காரிலிருந்து இறங்கிய மணமக்கள் ஆரத்தி எடுத்தப்பின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமக்கள் அவர்கள் அறைக்குச் சென்றனர்.
வீட்டினர் அனைவரும் நாளை மறுநாள் பெங்களூரு திரும்பும் எண்ணத்துடன் பேசிக்கொண்டவர்கள் அன்றைய தினம் வேலைப்பளு காரணமாகச் சீக்கிரம் உறங்கச் சென்றனர்.
ராகவ் மட்டும் போன் கால் அட்டெண்ட் செய்வதற்காக வெளியே சென்றவன் பேசி முடித்துத் திரும்பும்போது கையில் சூட்கேசுடன் நின்ற அவந்திகாவைக் கண்டு அதிர்ந்தான்.
“நான் பெங்களூர் கெளம்புறேன் ராகவ். ஐ ஹோப் யு கேன் அண்டர்ஸ்டாண்ட் மை சிச்சுவேஷன். எனக்கு இங்க இருக்க ஒரு மாதிரி அன்ஈஸியா இருக்கு! அதுமட்டுமில்லாம எனக்கு அங்க உஷாவோட ரிசப்ஷன் வேலை இருக்கு” என்று அவள் காரணத்தை அடுக்கத் தொடங்கினாள்.
ராகவ் பல்லைக் கடித்தவன் “வாட்? ஆர் யூ க்ரேஸி? நீ இப்பிடித் திடீர்னு கெளம்பிப் போனா ரெண்டு ஃபேமிலிக்காரங்களுக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று கடுப்பாகக் கேட்க
அவளோ அக்கறையின்றி “தட் இஸ் நன் ஆஃப் மை பிசினஸ் ராகவ்” என்று அலட்சியம் விரவிய குரலில் சொல்லிவிட்டு அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இப்படிப் பொறுப்பில்லாமல் பேசுபவளைக் கண்டு எரிச்சலடைந்த ராகவ் “நமக்கு இன்னைக்கு முறைப்படிக் கல்யாணம் ஆயிடுச்சு அவந்திகா. நீ இப்பிடி இர்ரெஸ்பான்ஸிபிளா பிஹேவ் பண்ணுறது கொஞ்சம் கூடச் சரியில்ல” என்று இறுகிய குரலில் மொழிய
அவளோ “இன்னைக்கு நடந்தது என்னைப் பொறுத்தவரைக்கும் கல்யாணமே கெடையாது. என்னோட சம்மதம் இல்லாம நடந்த இந்த விஷயத்துக்கு இதுக்கு மேல மரியாதை குடுக்க என்னால முடியாது” என்று தீர்மானமாகக் கூறிவிட்டாள்.
இவ்வாறு அவள் பேசப் பேச அவனால் ஓரளவுக்கு மேல் பொறுமை காக்க முடியாமல் “ஏய்! இனாஃப்! இதுக்கு மேல உன்கிட்ட என்னால கெஞ்ச முடியாது. உனக்கு என்ன தோணுதோ அத பண்ணிக்கோ. வீட்ட விட்டுப் போகனுமா? இப்போவே கெளம்பு! ஐ டோண்ட் கேர். பட் போறதுக்கு முன்னாடி இந்தக் கழுத்துல இருக்கிறத என் கையில குடுத்துட்டுப் போ” என்று சொல்லிவிட்டுத் தாலியைச் சுட்டிக்காட்டிவிட்டுத் திரும்பிக் கொண்டான்.
அவன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து அவனைப் பார்த்தவள் அவள் புக் செய்திருந்த கால்டாக்சி வரவும் “பை” என்று சொல்லிவிட்டு டாக்ஸியில் ஏறிச் சென்றுவிட்டாள்.
அவள் சென்றதைப் பார்த்த ராகவ் “ஷிட்” என்று காலைத் தரையில் எத்திவிட்டுக் கோபத்துடன் உள்ளே சென்றான். ஆனால் சிறிது நேரத்தில் அவனுடைய பாதுகாவலாட்களுக்குப் போன் செய்தவன் சிராஜைக் கண்காணிக்குமாறு கூறிவிட்டுப் போனைப் படுக்கையில் எறிந்தான் கோபத்துடன்.
அன்று இரவு விமானத்தில் பெங்களூரு சென்றடைந்தாள் அவந்திகா. அவள் சென்ற இடம் அவர்களின் அலுவலகம். “சன் டியூ வெட்டிங் அண்ட் ஈவண்ட் ப்ளானர்ஸ்” என்ற போர்டு அவளை என்றும்போல அன்றும் வரவேற்றது. ஆம்!! அவள், ரித்திமா மற்றும் பிரதியுஷா மூவரும் ஆரம்பித்த அவர்களின் கனவு அலுவலகம். மூவரின் கடின உழைப்பு அவர்களுக்கு என்று ஒரு பெயரை அந்த நகரில் வாங்கித் தந்திருந்தது.
அங்கேயே தங்கியவள் அடுத்த இருநாட்களுக்குப் போனை ஆன் செய்யவில்லை. எப்படியும் ராகவ் அனைவரிடமும் விஷயத்தைக் கூறியிருப்பான் என்ற நிச்சயம்.
அன்றுடன் மூன்றாவது நாள்…..
அவள் உஷா வருணின் ரிசப்ஷனுக்கான வேலைகளை அவர்களின் அலுவலகத்திலிருந்தே முழுமூச்சாகச் செய்து நடந்தவற்றை மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். மூன்று நாட்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்ததால் தூக்கம் கண்ணைச் செருகப் படுக்கச் சென்றவளைக் கதவு தட்டும் சத்தம் எழுப்பியது.
இந்த நேரத்தில் யார் என்று யோசித்துக்கொண்டே கதவைத் திறந்தவள் சத்தியமாக அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை.
தன் கூரிய பார்வையால் அங்கு நின்று அவளை அளவிட்டுக்கொண்டிருந்தான் ராகவ்…
ராகவைக் கொஞ்சம் கூட அவந்திகா அங்கே எதிர்பார்க்கவில்லை. அதைப் புரிந்துகொண்டவன் “நீ இவ்ளோ ஷாக் ஆக வேண்டிய அவசியம் இல்ல. எங்க ஃபேமிலி பெங்களூருலதான் இருக்காங்கனு உனக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். தென் வொய் ஆர் யூ ஸ்டாண்டிங் லைக் திஸ்? மூவ் எ லிட்டில்” என்று அவளைத் தன் கையால் ஒருபுறமாக ஒதுக்கிவிட்டு உள்ளே சென்றான்.
அவனை வழிமறித்த அவந்திகா “நீ இங்க இப்போ எதுக்கு வந்த ராகவ்?” என்று இறுக்கமான குரலில் கேட்டாள். அவன் கழுத்தில் கட்டியதைக் கழற்றிக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு சொன்ன கோபம் அவளுக்கு இன்னும் தீரவில்லை.
“ஆக்சுவலி இது நான் கேக்க வேண்டிய கொஸ்டீன். நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க? நான் நீ வீட்டுக்குப் போயிருப்பனு அங்க போய் உன்னத் தேடுனா உன்னோட நெய்பர்ஸ் நீ அங்க வந்து ஒன் மன்த்கு மேல ஆகுதுனு சொன்னாங்க. வேற எங்க போயிருப்பனு கேட்டதுக்கு இந்த அட்ரஸைக் குடுத்தாங்க. பை தி வே இது என்ன ப்ளேஸ்?” என்று சுற்றி முற்றிப் பார்த்தவாறு அவன் கேட்க அவந்திகா கடுப்பானாள்.
இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் “பாத்தா உனக்கு எப்பிடி தெரியுது? இது ஆபிஸ்” என்று சொல்ல அவனும் சளைக்காமல் “எந்த ஆபிஸ்?” என்று கேட்டவாறே அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்துகொண்டான்.
“எங்களோட ஆபிஸ்” என்று அவனை முறைத்துக்கொண்டே சொல்ல ராகவிற்குச் சத்தியமாகப் புரியவில்லை.
“உங்க ஆபிஸ்ல ஸ்டாஃப்ஸ் ஸ்டே பண்ணக் கூட அலோவ் பண்ணுவாங்களா?” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
அவந்திகா பொறுமையை வரவழைத்துக்கொண்டு “எங்க ஆபிஸ் மீன்ஸ் இது நான், ரித்தி, உஷா நடத்துற கன்சர்னோட ஆபிஸ்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு பதிலளித்தாள்.
“நீங்க மூணு பேரும் என்ன கன்சர்ன் நடத்துறீங்க?” என்றான் அவன் ஆச்சரியமாக.
“வீ ஆர் வெட்டிங் அண்ட் ஈவெண்ட் ப்ளானர்ஸ்., போதுமா? ஏன் வருண் உன்கிட்ட சொல்லவே இல்லையா?” என்று அவந்திகா பதிலுக்குக் கேட்டாள்.
அவள் கூறியதும் யோசனையுடன் புன்னகைத்தவன் “இஸிட்? ரியலி க்ரேட்., வருண் பய்யா சொல்லிருக்கலாம். பட் ஐ டோண்ட் ரிமெம்பர்” என்று தோளைக் குலுக்கவும் அவந்திகாவுக்குப் போயும் போயும் இவனுக்கு ஏன் பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஆபிஸ் அட்ரஸைக் குடுத்தாங்க என்று கடுப்பு.
“ஓகே! டைம் அப்., கெளம்பு” என்றபடி எழுந்த ராகவைப் புரியாமல் பார்த்தாள் அவந்திகா.
“எங்க கெளம்பணும்?” என்றவளை ஏற இறங்கப் பார்த்தவன் “அவந்திகா மை டியர் வைஃப் நம்ம வீட்டுக்குக் கெளம்புனு சொன்னேன்” என்று கிண்டலாகக் கூறினான்.
“என்னால எங்கயும் வர முடியாது. நீ கெளம்பலாம்” என்று கதவைக் காண்பித்தாள் அவந்திகா.
இவர்கள் இவ்வாறு விவாதம் செய்துகொண்டிருக்கும்போது ஹைவே பேட்ரோலில் ரோந்து வந்த பெண் காவலர் அந்தக் கட்டிடத்தில் மூன்று நாட்களாக அவள் இரவு தங்குவதை அறிந்தவர், இன்று மட்டும் ஏன் இந்த நேரத்தில் விளக்கு எரிகிறது என்று உள்ளே வந்தார்.
உள்ளே வந்தவர் அந்தப் பெண்ணுடன் விவாதித்துக்கொண்டிருந்த ஆணைக் கண்டதும் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்து “ஹலோ மிஸ்டர் இந்த நேரத்துல ஒரு பொண்ணுகிட்ட உங்களுக்கு என்ன பேச்சு?” என்று கேட்க அவன் திரும்பினான்.
திரும்பியவனை எங்கேயோ பார்த்தது போல் இருக்க அவர் அவன் யாரென்று யோசிக்கும்போதே அவந்திகா “நல்லாக் கேளுங்க மேடம்., அன்டைம்ல ஒரு கேர்ள்கிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து நாக்கைத் துருத்திக் காட்டி வெறுப்பேற்றினாள்.
ராகவுக்கோ இவருக்கு வேறு விளக்கம் சொல்ல வேண்டுமா என்று மலைப்பாக இருந்தது. ஆனால் அதற்கு அவசியம் ஏதுமின்றி அந்தப் பெண் காவலர் அவனை அடையாளம் கண்டுவிட்டார்.
(டிவி நியூஸ்தான் காரணம்)
“ஓ மிஸ்டர் ராகவ் கபூர்!., ஐ காண்ட் ப்ளீவ் இட்., நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்றவரைப் பார்த்து நிம்மதியாகப் புன்னகைத்தவன் “வெல்., மேம் என்ன ஐடெண்டிஃபை பண்ண முடிஞ்ச உங்களால என்னோட வைஃபைக் கண்டுபிடிக்க முடியலயா?” என்று சாதாரணமாகக் கூறினான்.
இப்போது அவந்திகாவிற்கு என்ன செய்யவேண்டுமென்று தோணவே இல்லை. மனசுக்குள்ளேயே “கெடைச்ச பால்ல எல்லாம் சிக்ஸர் அடிக்குறான்” என்று சொல்லிக்கொண்டாள்.
“ஓ இவங்க உங்க மிசஸ்ஸா?” என்று அவர் கேட்கவும் அவந்திகா “இல்ல மேடம்” என்று அவசரமாக மறுக்க
அவருக்கு அவள் முகமும் நினைவுக்கு வந்துவிட “உங்களையும் நான் டிவில பாத்திருக்கேன்” என்று சொல்லவும் அவளால் ஒன்றும் சொல்ல இயலவில்லை.
“மேடம் இப்போ இவர இங்க இருந்து போகச் சொல்லுங்க. இல்ல என்னை அன்வாண்டட்டா தொல்லை பண்றார்னு நான் கம்ப்ளைண்ட் குடுக்க வேண்டியிருக்கும்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவள் சொல்ல அந்தப் போலீஸ்காரப் பெண்மணி “பட் மேடம் ஹீ இஸ் யுவர் ஹஸ்பெண்ட்” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றார்.
ஆனால் ஹஸ்பெண்ட் என்ற வார்த்தையில் கடுப்பான அவந்திகா “என்னோட கன்சென்ட் இல்லாம என்னை மேரேஜ் பண்ணவனெல்லாம் என்னால ஹஸ்பெண்டா நெனைக்க முடியாது மேடம்” என்று கடுப்பாகக் கூறினாள் அவந்திகா.
அவளது இந்தப் பதிலில் அதிர்ந்த அவர் “இங்க பாருங்க மிஸஸ் அவந்திகா கபூர், இப்போ நீங்க மிஸ்டர் ராகவ் கபூரோட லீகல் வைஃப். அப்பிடி நீங்க அவர் கூட வாழ விரும்பலைனா யூ கேன் அப்ளை ஃபார் டிவோர்ஸ். பட் இப்படி அவர் கூட வாழ விரும்பலைனு அடம் பிடிச்சு எங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. ப்ளீஸ் லீவ் இட் நவ்” என்று இன்ஸ்பெக்டர் கூறவும் அவந்திகா கோபத்துடன் ராகவை முறைத்தாள். அவனோ “நாளைக்கு உன்னை எங்க வீட்ல எதிர்பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் காரில் ஏறிச் சென்றான்.
அவன் சென்றதும் அந்தப் பெண் காவலர் “இங்க பாருங்க மேடம். ஹீ இஸ் அ பிசினஸ் மேன். அவரோட டே டு டே ஒர்க் பாக்கவே அவருக்கு டைம் பத்தாதுங்கிறபோது நீங்க வேற ஏன் ட்ரபிள் பண்ணுறீங்க? ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் த சிச்சுவேஷன்” என்று சொல்லிவிட்டுச் செல்லப் போனவர் வாசலில் சென்றவுடன் நின்றார்.
திரும்பி அவந்திகாவைப் பார்த்தவர் “சப்போஸ் நீங்க டிவோர்ஸ் அப்ளை பண்ணனும்னா கூட நீங்க அதுக்கு வேலிட் ரீசன் குடுக்கணும். அதுக்கு நீங்க கொஞ்ச நாளாச்சும் அவரோட இருந்தே ஆகணும். ஐ ஹோப் யூ கேன் அண்டர்ஸ்டாண்ட்” என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுச் சென்றார்.
அவர் கூறிய வார்த்தைகளே காதில் ஒலிக்க மறுநாள் ராகவின் வீட்டுக்குச் செல்லும் முடிவை எடுத்தாள் அவந்திகா.
சில நபர்களை விட்டுத் தூரமாகச் செல்ல நாம் முயற்சித்தாலும் நம்மால் முடிவதில்லை… அதற்கான காரணத்தை அறியவும் நாம் முயற்சிப்பதில்லை.
வீட்டுக்கு வந்த ராகவிடம் அவனுக்காகக் காத்திருந்த ராதிகா “அவந்திகா ரிசப்ஷன் ஒர்க் எல்லாமே முடிச்சிட்டாளா ராகவ்? எப்போ நம்ம வீட்டுக்கு வர்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.
“ஆமாம்மா. அவ ரெண்டு ரிசப்ஷன் ஒர்க்கையும் தனியா பண்ணதுனாலதான் வீட்டுக்கு வர முடியலனு சொன்னாம்மா. டுமாரோ வந்துடுவா” என்று சொல்லவும் ராதிகாவின் முகம் தெளிந்தது. அவரிடம் சொல்லிவிட்டுத் தன் அறைக்கு வந்தவன் நாளை வருணும் உஷாவும் வரும்போது அவந்திகா தன்னுடன் இல்லையென்றால் அனைவரையும் எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையுடன் படுத்தான். அவன் அவந்திகா பெங்களூரு சென்றதற்கான உண்மையான காரணத்தை இருகுடும்பத்தாரிடமும் இவ்வளவு நாள் சொல்லாமல் மறைத்திருந்தான். நாளை அனைவரும் வரும் வேளையில் அவந்திகா இல்லாமல் போய்விட்டால் அவர்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமலே உறங்கியும் விட்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


