காலை நேரப் பொன்னிறச் சூரியக்கதிரின் இதமான வெப்பத்தில் கண் விழித்தான் ராகவ். தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவின் கூந்தலைக் காதோரமாக ஒதுக்கி விட்டவன், “எவ்ளோ அழகு நீ ஜான்சி ராணி” என்று சொல்லிக் கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான். பின்னர் அவளின் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனத்தில் தன்னைத் தொலைத்தவன், தனது அன்றைய பேச்சுக்காக வருந்தினான்.
“சாரி அவந்திகா! கோவத்துல உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல! ஐ ப்ராமிஸ், இனிமே நான் உன் கிட்ட இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்று சொல்லி மீண்டும் முத்தமிட நெருங்க, “இத நான் முழிச்சிட்டுருக்கப்போ சொன்னா நீ குறைஞ்சு போயிடுவியா?” என்று கண்ணை உருட்டிக் கேட்ட அவந்திகாவைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்துவிட்டு, அவளின் பேச்சில் அவனை மறந்தான் ராகவ்.
அவனைத் தள்ளிவிட்டவள், “ஏண்டா இப்போ பேசு! இவ்ளோ நேரம் சினிமா டயலாக்கா பேசித் தள்ளுன” என்று அவனது டீசர்ட்டைப் பிடித்து இழுத்துக் கேட்டாள் அவந்திகா.
“பேச முடியாது ஜான்சி ராணி! என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ!” என்று சொல்லி எழும்ப முயல, அவனது கையைப் பிடித்து இழுத்துப் பெட்டிலேயே அமரவைத்தவள், “மரியாதையா சாரி கேட்டுட்டுப் போ, இல்லனா அவ்ளோதான்” என்று விரலை நீட்டி மிரட்ட, அவளின் விரலைப் பிடித்து, “எத்தனை தடவை சொல்லுறது உனக்கு? என் முன்னாடி விரல் நீட்டிப் பேசாதனு! கேக்கவே மாட்டியா நீ? வெரி பேட் ஜான்சி ராணி” என்று கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
“ராகவ்! கையை விடுடா! ஏய் வலிக்குது” என்று அவள் முகம் சுளிக்கவும் கையை விடுவித்தான். அவள் “போடா வளர்ந்து கெட்டவனே” என்று கத்திச் சொல்லிவிட்டு, அவன் கையில் அகப்படாமல் கிச்சனை நோக்கிச் சென்றாள்.
காபியைப் போட்டு முடித்தவள், கையில் கப்புகளுடன் வராண்டாவுக்கு வர, அங்கே இருந்தவன் அவளிடமிருந்து கப்பை வாங்கி காபியை ரசித்து அருந்தியவன், தூரத்தில் தெரிந்த மலைகளை ரசித்துக் கொண்டிருந்த அவந்திகாவின் அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ராகவ்! இது என்னோட ட்ரீம் தெரியுமா? இன்னைக்கு அது நெஜமாயிடுச்சு! ஐயாம் வெரி வெரி ஹேப்பி!” என்று சொல்லிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தாள் அவள்.
“இஸிட்? பட் என்னோட ட்ரீம் இன்னும் நெஜமாகலயே ஜானு” என்று அவளைப் பார்த்துக் குறும்பாகக் கூறியவனைப் பார்த்தபடியே வராண்டா திண்ணையின் கைப்பிடியில் அமர்ந்தாள் அவள்.
“என்னடா ட்ரீம் உனக்கு? இப்போ மட்டும் எதாச்சும் விவகாரமா சொல்லு, நீ காலி” என்று சொல்லி விரலை நீட்டியவள் அவன் பிடிக்கும் முன் கையை மடக்கிக் கொண்டாள்.
அவள் விழுந்துவிடாமல் அவளின் இருபுறமும் கை ஊன்றியவன், “சின்ன ட்ரீம் தான் ஜான்சி ராணி! என்னோட இந்த கையில என் குழந்தையை ஏந்தணும்! அவனைப் பார்த்துக்கிட்டே அன்னைக்கு நாள் ஃபுல்லா கழிக்கணும். தட்ஸ் ஆல்” என்று ஆவலுடன் கூறியவனைப் பார்த்துச் சிரித்தாள் அவந்திகா.
“கனவு நல்லாத்தான் இருக்குப்பா! பட் அது என்ன அவனைனு சொல்லுற? மே பி பொண்ணா கூட இருக்கலாம்.”
“யா! இருக்கலாம். பட் என்னோட மனசு சொல்லுது, நான் என் கைல ஏந்தப்போற என்னோட குழந்தை கண்டிப்பா பையனாத்தான் இருப்பான்னு.”
“அஹான்! எனக்குப் பொண்ணு தான் வேணும்! அதுவும் ஒன்னு இல்ல, அஞ்சு பொண்ணுங்க வேணும்” என்று ரசனையுடன் கூறியதும் சிறிது அதிர்ச்சியானான் அவன்.
“உனக்கு ஏன் இந்த விபரீதமான ஆசை ஜான்சி ராணி? டூ சில்ட்ரன் ஆர் இனாஃப்.”
“நோ நோ! வீடு ஃபுல்லா குழந்தைங்க இருந்தா வீடே பார்க்க ரம்மியமா இருக்கும்” என்று கண்ணை மூடிச் சிலாகிக்கவும் வினோதமாகப் பார்த்தான் ராகவ்.
“ஹலோ எக்ஸ்யூஸ் மீ! அவ்ளோ குழந்தைகளை எப்படி மேனேஜ் பண்ண முடியும்? கேட்கவே வியர்டா இருக்கு.”
“என்னடா வியர்டா இருக்கு உனக்கு? எங்க அப்பா பாட்டிக்கு 12 குழந்தைங்க தெரியுமா?” என்று கண்ணை விரித்துக் கூறினாள்.
“யூ மதராசி பீப்பிள் ஆர் ஆல்வேஸ் வியர்ட் பர்சன்ஸ்” என்று சொல்லிவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான் ராகவ். அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள் சிரித்தாள் அவந்திகா.
“ஓகே! நாம எப்போ பெங்களூர்க்குத் திரும்பிப் போறோம்?” என்று கேட்டவளைக் குறும்புடன் பார்த்தவன், “இன்னும் ஒன் வீக் நம்ம இங்க தான் இருக்கப்போறோம்” என்று சொல்லித் தலையில் செல்லமாக முட்டினான்.
கிஷோர் தோட்டத்தில் உலாவி கொண்டிருந்தவன், வீட்டினுள் இருந்து வந்த ரித்திமாவைப் பார்த்தவன் அவளை அழைத்தான். அவளும் இவன் ஏன் கூப்பிடுறான் என்று எண்ணிக்கொண்டே சென்றாள்.
“ரித்தி, இன்னைக்கு என் கூட கொஞ்சம் வெளியே வர முடியுமா?”
“நான் எதுக்கு வரணும்?”
“ப்ளீஸ் ப்ளீஸ்! நான் இவ்ளோ நாளா உன் கிட்ட கேட்டுருக்கேனா? ப்ளீஸ்” என்று அவன் வற்புறுத்தவும், சரி என்று சம்மதித்துத் தயாரானாள் அவள்.
“சரி! எங்க போறோம்?” என்று கேட்ட ரித்திமாவிடம் ஒரு பெரிய லிஸ்டையே அவன் கூற, அவளும் பெரிதாக மறுக்கவில்லை. அன்று நாள் முழுவதும் சுற்றியவர்கள், மாலையில் நகரின் மிகப்பெரிய ஹோட்டலின் ரூஃப் டாப்பில் டின்னருக்குச் சென்றனர்.
ரித்திமா ஹோட்டலின் பெயரைக் கேட்டதும், “அது ரொம்ப ஹைக்ளாஸ் பீப்பிள் போற இடம் கிஷோர்” என்று தயங்கவும் அவன் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான். ரூஃப் டாப் என்பதால் அங்கே மொத்தமே மூன்று மேஜைகள் தான் போடப்பட்டிருந்தன. அதில் ஒன்றை கை காட்டியவன் அவள் அமர நாற்காலியை இழுத்துவிட்டு அமரச் சொன்னான். பின்னர் அவனும் அமர்ந்தவன் அவளிடம் அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டே உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்.
“ஹனிபியும் ராகவும் எப்போ ரிட்டர்ன்?”
“அவங்க ஹனிமூன் போயிருக்காங்கம்மா! அவ்ளோ சீக்கிரமா வர மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.”
“அஹான்! என்னமோ ராகவே சொன்ன மாதிரி பேசுற.”
“பய்யாதான் சொன்னாரு… எப்படியும் ஒன் வீக் கழிச்சுத் தான் வருவேன்னு.”
“அப்போ ஹனிபி பர்த்டே செலிப்ரேட் பண்ணுறதுக்காக கூர்க் போகலையா?” என்று ரித்திமா ஆச்சரியத்துடன் கேட்கவும் தன்னை அறியாமல் சிரித்தான் கிஷோர்.
“இந்த ரூஃப் டாப் டின்னர் நல்லாத்தான் இருக்கு. நீ இங்க அடிக்கடி வருவியா?” என்று கேட்டுக் குறுகுறுவென்று பார்த்தாள் அவள்.
“யா! வீக்லி ஒன்ஸ்! திஸ் இஸ் மை ஃபேவரைட் பிளேஸ்” என்று சொன்னவனை ஒரு பார்வை பார்த்தவள், சுற்றி இருந்த மற்றவர்களிடம் கண்ணை வைத்துக்கொண்டே, “வீக்லி ஒன்ஸ் சார் யாரு கூட வருவீங்க? ஏன்னா பாருங்க நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே கப்பிள்ஸ்” என்று கேள்வியாகப் புருவத்தை வளைத்தாள்.
“தனியாத் தான் வருவேன் மேடம்! உனக்கு என்னைப்பார்த்தா வாரம் ஒரு பொண்ணு கூட டின்னர் சாப்பிடுற மாதிரியா தெரியுது? ஏதோ உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேனு உன்னையும் இங்க கூட்டிட்டு வந்தேன்!”
“ஓ! ப்ரபோஸ் பண்ணதுக்கு ரூஃப் டாப் டின்னர்! அப்போ அத அக்செப்ட் பண்ணிட்டா எங்க கூட்டிட்டுப் போவ?”
“கேண்டில் லைட் டின்னருக்கு” என்று சொல்லி கண் சிமிட்டினான் கிஷோர்.
இருவரும் வளவளத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினர். கிஷோர் கீழே வந்தவன் அங்கே பார்ட்டி ஹாலிலிருந்து வெளியே வந்த தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்க, ரித்திமா ஹோட்டல் லாபியில் இருந்த பெயிண்டிங்கை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“ஆங்க்ரி பேர்டுக்கு பெயிண்டிங்க்லாம் பிடிக்கும் போல” என்று ஒரு குரல் வர, அவள் கிஷோரா என்று திரும்பினாள். அங்கே நின்றுகொண்டிருந்த சிராஜைப் பார்த்ததும் ‘இவனா’ என்று அவனை அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் பெயிண்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
அவன் கொஞ்சம் கூட அவமானப்படாமல் அவளிடம் மீண்டும் வந்து, “இந்த ஹோட்டல் வர்ற அளவுக்கு நீங்க வளர்ந்துட்டீங்க போல! கங்கிராட்ஸ்” என்று ஆச்சரியம் போல அவளைக் கேலி செய்தான்.
கிஷோர் அவர்கள் இருவரையும் கவனித்துவிட்டவன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிராஜின் வார்த்தைகள் அவன் காதில் தெளிவாக விழுந்தது. “ஆல்ரெடி அவ ஓவரா வளர்ந்து தான் இருக்கா. ஐ திங்க் இந்த ஹோட்டல் வர்றதுக்கு இந்த ஹைட் போதும்னு நெனைக்கிறேன்” என்று அவனுக்குப் பதிலளித்தான் கிஷோர்.
அவனைப் பார்த்ததும் சிரித்த சிராஜ், “பய்யா தான் என்னோட ரோல் மாடல்னு நீ சொன்னப்போ நான் நம்பல. பட் உன்னோட அண்ணனை மாதிரியே ஒரு மிடில் கிளாஸ் பொண்ணோட சுத்துறத பார்த்ததுக்கு அப்புறம் கன்ஃபார்ம் ஆயிடுச்சு” என்று சொல்லிவிட்டு ரித்திமாவை இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்க்க, கிஷோர் அந்தப் பார்வையில் சூடானவன் சிராஜின் சட்டையைப் பிடித்தான்.
“அவளைப் பத்திப் பேச உனக்கு எந்த உரிமையும் கிடையாது, தகுதியும் கிடையாது. அது என்னடா மிடில் கிளாஸ்னு அவ்ளோ சீப்பா உனக்கு? நான் ராகவ் பய்யா மாதிரி பொறுமையா பேச மாட்டேன். இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். எங்க கிட்ட இருந்து தள்ளி இருக்கிறது தான் உனக்கு நல்லது” என்று அவனை எச்சரிக்க, ரித்திமா அவனது கையைப் பிடித்தாள்.
“விடு கிஷோர்! இவனை மாதிரி ஆளுக்கெல்லாம் எத்தனை தடவை அசிங்கப்பட்டாலும் புத்தி வராது! அவனுக்கு எதாவது சொல்லி உங்களை எரிச்சல் படுத்தணும் அவ்ளோதான்! அவன் மேல கைய வச்சு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்று சொல்லிவிட்டு அவனை சிராஜிடமிருந்து பிரித்து இழுத்துச் சென்றாள்.
காரில் உட்கார்ந்தவன் “விடு கையை! எனக்கு வர்ற கோவத்துக்கு அந்த ராஸ்கலை…” என்று கோபத்தில் கத்த, ரித்திமா அவனைச் சமாதானப்படுத்தினாள்.
“கிஷோர், அவனுக்கு வேலையே இதுதான்! நீங்க அவனோட பிசினஸ் ரைவல்! உங்களை எமோஷனலா அவன் வீக் ஆக்க டிரை பண்றான்! அத புரிஞ்சிக்கிட்டு நடந்தா போதும். தேவையில்லாம பப்ளிக்ல அவனை அட்டாக் பண்ணா எல்லாரும் தப்பு நம்ம மேலன்னு தான் நெனைப்பாங்க” என்று பொறுமையாக விளக்கியதும் தான் அவனது கோபம் ஓரளவுக்கு அடங்கியது.
“இருந்தாலும் அவன் உன்னைப் பார்த்து என் முன்னாடியே கேலியா பேசுனதுக்கு ஒரு நாள் அவனுக்குச் சரியான பதிலடி கொடுக்கலன்னா என் பேரு கிஷோர் இல்ல” என்று அவன் அடக்கப்பட்ட கோபத்துடன் பதிலளித்துவிட்டு காரை வீட்டுக்கு விரட்டினான்.
சொன்ன மாதிரியே ஒரு வாரம் கழித்துத் தான் ராகவும் அவந்திகாவும் பெங்களூரு திரும்பினர். வந்ததும் ராகவ் அவனது வேலையில் பிஸியாகிவிட, அவந்திகா அவர்களின் ஒரு திருமணத்திற்கான பிளானை ரித்திமாவிடம் டிசைன் பண்ணச் சொல்லி கிளையண்ட் ஒருவரிடம் காட்டிவிட்டு வந்தாள்.
உஷா வீட்டில் இருந்தபடியே அக்கவுண்ட்ஸ் மற்றும் வரி சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கவனித்துக் கொண்டாள். இந்த நிலையில் தான் ‘விஹான் அட்வர்டைசிங்’ இந்தியன் அட்வர்டைசிங் கிளப்பின் சிறந்த விளம்பர நிறுவனத்திற்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நல்ல செய்தி வந்து சேர்ந்தது.
ராகவ் அவனது குறிக்கோளின் முதல் படியில் காலடி வைத்த அந்த சந்தோஷத்திற்காகப் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்யச் சொல்லிக் கிஷோரிடம் கூறிவிட்டான். அது கம்பெனி ஊழியர்கள் மற்றும் கிளையண்ட்ஸ் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் வீட்டினர் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. நல்லபடியாகப் பார்ட்டி முடியவும் பிரஸ் மீட் ஆரம்பித்தது. அது நியூஸ் சேனலில் லைவ்வாக வர, மொத்த குடும்பமும் அதைப் போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ரிப்போர்ட்டர்ஸ் கேட்ட கேள்விகளுக்கு ராகவ் சாதாரணமாகத்தான் பதிலளித்துக் கொண்டிருந்தான். ஆனால் சுமித்ராவோ, “பாரு என் பேரன் எவ்ளோ அறிவா பேசுறான்! அவனை யாராலயும் கேள்வி கேட்டு மடக்கவே முடியாது” என்று அவனது ஒவ்வொரு பதிலுக்கும் கமெண்ட் கொடுக்க, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து தங்களின் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த உஷா, ரித்திமா, அவந்திகாவின் காதில் அது நன்றாக விழுந்தது.
அதைக் கேட்ட மற்ற இருவரும் சிரித்தாலும், அவந்திகாவுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று மனதில் பட்டது. “ஏய் என்னடி சிரிப்பு! இந்த தாதி என்னவோ அவங்க பேரனுக்கு மட்டும் தான் திறமையா பேச வரும்கிற மாதிரி ரொம்ப பில்டப் பண்றாங்கப்பா! ஒரு பிரஸ் மீட்டை மொத்த குடும்பமும் பார்க்கிறது மட்டும் இல்லாம அதுக்கு கமெண்ட்ரி வேற! அவன் அறிவா பேசலடி. அவங்களை அடுத்த கேள்வி கேட்க விடாம தடுக்கிறான், அவ்ளோதான். இதுக்கு இந்த பில்டப் ஓவர் தான்.”
அவந்திகா இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே ஒரு ரிப்போர்ட்டர், “சார், உங்க வைஃப் ஒரு வெட்டிங் பிளானர்னு பேசிக்கிறாங்க! விஹான் குரூப் டைரக்டரோட வைஃப் வொர்க் பண்ணனும்னு என்ன அவசியம் இருக்கு?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
ராகவ் சிரித்தபடியே, “நீங்க எந்த ஜெனரேஷன்ல இருக்கீங்க சார்? இன்னைக்குப் பெண்கள் எல்லாத் துறையிலையும் சாதிக்கிறாங்க. பட் அது மேரேஜோட ஏன் நின்னு போயிடுதுனு நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். கல்யாணத்துக்கு அப்புறமா நம்ம சொசைட்டி ஏகப்பட்ட காரணங்களைக் காட்டி அவங்களுக்குனு ஒரு புரொஃபெஷனல் லைஃப் இல்லாமயே பண்ணிடுது! அவங்களால அவங்க ஃபேமிலி, குழந்தைங்க, ஹஸ்பண்ட் இதத் தாண்டி யோசிக்க முடியறது இல்ல. அதத் தாண்டி அவங்க ஒரு துறையில முன்னேறும்போது, ‘உங்க ஹஸ்பண்ட் தான் பெரிய கம்பெனியோட டைரக்டர் ஆச்சே! நீங்க வொர்க் பண்ண என்ன அவசியம்?’னு கேட்கிறது என்னைப் பொறுத்தவரைக்கும் முட்டாள்தனம்! அது அவங்களோட விருப்பம். அத அவங்க தொடர்ந்து பண்ணுவாங்க!” என்று பதிலளித்தான்.
இதைக் கேட்ட உஷாவும் ரித்திமாவும் “இதுக்கு என்னடி சொல்லுற?” என்று புருவம் உயர்த்த, அவந்திகா தோளைக் குலுக்கினாள். ரிப்போர்ட்டர் “சோ, நீங்க உங்க வைஃப்க்கு அவங்க இஷ்டப்பட்ட புரொஃபெஷனை கன்ட்டினியூ பண்ணுறதுக்கு முழு மனசோட தான் அனுமதி கொடுத்தேனு சொல்லுறீங்களா சார்?” என்று அடுத்த கேள்வியை வைத்தார்.
அவன் அதற்கும் அசரவில்லை. “அனுமதி கொடுக்கிறதுங்கிறது என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப பெரிய வார்த்தை. ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்ல யாரும் சுப்பீரியரும் இல்ல, யாரும் சப்-ஆர்டினேட்டும் இல்ல. ரெண்டு பேரும் ஈக்குவல்னு சொல்லுறப்போ அதுல அனுமதிக்கு என்ன அவசியம் இருக்கு? எனக்குப் பிடிச்ச ஃபீல்ட்ல நான் இருக்கிறதுக்கு அவங்க கிட்ட நான் அனுமதி வாங்க எப்படி அவசியம் இல்லையோ அதே மாதிரி தான் அவங்களும்” என்று சொல்லி அவரது கேள்விக்கும் அந்த பிரஸ் மீட்டுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.
அனைவரும் கலைய, நியூஸ் சேனல் மாற்றப்பட்டு இப்போது ஏதோ டிவோஷனல் சேனல் ஓடியது. அவந்திகா இவ்வளவு நேரம் அவன் பேசியதைக் கேட்டவள், “நாட் பேட்! மார்ஸ்மாலோ இவ்ளோ முன்னேறிட்டானா? பரவாயில்லையே” என்று எண்ணிக்கொண்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


