மறுநாள் எந்த ரகளையும் இல்லாமல் அமைதியாகவே சென்றது. அடுத்த நாள் காலை மஞ்சள் பூசும் விழாவும் (ஹல்தி) மாலை திருமணமும் என்று திட்டமிட்டிருப்பதால் ரித்திமாவும் அவந்திகாவும் நிற்க நேரமின்றிப் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கவே கௌசல்யா அவந்திகாவை எதுவும் சொல்ல நேரமின்றி உஷாவின் திருமணவேலைகளில் மைதிலிக்கு உதவி செய்து கொண்டு இருந்தார்.
மணமகன் வீட்டிலோ வருணின் சகோதர சகோதரிகள் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர். ராகவ் இந்த அமளிதுமளி ஏதுமின்றி அமைதியாகப் போனும் கையுமாக இருக்கவே ராதிகா அவனைத் தொல்லை செய்யவில்லை. ஆனால் மகனின் திருமணம் நடந்த சூழ்நிலை குறித்துத் தன் ஆதங்கத்தைத் தன் மாமியாரிடம் கொட்டிவிட்டார்.
சுமித்ராவுக்கும் தன் செல்லப் பேரனின் திருமணத்தைப் பார்க்காத குறை பெரிதாக இருக்கவே மற்ற பேரன் பேத்திகளை அழைத்து (வருணையும்தான்) இதற்கு ஒரு தீர்வு சொல்லும்படிக் கேட்கவும் கிஷோர் அருமையான திட்டத்தை அவர்களிடம் விளக்கினான். இந்த நிலையில் ராகவின் தந்தை மோகன் கபூர் வந்து சேர்ந்தார். வந்தவர் நேரே ராகவிடம் சென்று சரமாரியாகக் கேள்வி கணைகளைத் தொடுக்கவும் ஒரு கட்டத்திற்கு மேல் ராகவால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
“டாட் இந்த மேரேஜ் எந்த மாதிரி சூழ்நிலைல நடந்துச்சுனு தெரியாம நீங்களும் அந்த ஜான்சி ராணி மாதிரி பேசாதீங்க” என்று அவன் பொறுமையின்றிக் கூற மோகன் “இங்க சூழ்நிலை முக்கியம் இல்ல ராகவ். மேரேஜ் நீ நெனக்கிற மாதிரி சிம்பிளான விஷயம் இல்ல. அதுக்கு ரெண்டு பேரும் மனசாரச் சம்மதிக்கணும். சாஸ்திர சம்பிரதாயங்களோட அக்னி சாட்சியா நடக்கிறதுதாண்டா திருமணம். நீ அதைக் கேலிக்கூத்தா ஆக்கிட்டு அந்தப் பொண்ணைக் குத்தம் சொல்லாத” என்று அவன் மீதுதான் தவறு என்று விடாமல் குற்றம் சாட்ட
“ப்ளீஸ் டாட்., அது நடந்து முடிஞ்ச விஷயம். நானே நெனச்சாலும் இப்போ அத மாத்த முடியாது. இனிமே நடக்கப் போறத மட்டும் எல்லாரும் யோசிங்க. அண்ட் ஒன் மோர் திங் என்னை முடிஞ்ச வரைக்கும் தொல்லை பண்ணாதீங்க. ஆல்ரெடி என் தலைல ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிட்டு இருக்கு. இந்தச் சில்லி டாபிக்க இதோட எல்லாரும் குளோஸ் பண்ணிடுங்க” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குப் போனுடன் சென்றான் ராகவ்.
சென்றவன் “எல்லாரும் என்னையே ப்ளேம் பண்ணா எப்பிடி?” என்று அங்கிருந்த வருணிடம் தன் ஆதங்கத்தைக் கூறினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வருண் அவனுக்கு ஆறுதலாகத் தோளில் தட்டிக்கொடுத்தவன் “அவங்களுக்குக் கொஞ்சம் டைம் குடு ராகவ்” என்று சொல்ல ராகவ் “கம் ஆன் பய்யா! இதுக்கு மேல யாரும் இதப் பத்திப் பேசுனா என்னால பொறுமையா இருக்க முடியாது” என்க
வருண் பேச்சை மாற்றும் விதமாக “ஓகே! இப்போ அந்த வீர் என்ன சொல்லுறான்? சிராஜ் ஏதும் பிளான் பண்ணிருக்கானா? அவனால சும்மா இருக்க முடியாதே” என்று கேட்டான்.
ராகவ் பெருமூச்சுடன் “அந்த இடியட் அவந்திகாவை டார்கெட் பண்ணிருக்கான் பய்யா. என்ன பண்ணப் போறானு அவன் வீர்கிட்ட சொல்லல. அந்த வீர் நம்ம கூடச் சேர்ந்த விஷயம் அவனுக்கு லீக் ஆகிருக்க வாய்ப்பு எதும் இருக்கா?” என்று வருணை நோக்கிக் கேள்விகணையை வீசினான்.
வருண் உறுதியாக “நோ வே ராகவ். எல்லாமே ரொம்பச் சீக்ரேட்டா நடந்துச்சு. சிராஜுக்கு அவ்ளோ ப்ரைன் கெடையாதுடா” என்று சொல்ல
ராகவ் “பட் என்னோட ப்ராப்ளம் சிராஜ் இல்ல. அந்த அவந்திகா. நான் சொன்னா இந்த விஷயத்த அவ நம்பவே மாட்டா. வர வர அவளோட ஆட்டிட்டியூட் பாத்தா எனக்கு இரிட்டேட் ஆகுது ப்ரோ” என்றான் வெளிப்படையான எரிச்சலுடன்.
வருண் அவனைப் பார்த்துப் புன்னகைத்தவன் “நான் அவளுக்குப் புரியவைக்குறேன். யூ டோண்ட் வொர்ரி” என்று சொல்லி அவனைப் பார்த்தான்.
ராகவ் இவ்வளவு நேரம் தன்னுடைய பிரச்சனைகளைச் சொல்லி வருணுடைய இனிமையான திருமணத் தருணத்தில் அவனைத் தேவையில்லாமல் யோசிக்க வைத்துவிட்டோமோ என்று மனதில் குற்றவுணர்ச்சியுடன் நினைத்துக்கொண்டான்.
அவனைச் சிரிக்க வைப்பதற்காக “பய்யா நான் பாக்க அவ்ளோ மோசமாவா இருக்கேன்? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் பிசினஸ் மீட், பார்ட்டி, ப்ரெஸ் மீட் எங்க போனாலும் அங்க இருக்கிற கேர்ள்ஸ் என்னை இம்ப்ரெஸ் பண்ண எவ்ளோ ட்ரை பண்ணுவாங்கனு உங்களுக்கே தெரியும். பட் திஸ் கேர்ள்? அவ என்னை ஒரு பார்வை பாக்கிறா பாருங்க! ஏதோ ஏலியனப் பாக்குற மாதிரி. ஆஃப்டர் ஆல் ஐயாம் ஹெர் ஹஸ்பெண்ட். அது கூட மறந்துடுச்சு போல. இப்போ இந்த சிராஜோட இடியட்டிக் மூவ்ல இருந்து அவளக் காப்பாத்த நான் என்னதான் பண்ணாலும் அவ அதை நம்பவே மாட்டா” என்றான் ஆதங்கத்துடன்
வருண் அதைக் கேட்டுச் சத்தம் போட்டுச் சிரித்தவன் “ஹேய் கூல்டா! ஏன் இவ்ளோ டென்ஷன் ராகவ்?” என்றான் அவன் முகத்தையே பார்த்தபடி.
அவன் சிரிப்பைக் கண்டதும் சிறு நிம்மதி மனதில் உண்டாக ராகவ் “உங்களுக்கு நாளைக்குதான கல்யாணம். உங்க லைஃபை இன்னிக்கே என்ஜாய் பண்ணிக்குங்க பய்யா. பிகாஸ் டுமாரோ ஆன்வார்ட்ஸ் உங்களுக்குப் பாபியை (அண்ணி) பத்தி யோசிச்சுக் கன்ஃப்யூஸ் ஆக மட்டும்தான் டைம் இருக்கும்” என்று ராகவ் கூறவும் சத்தம் போட்டுச் சிரித்தான் வருண்.
அவனுடைய சிரிப்பு மனதை மகிழ்ச்சியாக்க ராகவ் அன்றுதான் சில நாள் மனப்போராட்டத்துக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


