
ஹலோ மக்களே!
தமிழ் களஞ்சியம் பகுதில இன்னைக்கு ஐஞ்சிறுங்காப்பியங்கள்ல ஒன்னான 'உதயணகுமார காவியம்' பத்தி இன்னைக்குப் பாக்கலாம். வடமொழில குணாட்டியார்னு ஒருத்தர் எழுதுன பிரகத்கதாங்கிற நூலைத் தழுவி தமிழ்ல கொங்கு வேளிர் எழுதின 'பெருங்கதை'ங்கிற நூலோட சுருக்கமா எழுதப்பட்ட நூல் இது. இது ஒரு சமண சமய நூல். இதை எழுதின ஆசிரியர் யாருன்னு நமக்கு சரியாத் தெரியல. இருந்தாலும், 'கந்தியார்'ங்கிற ஒரு பெண் துறவி இதை எழுதியிருக்கலாம்னு தமிழ் அறிஞர்கள் மத்தியில ஒரு கருத்து இருக்கு.
கதையின் நாயகன்: இந்தக் காப்பியத்தோட கதாநாயகன் பேரு உதயணன். இவரு வத்ச நாட்டோட ராஜா. கோசாம்பிதான் இவரோட தலைநகரம். இவரோட அப்பா சதானீகன், அம்மா மிருகாவதி. உதயணன் கலைகள்ல ரொம்ப சிறந்தவர். குறிப்பா வீணை வாசிக்கிறதுலயும், மதங்கொண்ட யானைகளை அடக்குறதுலயும் இவரு பெரிய வல்லவர்.
கதைச் சுருக்கம்: உதயணனோட வீரத்தையும் புகழையும் பார்த்து உஜ்ஜைனி நாட்டு ராஜா பிரத்யோதனனுக்கு ஒரு பயம் வந்துச்சு. நேருக்கு நேர் சண்டை போட்டா உதயணனை ஜெயிக்க முடியாதுன்னு அவனுக்குத் தெரியும். அதனால ஒரு சூழ்ச்சி செஞ்சான். காட்டுல ஒரு இயந்திர யானையை (பொம்மை யானை) செஞ்சு வச்சான். அது நிஜமான யானைனு நம்பி, அதை அடக்கப் போன உதயணனை, மறைஞ்சிருந்த எதிரி வீரர்கள் பிடிச்சு சிறையில அடைச்சுட்டாங்க.
சிறையில இருந்த உதயணன்கிட்ட, அந்த ராஜா தன்னோட பொண்ணு வாசவதத்தைக்கு வீணை கத்துக்கொடுக்கச் சொல்லி கேட்டான். பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஆசிரியரான உதயணனுக்கும், மாணவி வாசவதத்தைக்கும் காதல் மலர்ந்தது. உதயணனுக்கு யூகி-னு ஒரு மந்திரி இருந்தார், அவரு ரொம்ப புத்திசாலி. அவரோட திட்டத்தால, உதயணன் சிறையில இருந்து வாசவதத்தையையும் கூட்டிக்கிட்டு தப்பிச்சு வந்துட்டார். அப்புறம் அவங்கள கல்யாணமும் பண்ணிக்கிட்டார்.
போகப்போக இழந்த தன்னோட ஆட்சியை உதயணன் மீட்டுட்டார். அதுக்கப்புறம் பத்மாவதி, மானனீகை, விரிசிகைனு மத்தவங்களையும் கல்யாணம் செஞ்சுகிட்டார். சிறப்பா ஆட்சி பண்ணினவரு, கடைசியில 'வாழ்க்கை நிலையானது இல்லை'னு புரிஞ்சுகிட்டு, தன்னோட பையன் நரவாண தத்தன்கிட்ட ஆட்சியை ஒப்படைச்சுட்டு துறவறம் போயிட்டார்.
நூலின் அமைப்பு: இந்த நூல் மொத்தம் ஆறு பிரிவுகளா, அதாவது ஆறு காண்டங்களா இருக்கு.
உஞ்சைக் காண்டம்
லாவாண காண்டம்
மகத காண்டம்
வத்தவ காண்டம்
நரவாண காண்டம்
துறவுக் காண்டம் இதுல மொத்தம் 369 விருத்தப் பாடல்கள் இருக்கு. பெருங்கதையோட சுருக்கம்னாலும், இதுக்குனு ஒரு தனி நடை இருக்கு.
நூலின் சிறப்பு: பெண்களோட சிறப்பையும், கலைகளோட முக்கியத்துவத்தையும் இந்த நூல் ரொம்ப அழகா சொல்லுது. அரசியல் சூழ்ச்சி, புத்திசாலித்தனம், காதல், வீரம், துறவுனு வாழ்க்கையோட எல்லா பக்கங்களையும் இதுல பார்க்கலாம். உலக வாழ்க்கைக்கான இன்பத்தையும், மறுமைக்கான வழியையும் சமண நெறியில இந்த நூல் விளக்குது.
மொத்தத்துல சொல்லணும்னா, பழந்தமிழ் இலக்கியங்கள்ல இது ஒரு சின்ன நூலா இருந்தாலும், இது சொல்ற கருத்துகளும், கதையும் ரொம்ப ஆழமானது. வீரம், காதல், கடைசியில முக்தினு ஒரு முழுமையான வாழ்க்கைத் தத்துவத்தை இந்த நூல் நமக்கு உணர்த்துது.
அடுத்த வாரம் வேற ஒரு காப்பியத்தோட வர்றேன். குட் நைட் மக்களே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



