
ஹலோ மக்களே
இன்னைக்கு வேலண்டைன்ஸ் டே. இந்த நாள் எப்பிடி உருவாச்சுனு சின்னதா ஒரு தகவல் unfiltered by nithya சேப்டர்ல பாக்கலாமா?
வரலாறு
கி.பி. 3-ம் நூற்றாண்டுல ரோம் நகரத்தை இரண்டாம் கிளாடியஸ் அப்படிங்கிற ஒரு மன்னன் ஆட்சி செஞ்சான். அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் இருந்தது. "கல்யாணம் பண்ணிக்கிட்டா பசங்க பொண்டாட்டி, புள்ள குட்டின்னு பாசத்துல விழுந்துடுவாங்க, அப்புறம் போர்க்களத்துல சரியா சண்டை போட மாட்டாங்க"ன்னு நம்பினான். அதனால, "இளைஞர்கள் யாரும் கல்யாணமே பண்ணிக்கக் கூடாது"ன்னு ஒரு தடையைப் போட்டான்.
ஆனா, வாலண்டைன் அப்படிங்கிற ஒரு பாதிரியாருக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கல. காதலிக்கிறவங்களை சேர்த்து வைக்கணும்னு முடிவு பண்ணி, ராஜாவுக்குத் தெரியாம நிறைய பேருக்கு ரகசியமா கல்யாணம் பண்ணி வச்சாரு. விஷயம் ராஜா காதுக்குப் போக, வாலண்டைனைப் பிடிச்சு ஜெயில்ல போட்டு மரண தண்டனை கொடுத்துட்டாங்க.
அந்த முதல் லவ் லெட்டர்
வாலண்டைன் ஜெயில்ல இருந்தப்போ, அங்க இருந்த ஜெயிலரோட பொண்ணுக்கும் அவருக்கும் ஒரு நல்ல நட்பு உருவாச்சு. அந்தப் பொண்ணுக்கு கண் தெரியாதுன்னு சொல்லுவாங்க. அவர் சாகப்போறதுக்கு முன்னாடி, அந்தப் பொண்ணுக்கு ஒரு லெட்டர் எழுதினாரு. அதுல கடைசியா "From your Valentine" அப்படின்னு கையெழுத்துப் போட்டிருந்தாரு. இன்னைக்கு உலகம் முழுக்க எல்லாரும் பயன்படுத்துற அந்த வார்த்தை அங்கிருந்துதான் ஆரம்பிச்சது!
லூப்பர்காலியா (Lupercalia) திருவிழா
ரோம் நாட்டுல பிப்ரவரி மாசம் நடுவுல 'லூப்பர்காலியா'ன்னு ஒரு திருவிழா கொண்டாடுவாங்க. இது வசந்த காலம் வர்றதை வரவேற்கிற மாதிரியான ஒரு கொண்டாட்டம். அப்புறமா 5-ம் நூற்றாண்டுல வந்த கெலாசியஸ் அப்படிங்கிற போப், அந்தத் பழைய திருவிழாவைத் தடை பண்ணிட்டு, பிப்ரவரி 14-ஆம் தேதியை 'புனித வாலண்டைன் தினமா' அறிவிச்சுட்டாரு.
இப்ப இருக்குற வேலண்டைன்ஸ் டே: ஒரு வாரக் கொண்டாட்டம்!
இப்போதெல்லாம் பிப்ரவரி 14 ஒரு நாள் மட்டும் வர்றதில்லை, அது ஒரு பெரிய வாரமாவே மாறிடுச்சு:
ரோஸ் டே: சிவப்பா ஒரு ரோஜாவைக் கொடுத்து காதலைச் சொல்ல்ல ஆரம்பிக்கிறது.
ப்ரப்போஸ் டே: "மனசுல உன்னைத்தான் வச்சிருக்கேன்"னு தைரியமாச் சொல்றது.
சாக்லேட் டே: இனிப்பா எதாவது கொடுத்து மனமுருக வைக்குறது
டெடி டே: கியூட்டா ஒரு பொம்மையை அன்பளிப்பா கொடுக்கிறது.
பிராமிஸ் டே: "என்னைக்கும் உன்னை விட்டுப் போகமாட்டேன்"னு சத்தியம் பண்ணிக்கிறது.
ஹக் & கிஸ் டே: அன்பை இன்னும் நெருக்கமா வெளிப்படுத்துறது.
வேலண்டைன்ஸ் டே: இதுதான் காதலர் தினம்.
இன்றைய மாடர்ன் ட்ரெண்ட்ஸ்
ஜப்பான் ஸ்டைல்: ஜப்பான்ல ஒரு வித்தியாசம் இருக்கு. அங்க பிப்ரவரி 14 அன்னைக்கு பொண்ணுங்க தான் பசங்களுக்கு சாக்லேட் தருவாங்க. அப்புறம் சரியா ஒரு மாசம் கழிச்சு மார்ச் 14-ல (இதுக்கு 'White Day'ன்னு பேரு) பசங்க திருப்பிப் பரிசு தருவாங்க.
சிங்கிள்ஸ் அலப்பறைகள்: காதலிக்காதவங்க பிப்ரவரி 15-ஐ 'சிங்கிள்ஸ் அவேர்னஸ் டே'ன்னு கொண்டாடுறாங்க. "நாம நிம்மதியா, ஃப்ரீயா இருக்கோம்"னு மீம்ஸ் போட்டு ஜாலியா இருப்பாங்க.
காதலிக்காதவங்க (சிங்கிள்ஸ்) எப்படி செலிப்ரேட் பண்றாங்க?
கேலண்டைன்ஸ் டே (Galentine’s Day): இது பொண்ணுங்களுக்கே உண்டான ஸ்பெஷல் டே. "பாய்-ப்ரெண்ட் இல்லனா என்ன? என் தோழிகளே போதும்"னு கேங்கா சேர்ந்து ஹோட்டலுக்குப் போறது, லாங் டிரைவ் போறதுன்னு என்ஜாய் பண்ணுவாங்க. இன்ஸ்டால இன்னைக்கு மட்டுமே நிறைய கேலண்டைன்ஸ் டே ரீல்ஸ் வந்திருக்கும் இந்நேரத்துக்கு.
இவ்ளோதான் வேலண்டைன்ஸ் டே பத்திய பதிவு. அடுத்த சனிக்கிழமை வேற ஒரு டாபிக்கோட வர்றேன். குட் நைட்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ivalo periya history irukka???..... ippo than idhellam kelvi padran.....
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



