
“அவர் பேருக்குப் பொண்டாட்டியா வாழ கூப்பிடுறார்மா… இதுக்காகவா என்னை அவருக்குக் கல்யாணம் பண்ணிவச்சிங்க.? அவரோட வார்த்தை ஒவ்வொன்னும் கத்தி மாதிரி என்னைக் குத்தி கிழிக்குது… என் வார்த்தைய நம்பாத மனுசனோட வீட்டுல வாழுறது எனக்கு மரியாதை இல்ல… நான் காலம் முழுக்க நம்ம வீட்டுலயே இருந்துடுறேன்” என்றாள் ஆரபி கண்ணீரோடு.
ஆனால் சுடர்விழியோ மனதைக் கல்லாக்கிக்கொண்டு “இது உன் வீடு இல்ல… எப்ப உனக்குக் கல்யாணம் ஆச்சோ அப்பவே உன் புருசன் வீடு தான் உன் வீடுனு ஏத்துக்கணும் ஆரபி… நீ அங்க இருக்குறது தான் முறை… கிளம்பு” என்று மகளை விரட்டினார்.
“நான் போகமாட்டேன்மா… என்னை ஒரு துளி கூட மதிக்காத மனுசன் கூட என்னால வாழமுடியாது”
அடுத்த நொடி பளாரென அறை விழுந்தது ஆரபியின் கன்னத்தில். முகமெங்கும் கோபத்தோடு சுடர்விழி அவளை எரித்துக்கொண்டிருந்தார் பார்வையால்.
ஆரபி வலியெடுத்தக் கன்னத்தோடு ஏறிடவும் “உன்னால நாங்க இதுவரைக்கும் பட்ட அசிங்கம் போதாதா? கல்யாணம் ஆகி வாழாவெட்டியா இருந்து எங்களை அசிங்கப்படுத்தப்போறியா? ஏன்டி இப்பிடி எங்க மானத்தை வாங்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்க? மருமகன் தான் கூப்பிடுறார்ல… அங்க போனா உன் தலைல இருக்குற க்ரீடம் இறங்கிடுமா? ஆம்பளைனா நாலு வார்த்தை கோவத்துல விடுறது சாதாரணம்… அதுக்காக புரட்சி வசனம் பேசுனா காலம் முழுக்க நீ தனியா வாழணும்… கல்யாண மண்டபத்துல நான் என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்குதா இல்லையா? மருமகன் என்ன பேசுனாலும் திட்டுனாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போ… நீ செய்யாத எதையும் அவர் சொல்லலையே? எத்தனை நாளு அவர் பேசுவார்? என்னைக்கோ ஒரு நாள் உன்னை மன்னிச்சுத் தானே ஆகணும்… அதுவரைக்கும் பொறுமையா உன் புகுந்தவீட்டுல காலந்தள்ளுற வழிய பாரு… ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்… உன்னைக் காலம் முழுக்க சுமக்க நானோ என் புருசனோ தயாராயில்ல” என்று அவர் கூற ஆரபி அக்கணம் நொறுங்கிப்போனாள்.
கணவனின் புறக்கணிப்பு ஒரு புறம்! பெற்றோரும் ஆதரவளிக்காத ஏமாற்றம் மறுபுறம்!
எதுவும் பேசாமல் தனது உடைமைகளைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டாள். தனது அறையாய் இத்தனை நாட்கள் உரிமையாய் புழங்கிய அறையை விட்டு வெளியேறினாள்.
ஹாலில் அவளுக்காகக் காத்திருந்த அன்பரசனை ஏறிட்டும் பாராமல் தந்தையிடம் மட்டும் “நான் போறேன்பா” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள் ஆரபி.
காரிலேறியவளின் மனம் வேதனையில் தத்தளித்தது. விசித்திரமான வகையில் முறுவல் பூத்தது இதழ்களில். அது இயலாமையின் அடையாளம்! கையறுநிலையின் அறிகுறி! எந்தப் பெண்ணுக்குப் பிறந்தகத்தின் ஆதரவு இல்லையோ அந்தப்பெண்ணைப் புகுந்தவீடு மதிக்காது. இது காலங்காலமாக நடைபெறுவதே!
ஆரபிக்கோ புகுந்தவீட்டினர் அனைவரும் சொக்கத்தங்கம், அவளது கணவனைத் தவிர! ஆனால் பிறந்தகம், இனி நீ எங்களுக்கு வேண்டாத சுமை என்று தூக்கியெறிந்துவிட்டது.
*******
ஹலோ மக்களே
நாளை முதல் டெய்லி ரெண்டு எபி வரும். காத்திருங்கள்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அன்பு, அரபி👍👍👍👍
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



