அகம் 29.2

பின்னர் ஒவ்வொருவராக காம்ப்ரமைஸ் மெமோவில் கையெழுத்திட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்த பவிதரன், ஞானபிரகாசத்தோடு மீண்டும் காவல் நிலையத்திற்குக் கிளம்பினான். அங்கே ஆய்வாளர் எஃப்.ஐ.ஆர். போடும் அவசரத்தில் இருந்தார். இருவரையும் கண்டதும், “வாங்க! சமாதானப் பேச்சுவார்த்தை முடிஞ்சுதா?” எனக்கேட்டார். ஞானபிரகாசம் அவரிடம் ஒரு கோப்பினை நீட்டினார். “சார்… இது கம்ப்ளைண்ட் கொடுத்த நாப்பத்தெட்டு பேர்கிட்ட கையெழுத்து வாங்குன ‘Compromise Deed’. எல்லாரும் பெட்டிஷனை வாபஸ் வாங்கிட்டாங்க. இனிமே இது ‘Civil Dispute’. நீங்க எஃப்.ஐ.ஆர். போடத் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 29.1

“போராடி ஜெயிக்கிற மனுஷன் பெரும்பாலும் தனிமைவாதியாத்தான் இருப்பான். அந்தத் தனிமை அவனுக்குப் பல நேரங்கள்ல வரம். ஆனா, அப்பேர்ப்பட்ட மனுஷனும் தனக்கான போராட்டத்துல துணையா நிக்க ஆட்களைத் தேடுவான். யாருக்கும் தன்னை நிரூபிக்க அவன் போராடுறதில்ல. தனக்குத் தானே செஞ்சுக்குற ‘Self validation’ தான் அவனுக்குப் பிரதானம். அது ஒருத்தனுக்குக் கிடைச்சிடுச்சுன்னா, அவன் ‘எனக்குப் புகழ் கிடைக்கலையே’னு புலம்பமாட்டான். ‘நான் இதெல்லாம் பாத்துட்டேன்டா’ங்கிற மெச்சூரிட்டி அவனுக்கு வந்துடும். தன்னோட வெற்றிய ஊரே கொண்டாடனும்ங்கிற எண்ணமே அவனுக்குத் தோணாது. […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 22

“உண்மையான காதல் உங்களை எப்பவும் எக்சைட்மெண்ட்ல வச்சிருக்காது. எவ்ளோ பெரிய ப்ரஷர் இருந்தாலும் அந்தக் காதல் உங்க நரம்பு மண்டலமே ஒட்டுமொத்தமா ஸ்ட்ரெஸ்ல தவிச்சாலும் உங்களை அமைதியாக்கும். உங்களோட பலவீனங்களைக் கூட காதல் ரசிக்கும். எப்பவும் அதை வச்சு உங்களை மட்டம் தட்டாது. அதீதக் காதலோட உச்சமே நம்ம இணை கிட்ட நாம தேடுற அரவணைப்பும் பாதுகாப்பு உணர்வும்தான்” –ஈஸ்வரி மாணிக்கவேலு கொதிநிலையில் இருந்தார். மனைவியையும் மகளையும் அவர் பார்த்த பார்வையில் அவர்கள் கருகிப் போகாதது ஆச்சரியமே! […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 5

“வாய்ப்புகள் நம்மளைத் தேடி வரட்டும்னு காத்திருப்பாங்க சில பேர். ஜன்னல் கதவை மூடி வச்சுட்டுச் சூரிய வெளிச்சம் வரலனு சொல்லுறதுல எப்பிடி அர்த்தமில்லயோ அப்பிடித்தான் வாய்ப்புகள் வரட்டும்னு காத்திருக்குறதுலயும் அர்த்தமில்ல. நமக்கான வாய்ப்பு வரலனா நம்மளே முன்வந்து ஒரு பாதைய உருவாக்கி நடக்க ஆரம்பிச்சிடனும். இல்லனா நம்ம கனவு காலம் முழுக்க கற்பனையாவே முடிஞ்சிடும்”      -பவிதரன் மேரு பில்டர்சில் ஈஸ்வரி நன்றாகப் பொருந்திக்கொண்டாள். சுமதியிடம் வேலையைக் கற்றுக்கொள்வது அவளுக்குச் சிரமமாக இல்லை. வணிகவியலில் பட்டப்படிப்பு படித்துவிட்டு […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 3

“எனக்கு என்னைப் பத்தி யோசிக்கவே நேரம் கிடைச்சதில்ல. எனக்குள்ள எப்பவும் ஒரு குரல் கேக்கும். அது என்ன சொல்லும் தெரியுமா? ‘நீ ஓடிக்கிட்டே இருடா. ஒரு நொடி நீ நின்னாலும் உன்னைச் சுத்தி இருக்குற பிரச்சனைகளோட அழுத்தம் உன்னை இறுக்கமா மாத்திடும். நீ மனுசத்தன்மைய இழந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. நீ ஓடனும் பவி’. உஃப்! அந்தக் குரலை நான் எப்பவும் அலட்சியப்படுத்துறதில்ல. ஒரு நாள் எனக்கும் இந்த ஓட்டம் சலிச்சுப் போகும். அப்ப நான் என்ன செய்யுறது?’ […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28

‘நம்ம மைண்ட்ல கான்சியஸ் மைண்ட், சப்கான்சியஸ் மைண்ட்னு ரெண்டு பகுதிகள் இருக்குறதா சொல்லுவாங்க. அந்த சப்கான்சியஸ் மைண்ட் ரொம்ப பவர்ஃபுல்லானது. ஒருத்தரை நாம பாத்துப் பேசுறப்ப அவங்க பேசுற ஸ்டைல், பாடி லாங்வேஜ் இதெல்லாம் அந்த சப்கான்சியஸ் மைண்ட்ல ஸ்டோர் ஆகும். அது ஸ்டோர் பண்ணுன எல்லா விசயங்களையும் அப்பப்ப நடக்குற சம்பவங்களோட கம்பேர் பண்ணி பாக்கும். பழைய ஆபத்தான சம்பவத்தோட இப்ப நடக்குற இன்சிடெண்டை ஒப்பிட்டுப் பாத்துட்டு அது டேஞ்சர்னு சிக்னல் காட்டுறதைதான் நாம ‘மனசுகு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 54

Secondary psychopath எனப்படும் சோசியோபாத்கள் வெகு சுலபத்தில் வன்முறைக்கான தூண்டுதல்களால் பாதிக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு நீங்கள் சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை, உங்களின் ஏதோ ஒரு செயல் அவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டால் யோசிக்காமல் உங்களைத் தாக்கத் துணிவார்கள். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தும் இருக்காது. அந்தத் தூண்டுதல் அவர்கள் பட்ட காயம், கசப்பான அனுபவம், வன்கொடுமை, உதாசீனம், குடும்ப உறுப்பினர்களின் இறப்போடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையதாக இருக்கும். சாதாரண மனிதர்கள் அச்சமயத்தில் பெரிதாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். ஆனால் சோசியோபாத்களோ […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 53

Secondary psychopaths பொதுவாக Sociopaths என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தனிமை, வன்கொடுமை, உதாசீனம் மற்றும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் காரணமாக சைக்கோபாத் ஆகிறார்கள். இந்த வகை சைக்கோபாத்களுக்கு ஆக்ரோசம், முரட்டுத்தனம் அதிகமாக இருக்கும். தற்கொலை எண்ணம் கொண்ட இவர்களது செயல்கள் எப்போது எப்படி இருக்குமென யாராலும் கணிக்க முடியாது -From psychology today பாம்பு சீறுவது போல சீறிக்கொண்டிருந்தாள் அந்த இளம்பெண். அவளது கண்களில் தான் அவ்வளவு கோபம். “இன்னும் எத்தனை நாள் நான் உனக்காக வெயிட் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 26

சைக்கோபாத்கள் அதிகபட்ச வெளிப்புறத் தூண்டுதலால் முட்டாள்தனமான சாகச மனநிலையில் இருப்பார்கள். காரணம் அவர்களின் இயல்புக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் பிறருடன் நடக்கும் மோதல்கள். இந்த முட்டாள்தனமான சாகச மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத தங்களது இயலாமையை எண்ணி அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் தங்களது இயல்பிலிருந்து மாற விரும்பினாலும், பயமுணராத்தன்மை, அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் இல்லாமை, எதிர்மறை மனநிலை, விரக்தி, மனச்சோர்வு இதெல்லாம் அவர்களை மாறவிடுவதில்லை. -From ‘The hidden suffering of the psychopath’ article of […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 17

சைக்கோபதி ஒரு ஸ்பெக்ட்ரம் வகை குறைபாடு ஆகும். இதை ஹேர் சைக்கோபதி செக்லிஸ்டின் மூலம் கண்டறிய முடியும். இரக்கமின்மை, பொய் கூறுதல் மற்றும் மனக்கிளர்ச்சி அடிப்படையில் மூன்று அளவைகள் அடிப்படையில் இந்த செக்லிஸ்டை பயன்படுத்தி மதிப்பெண்கள் போடப்படும். அளவை 1 – சற்றும் பொருந்தாத குணம் (0) அளவை 2 – ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பொருந்தும் (1) அளவை 3 – முற்றிலும் பொருந்தும் குணம் (2) இந்தச் செக்லிஸ்டில் முப்பது மதிப்பெண்கள் ஒருவர் எடுத்தார் […]

 

Share your Reaction

Loading spinner