“என்னோட ட்ரீட்மெண்ட் முடிஞ்சு மறுபடியும் ஸ்கூலுக்குப் போனப்ப என் க்ளாஸ்ல இருந்த கேர்ள்ஸ் எல்லாரும் என்னை விட சின்னவங்க… முதல்ல யாருமே என் கூட பேசல… அவங்களை விட நான் த்ரீ இயர்ஸ் எல்டர்… என் கிட்ட டிஸ்டண்ட்ஸ் மெயிண்டெய்ன் பண்ணுவாங்க… எனக்கும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்க நேரமில்ல… ஆல்ரெடி என் வாழ்க்கையில நான் த்ரீ இயர்ஸ் பின்னாடி போன ஃபீல்ல இருந்தேன்… அதனால படிப்புல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுனேன்… வீட்டுக்கு வந்தா நிஹி காலேஜ் ஃப்ரெண்ட்ஸை அழைச்சிட்டு வந்து கலாட்டா பண்ணுவா… அவங்க என்னைக் கிண்டலா பாப்பாங்க… அப்பா கிட்ட சொல்லலாம்னு தோணும்… பட் அவங்களை கண்ட்ரோல் பண்ண நானே போதும்ங்கிறப்ப எதுக்குத் தேவையில்லாம அப்பாவை டிஸ்டர்ப் பண்ணணும்னு விட்டுடுவேன்”
-நித்திலா
அம்ரித்தோடு கேம் விளையாடிக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர். அவனது மனம் முழுவதும் நித்திலாவின் வருகையைப் பற்றிய கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.
உண்மை தெரிந்து வந்திருப்பவள் தந்தை முன்னிலையில் தனது தகிடுதத்தங்களைச் சொல்லி முறையிட்டால் என்ன செய்வது?
அதை விட முக்கியமான பிரச்சனை இனி அவன் குடியும் குடித்தனமுமாக வாழப்போகிறான் என ஆனந்த்சாகர் கனவு கண்டிருப்பாரே, அந்தக் கனவுக்கு அஸ்திவாரமே இல்லை என அவருக்குப் புரியவைப்பது தான்.
தந்தையும் தானும் திட்டமிட்டபடி சாகர் குழுமத்தின் பிரச்சனை முடிந்ததும் சொல்லிக்கொள்ளலாம். அதற்கு முன் நித்திலாவின் வாயிலாக எந்த உண்மையும் தந்தைக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். என்ன செய்து அவளைச் சமாளிக்கலாம்?
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சிந்தனை விளையாட்டில் இல்லை எனவும் ஈசியாக அம்ரித்திடம் தோற்றுவிட்டான் கிருஷ்ணராஜசாகர்.
“ஐ அம் த வின்னர்”

துள்ளிக் குதித்த மகனைத் தாயாரிடம் அனுப்பிவிட்டு நித்திலாவைச் சரிகட்டுவதற்காக சென்றான். அவனது அறையில் தனது உடமைகளை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தவள் கிருஷ்ணராஜசாகரை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
இவ்வளவு ஏன்? அப்படி ஒரு ஜீவன் அறைக்குள் வந்ததை கண்டுகொள்ளாமல் விக்ரமிடம் போனில் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்.
“டோண்ட் வொரி விக்கி… நான் டேப்ளட் போட்டுட்டேன்… எனக்குப் பசிக்கல… பால் மட்டும் ஆன்ட்டி அனுப்பிவச்சாங்க… நயனியா? அவ இந்நேரம் அவங்க மம்மி டாடி கூட கொஞ்சிட்டிருப்பாடா… க்கும்! புருசனா? ஏன் விக்கி அந்தாளை என் புருசன்னு சொல்லி என்னோட பி.பிய இன்க்ரீஸ் பண்ணுற?”
அவள் பேசியதை முழுவதுமாக கேட்டுவிட்டு மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு நின்றான் கிருஷ்ணராஜசாகர்.

அவன் “க்கும்” என தொண்டையைச் செருமவும் நித்திலா திரும்பிப் பார்த்தாள்.
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”
“உங்க கண் முன்னாடி தானே நிக்கிறேன்… பேசுங்க”
மரியாதைப்பன்மை மீண்டுவிட்டதில் கிருஷ்ணராஜசாகர் போலி மெச்சுதலாக உதட்டைப் பிதுக்க நித்திலா “வாட்டெவர்” என தோளைக் குலுக்கிவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“அம்ருவ நான் இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு உண்மையான காரணம் தெரியணும்னா வா” என்றவன் பதிலை எதிர்பாராமல் அறையை விட்டு வெளியேறினான்.
சட்டென நின்றவன் “ரொம்ப வேகமா ஓடி வந்து விழுந்துடாத… நான் பாண்ட் கிட்ட உனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன்” என்க
“அக்கறை உள்ள மாதிரி நடிக்கிறான் ராஸ்கல்” என வார்த்தைகளைக் கடித்து துப்பியவாறு ஆரம்பித்த வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுக் கிளம்பினாள்.
தோட்டத்திற்கு வந்தவளின் நாசியில் கம்மென்ற மரமல்லியின் நறுமணம் ஏறியது. அந்த மரமல்லியின் நறுமணம் நுரையீரலுக்குள் நுழைந்ததோடு மட்டுமன்றி பழைய நினைவுகளையும் கிளறிவிட்டது.
தலையை உலுக்கிக் கிருஷ்ணராஜசாகரைத் தேடியவள் அவன் செய்குளத்தின் அருகே அமர்ந்திருக்கவும் அங்கே சென்றாள்.
அவனெதிரே நின்றவள் “எதுக்கு இங்க வரச் சொன்னிங்க?” என்று கேட்க
“ரொம்ப நாள் கழிச்சு உன் கூட ரொமான்ஸ் பண்ணணும்னு ஆசை வந்துச்சு… இது தானே நம்ம ஃபேவரைட் ரொமான்டிக் ப்ளேஸ்… தட்ஸ் ஒய் அம் ஆஸ்கிங் யூ டு கம் ஹியர்” என்றான் அவன் இலகுவாக.
நித்திலா அவனது பதிலில் மயங்கவில்லை.
“இப்பிடி பேசாதிங்க சாகர்” என்றாள் எச்சரிக்கும் தொனியில்.
“ஜஸ்ட் கிட்டிங்”
தோள்களைக் குலுக்கியவன் அம்ரித்தை இங்கே அழைத்து வந்ததற்கான காரணத்தை ஒளிவுமறைவின்றி கூற ஆரம்பித்தான்.
“உன்னை ஃபர்ஸ்ட் ஹனுமன் டெம்பிள்ல பாத்தப்ப ஐ டிண்ட் ஃபீல் எனிதிங்.. எங்கிருந்தாலும் வாழ்கனு இக்னோர் பண்ணிட்டேன்… பட் கபேல அம்ருவ பாத்தப்ப என்னால வேற எதையும் யோசிக்க முடியல… அவன் உன் ஃப்ரெண்டை டாடினு கூப்பிட்டப்ப ஐ ஃபெல்ட் அசேம்ட்… அப்பவே அவனை என் கூட வச்சிக்கணும்னு ஆசை பிறந்துடுச்சு…
இன்னொரு காரணம் என்னனு தெரிஞ்சா உனக்குக் கோவம் வரலாம்… பட் ஐ டோண்ட் கேர் அபவுட் தட்… சோ சொல்லிடுறேன்… அப்பாக்கு அப்புறம் சாகர் குரூப்போட சேர்மன் பதவி சந்தீப்புக்குப் போற மாதிரியான சிச்சுவேசன்… என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு குழந்தை பிறக்கும்… ஆனா நான் தனிமரமாச்சேனு டாட் யோசிச்சார்… சிரஞ்சீவி மாமா எனக்குப் பொண்ணு கூட பாத்தார்”
“அப்பவே கல்யாணம் பண்ணி தொலைச்சிருக்கலாம்,… நானும் அம்ருவும் நிம்மதியா இருந்துருப்போம்”
“இன்னொரு தடவை பொண்டாட்டிங்கிறவ கிட்ட ஏமாற நான் ஒன்னும் முட்டாள் இல்ல”
நித்திலா அவனை வெட்டுவது போல முறைத்தாள்.
“நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டேன்… சோ டாட் எல்லா பொறுப்பையும் சந்தீப் கிட்ட ஒப்படைக்கிற முடிவுக்கு வந்தார்… இதுக்கு இடையில உன் தங்கச்சி வேற சந்தீப்பை சாகர் குரூப்கு ஹெட் ஆக்கணும்னு துடியா துடிச்சா”
“அவ என் தங்கச்சி இல்ல… நிஹாரிகானு மட்டும் சொல்லுங்க… போதும்”
சூடாய் வெளிவந்தது நித்திலாவின் மறுப்பு. கிருஷ்ணராஜசாகரின் கண்கள் ஒரு நொடி ஒளிர்ந்து இலகுவானது.
“சோ எனக்கும் வாரிசு இருக்குனு டாட் கிட்ட காட்டுற வெறி… அம்ருவ நீ அனுப்பிவைக்கமாட்டனு தெரியும்… உன் மெடிக்கல் ரிப்போர்ட்டை விக்ரம் கபேக்குக் கொண்டு வந்தப்ப பாத்தேன்.. ப்ளான் பண்ணி அம்ருவ என் கூட அழைச்சிட்டு வந்துட்டேன்… இன்னொன்னையும் தெரிஞ்சிக்க, உனக்குக் கேன்சர்னு பொய் சொல்ல வச்சு உன் மனசை காயப்படுத்துனதுக்காக இப்ப வரைக்கும் நான் வருத்தப்படல… இனியும் வருத்தப்படப்போறதில்ல”
அவன் முடித்த விதத்தில் நித்திலாவின் கோபம் தூண்டப்பட்டது. சாகர் குழுமத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற என் மகனைத் துருப்புச்சீட்டாக பயன்படுத்த அழைத்து வந்திருக்கிறான். இதை ஆனந்த்சாகரிடம் உடனே சொல்லி கிருஷ்ணராஜசாகரின் திட்டத்தைத் தவிடுபொடியாக்க அவளது மனம் துடித்தது.
“நீங்க செஞ்ச தில்லாலங்கடிய இப்பவே அங்கிள் கிட்ட நான் சொல்லுறேன்” என்று கிளம்பியவளை கிருஷ்ணராஜசாகரின் சிரிப்பு சத்தம் நிறுத்தியது,
“இவ்ளோ யோசிச்சவன் அதை யோசிக்கமாட்டேனா? உன்னை இங்க வரவைக்க வேற வழியில்லாம அப்பிடி செஞ்சேன்னு சொல்லுவேன்… என்னை பத்தி அப்பாக்கு நல்லா தெரியும்… எனக்கு ஒரு காரியம் ஆகணும்னா நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு தெரிஞ்சதால நீ சொல்லுறதை பெரிசா எடுத்துக்கமாட்டார்… புவர் கேர்ள்… நீ போற எல்லா இடத்துலயும் நான் ஆல்ரெடி செக் வச்சிட்டேன்”
நித்திலா கையறுநிலையில் நின்றாள்.
“நான் முன்னாடியே சொன்னேன்ல, என்னைப் பழிவாங்கணும்னா நீ என்னை மாதிரியே யோசிக்கணும்னு… நீ என்னை ஹர்ட் பண்ணும்னு நினைச்சு கத்திய வச்சு குத்துனாலும் நான் அதால வருத்தப்படப்போறதில்ல… வேணும்னா ஒன்னு பண்ணு, நாலு வருசத்துக்கு முன்னாடி காதல்ல கசிந்துருகி எப்பவும் உங்களைப் பிரிய மாட்டேன் சாகர்னு ஒரு ட்ராமா போட்டியே, அதே மாதிரி ட்ரை பண்ணு… என்னை காயப்படுத்துற சக்தி நம்பிக்கை துரோகத்துக்கு மட்டும் தான் இருக்கு நித்திலா… ஃபர்ஸ்ட் டைம் சிறப்பா செஞ்சு முடிச்ச… இப்ப செகண்ட் சான்ஸ் வந்திருக்கு… முடிஞ்சா அந்த வழிய ட்ரை பண்ணு”
எள்ளலும் குத்தலுமாக தனக்கு நம்பிக்கை துரோகி பட்டம் கட்டிவிட்டு நகர்ந்தவனை அப்படியே குளத்தில் தள்ளிவிடலாமா என்று யோசித்தாள் நித்திலா.
தன்னை எந்தளவுக்குக் காயப்படுத்தினான் என்பதை யோசிக்காமல் குற்றம் சாட்டுகிறானே! இப்போது வரை அவன் செய்த தவறைப் பற்றி மூச்சுவிடுகிறானா பார்!
நியாயப்படி வந்ததும் அவனது கடந்தகால உதாசீனத்துக்காக சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டியவள் நித்திலா தான்.
பழைய சம்பவங்களை பேசி பிரயோஜனமில்லை என்பதால் அதை பற்றி எதுவும் கேட்காமல் இருக்கிறாள். ஆனால் கிருஷ்ணராஜசாகர் ஒவ்வொரு முறையும் நித்திலா ஏமாற்றிவிட்டாள், துரோகம் செய்துவிட்டாள், சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துவிட்டாள் என குத்திக்காட்டிக்கொண்டே இருக்கிறான்.
எரிச்சலாக இருந்தது நித்திலாவுக்கு. அவனிடம் தன்னை நிரூபிக்கும் எண்ணமெல்லாம் துளியும் கிடையாது. அம்ரித்தை மட்டும் அவனிடமிருந்து மீட்டால் போதும்.
அதே எண்ணத்தோடு கிருஷ்ணராஜசாகரின் அறைக்குள் வந்தவள் அம்ரித்தும் அவனும் உறங்க ஆயத்தமாவதை பார்த்தாள்.
“அம்ரு என் கூட தான் தூங்குவான்” என பிள்ளையைத் தூக்கிக்கொள்ள அவள் வரும் முன்னர் கிருஷ்ணராஜசாகர் மகனைத் தூக்கிக்கொண்டான்.
“நானும் அம்ருவும் பெட்ல தூங்குவோம்… நீ அந்த கவுச்ல போய் தூங்கு”
நித்திலாவின் மீது கம்ஃபோர்டர் ஒன்றை வீசினான் அவன்.
முகத்தில் தொப்பென விழுந்த கம்ஃபோர்டரை எடுத்தவளுக்கு வந்த சினத்துக்கு அளவே இல்லை.
“நீங்க போய் அங்க தூங்குங்க”
“முடியாது” என்றவன் ஏதோ மொபைல் அழைப்பு வரவும் ஒதுங்க நித்திலா குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை அந்த பெட்டில் ஊற்றிவிட்டாள்.
பெரிய கண்ணாடி ஜக் நிறைய இருந்த தண்ணீர் முக்கால்வாசி பெட்டை நனைத்துவிட கிருஷ்ணராஜசாகர் அவசரமாக ஓடிவந்தான்.

“ஏய்! என்னடி பண்ணுற?”
ஏகவசனத்தில் அவன் கொதிப்பது அவளுக்கு இதமாக இருந்தது.
“நான் படுக்க முடியாத பெட்ல நீங்களும் தூங்கக்கூடாது… இந்தாங்க, பிள்ளைய பிடிங்க” என்று அம்ரித்தை அவனிடம் கொடுத்தாள்.
“அப்பனும் பிள்ளையும் தரையில படுத்து தூங்குங்கடா” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு கம்ஃபோர்டருடன் கவுச்சை நோக்கி நகர்ந்தவளின் கையைப் பிடித்தான் கிருஷ்ணராஜசாகர்.
அம்ரித் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடக்கும் டாம் – ஜெர்ரி சண்டையை சுவாரசியமாக வேடிக்கை பார்க்க அவனை இறக்கிவிட்டவன்
“அம்ரு குட்டி! இன்னைக்கும் டாடியும் நீயும் கவுச்ல தூங்கப்போறோம்” என இராகமாகச் சொல்லிவிட்டு நித்திலாவை இழுத்துச் சென்றான்.
“டாடி அப்ப நித்திம்மா எங்க படுப்பாங்க?”
“நித்திமாக்கு ரூம்ல படுக்க பிடிக்கலையாம்… பால்கனில காத்தாட படுக்கப்போறாடா குட்டி… நீ போய் படுத்துக்க” என்று சொன்னபடி பால்கனிக்கான கதவைத் திறந்து நித்திலாவை அங்கே தள்ளினான்.
“மனுசனா நீ? இப்பிடி வெளிய பிடிச்சு தள்ளுற? நைட் குளிரும்… ராட்சசன் மாதிரி பிஹேவ் பண்ணுற நீ… உன்னைப் போய் ஒருகாலத்துல நல்லவன்னு நினைச்சேன் பாரு” என்றவளை கையமர்த்தியவன்
“சிம்லா குளிருக்கு முன்னாடி இதுல்லாம் ஒன்னுமேல்ல நித்திம்மா… ஓவரா நடிக்காம படுத்து தூங்க போடி” என்று சொல்லிவிட்டு கதவை அடைத்தான்.

நித்திலா வெளியே நின்று காச்மூச்சென கத்துவதை அவன் காதில் வாங்கவில்லை. கண்ணாடிகதவுகளுக்கு வெளியே அவள் என்ன கத்தினாலும் கேட்காது தானே!
என்னையா தரையில் உறங்க சொல்கிறாய் என அலட்சியமாகச் சிரித்துவிட்டு “அம்ரு! வா வந்து படு” என மகனுக்குக் கட்டளையிட்டான்.
அம்ரித்தும் நல்ல பையனாகப் படுத்துக்கொண்டான்.
விளக்கை அணைத்தவன் மகனோடு கவுச்சில் படுத்துக்கொண்டான்.
“நித்திம்மாக்கு பயமா இருக்கும்ல டாடி?”
“நித்திம்மா பிக் கேர்ள்… அவ ரொம்ப தைரியமானவ… அவளுக்குப் பயம்னா என்னனு கூட தெரியாதுடா அம்ரு குட்டி… நீ தூங்கு”
அன்னையை எண்ணி கவலைகொண்ட மைந்தனிடம் கதை கதையாகப் பேசி உறங்க வைத்தவனின் கவனம் பால்கனியில் வரிவடிவமாக நடந்துகொண்டிருந்த நித்திலாவின் மீது தான் இருந்தது.
இது கோடைக்காலம் தான். வெளியே காற்று சில்லென வீசும். கோடைமழை ஏற்கெனவே கொட்டித் தீர்த்துவிட்டது. இனி மழை வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. எனவே அவள் மழையில் நனைவாளோ குளிரில் நடுங்குவாளோ என்ற கவலை எல்லாம் அவனுக்கு இல்லை.
பால்கனியிலும் இதே போல கவுச் ஒன்று உண்டு. நித்திலா அதில் படுத்தபிறகு தான் கிருஷ்ணராஜசாகர் உறங்கவே கண்களை மூடினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

