NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
யசோதர காவியம் - ஒரு...
 
Share:
Notifications
Clear all

யசோதர காவியம் - ஒரு பார்வை

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

இன்னைக்குத் தமிழ் களஞ்சியத்துல ஐஞ்சிறுங்காப்பியங்கள்ல ஒன்னான யசோதர காவியம் பத்தி பாக்கலாம். 

 

யசோதர காவியம் - இது சமண மதம் சம்பந்தப்பட்ட ஒரு கதை.

 

இந்தக் கதை  எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாதுங்கிற சமண மதத்தோட முக்கியமான கொள்கையை வலியுறுத்தும். அதுமட்டுமில்லாம, நீங்க ஒரு உயிரைப் பலி கொடுத்தாலோ துன்புறுத்தினாலோ, அதோட பாதிப்பு (கர்ம வினை) உங்களை பல ஜென்மங்கள்ல விடாம துரத்தும்னு அழுத்தமா சொல்லுது.

 

காப்பியத்தோட அமைப்பு & சுருக்கமா கதை

 

இந்தக் காப்பியம் மொத்தம் நான்கு பகுதியா (சருக்கம்) பிரிக்கப்பட்டு இருக்கு. மொத்தமா ஒரு 320-330 பாட்டு இருக்கும்.

 

ஆசிரியர்

  • இந்த யசோதர காவியத்தை எழுதினது யாருன்னு சரியா தெரியலை. பதிமூன்றாம் நூற்றாண்டுல எழுதப்பட்டதுனு சொல்லப்படுது.
  • இது வடமொழியில வாதிராஜ சூரின்னு ஒருத்தர் எழுதின 'யசோதர சரிதம்'ங்கிற கதையைப் பார்த்து தமிழ்ல எழுதி இருக்கலாம்னு சிலர் சொல்றாங்க.
  • இன்னும் சில ஏட்டுப் பிரதிகள்ல, வெண்ணாவலூர் வேள்னு ஒருத்தர், புட்பதந்தர் எழுதின 'யசோதர சரிதம்'மைப் பார்த்து இதை எழுதினாருன்னும் சொல்றாங்க.

 

கதைச்சுருக்கம்

 

யசோதர காவியம் எழுதப்பட்டதோட நோக்கம் ‘யாரையும் கொல்லக் கூடாது"ங்கிற சமண மதத்தோட கொள்கையைச் சொல்லத்தான். அதுமட்டுமில்லாம, ஒரு சின்ன தப்பு செஞ்சாகூட, அது அடுத்தடுத்த பிறவிகள்ல வந்து பெரிய கஷ்டத்தைக் குடுக்கும்ங்கிற கர்ம வினைக் கொள்கையையும் இது வலியுறுத்துது.

 

முற்பிறவி: மாவு கோழிப் பலி

 

அந்தக் காலத்துல, உஜ்ஜயினி நாட்டுல யசோதரன்கிற இளவரசன் இருந்தான். அவனோட அம்மா பேரு சந்திரமதி. யசோதரன் அரசன் ஆனதும் அவனுக்கு அமிர்தமதிங்கிற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சாங்க. அந்த அமிர்தமதிக்கும் யசோதரனுக்கும் யசோமதினு ஒரு ஆண் குழந்தை பிறந்துச்சு. அந்தக் குழந்தை பிறந்த அப்புறம் அமிர்தமதி அரண்மனையோட யானை பாகன் கூட தவறான உறவுல இருக்குறா. இது யசோதரனுக்குத் தெரிஞ்சதும் மனவருத்தம் அடையுறான்.

அம்மா சந்திரமதி யசோதரனோட மனக்குழப்பம் சரியாக, காளி அம்மனுக்குப் பலி கொடுக்கலாம்னு சொல்லுறா. ஆனா, யசோதரனுக்கு உயிர்களைக் கொல்லறது பிடிக்கவே பிடிக்காது. அதனால, அம்மா சந்திரமதி, "சரிப்பா, நீ கவலைப்படாதே. உயிருள்ள ஆடு கோழிக்குப் பதிலா, அரிசி மாவுல ஒரு கோழி பொம்மை செஞ்சு பலி கொடுக்கலாம்"னு ஒரு ஐடியா கொடுத்தாங்க.

யசோதரனும் சரின்னு சொல்லி, அந்த மாவு கோழிப் பொம்மையைப் பலி கொடுத்தான்.

 

கர்ம வினை ஆரம்பம்!

 

சமண மதம் என்ன சொல்லுதுன்னா, நீங்க மனசுக்குள்ள ஒருத்தரை கொலை செய்யணும்னு நினைச்சாலே அது பாவம். இங்க உயிர்ப் பலிக்குச் சமமான, ஒரு பாவனைக் கொலையை யசோதரன் செஞ்சுட்டான்.

ஒரு உயிரைக் காயப்படுத்தணும்னு நினைச்ச அந்தக் கொடூரமான பாவம் (கர்ம வினை), யசோதரனையும் அவங்க அம்மாவையும் விடாமத் துரத்த ஆரம்பிச்சுது.

 

அடுத்தடுத்த பிறவிகளின் கஷ்டங்கள்

 

அந்தப் பாவத்தோட பலனா, யசோதரனும் அவங்க அம்மா சந்திரமதியும் தொடர்ந்து பல ஜென்மங்கள்ல ரொம்பக் கஷ்டப்பட ஆரம்பிச்சாங்க.

 

யசோதரன் - மயில், முள்ளம்பன்றி, மீன், ஆட்டுக்குட்டி, எருமை, கோழின்னு பல விதமான விலங்குகளாப் பிறந்து, ஒவ்வொரு பிறவியிலயும் அடிபட்டு, மறுபடியும் பலியிடப்பட்டுச் சாகிறான்.

 

சந்திரமதி - நாய் மாதிரியான ரொம்பத் துன்பமான பிறவிகளை எடுக்கிறாள்.

 

ஒவ்வொரு பிறவியிலயும் இவங்க ரெண்டு பேரும் ஏதோவொரு உறவுல வந்து, செஞ்ச தப்புக்கான தண்டனையை அனுபவிச்சு, மறுபடியும் மறுபடியும் பயங்கரமான சாவைச் சந்திச்சுக்கிட்டே இருந்தாங்க. இது பல நூறு வருஷத்துக்குத் தொடர்ந்தது.

 

கடைசிப் பிறவி: அபயருசி & அபயமதி

 

இப்படி ஒவ்வொரு பிறவிலயும் கொடூரமா செத்துப் போயிட்டே இருந்த யசோதரனும் அவங்க அம்மாவும் கடைசியா மனுஷப் பிறவி எடுத்தாங்க.

 

  • யசோதரன் இப்ப அபயருசிங்கிற சின்ன பையன்.
  • அவங்க அம்மா சந்திரமதி, அவனோட தங்கச்சி அபயமதிங்கிற சின்ன பொண்ணு. இரட்டையர்களா பிறந்தாங்க, ஒரு சமண முனிவரோட சிஷ்யர்களாகி அவரைப் பின்தொடருறாங்க.

 

அப்ப, மாரிதத்தன்கிற ஒரு அரசன் நாட்டை ஆண்டுட்டு இருந்தான். இவனும் போன ஜென்மத்துல யசோதரனுக்குத் துன்பங்களைக் குடுத்தவன் தான். இந்த மாரிதத்தன், தன்னோட சண்டமாரிதேவிக்குப் பலி குடுக்கறதுக்காக, அபயருசியையும் அபயமதியையும் பிடிச்சிட்டு வரச் சொல்றான்.

 

பலிபீடத்துக்குக் கூட்டிட்டு வந்தபோதும், அபயருசியும் அபயமதியும் கொஞ்சம் கூடப் பயப்படலை. மனசு உறுதியோட தெய்வத்தை வாழ்த்தினாங்க.

 

இதைப் பார்த்த மாரிதத்தன், ஆச்சரியப்பட்டுப் பலி கொடுக்கறதை நிறுத்துறான். அப்ப அபயருசி, தைரியமா அந்த அரசன்கிட்ட, தன்னோட பிறவிக் கதையை முழுசா சொல்றான்.

 

"அரிசி மாவுல செஞ்ச ஒரு கோழியை பலியாக்குனதால, நான் இத்தனை ஜென்மங்கள்ல இப்படித் துன்பப்பட்டேன்"னு சுட்டிக்காட்டுறான்.

 

அபயருசி சொன்ன இந்தக் கதையைக் கேட்டதும், மாரிதத்தனுக்குப் புத்தி வந்துடுச்சு. கர்ம வினையோட கொடுமையையும், எந்த உயிரையும் கொல்லக் கூடாதுங்கிற சமணக் கொள்கையோட (அகிம்சை) முக்கியத்துவத்தையும் உணர்ந்து, மனசு மாறிட்டான். அவன் பலி குடுக்கறதை நிறுத்திட்டு, சமண மதத்தைப் பின்பற்றி, நல்ல வழியில முக்தி அடைஞ்சான்.

 

இந்தக் காப்பியம், பழைய ஜென்மங்கள், மறுஜென்மங்கள், சின்ன சின்ன ஆசைகள்ல இருக்கிற குறை, பெரிய இன்பத்துல இருக்கிற பெருமை, ஒழுக்கத்தோட முக்கியத்துவம் இதையெல்லாம் பத்தி பேசுது.

 

*****

அடுத்த வாரம் வேற ஒரு காப்பியக்கதையோட வர்றேன், குட் நைட் மக்களே!

 

1764607968-WhatsApp-Image-2025-12-01-at-222120_b3651cb0.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : December 1, 2025 10:22 PM
(@mayil)
Active Member Member

1st time இந்த யசோதர காவியம் பற்றி படிக்கிறேன்.சூப்பர்.thank you so much.மாவுல செய்த கோழியை பலிகொடுத்தவனுக்கே இந்த நிலையா? என் வயித்துக்குள்ள எத்தனை கோழி போயிருக்கு.என் நிலமை எல்லாம் என்ன ஆகுமோ தெரியல.பயமா இருக்கு. மீதி எல்லா கையும் படிக்கணும்.அதுக்கு என் ஊரு குளிர் கொஞ்சம் குறையனும்.முடியல.அப்ப தான் ரிலாக்ஸ் பண்ணி படிக்க முடியும்.thank you . 😍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : December 1, 2025 11:05 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images