மொத்த குடும்பமும் சேர்ந்து ஆராதனாவைக் கொண்டாடினார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண்குழந்தை என்பது மகாலட்சுமியின் அம்சம். வீட்டின் மூத்த வாரிசாகப் பெண் குழந்தை பிறப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுபவர்கள் அவர்கள்!
குழந்தை எப்போதும் உஷாவிடமோ அல்லது பிரியாவிடமோ பெரும்பாலான நேரம் இருந்தாலும் அவந்திகாவுக்கு அவள் என்றால் கொள்ளைப் பிரியம். மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்புபவள் வீட்டுக்கு வந்ததும் அவளைத் தூக்கிக்கொண்டே சுற்றுவதால் அவளும் அவந்திகாவை நன்கு அடையாளம் கண்டுகொண்டாள்.
உஷாவும் அவளும் எப்போதும் அமர்ந்து பேசும் இடத்தில் ஒரு சின்ன மாற்றமாக இப்போது ரித்திமாவும் குழந்தையும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். ரித்திமாவின் அம்மாவுக்கு மீண்டும் பணியிடமாற்றம் வந்ததால் அவர் பூனாவுக்குச் சென்றுவிட்டார் (அரசுப் பணி வங்கிப் பணியில் இருப்பவர்களின் வாழ்க்கையில் இந்த டிரான்ஸ்ஃபர் தவிர்க்க முடியாத ஒன்று).
தனியாக இருப்பவளைச் சுமித்ரா தங்களுடனே தங்குமாறு கூறியதும் ரித்திமா இரண்டு காரணங்களுக்காகத் தயங்கினாள். முதல் காரணம் கிஷோர். சும்மாவே பின்னால் சுற்றுபவன் அவன் வீட்டிலேயே இருந்தால் 24 மணிநேரமும் அவனை அவளால் தவிர்க்க முடியாது. அடுத்த காரணம் அவனது அம்மா வீணா. அவருக்கு ஏனோ தன்னைப் பிடிக்கவில்லை என்று எப்போதோ தெரிந்துகொண்ட ரித்திமா அவரை மனதில் வைத்தே கிஷோரைத் தவிர்த்தாள். இப்போது வீட்டுக்கு வரவும் மறுப்புத் தெரிவித்தாள்.
ஆனால் வீணாவே அவளை அங்குத் தங்குமாறு கூறியது அவளுக்கு ஆச்சரியம். அதனால் பிடிவாதம் பிடிக்காமல் அவர்களுடனே அங்கே வசிக்கத் தொடங்கினாள் அவள். வீணாவுக்கு அவளை அங்கே தங்க வைக்க ஒன்றும் பெரிய விருப்பம் இல்லை. ஆனால் என்ன செய்ய, கிஷோர் தன்னைக் கொஞ்சமாவது மதிக்க வேண்டுமென்றால் இதையெல்லாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்று மனதைச் சமாதானம் செய்துகொண்டார்.
பிந்துவும் நேஹாவும் கூட இப்போது அவந்திகாவின் அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். அவர்களின் கல்லூரி புராஜெக்ட்டுக்காக அவர்கள் அங்கே அவர்களுடன் பணியாற்றி அவர்களின் அன்றாடப் பணிகளையும் அவர்களின் கணக்கு வழக்கு, வரிவிதிப்பு முறைகளையும் பற்றி அறிந்துகொண்டு அதை ரிப்போர்ட்டாகத் தங்களின் கைடுக்குச் சப்மிட் செய்ய வேண்டும். ஆறுமாதகால அவகாசம் கொண்ட அந்தப் புராஜெக்ட்டில் 40 சதவீதம் அவர்கள் முடித்திருந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இவ்வாறு எல்லாரும் ஒரு திசையில் ஓடிக்கொண்டிருக்க ராகவ் என்ற ஒருவன் மட்டும் இந்தியா திரும்புவேனா என்று சாதித்துக் கொண்டிருந்தான். ஆராதனாவைக் கூட அவன் ஸ்கைப்பில்தான் அவந்திகாவுடன் பார்த்திருக்கிறான்! அவ்வளவுதான்! வருணும் குழந்தை பிறந்ததுக்கு இந்தியா வந்தவன் அவளுக்குப் பெயர்சூட்டுவிழா முடிந்ததும் மீண்டும் லண்டன் சென்றான்.
இதில் பாவப்பட்ட ஜீவன் அவந்திகா மட்டும்தான்! அவன் குழந்தை பிறந்து ஒரு வாரத்தில் வருவான், பெயர்சூட்டு விழாவுக்கு வருவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே அடைந்தாள்.
அவளிடம் கூறியபடி இரண்டு மாதங்களைக் கடந்தும் அவன் சென்ற வேலை முடியாததே காரணம்! அதுவும் கடந்த சில வாரங்களில் அவனை ஸ்கைப்பில் கூடப் பிடிக்க முடியாத அளவுக்கு அவன் பிஸி என்று வருண் சொல்லித்தான் அவளுக்கே தெரிய வர அவந்திகா நொந்துவிட்டாள்.
“இவனைக் கல்யாணம் பண்ணதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்! எப்பிடியும் இந்தியா வந்துதானே ஆகணும்! அன்னைக்கு இருக்கு உனக்கு மைதாமாவு!” என்று மனதிலேயே பொருமிக்கொள்வாள் அவள்.
மனம் பொறுக்காமல் சில நேரம் ராதிகாவிடம் புலம்புவாள் அவந்திகா. “போனா போன இடம், வந்தா வந்த இடம்னு இருக்கணும்னா உங்க பையன் கல்யாணம் பண்ணாமச் சாமியாராப் போயிருக்கணும் சாஸுமா! அத விட்டுட்டுக் கொஞ்சம் கூட வீட்டு யோசனை இல்லாம இருந்தா என்ன அர்த்தம்? என்கிட்ட அவன் பேசியே 3 வீக்ஸ் ஆகுது தெரியுமா?” என்று புலம்புபவளைப் பார்த்து வருத்தப்பட்டார் ராதிகா.
மோகனிடம் “ராகவ் என்னதான் பண்ணிட்டு இருக்கான் அங்க? அவனுக்குக் கல்யாணம் ஆகிப் பொண்டாட்டினு ஒருத்தி இருக்கா! இன்னும் புரிஞ்சிக்காம இப்பிடி இருந்தா என்ன அர்த்தம்? பிசினஸ் முக்கியம்தான்! அதுக்குன்னு அவகிட்ட ஒரு போன் பேச முடியாத அளவுக்கு அவனுக்கு அப்பிடி என்ன வேலை அங்கே?” என்று மனம் பொறுக்காமல் கேட்டுவிட்டார்.
அன்று இரவே ராகவிடம் பேசினார் மோகன். அவனோ பிசினஸ் டென்ஷனில் இருந்தவன் தான் அவளிடம் பேசிக் கொள்வதாகக் கூறிப் போனை வைத்துவிட்டான்.
அவந்திகா நன்கு உறங்கிக் கொண்டிருந்தவள் திடீரென்று போன் அடிக்கவும் உறக்கம் கலைந்து எழுந்தாள். ராகவின் கால் வரவும் அதை அட்டென்ட் செய்தவள் ஆவலுடன் “ஹலோ” என்க அவனுக்கு வாயில் சனி இருந்திருக்க வேண்டும். போனை எடுத்தவுடன் பொரியத் தொடங்கினான்.
“ஆர் யூ அ கிட்? மனுஷனுக்கு ஆல்ரெடி ஆயிரம் டென்ஷன். இதுல உனக்குக் கால் பண்ணிப் பேசுறதுக்கு எனக்கு எங்க டைம் இருக்கு? யூ நோ ஒன் திங், த்ரீ வீக்ஸா எனக்குச் சரியான தூக்கம் கூட இல்ல! இது எதையும் யோசிக்கிறது இல்ல! உடனே எல்.கே.ஜி கொழந்தை மாதிரி போய் அம்மா கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ண வேண்டியது!”
“ராகவ்! எனக்குப் புரியுது! பட் ஒரு கால் பண்ணிப் பேசுனா நீ ஒன்னும் கொறஞ்சிட மாட்ட! இப்பிடி பிசினஸ்னு போனா உனக்கு வீடு பொண்டாட்டி எல்லாமே மறந்துடுது! அப்பிடிதானே”
“இடியட் மாதிரி பேசாத அவந்திகா! இந்த மீட் ரொம்ப இம்பார்ட்டென்ட்! அதான் வருண் பய்யா கூடப் போய்ட்டு 2 வீக்ல லண்டன் திரும்பிட்டாரு! பட் பாபி உன்னை மாதிரி கம்ப்ளெய்ண்ட் எதுவும் பண்ணலயே! ஆக்சுவலி அவங்க ஒரு பிசினஸ் மேனோட டாட்டர். சோ அவங்களால இதுல உள்ள ப்ராப்ளம்ஸ ஈஸியாப் புரிஞ்சிக்க முடியும். பட் அதே மெச்சூரிட்டியை உன்கிட்ட எதிர்ப்பாத்தது என்னோட முட்டாள்தனம்தான்! இது ஒன்னும் உன்னோட மிடில் கிளாஸ் ஆபிஸ் கோயிங் லைஃப் ஸ்டைல் இல்ல! இங்க ஒவ்வொரு நிமிஷமும் நான் யோசிச்சாமட்டும்தான் இந்த பிசினஸ் வேர்ல்ட்ல நான் சர்வைவ் பண்ண முடியும். என்னால 24 ஹவர்ஸ் உன்னைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்க முடியாது அவந்திகா! பிஹேவ் லைக் அ மெச்சூர்ட் கேர்ள்! டூ யூ அன்டர்ஸ்டான்ட்?” என்று டென்ஷனில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கத்திவிட்டுப் போனை வைத்தான் அவன்.
அதன்பின் பி.ஏ வந்து சொல்ல அடுத்த கான்ஃபரன்சிற்காகத் தயாராக ஆரம்பித்தனர் வருணும் ராகவும்.
அதற்குப் பின் அவந்திகா அவனுக்குப் போன் செய்ய நினைக்கவுமில்லை. அவனுக்குமே அவள் தன்னுடைய பேச்சை எவ்வாறு எடுத்துக்கொண்டிருப்பாள் என்ற யோசனை வரவுமில்லை. தன் அறிவுரைக்குப் பிறகு அவள் தன்னுடைய நிலையைப் புரிந்துகொண்டு தனக்குப் போன் செய்யவில்லை என்று எண்ணி அவனுடைய வர்த்தக உலகின் ஒவ்வொரு சந்திப்பையும் வெற்றியாக மாற்றிக் கொண்டிருந்தான் ராகவ்.
இறுதியாக அவனும் வருணும் மூன்று மாதங்கள் இரவு பகலாக உழைத்ததற்கான பலனாகப் பிரிட்டனின் மிகப்பெரிய நிறுவனத்தின் கான்ட்ராக்ட் விஹான் குரூப்பிற்குக் கிடைக்கத் திருப்தியுடன் அதற்கான மற்ற வேலைகளில் மூழ்கினர் இருவரும்.
இவ்வாறிருக்க அவந்திகாவின் பிறந்த நாளும் வந்தது. ஒரு வாரத்துக்கு முன்னரே உஷாவும் ரித்திமாவும் பிந்து நேஹாவிடம் சொல்லிவிட நால்வரும் சர்ப்ரைஸாகப் பரிசளிக்கத் திட்டமிட்டனர். குடும்பத்தின் பெரியவர்களிடமும் விவரத்தைச் சொல்லிவிட அவர்களும் அதைக் காண்பித்துக்கொள்ளவில்லை.
அவந்திகாவுக்கு அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை. எப்போதும் போல அதுவும் ஒரு நாள் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவள்.
பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 12 மணிக்கு அறையின் கதவு தட்டப்படத் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தவள் பிந்து நேஹாவின் கூச்சலில் ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்து நின்றாள். அவர்களின் அருகே “சர்ப்ரைஸ்” என்று சொல்லிக்கொண்டே வந்து நின்றனர் உஷாவும் ரித்திமாவும்.
பின்னர் “அடியே பிசாசுகளா! ஏன்டி இப்பிடிப் பயம் காட்டுறீங்க?” என்று பரிதாபமாகக் கேட்டாள்.
அவளை உள்ளே தள்ளியவர்களின் பின்னே அமர் கிஷோர் நிற்க உள்ளே வந்து கேக்கை டேபிளின் மேல் வைத்தனர் அவர்கள்.
“பாபி கடவுளை மனசுல வேண்டிக்கிட்டு மெழுகுவர்த்திய ஊதுங்க” என்ற கிஷோரைப் பார்த்துச் சிரித்தவள் மனதினுள் “காட் எப்போவுமே நான் நானா இருக்கணும்! யாருக்காகவும் என்னை மாத்திக்கிற சூழ்நிலையை எனக்குக் குடுத்துடாதீங்க! அது போதும்” என்று கண்ணை மூடி வேண்டிக்கொண்டவள் மெழுகுவர்த்தியை ஊத ஆரம்பித்தாள்.
பின்னர் கேக்கைக் கட் செய்தவள் அதை உஷாவுக்கு ஊட்டிவிட அவளும் நல்ல பிள்ளையாக வாங்கிக் கொண்டாள். அனைவருக்கும் அவளின் கையால் ஊட்டிவிட்டவள் அவர்களின் வித்தியாசமான பார்வையை உணர்ந்தவள் மெதுவாகப் பின்னாடி நகர்ந்தபடி “நோ நோ! உங்க மைன்ட் வாய்ஸை நான் கேட்ச் பண்ணிட்டேன்!” என்று ஓட முயல அதற்குள் ரித்திமா கேக்கை அவள் முகம் முழுவதும் பூசிவிட்டாள்.
அடுத்து உஷாவும் பிந்துவும் தங்கள் பங்குக்குப் பூச நேஹாவைப் பார்த்தவள் “நீ மட்டும் ஏன் சும்மா இருக்க? பூசிக்கோ” என்று அவளுக்குத் தன் கன்னத்தைக் காட்ட அவளும் பூசிவிட்டாள்.
அந்த முகத்துடனே எழுவரும் செல்ஃபி எடுத்துக்கொள்ள அவந்திகா அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். சிறிது நேரத்தில் வருணிடமிருந்து வீடியோ கால் வர அவன் “ஹேப்பி பர்த்டே ஹனிபி” என்று சொல்ல அவந்திகா “தேங்க்ஸ் வருண்” என்று புன்னகையுடன் கூறினாள்.
அவன் “ஒன் செகண்ட் ராகவ்வ கூப்பிடுறேன்” என்றதும் அவசரமாக “தேவையில்ல வருண்” என்று மறுத்தவளை வருண் மட்டுமல்ல அவளைச் சுற்றியிருந்த ஆறு பேருமே வித்தியாசமாகப் பார்த்தனர்.
பின்னர் சமாளித்தவளாய் “அது அவன் ஆல்ரெடி விஷ் பண்ணிட்டான்! சோ அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே” என்று சொல்லிப் பூசி மெழுகியவள் அவர்கள் இருந்த இடத்தை வீடியோவில் கவனிக்கத் தவறினாள்.
பின்னர் வருண் மட்டுமே சில நிமிடம் பேசிவிட்டுக் காலை கட் செய்தான். இன்னும் சில கலாட்டாக்களுடன் அவர்கள் அறுவரும் அவர்களின் அறைக்குச் சென்ற பின்னர் அவந்திகா போனைப் பார்த்தாள்.
கடைசி வரை அவள் எதிர்ப்பார்த்தவன் அவளுக்கு வாழ்த்து சொல்லவே இல்லை. அதைப் பார்த்தபடியே அமர்ந்தவள் உட்கார்ந்தபடியே உறங்கியும் போனாள்.
காலை தாமதமாக எழுந்தவள் மெதுவாகச் சென்று குளித்துவிட்டு ரித்திமா பரிசளித்த சேலையை அணிந்தவள் கீழே வந்தாள். கீழே பேச்சுச் சத்தமாகக் கேட்க என்னவென்று பார்த்தவளின் கண்ணில் பட்டான் அவளின் கணவன்!
தாதியிடம் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தவனைக் கண்டுகொள்ளாமல் வருணை மட்டும் பார்த்துப் புன்னகைத்தவள் ராதிகாவிடம் “சாஸும்மா! நான் ஆபிஸ் கெளம்புறேன்” என்று கிளம்பப் போனாள்.
ராகவுக்கோ “இத்தனை நாள் கழிச்சு நான் வந்திருக்கேன்! இந்த ஜான்சி ராணிக்கு இப்போ ஆபிஸ்தான் முக்கியமா? அதுவும் பர்த்டே அன்னைக்குக் கூடவா? முடியல கடவுளே” என்று எண்ணிக்கொண்டவன் தானும் அன்று வேலை மட்டுமே முக்கியம் என்று பேசியதைச் சுத்தமாக மறந்துவிட்டான்.
ரித்திமா “ஹனிபி! பர்த்டே அன்னைக்கு எதுக்குடி ஆபிஸ்? அதுவும் இல்லாம ராகவ் இன்னைக்குத்தான் மூணு மாசம் கழிச்சு வந்திருக்காரு! நீ இரு! முக்கியமான வொர்க் எதும் இருந்தா சொல்லு! நான் போய்ப் பாத்துக்கிறேன்” என்றாள்.
அவளைப் பார்த்தபடியே புடவையின் கொசுவத்தை நீவி விட்டவள் சாதாரணமாக “சோ வாட்? பிறந்தநாள்னா ஆபிஸ் போகக் கூடாதுனு எதாவது இருக்கா என்ன? அப்புறம் ராகவ் என்ன கொழந்தையா? நான் கூடவே இருந்து பாத்துக்க? எனக்கும் என்னோட லெவலுக்கு ஆயிரம் வொர்க் இருக்கு ரித்தி! அத யாருக்காகவும் தள்ளிப் போட முடியாது! சோ பிறந்த நாள் மண்ணாங்கட்டினு பேசி என்னை இரிட்டேட் பண்ணாத” என்று ரித்திமாவைச் சொன்னாலும் அவளுடைய பார்வை தன்னைக் கூறு போட்டதை நன்றாகவே உணர்ந்தான் ராகவ்.
தான் பேசியது அவளை இந்த அளவுக்குப் பாதிக்கும் என்று அவன் நினைக்கவில்லை. அவளோ சாதாரணமாக ஆராதனாவுக்கு முத்தமிட்டுவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.
அவர்களின் அறைக்குத் திரும்பிய ராகவ் அந்த அறையில் வெறுமையை உணர்ந்து அவந்திகாவுக்குப் போன் செய்ய அவளோ காலை அட்டென்ட் செய்யவே இல்லை.
போனைப் பெட்டில் வீசிவிட்டுக் குளியலறைக்குள் சென்று ஷவரின் அடியில் நின்றவனின் காதில் தான் அன்று பேசிய “என்னால 24 ஹவர்ஸ் உன்னைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்க முடியாது அவந்திகா!; இது ஒன்னும் உன்னோட மிடில் கிளாஸ் ஆபிஸ் கோயிங் லைஃப் ஸ்டைல் இல்ல!” என்ற அவனின் வார்த்தைகளே ரீங்காரமிட வெளியே வந்தவன் அமைதியாக அமர்ந்து யோசித்தான்.
யோசித்தவனுக்குத் தான் பேசிய வார்த்தைகள் மிகவும் அதிகப்படி என்பது புரிந்தாலும் அது மிகவும் தாமதமாகப் புரிந்ததுதான் வேடிக்கை!
இந்த உலகில் நிறைய மனிதர்களின் பிரச்சனையும் இதுதான்! அவர்கள் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு வெண்ணிலவைத் தொலைத்தவர்கள் என்பதுதான் நிதர்சனம்!
அவர்களின் அறையில் அமர்ந்திருந்த ராகவுக்குக் கால் வர “யெஸ்! ஓகே! எல்லாம் பக்காவா இருக்கும்தானே? ஆல் ஆஃப் யூ மே லீவ்! தேங்க்யூ” என்று புன்னகைமயமாகப் போனை வைத்தவன் கண்ணாடியைப் பார்த்துத் தலைமுடியைச் சரி செய்துவிட்டு விசிலடித்தபடியே அறையை விட்டு வெளியேறினான்.
கீழே வந்தவன் ரித்திமாவையும் கிஷோரையும் மட்டும் தன்னுடன் அழைத்தவன் ராதிகாவிடம் தான் வெளியே செல்வதாகவும் திரும்புவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றான்.
மூவரும் காரில் ஏறியதும் ரித்திமா “ராகவ்! இன்னைக்குத்தானே வந்திருக்கீங்க! அதுக்குள்ள மறுபடியுமா? ஹனிபி ஆல்ரெடி டென்ஷன்ல இருக்கா. இப்போ நீங்க ஒன் வீக் எங்கயோ போறீங்கன்னு சொன்னா அவ்ளோதான்” என்று தயக்கத்துடன் கூறினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


