NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
பாம்பே சாண்ட்விச்
 
Share:
Notifications
Clear all

பாம்பே சாண்ட்விச்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

இது அடிக்கடி டின்னருக்குச் செஞ்சு சாப்பிடுவோம். ஈவ்னிங் ஸ்னாக்காவும் இதைச் சாப்பிடலாம். வாங்க எப்பிடி செய்யலாம்னு  பாக்கலாம்.

தேவையான பொருட்கள்

1. சட்னி செய்ய:

  • கொத்தமல்லி தழை – 1 கப்

  • புதினா – 1/2 கப்

  • பச்சை மிளகாய் – 3 அல்லது 4 (உங்க காரத்துக்கு ஏத்த மாதிரி)

  • இஞ்சி – 1 சின்ன துண்டு

  • உப்பு – தேவையான அளவு

2. உருளைக்கிழங்கு மசாலாவுக்கு:

  • உருளைக்கிழங்கு – 3 பெரியது (வேகவைத்து மசித்தது)

  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

  • சாட்மசலா - 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

3. சாண்ட்விச் அடுக்க (Filling & Bread):

  • பிரட் பாக்கெட் – 1 (ஒயிட் பிரட் அல்லது கோதுமை பிரட்)

  • வெண்ணெய் (Butter) – ஒரு சின்ன பாக்கெட்

  • வெங்காயம் – 1 (மெல்லிய வட்டங்களாக நறுக்கியது)

  • தக்காளி – 1 (மெல்லிய வட்டங்களாக நறுக்கியது)

  • வெள்ளரிக்காய் – 1 (மெல்லிய வட்டங்களாக நறுக்கியது)

  • சாட் மசாலா – ஒரு சின்ன பாக்கெட் (இதுதான் மெயின்!)

4. எக்ஸ்ட்ரா சுவைக்கு (Topping):

  • ஓமப்பொடி (Nylon Sev) – ஒரு கைப்பிடி அளவு

  • தக்காளி கெட்ச்அப் – தேவையான அளவு

இந்தச் சாண்ட்விச்சு க்ரீன் சட்னியும் உருளைக்கிழங்கு மசாலாவும் முதல்ல ரெடி பண்ணனும்.

  • க்ரீன் சட்னிக்கு ஒரு கப் கொத்தமல்லி, அரை கப் புதினா, காரத்துக்கு ஏத்த மாதிரி 3 பச்சை மிளகாய், ஒரு சின்ன துண்டு இஞ்சி,  உப்பு இது எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு, கொஞ்சமா தண்ணி தெளிச்சு நல்லா கெட்டியா அரைச்சு எடுத்துக்கோங்க.

  • ஒரு 3 உருளைக்கிழங்கை வேகவச்சு மசிச்சு வச்சுக்கோங்க.

  • மசிச்சு வச்சிருக்க உருளைக்கிழங்குல மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசலா, உப்பு எல்லாத்தையும் போட்டு நல்லா கிளறி ஒரு 2 நிமிஷம் அடுப்புல வச்சு இறக்கிருங்க. (இஞ்சி பூண்டு பேஸ்ட் பிடிக்கும்னா அதையும் சேர்த்துக்கலாம்).
  • பிரட் துண்டுகள், பட்டர், ரவுண்ட் ரவுண்டா கட் பண்ண வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் அப்புறம் மெயின் ஐட்டமான சாட் மசாலா எல்லாம் எடுத்துக்கோங்க.

  • ரெண்டு பிரட் ஸ்லைஸ் எடுத்துக்கோங்க. ஒரு பக்கம் ஃபுல்லா தாராளமா வெண்ணெய் தடவிட்டு, அதுக்கு மேல நம்ம அரைச்சு வச்சிருக்க பச்சை சட்னியைத் தடவுங்க.

  • இப்போ ஒரு பிரட்ல நம்ம ரெடி பண்ண உருளைக்கிழங்கு மசாலாவை வச்சு எல்லா இடத்துலயும் பரப்பி விடுங்க.

  • அதுக்கு மேல கட் பண்ணி வச்சிருக்க வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை ஒன்னு மேல ஒன்னு அழகா அடுக்குங்க.

  • மேல ஒரு சிட்டிகை உப்பு, அப்புறம் நல்லா தாராளமா சாட் மசாலாவைத் தூவி விடுங்க. அந்த மணம் தான் பாம்பே ஸ்டைல் டேஸ்ட் கொடுக்கும்.

  •  

    விரும்புனா சீஸ் வைக்கலாம்.

  •  இன்னொரு பிரட் துண்டை (சட்னி தடவின பக்கம் உள்ள இருக்க மாதிரி) எடுத்து மேல வச்சு மூடிருங்க.

  • அடுப்புல தோசைக்கல்லை வச்சு சூடானதும், கொஞ்சம் வெண்ணெய் போடுங்க.

  • நம்ம ரெடி பண்ணி வச்சிருக்க சாண்ட்விச்சை அதுல வைங்க. பிரட்டோட மேல் பக்கமும் கொஞ்சம் வெண்ணெய் தடவி விடுங்க.

  • ஒரு பக்கம் சிவந்ததும் அப்படியே மெதுவா திருப்பிப் போடுங்க. ஒரு கரண்டியால பிரட்டை லேசா அமுக்கி விட்டீங்கன்னா, உள்ள இருக்க மசாலா எல்லாம் பிரட்டோட சூப்பரா ஒட்டிக்கும்.

  • ரெண்டு பக்கமும் நல்லா மொறுமொறுன்னு கோல்டன் பிரவுன் கலர் வந்ததும் தட்டுக்கு மாத்திருங்க.

  • சாண்ட்விச் மேக்கர் இருந்தா இந்த வேலை ரொம்ப சுலபம்.

சாண்ட்விச்சை குறுக்கா நாலா வெட்டி, அதுக்கு மேல கொஞ்சமா ஓமப்பொடி தூவுங்க. கூடவே கொஞ்சம் பச்சை சட்னி, தக்காளி கெட்ச்அப் வச்சு சூடா சாப்பிட்டா... சும்மா அதிரும்!

***** 

அடுத்த வாரம் வேற ரெசிபியோட உங்களை மீட் பண்ண வர்றேன். டாட்டா!

1770817686-WhatsApp-Image-2026-02-11-at-71733-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 11, 2026 7:18 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index