ராகவ் அதைக் கேட்டுச் சிரித்தவன் “அவ பேசுறதுக்கு நான் சான்ஸ் குடுத்தாதான” என்று சொல்லிவிட்டுக் காரை ஸ்டார்ட் செய்தான். அவர்களின் அலுவலகத்தின் முன் கார் நிற்கவும் இறங்கிய ராகவ் அவர்களையும் இறங்கச் சொன்னான்.
“ஏன்டா உன்னோட மொத்த குடும்பமும் இப்பிடிதானா? ஒன்னு ஓவரா லவ் பொங்கி வழியும்! இல்லன்னா அப்பிடி ஒருத்தி இருக்கிறதயே மறந்துடுவீங்க! சூப்பர் ஃபேமிலி” என்று கிஷோரின் காதைக் கடித்தபடியே ரித்திமா ராகவின் பின்னே சென்றாள்.
அவந்திகா யாருடனோ போனில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தவள் மூவரையும் பார்த்துவிட்டு “ஐ’ல் கால் யூ பேக் மேம்” என்று சொல்லிப் போனை வைத்தாள்.
“இப்போ எதுக்கு வந்திருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு மூவரையும் பார்க்க கிஷோர் ராகவைத் தன் கையால் சுட்டிக் காட்டினான். ராகவ் நேரே சென்றவன் ஒரு சேரை இழுத்துப்போட்டு அவள் எதிரே அமர்ந்துவிட்டு “அவந்திகா! ஏதாச்சும் வொர்க் இருந்துச்சுனா ரித்திகிட்ட குடுத்துட்டு வா! நாம ஒரு ப்ளேஸ்க்குப் போகப் போறோம்” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனை நோண்டவும் அவளுக்கு எரிச்சல்தான் வந்தது.
“எக்ஸ்கியூஸ் மீ நான் யார்கூடவும் எங்கயும் வரப் போறதில்ல. என் டைம வேஸ்ட் பண்ணாம இங்க இருந்து போயிடுங்க! எனக்குத் தலைக்கு மேல வேலை இருக்கு” என்று அவள் லேப்டாப்பைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ராகவ் சட்டென்று எழுந்தவன் லேப்டாப்பை வேகமாக மூடிவிட்டு அவள் கையைப் பிடித்து எழுப்பினான். பின்னர் ரித்திமாவிடம் சொல்லிவிட்டு அவளை இழுத்துச் செல்ல அவந்திகா அவன் கையை விலக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளைக் காரினுள் அமர்த்தியவன் உள்ளே சென்றதும் அவள் ஏதோ சொல்ல வர உதட்டில் கை வைத்து அமைதி காக்கும்படிக் கண்களால் ஆணையிட்டுவிட்டுக் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
அவர்கள் செல்வதைப் பார்த்துப் புன்னகைத்த ரித்திமா “எப்பிடியோ ஹனிபி நார்மல் ஆனாப் போதும்” என்று சொல்லிப் புன்னகைத்துவிட்டு அலுவலகத்தை மூடியவள் கிஷோருடன் காரில் ஏறினாள்.
அவந்திகா சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாதவளாய் “இப்போ எங்கதான் போயிட்டு இருக்கோம் ராகவ்? சும்மா உன் இஷ்டத்துக்கு என்னை இப்பிடிக் கூட்டிட்டு வந்தா என்ன அர்த்தம்? ஏதாச்சும் பேசுடா” என்று பொறுமையிழந்த குரலில் குழப்பத்துடன் கேட்டாள்.
ராகவ் “இன்னைக்கு உன்னோட பர்த்டே இல்ல?” என்று சாலையில் கண்பதித்தபடியே கேட்டான்.
“அதுக்கு என்ன இப்போ?”
“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்! ஏன் கேக்கக் கூடாதா?”
“கேட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க சார்? அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்!”
“யூ ஆர் ரைட்! அதத் தெரிஞ்சிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?”
அவனின் பதிலில் அவள் இன்னும் எரிச்சலானாள். பேசப் பிடிக்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே சாலை பிரிவதைக் கண்டதும் “நாம கூர்க் போறோமா?” என்று கேட்க அவன் தலையசைப்பைப் பதிலாக அளித்துவிட்டுச் சாலையில் கவனம் செலுத்தினான்.
“இவன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்கான்? காரை விட்டு இறங்குனதும் கேட்டுட வேண்டியதுதான்” என்று மனதிலே எண்ணிக்கொண்டாள் அவந்திகா.
அதற்குள் பொழுது மாலையை எட்டியிருக்க கார் மெதுவாக மலைப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது. சாலையின் இருபுறமும் இருந்த மரங்களையும் தூரத்தில் தெரிந்த மலையையும் பார்த்தபடியே அவர்களின் பயணம் தொடர்ந்தது.
சிறிது நேரத்தில் மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தின் நடுவே இருந்த ஒரு ரிசார்ட்டின் முன் கார் நிற்கவும் கீழே இறங்கிய அவந்திகா அந்த இடத்தை நனைத்துக்கொண்டிருந்த சாரலில் நின்று தூரத்தில் தெரிந்த மலைமுகடுகளை ரசிக்கத் தொடங்கினாள்.
ராகவும் காரைப் பார்க் செய்துவிட்டு வந்தவன் கையில் இரு சூட்கேஸ் இருக்க “சூட்கேஸ் எதுக்கு? நம்ம இங்க எத்தனை நாள் ஸ்டே பண்ணப் போறோம்? எதையுமே சொல்லாம நீ பாட்டுக்கு வந்தா என்ன அர்த்தம்?” என்று உள்ளே சென்றவனின் பின்னால் ஓடினாள் அவந்திகா.
அவன் திரும்பிப் பார்த்தவன் “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு ஜான்சி ராணி” என்று சொல்லவும் அவள் மறுத்தாள்.
அவனோ “ஓகே! நோ ப்ராப்ளம்! நான் டிரஸ் சேஞ்ச் பண்ணலாம்னு நெனச்சேன்” என்று சொல்லி அவளைப் பார்க்கவும் “போ! போய்ச் சேஞ்ச் பண்ணிக்கோ!” என்று சொல்லிவிட்டு வெளி வராண்டாவில் அமர்ந்து மரங்களையும் அவற்றை நனைத்துக்கொண்டிருக்கும் பூஞ்சிதறல் சாரலையும் ரசிக்க ஆரம்பித்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஆவலுடன் திரும்பிப் பார்த்தவளின் பார்வையில் விழுந்தான் ராகவ் வரும்போது இருந்த அதே உடையில். அவள் அவனை முறைத்தவாறு எழுந்தவள் “இதுதான் நீ டிரஸ் சேஞ்ச் பண்ண லட்சணமா?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்துச் சிரித்தவன் “லெட்ஸ் கோ” என்று சொல்லி அவளைத் தன் கைகளால் ஏந்திக் கொண்டான். அவந்திகா அவனது கை பட்டதும் அமைதியானவள் என்னதான் நடக்கிறது என்று சிறு குழப்பத்துடன் வேடிக்கை பார்த்தபடி அவனை அணைத்தபடியே அவன் கைக்குள் இருந்தாள்.
அவன் மாடிக்குச் சென்றவன் அந்த அறையின் கதவைத் திறந்ததும் அங்கிருந்த மெழுகுவர்த்தியின் மெல்லிய மஞ்சள் நிற ஒளி அவந்திகாவின் ரசிக மனதைத் தூண்ட ஆவலுடன் பார்த்தாள் அவள்.
அந்த அறையின் நடுவில் ஒரு சிறிய மேஜையில் கேக் ஒன்று வைக்கப்பட்டிருக்க அறை முழுவதும் மெல்லிய மஞ்சள் வெளிச்சம் ஜன்னல் வழியே வந்த சூரியக்கதிர்களுடன் போட்டி போட்டபடி அறையைப் பொன்னிறமாக்கியது.
அவளை இறக்கிவிட்டவன் மெதுவாக கேக்கின் அருகில் அழைத்துச் சென்று அவளைக் காதலுடன் நோக்கி “ஹேப்பி பர்த்டே ஜானு” என்று சொல்ல அவந்திகாவின் கோபம் சூரியனைக் கண்ட பனி போல மெதுவாக விலகியது.
மெதுவாக எக்கி நின்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் “ஐ லவ் யூ சோ மச் ராகவ்” என்று மெதுவாக உரைக்க ராகவ் அவளின் குரலில் இருந்த காதலில் கரைந்து காணாமல் போனான்!
பின் சுதாரித்தவன் “கேக் கட் பண்ணலாமா?” என்று ஆவலுடன் கேட்டு அவளைத் தன் கைவளையத்துக்குள் கொண்டு வந்தவன் “காட் கிட்ட வேண்டிக்கிட்டுக் கட் பண்ணு பாப்போம்” என்று சொல்ல அவள் தலையசைத்தாள்.
“கடவுளே! என்னைக்கும் நான் நானா இருக்கணும்! யாருக்காகவும் என்னை மாத்திக்கிற சூழ்நிலையை எனக்குக் குடுத்துடாதீங்க” என்று வேண்ட அவளின் வேண்டுதலில் புருவம் உயர்த்தியவன் “கட் பண்ணு” என்று சொல்ல அவள் மெழுகுவர்த்தியை மெதுவாக ஊதியவள் கேக்கைக் கட் செய்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
அவன் பதிலுக்கு அவளுக்கு ஊட்டிவிடாமல் முகத்தில் கேக்கைத் தடவ “நீயுமா? ஏன்டா எல்லாரும் இப்பிடியே பண்ணுறீங்க?” என்று சிணுங்கியவளுக்கு வாயில் ஊட்டிவிட்டான் ராகவ்.
கேக்கைச் சாப்பிட்டுவிட்டு முகம் கழுவி வந்தவள் ஜன்னலின் வழியே தெரிந்த மலை முகடுகளைப் பார்த்தாள். இருள் பரவியிருப்பதால் நட்சத்திரங்கள் வானில் மின்ன ஆரம்பித்திருந்தன. மலைக் குன்றுகள் வரிவடிவில் தெரிய நிலா அப்போதுதான் வானில் எட்டிப் பார்த்தது.
“ராகவ்! நம்ம ஈவ்னிங் இங்க வந்தோம்! சீக்கிரமா இருட்டின மாதிரி இருக்குல்ல”
“இது ஹில் ஏரியா! இங்க சீக்கிரமாவே இருட்டிடும் அவந்திகா” என்றவனின் குரலில் எதையோ உணர்ந்தவள் திடீரென்று “அன்னைக்கு எதுக்கு என்னை அப்படிக் கத்துன நீ?” என்று கேட்க ராகவ் திகைத்தான்.
“அப்போ அதை இன்னும் நீ மறக்கலையா?”
“நெவர்! எனக்கு மெமரி பவர் யானை மாதிரி! அவ்ளோ ஈஸியா நான் அத மறப்பேன்னு நெனச்சியா நீ?”
“ஓகே! கூல் டவுன். இந்தப் பேப்பர்ஸைப் பாரு” என்று சொல்லி ஏதோ பத்திரங்களைக் காட்ட அவந்திகாவோ “இப்போ எதுக்கு ஸ்டாம்ப் பேப்பர்ஸ காட்டுறான்! ஒருவேளை எனக்கே தெரியாம என்னைத் டிவோர்ஸ் பண்ணப் போறானா?” என்று மனம் பதைக்க நின்றாள்.
பின்னர் மானசீகமாகத் தன்னைத் தானே திட்டியவள் “உன் மூளை ஏன் இப்பிடிலாம் யோசிக்குது அவந்திகா? நல்ல நெனைப்பே வரமாட்டேங்குது போ” என்று எண்ணியபடியே அவன் கையில் கொடுத்த பத்திரத்தை வாசிக்க ஆரம்பித்தாள்.
வாசித்து முடித்ததும் “இத நான் உன்கிட்ட கேக்கவே இல்லயே! இப்போ இதுக்கு என்ன அவசியம் ராகவ்?” என்று கூர்மையான குரலில் கேட்க ராகவோ அதை எதிர்பார்த்தவன் போல “நீ இப்பிடித்தான் சொல்லுவேனு எனக்கு நல்லாவே தெரியும்! பட் உனக்கு நான் குடுக்கப் போற கிஃப்ட் லைஃப்லாங் மறக்க முடியாததா ஒரு மெமரியா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அதான் வாங்கிட்டேன்” என்று சாதாரணமாகத் தோளைக் குலுக்கிக் கூறியபடி அவளைப் பார்த்தான்.
அவள் தீவிரமான குரலில் “கிஃப்டோட மதிப்பு அதோட விலைய வச்சு இல்ல ராகவ்! அதுமட்டுமில்லாம ஒரு ஹஸ்பென்ட் தன்னோட வைஃப்க்கு குடுக்குற விலை மதிக்க முடியாத கிஃப்ட் அவனோட நேரம் மட்டும்தான். அதுவே இங்க இல்லங்கிறப்போ இதெல்லாம் என்னைப் பொறுத்தவரைக்கும் தேவையே இல்ல” என்று சொல்லிவிட்டு அந்தப் பத்திரத்தை அவன் கையிலேயே கொடுத்தாள்.
“நானும் இதோட விலையப் பாத்து இந்த ரிசார்ட்ட உன் பேருல வாங்கல அவந்திகா! நீ உன்னோட கனவுகளை என்கிட்ட ஷேர் பண்ண மொமண்ட் எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு. இந்த மாதிரி ஒரு இடத்தைத்தானே நீ அன்னைக்கு அவ்ளோ ஏக்கத்தோட சொன்ன! நான் லண்டன்ல இருந்தப்போ இந்த ரிசார்ட் பத்தி ஆன்லைன்ல பாத்தப்போ இது உனக்குப் பிடிக்கும்னு தோணுச்சு! பட் இந்த ரிசார்ட் ஓனரோட சன் இன் லா குடுக்க முடியாதுனு ரொம்பப் பிரச்சனை பண்ணுனாரு! அவரைச் சமாளிச்சு இந்த ரிசார்ட்ட வாங்கறதுக்குள்ள நான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். அந்த டைம்ல டாட் கால் பண்ணி அவந்திகாகிட்ட ஏன் பேசுறதில்லன்னு கேக்கவும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். அதான் உன்கிட்ட கத்திட்டேன்.”
“ஓ! நீங்க டென்ஷன் ஆனா உங்க வாய்க்கு வந்தபடி என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? எப்பிடி எப்பிடி, எனக்கு மெச்சூரிட்டி இல்லயா? நீ எய்ம் பண்ணி வச்சிருந்தியே ஒரு ட்ரீம் வைஃப் அவளை மாதிரி நான் பிஹேவ் பண்ண ஆரம்பிச்சேன்னா உனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்டும். ஆமா நான் தெரியாமத்தான் கேக்குறேன், பொண்டாட்டி பிள்ளைங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம ஓடி ஓடிச் சம்பாதிச்சு நீங்க யாருக்குக் குடுக்கப் போறீங்க? இந்த ஓட்டம்லாம் முடிஞ்சு திரும்பிப் பாத்தா உங்ககிட்ட அந்தப் பணம் மட்டும்தான் மிஞ்சும்! பட் வாழ்க்கையோட நிறைய கோல்டன் மொமன்ட்ஸை நீங்க இழந்துருப்பீங்க. ஆனா நான் என்னோட லைஃபோட ஒவ்வொரு அழகான தருணத்தையும் உன்கூடச் சேந்து அனுபவிக்கணும்னு ஆசைப்படுறேன் ராகவ்” என்று சொல்லி அவனைக் காதலுடன் பார்த்தாள் அவந்திகா.
சிறிது நேரம் நிலவிய அமைதியில் அவள் சொன்னதிலும் நியாயம் இருப்பதை யோசித்தவன் மற்ற அனைத்தையும் மறந்து தேவதை போல் நின்றுகொண்டிருக்கும் மனைவியை ரசிக்க ஆரம்பித்தான். அவன் மனதில் ஏனோ விசித்திரமான உணர்வுகள் தோன்ற அவள் அருகில் சென்றான்.
அவந்திகா சொல்ல வேண்டிய விஷயங்களை ஒப்பித்தவள் சென்று ஜன்னல் அருகில் நின்று வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்குமே அந்த ரம்மியமான இடம், சூழல் எல்லாம் சேர்ந்து ஒரு மயக்கத்தைக் கொண்டு வந்திருந்தது.
வெளியே சாரல் இப்போது மழையாக வலுபெறத் தொடங்கியிருந்தது. மழையை ரசித்துக் கொண்டிருந்தவளைப் பின்னிருந்து அவன் அணைக்கவும் “டோன்ட் டச் மீ” என்று கூறி விலக முயன்றாள் அவந்திகா.
அவனது பிடி இறுக்கமாக இருக்கவே “என்ன பண்ணுற ராகவ் நீ? ஃபர்ஸ்ட் என்னை விடு! நான் மழையப் பாத்துட்டுருக்கேன்” என்று மெதுவான குரலில் சொல்லும்போதே மின்னல் வெட்டக் கண்ணை இறுக மூடிக்கொண்டாள் அவள்.
பின்னே திரும்பிப் பார்த்தவள் அவன் மின்னலைக் கண் இமைக்காமல் பார்க்க அவன் கண்களை மூடியபடியே “ஏய்! மின்னலைப் பாக்கக் கூடாது! அப்புறம் கண்ணு தெரியாமப் போயிடும்டா” என்று சொல்ல அவள் கையை மெதுவாக விலக்கினான் ராகவ். விட்டு விட்டு வெட்டிய மின்னலிலும் உள்ளே இன்னும் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தியின் மஞ்சள் வெளிச்சத்திலும் ஜொலித்த அவந்திகாவிடம் மெதுவாக அவனை இழந்துகொண்டிருந்தான் அவன்!
“சரி பாக்கல! அதுக்குப் பதிலா உன்னைப் பாக்கட்டுமா?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்க அவந்திகா “ஏன் இன்னைக்கு நீ என்னை ஃபர்ஸ்ட் டைம் பாக்குறியா? நேரம் காலம் தெரியாம வெளையாடிட்டு இருக்கான் இவன்” என்று சொல்லி அவனைக் கடக்க முற்பட அவன் அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
“அவ்ளோ ஈஸியா இன்னைக்கு என்னை விட்டு நீ விலக முடியாது ஜான்சி ராணி” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவனை விழி அகலாமல் பார்த்தாள் அவந்திகா.
அவனது குரலில் இருந்த காதலை உணர்ந்தவள் “நான் விலகிப் போறேனு சொல்லவே இல்லையே! எனக்கு நீ பேசுனதுல ரொம்பக் கோவம்! அவ்ளோதான்! நீ என்னென்ன வார்த்தை பேசுன….” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கவும் அவள் உதட்டில் கை வைத்து “சண்டை போடப் போறியா?” என்று அதே குரலில் கேட்கவும் அவள் என்ன சொல்லவென்று தெரியாமல் விழித்தாள்.
ராகவ் “நாம நெறைய சண்டை போட்டுட்டோம்! அண்ட் இனியும் நெறையா சண்டை மிச்சம் இருக்கலாம்! பட் அதுக்கு முன்னாடி எனக்கு நீ வேணும் அவந்திகா” என்று சொல்லி அவளது முகத்தைக் கையில் ஏந்தினான்.
“எல்லாரோட லைஃப்லயும் வர்ற அந்த மொமன்ட் இன்னைக்கு நம்ம லைஃப்லயும் வந்துட்டதா நான் நெனைக்கிறேன்! என்னோட அவந்திகா எனக்கு என்னோட வைஃபா இன்னைக்கு வேணும்” என்று அவன் சொல்லி முடித்து அவளைப் பார்க்க அவளோ முகம் சிவந்து அவன் விழியசைவுக்குக் காத்திருந்தாள்.
“உனக்கு எதும் பிடிக்காம இல்லையே” என்று தலை சரித்து அவன் கேட்கவும் இல்லையென்று தலையாட்டியபடியே அவனுள் புதைந்தாள் ராகவின் அவந்திகா! அவளைத் தூக்கியவன் அவள் இதழ்களில் முத்தமிட்டான் மென்மையாக! பின்னர் அழுத்தமாக! வெளியே மழையுடன் கூடிய அந்த அழகிய இரவில் அவர்கள் வாழ்வின் அழகான அத்தியாயம் ஆரம்பித்தது…
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


