NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
அகம் உறைந்தேன் அரனே
 
Share:
Notifications
Clear all

அகம் உறைந்தேன் அரனே

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

அகம் உறைந்தேன் அரனே - பரணி சிஸ் ரிவியூ

அகம் உறைந்தேன் அரனே❤️நித்யா மாரியப்பன்.

பணம் அதிகார செருக்கோடு வாழ்க்கையை வாழும் மாணிக்கவேலு நிலவழகி மது
போன்றவர்கள் இருக்கும் குடும்பத்தில் அமைதியும் நேர்மையும் உடைய பவிதரன் எப்படி தன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ முடியும். 😫
தங்கள் அந்தஸ்திற்கு குறைந்தவளான ஈஸ்வரியை காதலித்தான் மகன் என்று வீட்டை விட்டு வெளியேறிய மகனுக்கு
தன் பேராசை மருமகன் தர்ஷனுடன்
இணைந்து கொடுத்த தகப்பன் துன்பங்களை எல்லாம்
மன்னிக்க இயலாது.😡
நற்பண்புகளால் நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கும் பவி காதலித்து மணந்த தன் சண்டைக்காரி ஈஸ்வரியின் துணையுடன் சிறிது
சிறிதாக முன்னேற பேராசை பெருநஷ்டம் சொல்லுக்கேற்ப
மருமகனை நம்பிய மாணிக்கவேலு
பணத்தை இழந்து சிறைவாச நிலைதான்.😊கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் குடும்பத்திற்கு ஆண்மகனாக கடமையை செய்தாலும் அவர்களிடமிருந்து தள்ளியே
நிற்கிறோம் என்ற பவிதரனின் நிலைப்பாடு மிகவும் அருமை.👍
புவன் - ஆதி மகிழ் மாறன்-மலர் கர்ணன்- மிருணாளினி
குழலி- சிகாமணி ஷண்மதி- ரவி
இளவரசி - மூர்த்தி சிவகாமி
என எழுத்தாளரின் முந்தைய
கதைகளில் வருபவர்கள்
பவி- ஈசுக்கு உறுதுணையாக இருப்பது மிகவும் சிறப்பு. 👍
நித்யா மாரியப்பனின் நேர் மறையான எழுத்துக்கள் கதையில்
எதிர் மறையான நிகழ்வுகள் இருந்தாலும் கதையை ரொம்பவே
சுவாரஸ்யமாக வழி நடத்துகிறது. 👍
பவிதரன்- ஈஸ்வரி காதலுடனான
' அகம் உறைந்த அரனே'
சுகமாக நம் அகத்தை நிரப்புகிறது.
❤️❤️❤️❤️❤️❤️❤️👍
1770184597-3.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 4, 2026 11:26 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

அகம் உறைந்தேன் அரனே - Shafna Rangarajan ரிவியூ

#அகம்_உறைந்தேன்_அரனே_விமர்சனம்

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தான் நம்ம நயகன் பவிதரன் ❤
 
பொண்ணுங்களை தானே பெறும்பாலும் பூ கூட ஒப்பிடுவாங்க இங்க நான் பவியை ஒப்பிட இரண்டு காரணங்கள் இருக்கு ஒன்று அவனின் குணம் ❣️
மற்றொன்று தாமரை சுற்றி இருக்கும் சேறு அவனின் குடும்ப உறுப்பினர்கள் 😡
 
பணத்தாசை, கௌரவம், சுயநலம், வன்மம்னு எல்லா எதிர்மறை எண்ணங்களும் கொண்ட குடும்பத்தில் தப்பிப் பிறந்த இரண்டு முத்துக்கள் ஷண்மதி மற்றும் பவிதரன்❤
 
பவிதரனை எனக்கு ரொம்ப பிடித்தது 😍 காதலிலும் சரி வாழ்க்கையில் விழும் அடியிலும் சரி எந்த ஒரு இடத்திலும் தன் நிதானத்தை கைவிடவில்லை 👏
 
ஈஸ்வரி சண்டைக்காரி😜 பவிகாக தர்சனுக்கு ஒன்னு விட்டாப் பாருங்க 🤣🤣🤣 சூப்பர். அவன் இருக்கையில் உட்கந்தாவே பிடிக்காது இதுல தொழிலில் இடையில வந்தா சும்மா இருப்பாளா 😅😅
 
கணவனுக்கும் கணவன் வீட்டாருக்கும் இடையில நடக்கும் பிரச்சினைகளில், மனைவி ஒதுங்கி நிற்பதுதான் நல்லதுனு சொன்னது எயதார்த்தமான உண்மை ❤
 
பவியின் குடும்பம் என்ன பிறவிகளோ அதுவும் தர்ஷன் 😡😡ததர்ஷனுக்கு சரியான தண்டனை குடுத்திருக்கீங்க 😏😏
 
பிரச்சனை வந்தாதான் அனைவரின் உண்மை நிறம் தெரியுது 😞 ஆனால் பிரச்சனையே குடும்பம் தானா பாவமா இருந்தது பவியை பார்க்க 🥺
 
அவனுக்கு துணையாக நின்ன அனைவரும் அழகு 😍💓 முக்கிய மா ஈஸ்வரி ❣️❣️இந்த கருப்பு வளையல் போடுறது புதுசா நல்லா இருந்தது ❤
 
மொத்ததில் அழகான குடும்பக்கதை ❤
1770184763-1.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : February 4, 2026 11:29 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

அகம் உறைந்தேன் அரனே - மீனாட்சி ரிவியூ

அகம் உறைந்தேன் அரனே!

 
உணர்வு சுரண்டலில் அகப்பட்டு இளைப்பாற நிழல் இல்லாமல் தவிக்கும் ஆணின் போராட்டம்.
 
உறவுகள் இல்லாமல் வாழ்வதை விட, உடனிருந்தும் அன்பு கிடைக்கப்பெறாமல் வாழ்வது பெரும் வலி.
 
கிடைக்காததை எண்ணி வருந்தி மனதை இறுக்காமல், நேரம் இழக்காமல் ஓடிக்கொண்டே இருக்க பழகியவன் பவி.
 
"முதுகின் பின்னே பூஞ்சிறகு முளைத்தாற்போன்ற உணர்வு" 😍
 
முதல் முதலில் வேலைக்கு செல்லும் பெண்ணின் உணர்வுகள் அழகாய்.
 
வசதியின் வெளிச்சம் தன் சுய கௌரவத்தை சுட்டெரிக்க விடாமல் வீம்பாக இருப்பவள் ஈஸ்வரி.
 
நெளிவு சுழிவு கற்றுத்தந்தவரது பெயரை மகனுக்கு வைக்கும் அளவு குணம் இருந்ததே ஆச்சர்யம் தான் மாணிக்கவேலுவிற்கு.
 
சுயம் என்ற ஒன்றை சுயமாய் அடைய விரும்பாத தர்ஷன். சுயநலம் ஒன்றையே சுயம் என கொண்டு வாழும் மது.
 
"விலகுகிறேன் என்பவளை இழுத்து பிடித்து வைக்கும் மாயாஜாலம் அறியாத சாதாரண மானுடன் அவன்". ✨
 
கடமையுணர்வு சுழலில் இருந்து தப்பி அவனை உயிர்ப்புடன் நடமாட செய்யும் வேலை, தோள் சாய உற்ற துணை என அமையப்பெற்று வாழ்வில் சுயமாய் முன்னேறுகின்றான் பவி.
 
"பூசணி ஆரஞ்சு நிற பட்டில் சக்கர வடிவ புட்டாக்கள் தங்க நிற ஜரிகைகள் மின்ன" 🌾
 
வழமை போல் இடங்கள் மற்றும் உடைகளின் நேர்த்தியான வர்ணனை அழகு.
 
"அவிழ்க்க முயலும்போதெல்லாம் இன்னும் இறுகிப்போகும் பட்டுநூல் முடிச்சைப் போல் அதிகமாகும் அவளது பிடிவாதம்". 💫
 
Sandwich syndrome விளக்கம் அருமை.
 
"காதல் எனும் வாக்கியத்தில் ஊடல் என்பது காற்புள்ளியாக வேண்டும் முற்றுப்புள்ளியாக கூடாது". ✨
 
"அந்த காற்புள்ளியும் காதலை மெருகேற்ற வேண்டுமே தவிர அர்த்தமற்றதாக ஆக்கிவிடக் கூடாது.
 
"தூரத்து வெளிச்சப்புள்ளிகள் உங்களுக்கு அழகாக தெரிந்தால் சுற்றியிருக்கும் மின்மினிகளின் இயல்பான ஒளியின் அழகை தவற விட்டு விடுவீர்கள்". ✨
 
"நிதர்சனத்தின் காதல் கணங்கள் மனதில் நிலைக்க காட்சிப்படுத்தப்படும் காதல் நாடகக் கவர்ச்சிகளில் தொலையக்கூடாது".
 
"பறவையின் சிறகுகளாய் அவளது கரங்கள் விரிந்து அவனை அணைத்துக்கொண்டன". 💫
 
கதிர்காமன்,
தேஜஸ்வினி,
நிகிலன்,
பிரகதி/பிரகதீஸ்வர்
 
மகிழ் மலர்
புவி ஆதி
கர்ணன் மிருணாளினி
பவி ஈஸ்வரி என அனைவரையும் ஒருசேர காட்டியது அருமை.
 
கர்ணன் மிருணாளினி 😍
"ஏலியன் காதாய் சிலிர்த்துக்கிட்டு ஒட்டு கேட்கிற" 🤣🤣 அச்சோ ஏலியன் காதை இப்படி யோசிச்சு பார்த்ததில்லை.
 
நான்கு கதைகளும் இணைந்த Epilogue Wowwwww 😍😍
 
விழிகளில் ஒரு பவனி
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
சித்திரமே செந்தேன் மலரே
அகம் உறைந்தேன் அரனே
 
நால்வரது காதலும் ஒவ்வொரு ரகம்,
 
அமைதியான மகிழ் மலர் காதல்
அழகான புவி ஆதி காதல்
ஆர்ப்பாட்டமான கர்ணன் மிரு காதல்
ஆதுரமான பவி ஈஸ்வரி காதல்
 
என்று அனைவரது உள்ளங்களும் உணர்வுகளும் வெளிப்பட்ட விதம் ரசிக்கும் வண்ணம் இருந்தது.
 
படங்கள் 👌🏼🌟
 
எதார்த்தமான வாழ்வியல்.
 
குடும்ப உறவுகள், அவர்களது காதல், திருமணம், குழந்தைகள் என அழகானதொரு பயணம். 🌿🌻
 
வழமைபோல் நான்கு கதைகளிலும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஏராளம். (தகவல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும்) 🥰🥰💛
1770184937-4.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : February 4, 2026 11:32 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

அகம் உறைந்தேன் அரனே - கௌசல்யா முத்துவேல் ரிவியூ

மூனு கதையுலையுமே வந்ததுனால இவன்‌ கதையை படிக்க ரொம்பவே ஆர்வமா இருந்தேன், அசத்திட்டான்😍!!..
செம லவ்வர் பாயா இருந்தான், இவனுக்கான டைலாக்ஸ்லாம் எங்கருந்து கா பிடிச்சீங்க, நம்ம ஈசுவையே வாயடைச்சு நிக்க வச்சுட்டான்!!..
ஆண்களோட அன்பு, அரவனைப்புக்கான பார்வையை, ஆண்களோட உழைப்பு சுரண்டலை தெளிவா சொல்லிருந்தீங்க கா!!.. அது ரொம்ப பிடிச்சிருந்தது!!..
ஷண்மதி, அவளை மாறன் கதைலையே ரொம்ப பிடிக்கும், இந்த கதையில ரொம்ப ரொம்ப பிடிச்சது❤️!!.. கடைசிவரைக்கும் அவ தம்பிக்காக நின்னது🔥!!..
ஈசு, கல்யாணம் பன்னிக்கலாம்னு சொன்ன இடம், நிஜமா அவளை அவ்வளவு பிடிச்சது!!!... அதை நீங்க இயல்பா, எந்த வித மிகைப்படுத்தலும் இல்லாம சொன்னது, சூப்பர்‌ கா!!!..
நிலவழகி மாற்றம் புரிஞ்சாலும் அவங்க மேல சின்னதா கூட அனுதாபம் வரவே இல்லை!!..
எல்லா கஷ்டத்துலையும் கூடவே இருந்த உறவுகள்😍❤️!!..
திறமையும், நேர்மையான உழைப்பும் இருந்தா எந்த நிலையில இருந்தும் மேல வரலாம்னு அழகா சொல்லிட்டீங்க கா!!..
காதலுக்கு எந்த சினிமாத்தனமும் அவசியமே இல்லைன்னு சொன்ன விதம்❤️!!..
மாணிக்கவேலு, தர்ஷனுக்கான கர்மா நிஜமாவே Poetic Justice தான் கா🔥!!..
பவி, ஈசு ஒருத்தொருக்கொருத்தர் உறுதுணையா இருந்தது அவ்வளவு அழகா இருந்தது!!.. ரசிக்க வச்சது, கத்துக்க கூட வச்சது!!..
அழகான கதை கா, இன்னும் இது மாதிரி நிறைய நிறைய கதைகள் எழுத வாழ்த்துகள் கா❤️🔥😍!!!..
1770185078-2.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : February 4, 2026 11:34 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index