அவள் கரங்களைத் தட்டிவிட்டு “ரொம்ப கலாய்க்காதடி… நீ பயந்தது மாதிரி நடிச்சத நானும் நம்புனது மாதிரி நடிச்சிடுறேன், போதுமா?” என்று கூறவும்
நிதர்சனா “அப்ப நீ என்னை நம்பலயா நதி?” என்று குழந்தையைப் போல கேட்டுவிட்டு உதட்டைப் பிதுக்கினாள்.
வானதியோ அவளது தோளில் தட்டியவள் “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மச்சி” என்று கூறிவிட்டு கண்ணைச் சிமிட்டினாள்.
நிதர்சனாவுக்குப் பழைய வானதி அதாவது பள்ளி கல்லூரி காலங்களில் அவள் பார்த்த வானதி மீண்டும் திரும்பி வந்தது போல இருந்தது.
இப்போது மெய்யாகவே மனம் நிறைய புன்னகைத்தவள் “இப்பிடியே இரு நதி… எதுக்கெடுத்தாலும் இறுகி இறுகி ஸ்டோன் உமன் மாதிரி ஆகாத… இந்த உலகத்துல உனக்குனு இருக்குறது நான் மட்டும் தான்… அதே மாதிரி எனக்கும் உன்னை விட்டா ஏன்னு கேக்குறதுக்குக் கூட நாதி இல்ல… நம்ம ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட்டா இருக்குறது மாதிரியே கொஞ்சம் சந்தோசமாவும் இருப்போம் நதி… நமக்கு இழக்குறதுக்கு எதுவும் இல்லடி… நீ இலக்கா நினைக்கிறவங்க இப்ப உனக்கு ரொம்ப பக்கத்துல இருக்காங்க… நீ நினைச்சத நடத்திக் காட்டுற அளவுக்கு உனக்குப் புத்திச்சாலித்தனம் இருக்கு… அப்புறம் ஏன் இந்த இறுக்கம்? ப்ளீஸ்! எனக்காக பழைய நதியா மாற ட்ரை பண்ணு” என்று ஏக்கமாய் கேட்க வானதியும் சரியென தலையசைத்தாள்.
தோழி இனி பழையபடி மாறுவாள் என்ற நம்பிக்கையுடன் நிதர்சனா வேலை தொடர்பான பேச்சில் மூழ்க வானதியோ தனக்குள் புதைந்து போன பழைய வானதியை மீட்டெடுக்கும் நாள் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்தவளாய் தோழிக்காக மட்டும் புன்னகையை அணிந்துகொண்டு அவளுடைய பேச்சில் கலந்துகொண்டாள்.
இறுக்கமான மனிதர்கள் அவ்வாறு மாற காரணம் அவர்களது இழப்புகளால் அவர்களின் மனதில் உண்டான காயங்களே! அந்தக் காயங்களில் இரத்தம் வழியாது! அந்தக் காயங்களால் உயிரும் போகாது! ஆனால் அவை வெளிக்காயங்களை விட அபாயமானவை! ஆயிரம் மடங்கு வேதனை அளிப்பவை! ஆழமானவையும் கூட! அவற்றை ஆற்றும் வல்லமை காலத்திற்கும் சில அற்புதமான மனிதர்களுக்கும் மட்டுமே உள்ளது! ஆனால் அந்த அற்புதமான மனிதர்களைச் சந்திக்கும் கொடுப்பினை இறுகிப்போன அனைவருக்கும் கிடைப்பதில்லை!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction