
ப்ரியா (மீனாட்சி) சிஸ் ரிவியூ
அந்தி நேரத்து அட்சரங்கள் 
ஈகோவிற்கு பிறந்த இடிஅமீன்- அட்சரன்.
எண்ணியதே எண்ணம் என்ற எண்ணப்போக்கில் வாழ்ந்தவனை, வாழ்க்கைத்துணையின் எண்ணப்போக்கிற்கிணங்க வாழுமாறு செய்தாள் அவள்.
மௌனத்தின் குரலை எழுத்தாக்கும் - வேதா.
எண்ணங்களை எழுத்துக்களாக மட்டுமே வடித்துக்கொண்டிருந்தவளது, மௌனத்தில் புதைந்திருந்த எண்ணங்கள் வார்த்தைகளாக மலர விதையிட்டான் அவன்.
எழுத்தாளர், பதிப்பகம், இவர்களுக்கிடையே செயல்படும் இலக்கிய முகமை நிறுவனம் குறித்த எண்ணற்ற தகவல்கள். 
"The Helvetas" - பெயருக்குப்பின்னால் நியூசிலாந்து நாட்டுப் பழங்குடி குழுப்பெயர் Helvetti. 
"நமது எழுத்து யாரையாவது தொந்தரவு செய்ய வேண்டும்" 
மலைக்கிராமத்து வனமோகினி எழுத்துக்களால் மட்டுமல்லாமல், எண்ணங்களாலும் பிரம்மிக்கச் செய்து யட்சனை கவர்ந்து கொண்டாள். 
"பாலைப்பூவின் நறுமணமும், மல்லிகைப்பூவின் பரிமளமும் ஒன்றாய் கலந்தன." 
"ப்பே!" - அட்சு சொல்வது அழகு. 
'எதிர்பாரா சூழலில் நடந்த திருமணம், நிதர்சனத்தை கையாளத் தெரியாமல் அவளும், நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் அவனும் ஆரம்பத்தில் தவித்து, கைகளில் வெண்குழல் பெண், எதிரினில் வெந்தனல் பெண் என்று தனது நிலைத்தன்மையை அசைத்துப்பார்த்துவிட்ட கோபத்தினில் கனன்று, மெல்ல மெல்ல அவள் மௌனத்தில் அடங்கியிருக்கும் உணர்வுகளின் தீவிரத்தை உணர்ந்து, அவள்மீதான அலட்சியப் பார்வையை லட்சியப் பார்வையாக மாற்றி, அவளும் அவனை தனது காதல்தாங்கிய எழுத்துக்களில் வடிக்கவிருந்த தருணத்தில், அவனின் பொய்ப்புணைவு அம்பலமாகி, அதற்கான அவனது எதிர்வினையும் அவள் உணர்வுகளை காயப்படுத்துவதாக அமைய, தனது முக்கியத்துவத்தை தன்னுடன் சேர்ந்து அவனும் புரிந்துக்கொள்ளவேண்டி விலகி நின்றவளது நாயகனாகவும், அவளது கதையின் நாயகனாகவும் எவ்வாறு அவன் உருப்பெறுகின்றான் என்பது கவிதையோடும் காதலோடு கதையாக்கப்பட்டுள்ளது. 
பிரியம்வதா - அட்சு combo மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. 
"நிலையற்ற மனதினை இழுத்துப்பிடித்து அமரவைக்கும் ஆகச்சிறந்த வேட்கை எழுத்துக்கள்"
"உணர்வுகளை தீண்டும் கதைகள் என்றுமே நிலைத்து நிற்கும்." 
ஒவ்வொரு அத்தியாயத்தின் உணர்வினையும் துல்லியமாக பிரதிபலித்த கவிதைகள் பேரழுகு. 
கவிதைகள் தொகுப்பை வாசித்தாலே கதையை அழகாய் உள்வாங்கி விடலாம். அத்துணை ஆழமான அழகான கவிதைகள். 
கதையும் கதைக் கூறப்பட்ட பாங்கும் அருமை. 
(Raji supermarket போல அட்சு யோசிக்காமலேயே வேதா பெயர் சேர்ந்துட்டு- Hel vetas
)
அட்சு 

Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Topic starter
Posted : March 12, 2026 9:26 PM

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



