அவந்திகா, ராகவ் அளித்த பேட்டியைப் பற்றி யோசித்தவாறே இருக்க, உஷா, “ஹலோ மேடம், இங்க தான் இருக்கீங்களா? என்ன யோசனை?” என்று கேலியாகக் கேட்க, ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிச் சமாளித்தவள், ராகவ் போனில் அழைக்கவும் எடுத்துப் பேசினாள்.
“அவந்திகா, இப்போவே நம்ம ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் பார்ட்டிக்கு ரெடியாகி ஹோட்டலுக்கு வர்றீங்க” என்று அவன் சொல்லவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“நீ தானே சொன்ன இது எம்ப்ளாயீஸ் ஒன்லினு, இப்போ என்ன திடீர்னு உனக்கு எங்க நியாபகம்? அப்படிச் சட்டுபுட்டுனுலாம் கிளம்பி வர முடியாது. அதனால நீங்க மூணு பேரும் சீக்கிரமா கிளம்பி வீட்டுக்கு வர்ற வழியப் பாருங்க.”
“ஜான்சி ராணி, நான் சீரியஸா பேசிட்டுருக்கேன்.”
“நானும் தான்! இங்க நாங்க எவ்ளோ பிஸியா வொர்க் பண்ணிட்டு இருக்கோம்! எல்லாரும் அவங்கவங்க வேலையை அப்படியே விட்டுட்டு இவர் கூப்ட்டதும் இவரு பின்னாடியே போகணுமாம்! அட்லீஸ்ட் ஒரு ஒன் ஹவர் முன்னாடி சொல்லியிருந்தா கூடப் பரவால்ல! இப்படித் திடுதிடுப்புனு சொன்னா எப்படி நாங்க கிளம்பி வர்றது?” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே போன் கட் ஆனது.
அவந்திகா உஷாவிடமும் ரித்திமாவிடமும் விஷயத்தைச் சொல்லியதும் அவர்கள் புறப்பட எழும்ப, அவர்களைக் கண்ணால் மிரட்டியவள், “அங்க போனா இந்த வேலையை யாருடி பார்க்கிறது?” என்றதும் அவர்களும் உட்கார்ந்து வேலையைத் தொடர்ந்தனர். “மைதாமாவுக்குக் கோவம் வந்துடுச்சு! நல்லா வரட்டும்! என்னதான் நெனச்சிட்டுருக்கான்! இப்படித் திடீர்னு கால் பண்ணி எல்லாரும் வாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று உஷாவிடமும் ரித்திமாவிடமும் புலம்பிக் கொண்டிருக்கும் போதே கார் நிற்கும் சத்தம் கேட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வந்துட்டானா? வந்து அப்படியே அமைதியா போனா அவனுக்கு நல்லது” என்று மனதில் எண்ணிக்கொண்டவள், வாசலில் வேகமாக நடந்து வந்தவனைப் பார்த்தும் கவனிக்காத மாதிரி தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்.
“நீ என்னைப் பார்த்துட்டேனு எனக்கு நல்லாவே தெரியும் ஜான்சி ராணி” என்று அவளிடம் கூறியவன், உஷாவிடமும் ரித்திமாவிடமும் பார்ட்டிக்குத் தயாராகும்படி கூற, அவர்களோ அவந்திகாவைப் பார்த்தனர். “டோன்ட் வொர்ரி! அவளும் வரத்தான் போறா. நீங்க போய் ரெடியாகுங்க” என்று அவர்களை அனுப்பியவன், அவளுடைய லேப்டாப்பைப் பிடுங்கிவிட்டு, “என் கூட வா” என்று சொல்லித் தங்களின் அறைக்கு இழுத்துச் சென்றான்.
“லிசன்! சீக்கிரமா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெடியாகு!” என்று சொல்லிவிட்டு ஆபீஸ் ரூமுக்குச் செல்ல எத்தனிக்க, “நான் எங்கயும் வர மாட்டேன்” என்ற பதில் காதில் விழவும் திரும்பினான்.
“எனக்கு டயர்டா இருக்கு ராகவ்!”
“ரியலி? இத நம்ப நான் ஒன்னும் அம்மாவோ பாபியோ இல்ல! சீக்கிரமா ஒரு நல்ல டிரஸ்ஸா போட்டு ரெடியாகு! இல்லனா இதே டிரஸ்ஸோட பார்ட்டிக்கு உன்னைத் தூக்கிட்டுப் போக வேண்டியிருக்கும்” என்று புன்னகையுடன் கூறிவிட்டுச் சென்றவனைப் பார்த்துக் கடுப்பானவள், வேறு வழியின்றி ஒரு சாரியைச் சுற்றிக் கொண்டு தயாரானாள்.
அவன் திரும்ப அறைக்கு வந்து அழைத்து வந்தது மாதிரியே மீண்டும் இழுத்துச் சென்றான். அவந்திகா “நீ என் கைய விட்டா நானே வருவேன்! ஏன் இப்படி?” என்று கேட்க, “பிகாஸ் நீ லேட் பண்ணா நம்ம வீடு திரும்புறதுக்கு இன்னும் லேட் ஆகும்” என்று சொல்லிவிட்டு காரில் அவள் அமர்ந்ததும் கதவைச் சாத்தியவன் அவனும் அமர்ந்து காரை ஓட்டத் தொடங்கினான்.
ஹோட்டல் வந்ததும் அவந்திகா இறங்கியவள், கேமரா பிளாஷைப் பார்த்ததும் திகைத்து ராகவின் பின் நின்றாள். அவன் அவளை அணைத்துக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே மற்ற தொழிலதிபர்கள் அவர்களின் குடும்பத்தினர் என்று அனைவரும் இருக்க, சிறிது நேரத்திலேயே கிஷோரும் மற்றவர்களை அழைத்து வந்துவிட்டான்.
விஹானின் பணியாளர்களும் அங்கே இருந்ததால், அவந்திகாவும் ரித்திமாவும் மேடி, வர்ஷாவுடன் சேர்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தனர். “மேடி, உன்னோட பேனிக் அட்டாக் திரும்பவும் வருதா?” என்று விசாரித்த அவந்திகாவை முறைத்தவன், “நீ வந்துட்டல்ல, அதுவும் திரும்பி வந்துடும்” என்று சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த ஆரஞ்சு ஜூஸை ஒரே மடக்கில் காலி செய்தான்.
அவந்திகாவுக்கு எதாவது வேண்டுமா என்று கேட்டவன், அவள் மறுக்கவும் வர்ஷாவுக்கும் ரித்திமாவுக்கும் ஜூஸ் எடுத்து வந்தான். வர்ஷா, “அவந்திகா எதாவது குட் நியூஸ் வருமா உன் கிட்ட இருந்து? வீ ஆர் ஈகர்லி வெயிட்டிங். பட் நீ தான் சொல்லுவேனானு அடம் பிடிக்குற” என்று கேட்க, அவந்திகா சிரித்தாள்.
“ஆ ஊனா சிரிச்சுச் சமாளிச்சிரு” என்று குறைபட்டவளிடம், “எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் வர்சு” என்று சொல்லி கண் சிமிட்டினாள் அவந்திகா. “நீ அவ கிட்ட போயா குட் நியூஸ் கேட்ப! அவளுக்கு ராகவ் கூடச் சண்டை போடவே டைம் இல்லயாம்” என்று ரித்திமா சொல்ல மூவரும் சிரித்தனர்.
“நீ சொல்லலைனா என்ன? நான் சொல்லுவேன். நானும் மேடியும்…” என்று வர்ஷா வார்த்தையை முடிப்பதற்குள், அவந்திகா “அம்மா அப்பா ஆகப் போறீங்களா?” என்று கேட்க, மேடிக்குப் பதற்றத்தில் புரையேறியது.
“நான் சொன்னேனா இல்லையா? வந்த உடனே ஆரம்பிச்சிட்டா” என்று சொன்னவனின் தலையைத் தட்டிக் கொடுத்த ரித்திமா, “ஹனிபி, அவன் பாவம்டி! பொண்ணு என்னதான் சொல்ல வர்றானு கேட்டுட்டு அப்புறமா கலாய்க்கலாம்” என்று சொல்லவும் அவந்திகா வர்ஷா சொல்ல வந்த விஷயத்தைக் கேட்க ஆரம்பித்தாள்.
“நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்கோம்” என்று சொல்லி வெட்கப்பட, அவந்திகா மேடியைப் பார்த்து, “இந்தத் திருடன் கடைசி வரைக்கும் அமுக்கினி மாதிரி இருந்துட்டு எவ்ளோ பெரிய வேலை செஞ்சிருக்கான் பாரு ரித்தி” என்று கலாய்க்க ஆரம்பித்தாள்.
இவ்வாறு நால்வரும் பேசிக் கொண்டிருக்கும் போதே லாரா வர, “ஹலோ மேம்! ஹவ் ஆர் யூ” என்று ரித்திமாவும் அவந்திகாவும் அவளுடன் பேசலாயினர்.
ராகவ் நேனாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் அவந்திகாவைக் கவனிக்க, அவள் சிரித்துக் கொண்டே, “போதும்டா! உன் பொண்டாட்டி தானே! 24 ஹவர்ஸும் வீட்டில பார்த்துட்டே தானே இருக்க! கொஞ்ச நேரமாச்சும் அந்த கண்ணுக்கு ரெஸ்ட் கொடுடா” என்று கலாய்க்க, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யா, “வாட்? அவந்திகா பார்ட்டிக்கு வந்திருக்காங்களா? நான் அவங்களைப் பார்த்துட்டு வர்றேன்” என்று அவந்திகாவை நோக்கிச் சென்றான்.
அவன் சென்றதும் கடுப்பான ராகவ் நேனாவிடம் திரும்பி, “ஒன் செகண்ட் நேனா! இந்த ராஸ்கல் எப்போ இந்தியா வந்தாலும் என்னோட பி.பியை இன்கிரீஸ் பண்ணாம போக மாட்டான்னு நெனைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவன் பின்னே சென்றான்.
ஆர்யா அவந்திகாவின் முன் நின்றவன், “ஹலோ! எப்படி இருக்கீங்க? முன்னை விட இப்போ ரொம்ப அழகாயிட்டீங்க போங்க” என்று சொல்ல, அவந்திகா அதற்குப் புன்னகை பூத்தாள். அதற்குள் ராகவ் வந்துவிட, ஆர்யா, “பார்த்துடா! கீழ விழுந்து அடி ஏதும் பட்டுடப் போகுது! நான் என்ன உன் வைஃபை கிட்னாப் பண்ணவா போறேன்? இவ்ளோ வேகமா வர்ற?” என்று கலாய்க்க மேடி, வர்ஷா, ரித்திமா, லாரா என்று அனைவருக்கும் இதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது.
“என்னடா பண்ணுறது? உன்னை மாதிரி ஒருத்தன் கிட்ட இருந்து என் பிரெண்டைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பும் எனக்குத் தானே இருக்கு” என்று சொல்லிக் கொண்டே லாராவைப் பார்த்தான். அதற்கு அவள் புரியாமல் விழிக்கவும், “சார் உன்னை ரொம்ப லவ் பண்ணுறாராம் லேரன்!” என்று அவன் சொன்னது தான் தாமதம், வர்ஷா, ரித்திமா, அவந்திகா, மேடி என்று ஆளாளுக்கு லாராவுக்கு வாழ்த்து சொல்லுகிறோம் பேர்வழியாக அவளை உலுக்கி எடுத்தனர்.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்தவள், “சைலன்ஸ்! சின்ன பசங்களா நீங்க நாலு பேரும்? என்ன ஆட்டம்? அண்ட் யூ ராகவோட வைஃப், பாவம் என்னோட பிரெண்ட். உன்னை வச்சு டெய்லி எப்படிச் சமாளிக்கிறான்?” என்று சொன்னவளைப் பார்த்துத் தோளைக் குலுக்கினாள் அவந்திகா.
ஆர்யா, “கூல் டவுன் லேரன்” என்று அவளை அணைக்க வர, “ஏய்! டோன்ட் டச் மீ” என்று சொல்லிவிட்டுச் செல்ல, அவள் பின்னே ஓடினான் அவன். அதைப் பார்த்துச் சிரித்த ராகவுடன் சேர்ந்து கொண்டனர் மற்ற நால்வரும்.
ஒருவாறாகப் பார்ட்டி நல்லபடியாக முடிய, ராகவ் நேனாவையும் அவளது தந்தையையும் வழியனுப்பிவிட்டு வந்தான். கிஷோரைத் தேடியவன் அவனும் அவந்திகா, ரித்திமாவுடன் கார் பார்க்கிங்கில் நின்று எதையோ பற்றி கேலி செய்து சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை நெருங்கியவன், அதற்குள் இன்னொரு புறமிருந்து ஒருவன் அவர்களை நோக்கி வேகமாக வருவதைக் கண்டுவிட்டான்.
ஆனால் அவன் செல்வதற்குள் அந்த நபர் கத்தியை ஓங்க, கிஷோர் அவனைத் தடுக்கும் முயற்சியில் தோளில் கத்தி கிழித்துவிட்டது. அதற்குள் ராகவ் அவனை நெருங்கி அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கியவன், அவனை கோபத்தில் அடிக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அங்கே வந்துவிட, அவந்திகாவும் ரித்திமாவும் கிஷோர் தோளிலிருந்த காயத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
ராதிகா அவனுக்கு ரத்தம் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்து கண்ணீருடன் அமரை அழைத்து அவனைத் தூக்கச் சொல்ல, அவன் கிஷோருடன் காரில் அமர்ந்தான். அம்மா, சித்தியுடன் கார் ஹாஸ்பிட்டலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
அதற்குள் வருண் போலீசை அழைக்க, வந்தவர்கள் அவனை இழுத்துச் சென்றனர். பின்னேயே காவல் நிலையம் வந்து சேர்ந்தனர் ராகவும் வருணும். அவனுடன் அவந்திகாவும் ரித்திமாவும் வந்தவர்கள், அங்கே சென்று பார்க்கும்போது அந்த நபரை காவலர்கள் அவர்களின் முறையில் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் கேட்டதற்கு முதலில் பதில் சொல்ல மறுத்தவன் பின்னே சொன்ன ஒரே வார்த்தை “சிராஜ்”. அதைக் கேட்டதும் ராகவுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. அவன் வரிசையாக அவந்திகாவுக்கு நடந்த விபத்திலிருந்து விவரிக்கத் தொடங்கி, இன்றும் அவன் அவந்திகாவைக் கொல்ல வந்த இடத்தில் தான் கிஷோர் இடையில் வந்துவிட்டதாகக் கூற, சிராஜின் மீது கொலைமுயற்சி புகார் அளித்துவிட்டு வந்த ராகவுக்கு இன்னும் கோபம் குறையவில்லை.
“இந்த ராஸ்கல் தான் இவ்ளோவும் பண்ணிருக்கான்! எனக்கு இது எதுவுமே தெரியாம இருந்துருக்கேன். டேமிட்” என்று கார் கதவில் கையைக் குத்தியவனைப் பார்த்து அவன் அருகில் சென்றாள் அவந்திகா.
“ராகவ்! அவன் தான் ஆக்சிடென்ட்குக் காரணம்னு எனக்கு ஆல்ரெடி தெரியும்” என்று சொன்னவளின் முகத்தை நம்ப முடியாமல் பார்த்தான் ராகவ். பின்னர் அவளது கையை இறுக்கமாகப் பிடித்தவன், “வாட்? கம் அகெய்ன்” என்று கடினமான குரலில் கூறவும், அந்த குரல் உள்ளே குளிரைப் பரப்பினாலும் அவந்திகா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினாள்.
“அவன் தான் இத என் கிட்ட சொன்னான்” என்று ஆரம்பித்துச் சிராஜ் அவளிடம் கூறிய விஷயங்களை ராகவிடம் சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.
“ஏன் என் கிட்ட இதைப் பத்தி அப்போவே சொல்லல?”
“முடிஞ்சு போன விஷயத்தைப் பத்திச் சொல்லி உன்னை டென்ஷனாக்க வேண்டாமேனு சொல்லல.”
“ஓ! அன்னைக்கே என் கிட்ட இதச் சொல்லிருந்தா அந்த ராஸ்கலுக்கு மறுபடியும் இப்படி நடந்துக்க தைரியம் வந்திருக்காது. உன்னோட முட்டாள்தனத்தால இன்னைக்கு என்னோட தம்பி ஹாஸ்பிட்டல்ல படுத்துருக்கான். இதுக்கு என்ன பதில் சொல்லப் போற அவந்திகா?” என்று சொல்லிவிட்டு அவள் கையை உதறிவிட்டு காரை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான் ராகவ்.
அவன் செல்வதைக் கண்ணில் நீர் வழியப் பார்த்துக்கொண்டிருந்தவளைச் சமாதானம் செய்த வருண், அவளையும் ரித்திமாவையும் தன்னுடைய காரில் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றான். ரித்திமாவுக்கு கிஷோருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் கண்ணீர் கூட வர மறுத்தது. இவ்வாறு அவர்கள் மனம் பதைக்கக் காரில் வரும்போது, அங்கே மருத்துவர் ராகவிடம், “நத்திங் டூ சீரியஸ் ராகவ்! காயம் கொஞ்சம் டீப்பா இருக்கு! மத்தபடி பயப்படுற மாதிரி எதுவுமில்ல! நீங்க அவரைப் போய் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ராகவ் உள்ளே விரைந்தவன், படுக்கையிலிருந்து எழும்பி உட்கார்ந்த கிஷோரைப் பார்த்ததும் அவனைக் கட்டிக்கொண்டான். “ஆர் யூ ஓகேடா?” என்று கேட்க, கிஷோர், “எனக்கு என்ன பய்யா? ஐயாம் ஓகே! கொஞ்சம் டயர்டா இருக்கு! அவ்ளோதான்” என்று சொல்லவும் தான் அவனுக்கு நிம்மதியானது.
ஆனால் அவந்திகா மீது கொண்ட கோபம் சிறிதும் குறையாமல் அதே நிலையில் இருக்க, வெளியே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தவன் குடும்பத்தினரை வீட்டுக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டு அவன் அங்கேயே இருந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


