வழக்கமாய் ஒரே தட்டில் சாப்பாட்டை முடித்துக்கொள்வார்கள் இருவரும். அவன் இன்றைய தினம் மதியவுணவை அரைகுறையாகச் சாப்பிடுவது போல இரவுணவையும் தவிர்ப்பானோ என்று யோசித்தே தனித்தட்டில் அவனுக்கான சப்பாத்திகளை எடுத்து வந்து ஊட்டியும் விட்டிருந்தாள் அவனது மனைவி.
அவன் ஒருவழியாக பாதி வேலையை முடித்தபோது வாடிக்கையாளரிடமிருந்து மொபைல் அழைப்பு.
“நீங்க புதன்கிழமை ப்ளூ பிரிண்டைக் குடுத்திங்கனா போதும். பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லுவாவ. அன்னைக்கு ப்ளூ பிரிண்டை வாங்குனா நல்லதுனு என் வீட்டம்மா சொன்னா.”
“சரி சார்! புதன்கிழமை நானே வந்து ப்ளூ பிரிண்டையும் பிளானையும் குடுத்துடுறேன்.”
அவரிடம் பேசிவிட்டு விரல்களை நெட்டி முறித்தான் பவிதரன்.
மறுநாள் ஞாயிறு. முழு நாளும் செலவிட்டால் கட்டாயம் வேலையை முடித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு கணினியை ஷட்-டவுன் செய்தவன் பின்வாயிலுக்குச் சென்று முகம் கழுவிவிட்டு அவர்களது அறைக்கு வந்தபோது அவனது மனைவி மொபைலில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சில நேரங்களில் அவனது வேலை முடிய நேரமாகிவிடும். அதுவரை மொபைலில் ஏதாவது படம் அல்லது சீரிஸ் பார்ப்பது ஈஸ்வரியின் வழக்கம். இணைய இணைப்பில் அவர்களுக்குச் சில ஓ.டி.டிகளில் இலவசக் கணக்குக்கான ஆஃபர் இருந்தது இந்த வகையில் அவளுக்கு இலாபமானது எனலாம்.
ஆரோமலே படத்தின் கடற்கரை போட்டோஷூட் காட்சி ஈஸ்வரியின் மொபைலில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கதாநாயகி ‘வெட்டிங் போட்டோஷூட்டுக்கான’ அலங்கார வளைவுக்குக் கீழே, கடல் அலைகளில் காலை நனைக்க நின்று கொண்டிருக்கும் மணமக்களை இன்னும் நெருக்கமாகப் போஸ் கொடுக்குமாறு கூறினாள்.
அவர்கள் தடுமாறவும் சக பணியாளனான திரைப்பட நாயகனை அந்த அலங்கார மலர் வளைவுக்குள் தன்னருகே நிறுத்தி, அவனது மார்பில் கரம் பதித்து எவ்வாறு போஸ் கொடுக்கவேண்டுமெனக் கதாநாயகி விளக்க, கதாநாயகியின் கண்களில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரியின் விழிகளிலும் அதே பட்டாம்பூச்சிகள்!
பவிதரன் அவள் கண்ணிமைக்காமல் அக்காட்சியைப் பார்ப்பதைக் கண்டு தலையில் தட்டினான்.
“அப்பிடி என்ன இருக்குனு பாக்குற? ஸ்டீரியோடைப்பிக்கல் அண்ட் கிரிஞ்ச் லவ் சீன் இது.”
ஈஸ்வரி அவனை முறைத்தவள், “எப்பிடி இருந்தா என்ன? நல்லா இருக்குல்ல?” என்றாள்.
“ரொம்ப செயற்கையா இருக்கு. சகிக்கல,” என்றபடி அவளருகே அமர்ந்தான்.
ஈஸ்வரி அவனது புஜத்தில் குத்தியவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.
அவளைத் தோளோடு அணைத்தவன், “இந்தச் சீன்ல ரொம்ப செயற்கையான அழகியல் தெரியுதே தவிர, எங்கயும் காதல்ங்கிற உணர்வு இயல்பா தெரியல. நிஜமான காதல்ங்கிறது ஒரு reflex (அனிச்சை செயல்). அதுக்குச் சினிமாத்தனம் இருக்காது,” என்றான் அவளது விழிகளைப் பார்த்தபடி.
“லைஃபை சுவாரசியமாக்கச் சில சினிமாத்தனமும் வேணும் முதலாளி,” நக்கலாகச் சொன்னவளை இன்னும் இறுக அணைத்துக்கொண்டான் அவளது கணவன்.
“காதலையும் இன்டிமசியையும் பத்தி அறியாதவங்களுக்குச் சினிமாத்தனமான காதல் ருசிக்கும். ஆனா அதை தினசரி அனுபவிக்குறவங்களுக்குத்தான் காதல்ங்கிறது எவ்ளோ இயல்பானதுனு புரியும். நீ தலைமுடியெல்லாம் கலைஞ்சு வேர்க்க விறுவிறுக்க கிச்சன்ல சமைச்சிட்டிருப்பியே, அதுகூட எனக்குள்ள பட்டர்ஃபிளை மொமென்ட்டை உருவாக்கும். பைக்ல என் பின்னாடி உக்காருறப்ப நான் பிரேக் போட்டா நீ ஷர்ட் காலரோட சேர்த்து இழுத்துப் பிடிச்சு முதுகுல முகம் புதைச்சுப்பியே… இதை விடவா அந்த மூவி சீன்ல காதலும் ரொமான்ஸும் சொட்டுது? காதலைப் பொறுத்தவரைக்கும் நீ ஒரு ஞானசூனியம்டி சண்டைக்காரி.”
பவிதரன் கிண்டலாய் முடிக்க ஈஸ்வரி அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
“இவ்ளோ பெருசா விளக்கம் குடுக்குறிங்களே! சார்வாளுக்கு நான் எத்தனையாவது காதலி?” கேட்ட விதமே பவிதரனுக்குள் கிலி பரப்ப சிரித்துச் சமாளித்தான் அவன்.
“சிரிப்பே சரியில்லையே!” என வில்லத்தனமாக அவள் முறைக்க,
“என்னோட முதலும் கடைசியுமான காதல் நீ மட்டும்தான். சத்தியமா,” என்று அவளது தலையில் கை வைக்க வந்தான் பவிதரன்.
ஈஸ்வரி சட்டென விலகி அமர்ந்தாள்.
“என்னை அல்பாயுசுல மேல அனுப்பி வைக்க பிளான் போடுறிங்களோ?” அவள் மிரண்டு சொல்லவும் சத்தமாய் சிரித்துவிட்டான் பவிதரன்.
“உன் உயிர் உனக்கு வெல்லக்கட்டி இல்ல,” என்றவன், “சரி! அந்த ஏர்பாட்ஸ்ல ஒண்ணைக் குடு. நானும் பாக்குறேன் இந்தக் காதல் காவியத்தை,” என்றபடி அவளோடு சேர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தான்.
எப்படி வந்தாயோ புன்னகை தந்தாயோ எப்படி வந்தாயோ என்னையும் கொண்டாயோ கேளாமலே கையில் வந்த கட்டி தங்கம் நீயே தள்ளாமலே தள்ளாடுறேன் நானே மீண்டும் மனம் மிஞ்சிடுதே என்னிடத்தில் தானே!
கட்டிலின் தலைமாட்டில் சுவரில் முதுகு சாய்த்து தோளோடு தோளுரச, ஒவ்வொரு காட்சியிலும் அவள் லயிப்பையும் ரசனையையும் சிரிப்பையும் மிக அருகில் காண அவனுக்கும் பிடித்திருந்தது. ஆகப்பெரும் காதலின் க்ஷணம் என்பது இதுதானே!
காதல் சினிமாத்தனமான அழகியலைத் தேடிக்கொண்டிருப்பதில்லை. அற்புதமான தருணங்களுக்காய் காத்திருப்பதில்லை. அந்த நொடியில் நம் இணையோடு நாம் உணரும் இதமும், அரவணைப்பும் இணைந்ததுதான் காதல்!
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று பிரகடனப்படுத்துவதற்குக் காதல் ஒன்றும் இரு நாட்டுக்கிடையே நடந்தேறும் ஒப்பந்தம் இல்லை.
‘நீ சொல்லாவிட்டாலும் உன் செயல்களில் நீ நேசிப்பவர் உணரும் ஆத்மார்த்தமான உணர்வே காதல்!’
தூரத்து வெளிச்சப்புள்ளிகள் உங்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிந்தால் சுற்றியிருக்கும் மின்மினிகளின் இயல்பான ஒளியின் அழகை நீங்கள் தவறவிட்டு விடுவீர்கள்!
அப்படித்தான் இணையரின் காதலும்!
நீங்கள் செயற்கையான பிரகடனப்படுத்துதல்களிலும், காதல் இதுதான் என்று காட்சிப்படுத்தப்படும் நாடகத்தனமான கவர்ச்சிகளிலும் தொலைவீர்கள் என்றால் எந்நாளும் நிதர்சனத்தின் காதல் கணங்கள் உங்கள் மனதை நிறைக்காது.
பவிதரன் சொல்ல வந்ததும் இதைத்தான்.
அவனது தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு இப்போது அதன் சாராம்சம் புரிந்து போனது.

“இப்பிடி போன்ல படம் பாத்தா கண்ணெரிச்சல், ட்ரை ஐ எல்லாம் வரும்டி.”
“ஆனா எனக்கு இப்பிடி உங்ககூட உக்காந்து பாக்க பிடிச்சிருக்கே.”
சொன்னதோடு தனது நாசியை அவனது கன்னத்து ரோமங்களில் உரசியவளின் நெற்றியில் ஈரத்தோடு படிந்தன பவிதரனின் இதழ்கள்.
இருப்பினும் மனதோரம் சிறுகுறை அவனுக்கு. மொபைலில் பார்ப்பதை விட பெரிய திரையில் பார்த்தால் ஈஸ்வரி இன்னும் மகிழ்வாளே! அதை விட கண்களுக்குக் கேடில்லை. தொலைக்காட்சி ஒன்று வாங்க வேண்டுமென அந்நொடியில் மனதில் குறித்துவைத்துக்கொண்டான் அவன்.
இணையின் தேவை இதுவென அவர்கள் சொல்லாமல் அறிந்துகொள்வதும் நிதர்சனக் காதலின் ஒரு பகுதிதான்!
“எனக்குப் படம் பாத்தது போதும்.”
“இன்ட்ரஸ்ட்டா பாத்துட்டிருந்தியேம்மா?”
“இப்பதான் நீங்க வந்துட்டிங்கல்ல? உங்களை விட வேற எதுவும் எனக்குப் பெருசா சுவாரசியத்தைத் தராது முதலாளி.”
கண்களில் மையலோடு சொன்னவள் அவனது கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“கள்ளி,” அவளது நாசியை நிமிண்டியவன் வடிவான செவ்விதழ்களில் பார்வை நிலைக்க சுயம் தொலைத்தான்.
தன்னை அவளிடம் தேடும் ஆத்மார்த்தமான தேடலில் பவிதரன் மூழ்கிவிட அவனது அணைப்புக்குள் அடங்கியவளின் விழிகளில் பூரணத்துவம் பெற்றது காதலோடு சேர்ந்த தாபம்.
ஒரு ஆணைப் பலவீனப்படுத்த அவனை நேசிப்பவளின் தாபம் நிரம்பிய விழிகள் மாபெரும் ஆயுதங்களாம்!
அந்த ஆயுதங்கள் பவிதரனை மயக்கிக் கிறக்கத்தில் தள்ள, அன்றைய நாளின் சோர்வையும், அழுத்தத்தையும் தீர்க்கும் வடிகாலாக அவர்களின் கூடல் பொழுது மாறிப்போனது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

