NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
நித்யா மாரியப்பன் -...
 
Share:
Notifications
Clear all

நித்யா மாரியப்பன் - A Tamil novel writer

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே!

வெல்கம் டு மை சைட். நான் நித்யா மாரியப்பன். திருநெல்வேலியில் பிறந்த டாக்ஸ் கன்செல்டெண்டான நான் 2019ஆம் ஆண்டில் என் எழுத்துப்பயணத்தை ஆரம்பிச்சேன். நான் எழுத ஆரம்பிச்ச இடம் வாட்பேட். அங்க வாசகர்களிடம் என் கதைகளுக்குக் கிடைச்ச வரவேற்பு என்னை அமேசான் கிண்டில் நோக்கி நகர்த்திச்சு. அது மூலமா சில வாசகர்கள் ஃபேஸ்புக்ல கிடைச்சாங்க. அப்புறம் தளங்கள் நோக்கி என் எழுத்துப்பயணம் ஆரம்பிச்சுது. நிறைய தளங்கள்ல எழுதுனாலும் எனக்கான அடையாளத்தைக் குடுத்த தளங்கள் நந்தவனம், எழிலன்பு நாவல்கள் இந்த ரெண்டு சைட்டும்தான். கடந்த வருடம் வரை இந்தத் தளங்களில் மட்டும்தான் நான் தொடர்ந்து எழுதிட்டிருந்தேன். 2020ல் பிரதிலிபியில் கதைகளைப் பதிவிட ஆரம்பிச்சேன். அங்க 22600 ஃபாலோயர்களோட இன்னும் என் பயணம் தொடருது. 2025ம் ஆண்டு மறக்கவே முடியாத ஆண்டு. என் அமேசான் கிண்டில் கணக்கு நீக்கப்பட்ட ஆண்டு. அந்த ஆண்டில் தான் எனக்குச் சொந்தமா தளம் வேணும்னு இந்தச் சைட்டை ஓப்பன் பண்ணிருந்தேன். சில மாதங்கள்ல அமேசான் கிண்டில் கணக்கு முடக்கம். என்ன செய்யுறதுனு யோசிச்சப்ப வந்ததுதான் என் கதைகளைச் சந்தா கட்டி படிக்கும் ப்ரீமியம் தளம். இந்தத் தளத்துக்காக கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் செலவு பண்ணுனேன். Premium Novels of Nithya Mariappan - இந்தத் தளத்தில் இருக்கும் எனது கதைகளைச் சந்தா செலுத்தி  படிக்கலாம். 

NM Tamil Novel World என்ற இந்தத் தளம் எனது 13 நாட்கள் உழைப்பை முதலீடு செஞ்சு முழுக்க முழுக்க என்னால் உருவாக்கப்பட்ட தளம். இங்க நீங்க என் கதைகளை இலவசமாகவே படிக்கலாம். என்ன ஒன்னு, முடிஞ்சதும் கதைகளை நீக்கிடுவேன். 

எனது கதைகளில் ஐந்து ஸ்ரீ பதிப்பகம் மூலமா புத்தகங்களா வெளிவந்திருக்கு. எனது சமீபத்திய கதைகள் அனைத்தும் அருணோதயம் பதிப்பகம் மூலமாக வெளிவருது. இது போக எனது நான்கு குறுநாவல்கள் தமிழின் பிரபல பத்திரிகைகளான ராணி முத்து மற்றும் தேவியின் கண்மணியில் வந்திருக்கின்றன.

ஸ்ரீ பதிப்பகம்

  1. கிருஷ்ணதுளசி
  2. யாவும் நீயாக மாறினாய்
  3. அமிர்தசாகரம்
  4. அனுபல்லவி
  5. காதல் கொண்டேனடி கண்மணி

 

அருணோதயம்

  1. கண்ணாமூச்சி ஏனடி ரதியே
  2. ராகமஞ்சரி
  3. மாயமித்ரா
  4. பரிதி தீண்டிய பனிமலரே
  5. நினைவில் உறைந்த நீராம்பலே
  6. உன்னில் இதயம் அளாவுதே
  7. அன்பனின் ஆரபி
  8. மதுரமாய் நின் காதல்
  9. ஒரு காதலும் சில கவிதைகளும்
  10. அனுராகம் ஆரம்பமே
  11. இது வானின் பூபாளம் 

 

ராணிமுத்து

  1. அன்புடை அன்றிலே
  2. இருதயப்பூவில் கண்டேன்

 

தேவியின் கண்மணி

  1. நந்தவன நறுமலரே
  2. பனி பூத்த சிறகுகள்

 

இந்தப் பதிவை எழுதுற தினத்தில் நான் எழுதிய மொத்தக் கதைகளின் எண்ணிக்கை 62. எனக்கு எண்ணிக்கையை விட கதைகளின் தரம் ரொம்ப முக்கியம். அதனால ஏழு ஆண்டுகளுக்கு இந்த எண்ணிக்கை குறைவானதா தோணலாம். 

அப்பிடி என்ன கதைகளை நீ எழுதுறம்மாங்கிற கேள்வி உங்க மைண்ட்ல உதிக்கலாம். கதைகளோட முதல் நோக்கம் வாசிப்பவருக்கு நல்ல பொழுதுபோக்கை குடுக்குறது. அதை என் கதைகள் தவறாம செய்யும். எனது பெரும்பாலான நாவல்கள் ஃபீல் குட் ரொமான்ஸ் மற்றும் ரொமாண்டிக் காமெடி வகையறாக்களை சேர்ந்தவை. வித்தியாசமான கதைகள், மத்தவங்க டச் பண்ணாத நிறைய கான்செப்ட்களையும் எழுதிருக்கேன். காதல், நகைச்சுவை, க்ரைம் திரில்லர், அரசியல், ஃபேண்டசி, ரொமான்ஸ், குடும்பநாவல், ஆன்டி ஹீரோனு எல்லா ஜேனர்கள்லயும் கதை எழுதியாச்சு. அறிவியல் புனைவு, வரலாற்று புனைவு, ஹாரர் பக்கம் இதுவரை போகல. பிற்காலத்துல எழுதுற ஐடியா இருக்கு. முடிஞ்சளவு நல்ல தமிழில் உங்களுக்குக் கதைகள் கொடுக்க முயற்சிக்குறேன்.

என் கதைகளோட பட்டியல் இதோ. புதிதாக எழுத எழுத இங்கே இணைக்கப்படும். 

எண்

நாவல்கள்

1

யாரோ அவள் பாகம் 1

2

யாரோ அவள் பாகம் 2

3

அன்பே என் அன்பே

4

உன் நினைவே உயிர் நேசமாய்

5

கனிமொழியே

6

மரம் தேடும் மழைத்துளி

7

பூங்காற்றிலே உன் சுவாசம்

8

ஆழியிலே முக்குளிக்கும் நிலவே

9

கிருஷ்ணதுளசி

10

வந்தாயே மழையென நீயும் பாகம் 1

11

வந்தாயே மழையென நீயும் பாகம் 2

12

வெய்யோனின் தண்மதி அவள்

13

யாவும் நீயாக மாறினாய்

14

அமிர்தசாகரம்

15

அனுபல்லவி

16

காதல் கொண்டேனடி கண்மணியே

17

என் காட்சிப்பிழை நீ

18

சாகரசங்கமம்

19

அலாதி தேடலாய் நீ

20

காதில் பேசுவாய் மெல்லிசையே

21

உமி

22

காதல் அலைவரிசை 23.29

23

மெய் நிகரா பூங்கொடியே

24

கண்ணாமூச்சி ஏனடி ரதியே

25

ராகமஞ்சரி

26

மாயமித்ரா

27

பரிதி தீண்டிய பனிமலரே

28

நினைவில் உறைந்த நீராம்பலே

29

உன்னில் இதயம் அளாவுதே

30

மதுரமாய் நின் காதல்

31

அன்பனின் ஆரபி

32

ஒரு காதலும் சில கவிதைகளும்

33

இனியாவின் இறுதி நிமிடங்கள்

34

தண்பொருநை தீரத்தில்

35

மேகத்தின் மோனம்

36

கானல் பொய்கை

37

கரை தீண்டும் கடல் அலையே

38

சாரலாய் தீண்டினாய் அன்பே

39

யுத்தகாண்டம்

40

என்னில் மோகனகீதமாய்

41

அழகில் தொலைந்தேன் ஆருயிரே

42

அவள் ஒரு ராகமாலிகை

43

அனுராகம் ஆரம்பமே

44

காந்தர்வ காதல்

45

பூந்தென்றலாய் வந்தவளே

46

சுருதியோடு லயம் போலவே

47

வெண்பனியாய் சில நினைவுகள்

48

எந்தன் அன்பே நீதானே / அன்புடை அன்றிலே

49

இருதயப்பூவில் கண்டேன்

50

நந்தவன நறுமலரே

51

சந்தம் பாடும் தென்றல்

52

இது வானின் பூபாளம்

53

விழிகளில் ஒரு பவனி

54

மாயப்பூவே வாசம் எங்கே

55

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

56

மயக்கமென்ன சோலைக்கிளியே

57

சித்திரமே செந்தேன்மலரே

58

அகம் உறைந்தேன் அரனே

59

அந்தி நேரத்து அட்சரங்கள்

60

யுத்தகாண்டம் - A love battle of ego

61

பனி பூத்த சிறகுகள்

62

நேய நெஞ்சின் பிரியங்கள்

 

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 11 hours ago 2 times by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 5, 2026 8:30 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images