மக்கள் கூடுன திருவிழா மாதிரி ஒரு இடத்துல திடீர்னு வானத்துல இருந்து வைரஸ்கள் மாதிரி சில உயிரினங்கள் விழுது. அந்த உயிரினங்கள் அங்க உள்ள மக்கள் உடம்புக்குள்ள புகுந்து அவங்க மூளையைக் கண்ட்ரோல் பண்ணி தட்டுப்படுற எல்லா மனுசங்களையும் கொன்னு சாப்பிட ஆரம்பிக்குது.
கிட்டத்தட்ட மனுசங்க உடம்புல ஒட்டுண்ணி போல இருந்து அவங்களை கட்டுப்படுத்துற அந்த உயிரினங்கள் தான் பாராசைட்ஸ். அது சர்வைவ் ஆகி வாழ மனுச உடம்பு தேவை. மனுசங்களோட மூளைய சாப்பிட்டு அதுங்க வாழ ஆரம்பிக்குது. இந்த பாராசைட் தாக்குதல் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு அதுங்க எல்லாம் தங்களுக்குள்ள ஒரு கூட்டமைப்பை உருவாக்குது. உருவத்துல பாக்க மனுசங்க மாதிரி இருந்தாலும் அதுங்களுக்குத் தேவைப்படுற நேரம் பாராசைட்சா உருமாறுற சக்தி இருக்கு.
இது நடந்து கொஞ்ச நாள்ல கவர்மெண்ட்ல இருந்து இந்த பாராசைட்சை பிடிக்க ஒரு குழு உருவாக்குறாங்க. அந்த டைம்ல சூப்பர் மார்க்கெட்ல வேலை பாக்குற ஹீரோயினுக்கும் அங்க பொருள் வாங்க வந்த ஒரு கிரிமினலுக்கும் சின்னதா மனஸ்தாபம் வருது. அந்த மனஸ்தாபத்துல அவ வீட்டுக்குப் போறப்ப வழிமறிச்சு கத்தியால குத்திடுறான். ஹீரோயின் உயிருக்குப் போராடுறப்ப அவ உடம்புக்குள்ள அந்த பாராசைட் புகுந்து அவனை கொலை பண்ணுது. இதுக்கு அப்புறம் என்னாகும்? பாராசைட்ஸை பிடிக்க உருவாக்கப்பட்ட குழு கிட்ட ஹீரோயின் மாட்டுவாளாங்கிறதுதான் கதை.
உங்களுக்கு ஹாரர் சீரீஸ் பிடிக்கும்னா கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. போரடிக்காது. எனக்கு இப்பத்தான் பாக்க டைம் கிடைச்சுது.
Topic starter
Posted : May 25, 2025 8:43 PM
Vaishali Mohan reacted