அகம் 7

“ஒரு சின்ன பற்றுதலுக்காக ஏங்கி நிக்குற மனசு கிடைச்ச துணை பிடிச்சுக்கத் துடிக்கும். அந்தத் துணை ரொம்ப ஜாக்கிரதையோட விலகி நின்னா என்ன செய்யுறது? ஒரு கோவிலோட ராஜகோபுரத்தை தூரமா நின்னு ரசிக்குற ஒருத்தனா விலகி நின்னுடட்டுமா? இல்லனா அழகான நதியோட குளுமையை அதுல படகா மாறி நீந்தி அனுபவிக்கட்டுமா? ரொம்ப குழப்பம் எனக்குள்ள. யார் ஒருத்தியோட விலகல்ல என் தேடலுக்கான விடை இருக்குதோ அவளை நான் எப்பிடி அணுகுறதுங்கிறதுதான் இப்ப எனக்குள்ள இருக்குற பெரிய குழப்பம்” […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 6

“ஒருத்தரோட பிரசன்னமும், மௌனமும் கூட மனசை ஆட்டுவிச்சிடும்னு சமீபநாட்கள்ல எனக்குப் புரியுது. நான் நினைச்சா இதெல்லாம் தேவையில்லனு அவங்க கிட்ட பேசிட முடியும். ஏன் நான் இதையெல்லாம் ஒரு தவிப்போட ரசிக்குறேன்? ஒருத்தரோட ஆர்வமான பார்வையும் பேச்சும் என் நிதானத்தோட வேர் வரைக்கும் ஊடுருவுதுனு தெரிஞ்ச அப்புறமும் நான் எதுவும் செய்யாம அமைதியா இருக்குறேன். இதுக்கெல்லாம் அர்த்தம் எனக்கும் அவங்க மேல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்குங்கிறதுதானே? ஆனா ஒன்னு, இந்த ஈர்ப்பை நானும் என் மனசும் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 5

“வாய்ப்புகள் நம்மளைத் தேடி வரட்டும்னு காத்திருப்பாங்க சில பேர். ஜன்னல் கதவை மூடி வச்சுட்டுச் சூரிய வெளிச்சம் வரலனு சொல்லுறதுல எப்பிடி அர்த்தமில்லயோ அப்பிடித்தான் வாய்ப்புகள் வரட்டும்னு காத்திருக்குறதுலயும் அர்த்தமில்ல. நமக்கான வாய்ப்பு வரலனா நம்மளே முன்வந்து ஒரு பாதைய உருவாக்கி நடக்க ஆரம்பிச்சிடனும். இல்லனா நம்ம கனவு காலம் முழுக்க கற்பனையாவே முடிஞ்சிடும்”      -பவிதரன் மேரு பில்டர்சில் ஈஸ்வரி நன்றாகப் பொருந்திக்கொண்டாள். சுமதியிடம் வேலையைக் கற்றுக்கொள்வது அவளுக்குச் சிரமமாக இல்லை. வணிகவியலில் பட்டப்படிப்பு படித்துவிட்டு […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 4

“கடலுக்கு அடியில இருக்குறப்ப அலைகளோட வலிமை யாரோட கண்ணுக்கும் தெரியாது. அது கரையை மோதுறப்பதான் அதோட ஆவேசமும் வலிமையும் உலகத்துக்குத் தெரிய வரும். அதே மாதிரிதான் மனவுறுதியும். நமக்குள்ளவே அதை மறைச்சு வச்சிருக்குறப்ப உலகத்தோட பார்வைக்கு அது தெரியாது. ஏதோ ஒரு சோதனையான சூழல்ல அதை நாம வெளிப்படுத்துறப்பதான் அந்த மனவுறுதியை இந்த உலகம் பாக்கும். பாராட்டும்” -ஈஸ்வரி ஓல்ட் காபி ஹவுஸ், வல்லக்கடவு, திருவனந்தபுரம்… கேரளா பாணி கூரையோடு கூடிய பெரிய வீட்டின் வராண்டா போல […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 3

“எனக்கு என்னைப் பத்தி யோசிக்கவே நேரம் கிடைச்சதில்ல. எனக்குள்ள எப்பவும் ஒரு குரல் கேக்கும். அது என்ன சொல்லும் தெரியுமா? ‘நீ ஓடிக்கிட்டே இருடா. ஒரு நொடி நீ நின்னாலும் உன்னைச் சுத்தி இருக்குற பிரச்சனைகளோட அழுத்தம் உன்னை இறுக்கமா மாத்திடும். நீ மனுசத்தன்மைய இழந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. நீ ஓடனும் பவி’. உஃப்! அந்தக் குரலை நான் எப்பவும் அலட்சியப்படுத்துறதில்ல. ஒரு நாள் எனக்கும் இந்த ஓட்டம் சலிச்சுப் போகும். அப்ப நான் என்ன செய்யுறது?’ […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 2

“அன்புங்கிறது மனசுக்குள்ள பூட்டி வைக்க வேண்டிய இரகசியமில்ல. அதை மௌனமா வெளிப்படுத்துனா யாருக்குப் புரியும்? ஒருத்தரோட அன்பு கூண்டுப்பறவையா மனசுக்குள்ள பதுங்கியிருக்குறதைவிட சிறகடிச்சு வானத்துல பறக்குற சுதந்திரப் பறவையா வெளிப்படையா தெரியுறப்ப தான் அதுக்கான வலிமை அதிகமாகுது” -ஈஸ்வரி முற்பகல் பதினோரு மணி வெயில், அந்தப் பழைய ஓட்டு வீட்டின் திண்ணையில் தங்கத்தைப் பூசியது போலப் படர்ந்திருந்தது. மக்கள் எல்லம் அவரவர் அலுவலைக்  கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஊரே நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, அந்த வீட்டின் பின்வாசலில் இருந்த கொய்யா […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 1.2

எப்படியாவது வருங்கால மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி மதுமதியையும் தன் பார்வைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வைராக்கியமாகவே உருப்பெற்றுவிட்டது மாணிக்கவேலுவின் மனதில். தந்தையின் பிடிவாதப் பேச்சைக் கேட்ட பவிதரனுக்கு அதற்கு மேல் வீட்டிலிருக்க பிடிக்கவில்லை. இவ்வளவு நடந்தும் தந்தை மாறவில்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. அவர் மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவும் இல்லை.  சில காரணங்கள்! சில பிடிவாதங்கள்! சில தவறான புரிதல்கள்! இவைதான் தங்கள் குடும்பத்தினரின் நடுவே கண்ணுக்குத் தெரியாத வேலியை அமைத்திருப்பதைப் பவிதரன் அறிந்திருந்தான். […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 1.1

“தனிமைங்கிறது ஆளுங்கள் யாரும் நம்ம கூட இல்லாம தனியா இருக்குற நிலை இல்ல. உண்மையான தனிமை என்ன தெரியுமா? அன்பு நிறைய இருந்தும் சம்பந்தவங்க கிட்ட பேச முடியாத மௌனம்தான்”      -பவிதரன் அந்தி வானத்தின் இளஞ்சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. தோட்டத்தில் இருக்கும் வேப்பமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தான் அவன். நல்ல உயரமும் அதற்கேற்ற உடற்கட்டுமாய் முப்பதைத் தொடப் போகிறான். அடர்சிகையானது தோட்டத்து விருட்சங்களின் தயவால் வீசிய காற்றினால் கொஞ்சம் […]

 

Share your Reaction

Loading spinner