விஹான் டெலிகாம்…
வழக்கம் போல அன்றும் தனக்குக் காத்திருப்பு தான் என்று எண்ணியபடி உள்ளே நுழைந்த அவந்திகாவை அதிசயத்திலும் அதிசயமாய் வரவேற்றான் ராகவ். அவனது இந்தத் திடீர் மாற்றம் அவளுக்கு அதிர்ச்சி தான் என்றாலும் அவனே நேரில் வந்து வரவேற்றது அவளுக்கு உள்ளுக்குள் உற்சாகத்தைப் பொங்க வைத்தது.
“ஐ காண்ட் பிலீவ் திஸ் ராகவ்… நீயா என்னை ரிசீவ் பண்ணுன? எப்போவும் திருப்பதியில பெருமாள் தரிசனத்துக்கு மணி கணக்கா காத்திருக்கிற மாதிரி தான் இங்கேயும் நடக்கும்… ஆனா அங்கேயாச்சும் பெருமாள் தரிசனம் கிடைக்கும்… உங்க ஆபிஸ்ல உன்னோட தரிசனம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்பா” என்று கேலி செய்தபடி அவனுடன் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குச் சென்றாள்.
ராகவிடம் ஒப்பந்தத்தை நீட்டியவள் அதை அவன் படித்துப் பார்த்துவிட்டு “ஓகே! நான் சொன்ன கிளாசஸ் எல்லாத்தையும் ரித்திமா கரெக்டா சேஞ்ச் பண்ணிட்டா… இனிமே நோ பிராப்ளம்” என்று திருப்தியுடன் உரைத்துவிட்டுக் கையெழுத்திட்டான்.
அவந்திகா புருவமுடிச்சுடன் “என்ன கிளாஸ் சேஞ்ச் பண்ணிருக்கா அவ? என் கிட்ட அதைப் பத்தி எதுவுமே சொல்லலையே” என்று கேட்க
ராகவ் கையெழுத்திட்டு முடித்தவன் பேனாவை மூடிவிட்டு “நத்திங் சீரியஸ் மிஸ் அவந்திகா ரவி… இனிமே விஹானோட எல்லா ஈவெண்ட்ஸும் உங்க மேற்பார்வையில தான் நடக்கும்… அதுக்குத் தான் கிளாசஸ் சேஞ்ச் பண்ணச் சொன்னேன்” என்று சாதாரணமாக உரைத்தவன்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சோ இதுக்காக இனிமே நீ அடிக்கடி என் கூடச் சேர்ந்து இருக்க வேண்டியதா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவளை நோக்க, அவந்திகா ரித்திமா ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்ததில் ராகவ் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை.
அவளது சுழித்தப் புருவங்கள் வளைந்திருந்த அழகில் இலயித்தவனது கரம் அவளது கன்னத்தில் தட்டியதை அவள் தாமதமாகத் தான் உணர்ந்தாள். அவன் கரத்தின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டவள் என்னவோ என பதறி நாற்காலியைப் பின்னோக்கி நகர்த்திக் கொண்டாள்.
“என்னாச்சு உனக்கு? ஏன் இவ்ளோ டீப்பா யோசிக்கிற? என்னோட கம்பெனி ஈவெண்ட்ஸ் எல்லாமே பெர்பெக்டா நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.. அதனால உங்க கன்சர்ன் கூட காண்ட்ராக்ட் சைன் பண்ணிருக்கேன்… இனிமே நானும் உன்னோட கிளையண்ட் தான்… சோ நான் கால் பண்ணுனா நீ கட் பண்ணிட்டு உன் இஷ்டத்துக்குச் சுத்த முடியாது ஜான்சி ராணி” என்று அவளுக்கு செக் வைத்த திருப்தியுடன் அமர்த்தலாக மொழிந்தான் ராகவ்.
அது என்னவோ உண்மை தான். அவந்திகா என்றைக்குமே கிளையண்டுகளின் அழைப்பைத் தவிர்த்ததே இல்லை.
“நாட் பேட்! உனக்கும் கொஞ்சம் மூளை இருக்கு ராகவ்.., பை த வே, எனக்கு ஒர்க்கிங் ஹவர்ல சொந்தக்கதை, சோகக்கதை பேசுனா பிடிக்காது… வேலையை ஆரம்பிப்போமா?” என்று கேட்டவளின் தொழில்பக்தியைப் பார்வையால் மெச்சியபடி அவளிடம் பார்ட்டி பற்றிய விபரத்தைப் பகிர்ந்து கொண்டான்.
அவளுக்கு யாரெல்லாம் கலந்து கொள்வார்கள், பார்ட்டிக்கு கார்ட் என்ன டிசைனில் அச்சிடப்படவேண்டும், எந்த மாதிரி பார்ட்டி ஹால் தேவைப்படும், பார்ட்டி ஹாலின் அலங்காரம் இவற்றிலெல்லாம் உதவுவதற்கு அலுவலகத்திலுள்ள நபர்களின் ஒத்துழைப்பு வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள் அவந்திகா.
“எனக்குச் சில டீடெயில்ஸ் வேணும்… அது சம்பந்தமா நான் யாரை கான்டாக்ட் பண்ணுறது?” என்று அவந்திகா தனது சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே யாரோ வரும் அரவம் கேட்டது.
அவந்திகா திரும்பப் பார்க்கவும் அங்கே ஒல்லியான உடல்வாகுடன், மூக்குக்கண்ணாடி அணிந்தபடி விரித்தக் கூந்தலுடன் வந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளைக் கண்டதும் ராகவின் முகம் பூவாய் மலர எழுந்தவன் அந்தப் பெண்ணைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ளவும் அவந்திகாவுக்குள் இவள் யாரென்ற கேள்வி எழுந்தது.
“அவந்திகா மீட் மிஸ் லாரா… என்னோட குளோஸ் ஃப்ரெண்ட் அண்ட் இந்தக் கம்பெனியோட ஜி.எம்” என்று அவளை அறிமுகப்படுத்தி வைத்தான் ராகவ். அவந்திகாவிடம் சினேகப்புன்னகையுடன் கைநீட்டியவளின் கரத்தைப் பற்றிக் குலுக்கினாள் அவள்.
“நைஸ் டு மீட் யூ” என்று கூறியவள் “ஃபைனலி இவனையும் கன்ட்ரோல் பண்ண ஒரு ஆள் வந்தாச்சு” என்று அவள் ராகவைக் கேலி செய்ய
“க்கும்… ஊருக்குள்ள இப்பிடி வேற பேச்சு ஓடுதா? அவன் தான் என்னை கண்ட்ரோல் பண்ணிட்டுச் சுத்துறான்… நான் ஒரு பிள்ளைப்பூச்சினு உனக்கு எப்பிடி புரியவைப்பேன்?” என்று மனதிற்குள் புலம்பினாலும் வெளிப்பார்வைக்குச் சிரித்துவைத்தாள் அவந்திகா.
லாரா அவளுக்கு உதவி செய்ய இரண்டு ஊழியர்களை அவளுடன் அனுப்பி வைத்தாள். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டவள் தனக்கு வேண்டிய விவரங்களைக் கேட்டு வாங்கிவிட்டாள்.
அவர்கள் வார்த்தைக்கு நூறு மேடம்களைப் போடவும் சலிப்பானவள் “பிளீஸ் கால் மீ அவந்திகா… மேடம் கீடம்னு சொன்னா ஏதோ வயசான ஃபீல் வருதுயா” என்று கேட்டுக்கொண்ட பின்னர் அவர்கள் இயல்பாகப் பேச ஆரம்பித்தனர்.
அவர்களில் மாதவன் என்பவனைச் சுருக்கி ‘மேடி’ ஆக்கிய அவந்திகா “லுக் மேடி! எனக்கு உங்க டீலர்ஸோட லிஸ்ட் வேணும்… அந்த லிஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் பார்ட்டியோட இன்விடேசனை அனுப்பப் போறோம்… அப்புறம் பிரஸ் பீப்பிளுக்குத் தனியா ஐடி குடுத்துடுவோம்… ஓகேயா? நீ இதைப் பத்தி ராகவ் கிட்ட கேட்டு கன்ஃபர்ம் பண்ணு” என்று சாதாரணமாகச் சொல்லிவிட அவனோ நடுங்க ஆரம்பித்தான்.
“எனக்கு ராகவ் சார் கிட்டப் பேசவே பயம் அவந்திகா…. அவரைப் பார்த்தாலே கை கால் உதற ஆரம்பிச்சிடும்” என்று சொன்னவனின் வார்த்தைகள் தந்தியடிக்க ஆரம்பிக்கவும் அவள் திரும்பி இன்னொரு உதவியாளினியான வர்ஷாவைப் பார்த்தாள்.
அவள் புன்னகைத்துவிட்டு “நான் எம்டியோட பி.ஏ கிட்ட கேட்டு லிஸ்டோட வர்றேன் அவந்திகா” என்று சொல்லிவிட்டு வெளியேற அவந்திகா அவளை மெச்சுதல் பார்வை பார்த்துவிட்டு மாதவனின் புறம் திரும்பினாள்.
“பார்த்தியா? அவ பொண்ணு, அவளே தைரியமா போறா.. உனக்கென்னவாம்?”
“நீ ஏன் சொல்ல மாட்டேம்மா? நீ சாரோட ஃபியான்ஸி… வர்ஷா எங்க டிப்பார்ட்மெண்டோட ஹெட்.. சோ உங்களுக்குப் பயமில்லை… நான் ஜஸ்ட் வர்ஷாவோட அசிஸ்டெண்ட் தானே.. நான் போய் சார் கிட்ட எப்பிடி பேசுறது?” என்று தயக்கத்துடன் முடித்தான் அவன்.
அவந்திகா “அப்பிடிலாம் எதுவும் இல்லை… அவங்களை மாதிரி நீயும் ஒரு ஸ்டாஃப்… சோ நீ பேசுறதுல தப்பு எதுவும் இல்லை… அப்புறம் நான் இங்கே ராகவோட ஃபியான்ஸியா வரலை… நான் ஈவெண்ட் மேனேஜரா தான் வந்திருக்கேன்… சரியா?” என்று சொல்லிவிட்டு அவனிடம் மற்ற விவரங்களைக் கேட்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் வர்ஷா விவரங்களுடன் திரும்பிவர அன்றே பார்ட்டியில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மறுநாள் பார்ட்டி அழைப்பிதழை அச்சிடக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டு மூவரும் கடிகாரத்தைப் பார்க்க, நேரம் மாலை மூன்று மணியைக் கடந்திருந்தது.
“ஐயோ! என்னால உங்க லஞ்ச் டைம் ஸ்பாயில் ஆயிடுச்சு” என்று பதறியவளைப் பார்த்துச் சினேகமாய் புன்னகைத்தனர் வர்ஷாவும், மாதவனும். தங்களோடு சேர்ந்து அவளும் பட்டினி தானே என்று எண்ணியவர்கள் இந்நேரத்திலும் தங்களைப் பற்றி யோசிப்பவளை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
மூவருமாய்ச் சேர்ந்து கஃபடேரியாவுக்குச் சென்று அந்நேரத்தில் தயாரான காபியையும் சாண்ட்விச்சையும் காலி செய்ய ஆரம்பித்தனர்.
அவந்திகாவின் வேலை ஜரூராக நடக்க, சன் டியூவில் ரித்திமா அந்தப் பார்ட்டிக்கான ஹாலை ஹோட்டல் மெரிடியனில் தேர்வுசெய்துவிட்டு ஹால் மேனேஜரிடம் மற்ற விவரங்களை விசாரித்துக் கொண்டிருந்தாள். தொலைபேசி உரையாடலில் செவியைப் பதித்திருந்தவள் கிஷோர் அலுவலக அறைக்குள் நுழைந்ததைக் கவனிக்கவில்லை அவள்.
“நோ சார்! ஒன் ஈவினிங்க்கு தான் வேணும்… ஃபுட் அரேஞ்ச்மெண்ட் உங்க ஹோட்டல்லயே பண்ணிட்டா பெட்டர்னு தோணுச்சு… சிம்பிளா இருந்தா போதும்… வர்றவங்க எல்லாருமே டீலர்ஸ் அண்ட் எம்ப்ளாயிஸ்… அவங்க முகம் சுளிச்சுடக் கூடாது.. அது மட்டும் தான் முக்கியம்… ஓகே… நான் இன்னைக்கு ஈவினிங் வந்து பார்க்கிறேன்… தேங்க்யூ” என்று பேசிவிட்டுத் திரும்பியவளின் கண்ணில் பட்டான் அவள் எதிரே நாற்காலியில் அமர்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த கிஷோர்.
அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்று ரித்திமாவால் சொல்ல இயலாது. தினந்தோறும் அவனது தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளது. ஆனால் அவள் தான் இன்னும் அவனது கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.
இருந்தாலும் அவன் முயற்சியில் தளராதவனாய் தன் காதலைப் புரியவைக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
“பார்ட்டிக்கு நீயும் வருவே தானே?” என்று கேட்டனிடம் ஆமென்று தலையசைத்தவள்
“இதைக் கேக்க தான் இவ்ளோ தூரம் வந்தியா நீ?” என்று கேட்டுவிட்டு லேப்டாப்பின் திரையில் கவனத்தைச் செலுத்தினாள்.
“இல்லையே! சரி அதை விடு… பார்ட்டில டிரிங்க்ஸ் இருக்குமா?”
“இதை ஏன்டா என் கிட்ட கேக்குற?”
“நீ தானே பிளான் பண்ணுனது… அப்போ உன் கிட்ட தானே கேக்க முடியும்?”
“ம்ம்… ஹாட் அண்ட் கூல் டிரிங்ஸ்”
“ஹாட் டிரிங்ஸா?” என்று வாயைப் பிளந்தவனிடம்
“நீ நினைக்கிற ஹாட் டிரிங்ஸ் இல்லை… இது காபி ஆர் டீ தான்” என்று சொல்லிவிட்டு நமட்டுச்சிரிப்பை அடக்கிக் கொண்டாள் ரித்திமா.
“சே! காபி டீ மட்டும் தானா?” என்று அலுத்துக் கொண்டவனை கூரியவிழிகளால் நோக்கினான் ரித்திமா.
“நான் ஒன்னு சொல்லவா? நீ இப்பிடி என் பின்னாடியே சுத்துறதுக்குப் பேர் என்ன தெரியுமா? ஸ்டாக்கிங்(STALKING)… ஐ.பி.சி படி இது பெரிய தப்பு” என்று சொன்னவளிடம் கண்ணில் பொய்ச்சோகம் காட்டினான் கிஷோர்.
“ஐயோ! அப்போ நீ என் மேலே கம்ப்ளைண்ட் பண்ணப்போறியா ரித்தி? காதலிச்சக் குத்தத்துக்காக நீ ஜெயிலுக்குப் போகப்போறடா கிஷோர்” என்று புலம்பியவனைக் கண்டதும் அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
அவள் சிரிப்பதைக் கண்டதும் “சிரிக்காதே மிஸ் இந்தியா… நிஜமா சொல்லு உனக்கு என் மேல லவ் வரலையா?” என்று குழந்தை போல கேட்டவனைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று ரித்திமாவுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.
அவள் அந்தக் கோணத்தில் என்றுமே அவனை நினைத்துப் பார்த்ததில்லை. தனது தோழியின் குடும்பத்தினன் என்றளவில் மட்டுமே அவளுக்குக் கிஷோர் பழக்கமாகியிருந்தான். அவன் திடுதிடுப்பென்று காதல் என்று சொல்லிக்கொண்டு வரவும் அவளுக்கு எப்படி பதிலளிப்பது என்று புரியவில்லை. இத்தனை நாட்கள் தோழிகள், குடும்பம் மற்றும் அலுவலகம் என்று மட்டும் தெளிந்த நீரோடையாய் சென்று கொண்டிருந்த அவளது வாழ்வில் அவன் வந்ததும் சின்ன சின்ன வட்ட அலைகள் எழுவதைக் கண்டு அவள் திகைத்துப் போயிருந்தாள்.
எப்போதும் அவளிடம் கேட்கும் அதே கேள்வியை அன்றும் கேட்டுவைத்தான் கிஷோர். ஆனால் அவளால் தான் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க இயலவில்லை.
“எனக்கு என்ன பதில் சொல்லணும்னு தெரியலை கிஷோர்… ஆனா ஒன்னு நான் இப்போ வரைக்கும் யாரையும் லவ் பண்ணலை.. இன்க்ளூடிங் யூ” என்று சொல்லிவிட்டு லேப்டாப் திரையில் மீண்டும் கண் பதித்தாள். கிஷோரோ அவள் மீது கண் பதித்தவாறு அமர்ந்திருந்தான்.
அவனுக்கும் அவளது நிலை நன்றாகவே புரிந்தது. திடுமென்று காதலிக்கிறேன் பேர்வழியாக அவன் கிளம்பிவந்திருக்கக் கூடாது தான். அவளுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் அல்லவா? ஏதோ தன்னைக் காதலித்து மணம் முடிப்பதற்காகத் தான் அவள் இப்பூமியில் அவதாரம் எடுத்ததாகக் கருதி அவளைத் தொல்லை செய்ய அவன் விரும்பவில்லை தான்.
ஆனால் தனக்குப் பிடித்தவள் எங்கே வேறு யாருக்கும் சொந்தமாகிவிடுவாளோ என்ற பதற்றம் தான் அவனை இப்படியெல்லாம் அவசரப்பட வைத்தது. சீக்கிரம் அவள் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவன் செய்து வைத்த விளையாட்டுத்தனங்களை ரித்திமா ரசித்தாலும் காதல் என்பது இந்த விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டது. அது ஒன்றும் மந்திரம் இல்லையே, நினைத்தவுடன் காதலிப்பதற்கு என்பது அவளது வாதம்.
இந்த ஜோடிகள் இவ்வாறிருக்க விஹானில் அவந்திகா தான் கேட்டத் தகவல்கள் கிடைத்ததும் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள். ராகவ் சற்று பொறுக்குமாறு சொன்னவன் “ஜஸ்ட் ஹாஃப் அன் ஹவர் வெயிட் பண்ணு… ரெண்டு பேரும் சேர்ந்தே போயிடுவோம்” என்று கட்டளையுடன் கூடிய வேண்டுகோளை வைத்துவிட்டு வேலையில் ஆழ்ந்தான்.
அவந்திகா பொழுது போகாமல் மொபைலில் கேம் விளையாடியவள் இடையிடையே அவன் வேலையை முடித்துவிட்டானா என்று எட்டிப் பார்த்துக் கொண்டாள். அரைமணி நேரம் அவகாசம் கேட்டவன் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இழுத்தடித்துவிட்டுத் தான் கிளம்பினான்.
இருவரும் காரில் அமரவும் கார் அவந்திகாவின் வீட்டை நோக்கி வேகமெடுத்தது.
அவள் அமைதியாக வரவும் ராகவிற்கு அவளைச் சீண்டாமல் பொழுது போகவில்லை.
“என்னாச்சு ஜான்சி ராணி? ஏதோ யோசனையில வர்ற? எனிதிங் சீரியஸ்?” என்றவனின் புறம் திரும்பினாள் அவந்திகா.
“பெருசா ஒன்னும் இல்லை. ஒருத்தன் என்னை எதுக்காகவோ கிட்னாப் பண்ணுனான்… அப்புறம் அவனால தான் என் கல்யாணம் நின்னுப்போச்சுனு சொல்லி என்னோட என்கேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டான்… என்னைக் காதலிக்கலனு சொன்னான், ஆனா என் கூட இருக்கிறதுக்கு, டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுக்கு, என்னை கேர் பண்ணுறதுக்கு, இவ்ளோ ஏன் என் கூட காய்கறி வாங்குறதுக்குக் கூட வர்றான்… அவனை என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்” என்றாள் தீவிரமானக் குரலில்.
அதற்கு ராகவ் பதிலளிப்பான் என்று எண்ணுவது முட்டாள்தனம். இது அவளுக்கே தெரியும். எனவே அவந்திகா தானே பேச்சைத் தொடர்ந்தாள்.
“எனக்கும் அவன் கூட இருக்கிறதுக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு” என்று சொல்லவும் சட்டென்று காரின் பிரேக்கை அழுத்தியவன் வண்டியை ஓரம் கட்டினான்.
அவந்திகா சொன்னதை நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் “நீ இப்போ என்ன சொன்ன? கம் அகெய்ன்” என்று சொல்லவே
“எனக்கு அவன் கூட ஐ மீன் என் முன்னாடி இருக்கிறியே உன் கூட இருக்கிறதுக்கு ரொம்பவே பிடிச்சிருக்குனு சொன்னேன்” என்றதும் அவனால் அவன் காதுகளையே நம்பமுடியவில்லை. இத்தனை நாளும் அவந்திகா வீட்டினரின் கட்டாயத்துக்காகவும் தான் வற்புறுத்துவதாலும் தான் இத்திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள் என்று எண்ணி அவளைப் பிடிக்குமென்றாலும் அந்தப் பிடித்தத்தை வெளியே சொல்லாமல் மறைத்தபடி உலா வந்தவன் அவன்.
அப்படிப்பட்டவனிடம் அவளே உன்னை எனக்குப் பிடிக்கும் என்று கூறினால் அவனால் எப்படி ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?
“எனக்கு உன்னைப் பிடிக்கும்… முக்கியமா என்னை வேற உலகத்துக்குக் கொண்டு போற உன்னோட ஸ்பெஷல் மேக்னட்டிக் ஸ்மைல் ரொம்பவே பிடிக்கும்… நீ காட்டுற அக்கறை, உன்னோட பிடிவாதத்துல மறைஞ்சிருக்கிற அன்பு, இது எல்லாத்துக்கும் மேல என்னை மாதிரி ஒருத்தியை மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டியே அந்த மனதைரியம் எல்லாமே பிடிக்கும்… ஆனா காதல்னா கிலோ என்ன விலைனு கேக்கிறியே! அதான் பிடிக்கலை” என்று குறையுடன் முடித்தாள் அவள்.
பெருமூச்சை எடுத்துவிட்டவள் “இட்ஸ் ஓகே! இது வரைக்கும் நீ என்னை லவ் பண்ணலை.. இனியும் நீ என்னைக் காதலிப்பியானு எனக்குத் தெரியலை… நான் வேற லவ் மேரேஜ் தான் பண்ணிப்பேனு சபதம் போட்டுட்டேன்… ஆனா மேரேஜ் நிச்சயமாயிடுச்சு… அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடியாச்சும் உன் வாயால ‘ஐ லவ் யூ அவந்திகா’ங்கிற வார்த்தையைக் கேட்டுட்டா நாளைக்கு நானும் லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டேன்னு கெத்தா சொல்லிக்கலாமேனு ஒரு நப்பாசை…
உன்னை விட்டுத் தள்ளிப் போனாலாச்சும் நீ லவ்வை ஃபீல் பண்ணுவியானு சின்னப்பிள்ளைத்தனமா யோசிச்சேன்… பட் நோ யூஸ்… நீ என்னை ஒன் வீக்கா மிஸ் பண்ணவே இல்லையே! சரி விடு… நான் என் சபதத்துல தோத்துப் போயிட்டேன்… என்னை லவ் பண்ணாத ஒருத்தனை நான் மேரேஜ் பண்ணிக்கப்போறேன்” என்று வருத்தத்துடன் கூறியவளின் குரலில் இருந்த சோகம் ராகவின் நெஞ்சைத் தீண்டியது.
அதைப் போக்கியே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு அழுத்தமான எண்ணம் வேரூன்றியது அக்கணமே. ஆனால் அப்போது எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவந்திகாவின் கரங்களைப் பற்றிக் கொண்டவன்
“ரொம்ப யோசிக்காதே ஜான்சி ராணி… என் லைஃப்ல உனக்கான இடம் ரொம்ப ஸ்பெஷல்… அது ஏன் எதுக்குனு சொல்லுறதுக்கான மொமண்ட் இன்னும் வரலைனு நினைக்கிறேன்.. பட் எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. உனக்கு என்னைப் பிடிக்கிறதை விட அதிகமா” என்று சொல்லி கையை விரித்துக் காட்டினான் அவன்.
அவந்திகா அவனது வார்த்தைகளில் உச்சிக்குளிர்ந்து போனவள் அவன் கையை விரித்து இவ்வளவு பிடிக்கும் என்று காட்டியதில் அகமகிழ்ந்து போனாள். இந்தச் செய்கையில் வெளிப்பட்ட காதலுக்கு வார்த்தை தேவையில்லையே!
சொல்லில் வெளிப்படாக் காதலை அவள் கண்டாள் அக்கணத்தில் ராகவின் விழி தன்னில். அதில் மனம் பூரிக்க, முகம் மலர அழகானச் சிரிப்பு ஒன்று அவள் கன்னத்தில் குழியிட்டு இதழில் ஒட்டிக்கொண்டது. ராகவிற்குச் சற்றுமுன்னர் இருந்த சோகமனநிலை மாறி அவள் சிரித்ததில் பெருத்த நிம்மதி. இந்த இராட்சசியின் வாடிய முகம் தன்னை எவ்வளவு இம்சை செய்கிறது என்று செல்லமாகச் சலித்தபடி காரை எடுத்தான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


