“மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிப்பதை விட சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்கள், எப்போதும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில் முதல் வகையினரே இவ்வுலகில் அதிகம். அவர்களை சந்தர்ப்பவாதிகள் என்று தாராளமாக அழைக்கலாம். அவர்களுக்கு நியாயம் அநியாயம் என்பதெல்லாம் கிடையாது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்ன செய்தாலும் அது அவர்களுக்கு நியாயம், வேண்டாதவர்கள் நல்லதே செய்தாலும் அது அநியாயம். இதில் நகைச்சுவை என்னவென்றால் பல நேரங்களில் நல்லவர்களும் இந்தச் சந்தர்ப்பவாதி அவதாரத்தை எடுப்பதுண்டு.
-ருத்ரதேவ்
ஃபெர்ன் ஹில், ஸ்கை க்ளாம்பிங் சைட்…
க்ளாம்பிங் டெண்ட்டுக்கான அரைவட்ட வடிவ கூடாரங்களை நிர்மாணிப்பதற்கான கம்பிகள் ஊன்றப்பட்டு அதன் மேலே மரத்தினாலான அடித்தளம் போடப்பட்டிருந்தது. இன்னும் சில மாதங்களில் அந்த வேலையும் முடிவடைந்து விடும்.
வேலை எவ்வாறு நடக்கிறது என மேற்பார்வையிட வந்திருந்தான் ருத்ரதேவ். கூடவே தக்ஷிண்யாவும் வந்திருந்தாள். அவளுக்கும் முடிக்க வேண்டிய வேலை பாக்கி இருக்கிறது.
அதோடு அவளை வீட்டில் இருக்க விட்டால் கட்டாயம் லலிதாவைச் சீண்டுவாள். எனவே தன்னோடு அழைத்து வந்துவிட்டான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இந்த டீடெய்ல்ஸ் மட்டும் சேர்த்து ரிப்போர்ட் பண்ணிட்டேனா என்னோட வேலை முடிஞ்சுடும்… அதுக்கு அப்புறம் அனுதீப் சாருக்கு நான் ரெசிக்னேசன் லெட்டர் அனுப்பி வச்சிடுவேன்” என்றபடி நடந்து வந்து கொண்டிருந்த தக்ஷிண்யா சரியாக தான் தவறி விழுந்த இடம் வந்ததும் ஊமையாகிப்போனாள்.
அன்று விழுந்ததும் மயக்கமடைந்ததும் அவள் கண் முன்னே வந்து செல்ல அருகில் நின்ற ருத்ரதேவ் மீது ஒருவித எரிச்சல் உண்டானது. எப்படி தான் காதலித்தவளை கஷ்டப்படுத்திப் பார்க்க இந்த ஆண்களுக்கு மனம் வருகிறதோ?
“சரியான சேடிஷ்ட்”
அவள் முணுமுணுப்பது ருத்ரதேவின் காதில் விழவும் “எக்ஸ்யூஸ் மீ?” என்றபடி அவளை நோக்கினான் அவன்.
“நத்திங்”
“நீ என்னை சேடிஸ்ட்னு சொன்னது எனக்குக் கேட்டுச்சு… என்ன, ஆக்சிடெண்ட் நினைவுகளா?”
பள்ளத்தாக்கைக் காட்டி அவன் பேசவும் சுருசுருவென கோபம் மூண்டது அவளுக்குள்.
“அது தான் கேட்டுச்சுல்ல, நீங்க சரியான கல்நெஞ்சக்காரன்… லவ் பண்ணுறேன்னு பக்கம் பக்கமா டயலாக் பேசுவிங்க… சண்டைனு வந்ததும் என்னை விரோதி மாதிரி ட்ரீட் பண்ணுவிங்க… இதுக்கு நீங்க லவ் பண்ணாமலேயே இருந்திருக்கலாம்”
“பாட் காலிங் த கெட்டில் ப்ளாக்னு ஒரு இங்கிலீஸ் பழமொழி உண்டு… நீயும் ஒரு காலத்துல என்னை லவ் பண்ணுனவ தானே.. யாரோ ஒருத்தருக்காக என்னை வேண்டாம்னு தூக்கிப் போட்டல்ல… இதையே நான் செஞ்சிருந்தா இந்த உலகம் என்னை என்னென்ன பேசிருக்கும்? லவ்ங்கிற பேர்ல ஒரு பொண்ணு கூட சுத்திட்டு ஏமாத்திட்டான்னு அசிங்கமா பேசிருக்கும் தானே… அதையே நீ பண்ணுனா மட்டும் சுயமரியாதைக்காக வாழ்க்கையைவே இழந்த பொண்ணுனு கை தட்டி பாராட்டும்… நீ செஞ்சதுக்கு முன்னாடி நான் செஞ்சது ஒன்னுமே இல்ல… உன் மேல டன் கணக்குல கோவம் இருந்தும் உனக்கு ஆக்சிடெண்ட்னு சொன்னதும் நான் எவ்ளோ பயந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… இந்தப் பள்ளத்தாக்குல இருந்து நீ உயிரோட திரும்புவியா இல்லையானு நான் துடிச்சதுலாம் உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல… நீ தான் அடிபட்ட மயக்கத்துல இருந்தியே”
தக்ஷிண்யாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. அமைதியாய் அந்தச் சரிவை வெறிக்க ஆரம்பித்தாள்.
பின்னர் நிதானமாக “நான் செஞ்ச சில காரியங்களால உங்களுக்குத் தான் என்னைப் பிடிக்காம போயிடுச்சே… அப்புறம் எதுக்கு காப்பாத்துனிங்க?” என்று கேட்டாள்.
“என்ன பண்ணுறது? காதலிச்சுத் தொலைச்சுட்டேனே… உனக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கு தக்ஷி… என் அத்தை லலிதானு தெரிஞ்சதும் நீ என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்ட, உன்னைப் பாக்க வர்றப்ப ரோட்ல கார் இடிச்சு வந்த ரத்த காயத்தைக் கூட நீ கண்டுக்கல… சொல்லப்போனா சண்டை போட்டதும் என்னை விரோதியா நினைச்சது நீ தான்”
அலுத்துக் கொண்டவனை புரியாத பார்வை பார்த்தாள் அவள்
“நான் ஒன்னும் அப்பிடி நினைக்கல…” என்று ஆரம்பித்தவளை நிறுத்துமாறு சைகை காட்டியவன்
“இப்பவும் நீ எனக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சியா இல்ல உங்கம்மாவோட ஆசைய நிறைவேத்த சம்மதிச்சியாங்கிற கேள்வி என் மூளைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு… அதுக்கு நீ தான் பதில் சொல்லணும்… நான் உன்னை எந்தளவுக்கு லவ் பண்ணுனேன் தெரியுமா? இப்பவும் அந்த லவ் மாறாம அதே அளவு இருக்கு… உன்னை ஹக் பண்ணச் சொல்லும், கிஸ் பண்ணச் சொல்லும்… ஏதாவது ஹாஸ்யமா பேசுனேனா உனக்கு ஹைஃபை குடுக்கச் சொல்லும்… ஆனா இது எதையும் பண்ணுறதுக்கு எனக்குப் பயமா இருக்கு… எங்க மறுபடியும் நீ என்னை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிடுவியோங்கிற பயம் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கு” என்றான் அமைதியாக.
தக்ஷிண்யா திகைத்தவள் “ஏன் இப்பிடிலாம் யோசிக்கிறிங்க? கோவம் வேற, காதல் வேறனு நான் புரிஞ்சிக்கிட்டேன் ருத்ரா” என்க
“என்னால உன்னை நம்ப முடியல தக்ஷி, பட் ஐ லவ் யூ… நீ எப்ப வேணும்னாலும் என்னை விட்டுப் போயிடுவங்கிற பயத்தோட சேர்ந்து நான் உன்னைக் காதலிக்குறேன்… அதான் இந்தக் காதல்ல உரிமை எடுத்துக்க யோசனையா இருக்கு” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் திணறினான்.
எங்கே தனது வார்த்தைகள் அவளைக் காயப்படுத்திவிடுமோ என்ற பயம் இப்போது. ஒரு மனிதன் பயந்து பயந்தே வாழ்வது எப்படிப்பட்ட சோகம்!
தக்ஷிண்யா அவனை நேருக்கு நேராகப் பார்த்தவள் “எனக்கும் ஒரு பயம் இருக்கு… உங்க அத்தைக்காக நீங்க என்னை ஒதுக்கி வச்சிடுவிங்களோங்கிற பயம்… ஆனா அதுக்காக நான் ஒன்னும் உங்களை விட்டு விலகி நிக்கலையே… ஒரு குழந்தை இருட்டை பாத்து பயந்துச்சுனா அந்த நேரத்துல அதுக்குத் தேவை அரவணைப்பு தானே தவிர விலகல் இல்ல… என்னோட பயத்துக்கு நான் உங்க கிட்ட தேடுறதும் அதே அரவணைப்பை தான்… இதை நீங்க புரிஞ்சிக்கிட்டா நல்லது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்.
இருவரும் மௌனமாக காரில் செல்லும் போது தொண்டையைச் செருமியவள்
“நான் சொன்ன அரவணைப்புக்கு அர்த்தம் உடல்ரீதியா நீங்க என் கூட சேர்ந்து வாழணும்ங்கிறது இல்ல… ஏன்னா காதல்ங்கிறது உடம்பு ஒன்னு சேர்றதுக்கு முன்னாடி மனசு ஒன்னா சேர்த்து பிரிக்க முடியாதபடி மாறுறது தான்… ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் திஸ்” என்று சொல்லிவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
இருவரும் ஹோட்டலுக்குத் திரும்பி அவரவர் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். தக்ஷிண்யா அனுதீப்புக்குக் கடைசியாக அனுப்ப வேண்டிய அறிக்கையை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு விரல்களை சொடுக்கிட்டாள்.
பின்னர் மொபைலில் நேரத்தைப் பார்த்தவள் தனது வேலைநேரம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் பாக்கியிருக்கிறதே என்று சலித்துக்கொண்டாள்.
அதே நேரம் ருத்ரதேவோ கோகோ லகூன் ரிசார்ட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.
“அசோக் அவனோட ஒய்ப் மாயாவ இன்னைக்கு பிசினஸ் டீல் பேச அழைச்சுட்டு வர்றேன்னு சொன்னான்மா… ரிசார்ட்டோட இண்டீரியர்ல சின்னதா சேஞ்சஸ் கொண்டு வரணும்னு ஆல்ரெடி அப்பா கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருந்தேன்… அவனோட ஒய்ப் மாயா இண்டீரியர் டிசைனர் தான்… அவங்களோட ஒர்க்ஸ் எல்லாமே அற்புதமா இருக்கும்னு அசோக் சொல்லியிருக்குறான்.. இன்னைக்கு அவங்க ரிசார்ட்டை பாத்துட்டாங்கனா என்னென்ன சேஞ்சஸ் கொண்டு வரணும்னு சொல்லிடுவாங்க… நான் அவங்களோட இருந்து வேலைய முடிச்சுட்டு வர்றேன்… சோ இன்னைக்கு எனக்கு லஞ்ச் வேண்டாம்”
எப்போது வீட்டுக்கு வருவாய் என்று கேட்ட சசிகலாவுக்கு மொபைலில் பதிலளித்தபடி கிளம்பியவன் உதவியாளரிடம் தக்ஷிண்யாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டுவிட்டான்.
******
பிருந்தாவனம்…
“எப்ப அவ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சாளோ அப்பவே என் நிம்மதி போயிடுச்சு… எல்லாரோட கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டுறா பிரகி… நீ இந்த வீட்டுக்கு சின்னமருமகளா வரப் போறவ… இன்னைக்கு எனக்கு வந்த நிலமை தான் நாளைக்கு உனக்கும் வரும்… அதுக்கு முன்னாடி சுதாரிச்சுக்க… நீ மகா கிட்ட இதை பத்தி பேசு பிரகி”
வீட்டுக்கு வந்த பிரகல்யாவைத் தனியே அழைத்துச் சென்று வேப்பிலை அடித்துக் கொண்டிருந்தார் லலிதா. அவளோ அவர் கூறுவதை கேட்கலாமா வேண்டாமா என்று இரட்டைமனமாக அமர்ந்திருந்தாள்.
“என்ன சைலண்டா இருக்கம்மா?”
“ஒன்னுமில்ல சித்தி… மகி சொன்ன வரைக்கும் தக்ஷிண்யா ரொம்ப அன்பானவங்கனு தான் நான் நினைச்சேன்… நீங்க வேற என்னமோ சொல்லுறிங்க… அதான் குழப்பமா இருக்கு”
“மகா சின்னப்பையன்… அவனுக்கு என்ன தெரியும்? அவளைப் பெத்தவ எப்பேர்ப்பட்ட ஜாலக்காரினு எனக்குத் தெரியும்… அதே குணம் தான் அவளுக்கும்… இல்லைனா அனுதீப் கல்யாணத்துக்குப் போன என் மருமகன் தன்னோட கல்யாணத்தை யார் கிட்டவும் கேக்காம முடிவு பண்ணுற அளவுக்கு வந்திருப்பானா? அவ அம்மாவோட ரத்தம் தான் அவளுக்குள்ளவும் ஓடுது… ஒரு வருசமோ ரெண்டு வருசமோ இருந்துட்டு என் மருமகனை விட்டுட்டு அவ ஓடத் தான் போறா… இது நடக்கக்கூடாதுனு நான் வேண்டாத தெய்வமில்ல பிரகி”
சோகமாக லலிதா கண்களை கசக்கிய போதே “உன்னை மகா தேடுறான்மா பிரகி” என்று சொன்னவாறு வந்தார் பார்வதி.
அவர் வரவும் இயல்பாக தன்னைக் காட்டிக்கொண்டார் லலிதா.
“நான் போய் பாக்குறேன் பாட்டி” என்று பிரகல்யா நகர அவள் பின்னே போகவிருந்த லலிதாவின் கரத்தை இறுக்கமாகப் பிடித்து இழுத்து நிறுத்தினார் பார்வதி.
“என்னம்மா?” என்று அவர் கேட்க பிரகல்யா போய்விட்டாளா என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பார்வதி லலிதாவின் பக்கம் திரும்பினார்.
அவர் எதிர்பார்க்காவண்ணம் பளாரென கன்னத்தில் அறைந்த பார்வதி ஆட்காட்டிவிரலால் பத்திரம் காட்டி பேச ஆரம்பித்தார்.
“நானும் பாத்துட்டே இருக்கேன், நீ வர வர ரொம்ப அசிங்கமா நடந்துக்குற லலிதா… நீயும் ஒரு பொண்ணு தானடி? செத்துப்போனவ மேல உனக்கு ஏன் இவ்ளோ வன்மம்? உன் மனசு நோகிடக்கூடாதுனு வாயை மூடிட்டு இருந்தது எவ்ளோ பெரிய தப்புனு இப்ப புரியுது… தேவிகாவ பத்தி நீ சொன்னதல்லாம் நம்பி இந்த வீட்டுல எல்லாருமே அவளைத் தப்பா தானே நினைச்சிட்டிருந்தோம்… சசி அவளுக்குச் சப்போர்ட் பண்ண வர்றப்பலாம் அவளை பேசவிடாம அமைதியாக்குனது எங்க தப்பு தான்… இப்பவும் அவ வாயை திறந்து நீ செஞ்சதைலாம் சொல்லலைனா நாங்க உன்னை பத்தி புரிஞ்சிக்காமலே போயிருப்போம்… இன்னொரு தடவை நீ தக்ஷிய பத்தி தப்பா பேசுனேனு வையேன், பெத்த மகள்னு கூட பாக்காம நானே கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன்… வயசான காலத்துல அந்தப் பாவத்தை செய்ய வச்சிடாத”
“நேத்து வந்தவளுக்காக என்னை அடிக்கிறியாம்மா?”
“அவ என் பேரனோட பொண்டாட்டி… அவளை பத்தி யார் அசிங்கமா பேசுனாலும் நான் இப்பிடி தான் நடந்துப்பேன்… வாயை மூடிட்டு இருக்க இஷ்டமிருந்தா நீ இரு… இல்லனா நானே ராஜா கிட்ட பேசி உன்னை விவாகரத்து பண்ண வச்சிடுவேன்… ஜாக்கிரதை”
அதற்கு மேல் பேசப் பிடிக்காதவராக பார்வதி அங்கிருந்து சென்றுவிட லலிதா அவமானத்தில் குறுகிப் போய் நின்றார்.
பார்வதி நேரே பிரகல்யாவிடம் வந்தவர் தன் மகள் கூறிய எதையும் பெரிதாய் எண்ண வேண்டாமென கூற அவளோ
“அவங்க சொன்னா நான் நம்பிடுவேனா பாட்டி? மகி தக்ஷிய பத்தி என் கிட்ட நிறைய பேசியிருக்குறார்… அவரோட வார்த்தைகளை தவிர வேற எதையும் நான் நம்ப மாட்டேன்… நீங்க கவலைப்படாதிங்க” என்று சொல்லி அவர் வயிற்றில் பாலை வார்த்தாள்.
சற்று நேரத்தில் தக்ஷிண்யாவும் மதியவுணவுக்கு வந்துவிட லலிதாவைத் தவிர மற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
சசிகலா லலிதாவைப் பற்றி விசாரிக்க “அவ அப்புறமா சாப்பிட்டுப்பா சசி… நீ சாப்பிடும்மா” என்று அழுத்தமாக கூறி அமர வைத்துவிட்டார் பார்வதி.
சாப்பாடு முடிந்ததும் மனைவியின் முகம் சரியில்லையே என்று சதாசிவம் யோசித்தபடி உலாவ பார்வதியே லலிதாவின் போக்கு சரியில்லை என்பதை கணவரிடம் கூறிவிட்டார்.
கூடவே தான் அவரை அறைந்ததையும் கூற சதாசிவத்துக்கு மனம் வலித்தாலும் மகளின் போக்கு இனியேனும் மாறினால் நல்லது என்பதே அவரது எண்ணம். ஐந்தில் வளையாததை அடித்துத் திருத்த முயன்றாலும் ஐம்பதில் அது வளையாது என்பது அந்த முதிய தம்பதிகளுக்குப் புரியவர இன்னும் காலம் எடுக்கும் போல! இளையவர்களின் தவறுகளை பெரியவர்கள் காலத்தில் சுட்டிக்காட்டுவது அவசியம். ஏனெனில் காலஞ்சென்ற பிறகு அவர்களின் அறிவுரை எதுவும் இளையவர்களிடம் வேலை செய்யாது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


