அரண்மனை தோட்டத்தில் பொம்மை போல் அமர்ந்திருந்தாள் அவந்திகா. காலையிலிருந்து நடந்த எதிர்பாரா சம்பவங்கள் அவளை அந்தளவிற்குப் பாதித்திருந்தது. இரண்டு நாள் முன் பார்த்த ஒரு மனிதன் இன்று அவளது கணவன், நினைப்பதற்கு வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது அவந்திகாவுக்கு.
ஆனால் ராகவைப் பொறுத்தவரைக்கும் அவனால் நடந்த தவறுக்கு அவன் பிராயசித்தம் தேடிவிட்டான் இந்தத் திருமணம் மூலமாக. அதனால் அவன் அந்நிகழ்வைப் பெரிதாகக் கருதி வருந்தவில்லை. அதனால் வழக்கம் போலப் போனில் யாரிடமோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தான். அரண்மனைக்குள்ளேயோ நேற்று இரவு முதல் இருந்த குழப்பம் நீங்கி அடுத்த நிகழ்வுக்கான பரபரப்பு புகுந்தது.
கல்யாணி தேவி என்றுமே உஷாவையும் அவள் தோழிகளையும் பிரித்துப் பார்த்ததில்லை. அன்று சிவன் கோயிலில் அவந்திகாவிற்குத் திருமணயோகம் வந்துவிட்டதாகப் பண்டிதர் கூறியபோது தன் பேத்தியைப் போல அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்க அந்தச் சிவபெருமான் வழி காட்டிவிட்டதாகவே மகிழ்ந்தார்.
இன்று எதிர்பாராத விதமாக நடந்த திருமணத்தையும் அவர் சிவபெருமானின் அருளால் நடந்ததாகவே நம்பினார். திருமணம் எதிர்பாராமல் நடந்தாலும் மற்ற சம்பிரதாயங்களில் குறை எதுவும் வரக்கூடாது என்பதில் தெளிவானவர் உஷாவிடமும் ரித்திகாவிடமும் ஆரத்தி கரைக்கச் சொல்லிவிட்டுக் கௌசல்யா, மைதிலி, ராதிகாவைக் கிரகப்ரவேசத்திற்காக ஒரு பெரிய தட்டில் செஞ்சாந்து குழம்பை எடுத்து வருமாறு கூறிவிட்டுத் தோட்டத்தில் இருந்த ராகவையும் அவந்திகாவையும் அழைத்து வருமாறு பணியாள் ஒருவரை அனுப்பினார்.
ராகவ் அவந்திகாவின் தோளைத் தொட்டு அழைக்க முயல அதற்குள் தோளைச் சுருக்கிக்கொண்டு எழுந்தவள் அவன் முகத்தைப் பார்க்காது விறுவிறுவென்று முன்னே நடந்தாள். அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவளைத் தொடர்ந்தான்.
சில நிமிடங்களில் அரண்மனை உள்வாயிலில் நின்றுகொண்டிருந்தனர் அவந்திகாவும், ராகவும். ராதிகா உஷாவின் கையிலிருந்த ஆரத்தி தட்டை வாங்கி இருவருக்கும் ஆரத்தி எடுத்துவிட்டு அவந்திகாவிடம் “இந்தத் தட்டில் கால வச்சிட்டு அரண்மனைக்குள்ள வா மா” என்று அன்புடன் கூறிவிட்டு அவள் நெற்றியில் திலகமிட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அப்போதுதான் உணர்வு வந்தது போலச் சுற்றி முற்றிப் பார்த்த அவந்திகா தன் கழுத்திலிருந்த தாலியைப் பார்த்ததும் நடந்த சம்பவங்கள் எல்லாம் படம் போல் அவள் கண் முன் ஓட ஆரம்பித்தது. நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தவளின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.
ராதிகா சொல்லிவிட்டுச் சென்றதும் முன்னே நடக்கத் தொடங்கிய ராகவ் தன்னுடன் அவந்திகா வராததை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். வாயிலில் கண் நிறைய கோபத்துடன் நின்ற மனைவியைப் பார்த்துச் செய்வதறியாது நின்றான்.
அவனைப் பார்த்தவாறே உள்ளே வந்த அவந்திகா கீழே குனிந்து தான் கால் பதிக்க வேண்டிய தட்டை எடுத்துக் கோபத்துடன் தரையில் எறிந்தாள். செஞ்சாந்து குழம்புடன் பறந்த தட்டு ‘நங்’ என்று தரையில் மோதி விழ ராகவ் உடை முழுவதும் சிவப்பு நிறப் புள்ளிகள்.
அவளின் கோபத்தைப் பார்த்து உஷாவும் ரித்திகாவும் வெடவெடத்துப் போய் நின்றனர் என்றால் ராதிகாவோ புது மருமகளின் இந்த அவதாரத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“அவந்திகா! என்ன வேலை பண்ணிருக்க?” என்று கோபத்துடன் பேச முயன்ற சித்தியைக் கோபம் சிறிதும் குறையாமல் பார்த்தவள் “உங்களுக்குக் கோவம் வருதா சித்தி? ஒரு பாத்திரத்தை உடைச்சதுக்கு உங்களுக்கு இவ்ளோ கோவம் வருதே., நீங்க எல்லாருமா சேந்து கௌரவம், ரெஸ்பான்சிபிலிட்டினு ஒருத்தன கார்னர் பண்ணி என் கழுத்துல தாலி கட்ட வச்சு என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டீங்களே? என் கோவத்தை நான் யார் மேல காட்டுறது?” என்று கோபத்துடன் கத்தினாள்.
கல்யாணிதேவி “அவந்திகா! கொஞ்சம் அமைதியா இருமா” என்று அவளைச் சமாதானப்படுத்த முயல அவளது கோபம் அதிகரித்தது.
“நான் எதுக்கு அமைதியா இருக்கணும் தாதி? இந்தக் காலத்துல போய் இப்பிடி ஒரு சில்லி ரீசனுக்காக என்னோட வாழ்க்கையையே இவங்க எல்லாரும் கேலிப்பொருளா மாத்திட்டாங்க., எல்லாரும் அவங்க பக்கம் உள்ள பிரச்சனைய சால்வ் பண்றதுக்காக என்னோட லைஃபை இப்பிடி விளையாட்டா நெனச்சிட்டாங்க தாதி. இப்போ கோவப்படலனா நான் ஒரு மனுஷியே கெடையாது” என்று அழுகையுடன் முடித்தாள்.
அவள் பார்வையில் அங்கு இறுகிய முகத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகவ் விழ அவன் அருகில் சென்றவள் “மிஸ்டர் ராகவ் கபூர்! உன்னோட பேச்சுத் திறமைய அடிச்சுக்க பிசினஸ் வேர்ல்ட்ல ஆளே கெடையாதுனு பேசிக்கிறாங்க., உன்னால ஒரு சாதாரண மிடில் கிளாஸ் லேடிய பேசிச் சமாளிக்க முடியாதா? இதுவரைக்கும் எந்தப் பொண்ணுகூடவும் உன்ன சேத்து வச்சு நியூஸ் வந்ததே இல்லையா? அத எல்லாத்தையும் நீ இப்பிடிதான் சால்வ் பண்ணியா? பதில் சொல்லு” என்று அவன் ஷர்ட் காலரைப் பிடித்துக் கோபத்துடன் கேட்டாள்.
அவன் பதில் கூறாமல் நிற்கவும் “எதுக்கெடுத்தாலும் கிளாஸ், ஸ்டேட்டஸ்னு பேசுவியே. இப்போ எங்க போச்சு அந்த கிளாஸ்… எந்த மூஞ்சிய வச்சிட்டு நீ ஒரு மிடில் கிளாஸ் பொண்ணைக் கல்யாணம் பண்ணுன?” என்று கேட்டுவிட்டு அவன் காலரை விட்டாள்.
“ஆக்சுவலி நடந்ததுதான் கல்யாணமே இல்லயே., என்னோட கன்செண்ட் இல்லாம நடந்த இந்த டிராமா எல்லாமே அந்த ரிப்போர்ட்டஸ சமாளிக்க போட்டதுதானே. இதுக்கு ஆரத்தி, கிரகப்ரவேசம் ஒன்னுதான் குறை!” என்று அழுகையினூடே சொல்லிக் கொண்டவள் “இந்த டிராமா மேரேஜோட அடையாளம் எதுவுமே என்னோட வாழ்க்கையில எனக்குத் தேவையில்ல” என்று ஆவேசத்துடன் நெற்றியிலிருந்த குங்குமத்தை அழிக்க முயன்றாள்.
ராகவால் அவளைத் தடுக்க இயலவில்லை. அவள் கூறிய யாவும் அப்பட்டமான உண்மையென்று அவன் மனதிற்கு நன்றாகவே தெரிந்தது. அந்த நொடியில் தன் மனதில் தோன்றியதை அவன் செய்தானே தவிர அவந்திகாவின் நிலையையோ அவளின் சம்மதத்தையோ கேட்காதது அவனின் தவறுதான் என்று அவனது மனசாட்சி அவனைக் குற்றம் சாட்ட அவன் அவந்திகாவைத் தடுக்க முயலவும் இல்லை.
திருமணம் நடந்த அன்றே தன் மகள் குங்குமத்தை அழிக்க முயலவும் பதறிய கௌசல்யா அவள் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டு அவள் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தார். பிரதியுஷாவும் ரித்திமாவும் அவரைத் தடுக்க முயல அவரின் முறைப்புக்குப் பயந்து அவர்களும் சிலையாயினர்.
ரகுவரனுக்குத் தன் மனைவியா அவந்திகாவை அடித்தது என்று அதிர்ச்சி. தாயை இழந்த அவந்திகாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் தன் அக்கா மகளை எந்தக் குறையுமின்றிப் பார்த்துக் கொண்டவளா இன்று அவளைக் கை நீட்டியது என்று அவர் அதிர்ந்தார்.
“போதும்., நீ பேசுனத கேட்டு யாரும் எதுவும் சொல்லலனா அவங்க உன்னோட உணர்வுக்கு மதிப்பு குடுக்குறாங்கனு அர்த்தம். ஆனா அதுக்காக நீ பைத்தியக்காரத்தனமா இந்த மாதிரி நடந்துகிட்டா நான் என்னோட அக்கா மகள்னு கூட பாக்க மாட்டேன். ஜாக்கிரதை!” என்று கௌசல்யா கோபத்துடன் விரலை நீட்டிக் கூறவும் அவந்திகா அதிர்ச்சியில் உறைந்தாள். அவள் அறிந்த வரை அவளின் சித்திக்குக் கோபம் என்றால் என்னவென்றே தெரியாது. அவரா தன்னை அறைந்தது என்ற அதிர்ச்சியுடன் கண்ணீரும் சேர்ந்து வர அவளால் கண்ணீரை உகுத்தபடி அவரைப் பார்க்க மட்டுமே முடிந்தது.
அவரோ அவளின் கண்ணீரைக் கண்டு வருந்தினாலும் “இந்த உலகம் ரொம்பப் பெருசு. இந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு நீ யாரு, ராகவ் யாருனு நல்லா தெரியும். ஆனா நாங்க சொல்லுற எந்த விஷயத்தையும் இந்த உலகம் நம்பாது. ஒரு தடவை உன்னோட பேர் ஒரு தப்பான விஷயத்துல அடிபட்டுச்சுனா அத சொல்லிச் சொல்லிக் காட்டியே உன்ன இந்த உலகம் வாழ விடாது. நீ என்ன வேணா நெனச்சுக்கோ.
ஆனா நான் என் அக்காக்குச் சத்தியம் பண்ணிக் குடுத்துருக்கேன், அவ பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுப்பேனு. எனக்கு என்னோட பொண்ணப் பத்தி நாலு பேரு மோசமா பேசக்கூடாது. அவ்ளோதான்” என்று பிடிவாதமான குரலில் கூறி முடித்தார்.
“ஓகே சித்தி! உங்க எல்லாருக்காகவும் இந்தத் தாலி, குங்குமம் இது எல்லாத்தையும் நான் மதிக்குறேன். ஆனா இந்த ராகவ் இருக்கானே, இவனை என்னைக்குமே நான் என்னோட ஹஸ்பெண்டா ஏத்துக்கவே மாட்டேன். பிகாஸ் ஹீ டசின்ட் ரெஸ்பெக்ட் மை செல்ஃப் ரெஸ்பெக்ட் (Because he doesn’t respect my self-respect). அண்ட் ஒன் மோர் திங் ஒரு மிடில் கிளாஸ் கேர்ள அவனோட வைஃப்னு சொல்லிக்க அவனும் விரும்ப மாட்டான்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று உஷாவின் அறையை நோக்கிச் சென்றாள்.
அவள் சென்றதும் கௌசல்யா ராகவிடமும், ராதிகாவிடமும் மன்னிப்பு வேண்ட அவர்கள் அதிர்ச்சியில் அவள் பேசியதைத் தாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லையென்று கூறவும் அவர் நிம்மதியானார்.
கல்யாணி தேவி மைதிலியை அழைத்து வீட்டு மருமகனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைக் கூறவும் அவை அனைத்தையும் கௌசல்யாவும் ரகுநாதனும் மைதிலியின் வழிகாட்டுதலுடன் செய்து முடித்தனர்.
சடங்கு முடிந்த நேரத்தில் வந்து சேர்ந்த வருண் உஷாவின் மூலம் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு அடுத்து என்னவென்று ராகவுடன் சேர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். ராகவ் அவனிடம் “பய்யா! யாரோ அந்த போட்டோஸ், வீடியோவை மீடியாக்கு யாரு குடுத்தாங்கன்னு தெரிஞ்சா போதும். இதுக்குக் காரணமானவனை நான் சும்மா விடமாட்டேன்” என்றான் கோபத்துடன். வருண் அதைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியவன் அவந்திகாவைச் சமாதானப்படுத்த முயலுமாறு ராகவுக்கு அறிவுறுத்தினான்.
அவனது அறிவுரையைக் கேட்டவன் எழுந்து “நான் அவந்திகாகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று சொல்ல அந்த அறையிலிருந்தவர்கள் அடுத்த பிரளயத்திற்காக மனதைத் தயார்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
உஷா தன்னுடைய அறையைக் காண்பிக்க ராகவ் அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
தரையில் அமர்ந்து தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. தன் அழகிய சிறிய உலகத்திலிருந்து யாரோ தன்னை அடியோடு பெயர்த்து எறிந்தது போன்று இருந்தது அவந்திகாவிற்கு.
தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட மிகப்பெரிய முடிவைத் தன்னைத் தவிர அனைவரும் எடுத்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் ஆத்திரம் தணியாமல் கோபத்துடன் அமர்ந்திருந்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு “உஷா! ப்ளீஸ்., நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்., யாரோட முகத்தையும் பாக்க எனக்கு இஷ்டம் இல்ல” என்று அந்த ஆத்திரம் சிறிதும் தணியாத குரலில் கூறினாள்.
ஆனால் காலடிச்சத்தம் தன்னை நெருங்கவும் கோபத்துடன் எழுந்தவள் தன் எதிரே நின்ற ராகவைப் பார்த்ததும் ஒரு நிமிடம் உறைந்து நின்றாள். பின்னர் முகத்தைத் திருப்பிக்கொண்டு “நீயா? போய்டு ராகவ்! எனக்கு உன்னோட முகத்தைப் பாக்கக் கொஞ்சம் கூடப் பிடிக்கல. நான் கோவப்பட்டு ஏதும் சொல்றதுக்கு முன்னாடி நீயா போய்டு!” என்று பல்லைக் கடித்தபடிக் கூறினாள்.
“சோ இவ்ளோ நேரம் நீங்க கோவப்படாம ரொம்பப் பொறுமையாவா பேசிட்டு இருந்தீங்க? பெரியவங்கனு கூடப் பாக்காம எல்லாரையும் என்னென்ன பேசுன நீ?” என்று பதிலுக்கு அவனும் இறுக்கமான குரலில் கேலி விரவி கூறி முடித்தான் அவளை முறைத்தவாறே.
“எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்ல. யாருமே என்னைப் பத்தி யோசிக்காதப்போ நான் மட்டும் ஏன் மத்தவங்களப் பத்தி கவலைப்படணும்? வெயிட்., நீ யாரு எனக்கு அட்வைஸ் பண்ண? டோண்ட் கிராஸ் யுவர் லிமிட்., கெட் அவுட் மேன்” என்று கோபத்துடன் கத்தினாள்.
“இப்படியே விட்டா இவ இந்த வீட்ல இருக்கிற எல்லாரையும் பைத்தியமாக்கிடுவா” என்று மனதில் சொல்லிக்கொண்டவன் அவள் அவனை வெளியேற்றுவதற்காக அவனை நோக்கிக் கையில் கிடைத்த பொருட்களைத் தூக்கி எறியவும் அவனால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தான்.
அவன் கையைப் பிடித்த கோபத்தில் அவள் மற்றொரு கையால் அவனை அறைய முற்பட ராகவால் அமைதியாக இருக்க முடியவில்லை, அவளது இரு கைகளையும் மடக்கி முதுகுக்குப் பின் கொண்டு சென்றவன் “இனாஃப்! நீ இதுவரைக்கும் கத்துனதுக்கு, ஸ்டுப்பிட் தனமா பிஹேவ் பண்ணதுக்கு, வீட்ல பெரியவங்களை மதிக்காம நடந்துகிட்டதுக்கு எல்லாம் நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம் நான் பண்ண விஷயம் உன்ன ரொம்பவே ஹர்ட் பண்ணிருக்கறதால நான் உன்ன ஏதும் சொல்லி அகெய்ன் ஹர்ட் பண்ணக் கூடாதுனுதான். பட் என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று கோபத்துடன் ஆனால் அமைதியான குரலில் கூறினான்.
அந்தக் குரல் அவந்திகாவின் மனதில் குளிரைப் பரப்பியது. பயத்தில் பேசாமல் நின்றவள் பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “ஒரு நாள் திடீர்னு உன்னோட உலகம் மாறிப் போச்சுனா அதுவும் அந்த மாற்றம் உன்னோட சம்மதம் இல்லாம நடந்தா மட்டும்தான் நான் இருக்கிற நிலைமை உனக்குத் தெரியும் ராகவ்., மத்த விஷயத்தை விடு., சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட கிளாஸ் பாக்குற நீ எப்பிடி ஒரு மிடில் கிளாஸ் பொண்ண உன்னோட வைஃபா ஏத்துப்ப? ” என்று கசந்த குரலில் கூறினாள்.
அவள் கொஞ்சம் அமைதியாகக் கூறவும் அவள் கைகளை விடுவித்தவன் “அத பத்தி நீ கவலைப்பட வேண்டாம்! யூ ஹேவ் டு லிசன் ஒன் திங்., இங்க ஒரு கல்யாணம் நடக்கப் போகுது., நம்ம ரெண்டு பேரோட பர்சனல் ப்ராப்ளம்ஸால அதுல குழப்பம் வர்றது எனக்குப் பிடிக்கல” என்றான்.
“ஐ ஹோப் நீ உஷா பாபி மேல வச்சிருக்கிற பாசம் உன்னை அகெய்ன் இந்த மாதிரி ரூடா பிஹேவ் பண்ண விடாது! உன்னோட ஃப்ரெண்ட்ஷிப் உண்மையா இருந்தா இந்த மேரேஜ் முடியற வரைக்கும் நீ மிஸஸ். ராகவ் கபூரா நடிச்சா போதும்! இதால ரெண்டு ஃபேமிலிலயும் இருக்கிற டென்ஷன் குறையும். அவங்க மேரேஜும் நல்லபடியா முடியும்.”
அவன் அவ்வாறு கூறவும் சிறிது நேரம் யோசித்தவள் தன்னால் வருணுக்கும் உஷாவுக்கும் மனக்கஷ்டம் வரக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். சரியென்று அவள் தலையாட்ட ராகவுக்கு இப்போதைக்கு இந்தப் பிரச்சனை முடிந்தது என்ற நிம்மதி மனதில் பரவ அவளை அழைத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றான்.
நடு ஹாலில் இருந்த அனைவரின் முகமும் பதற்றமும் கவலையுமே நிறைந்திருக்க அனைவரின் கண்களும் மாடியையே நோக்கியிருந்தது. அறையிலிருந்து சேர்ந்து வெளியே வந்த ராகவையும் அவந்திகாவையும் பார்த்தவர்கள் அடுத்து என்ன கலவரமோ என்ற எண்ணத்திலிருக்க ராகவின் பின்னால் வந்துகொண்டிருந்த அவந்திகாவின் முகத்தில் இருந்த கோபம் காணாமல் போயிருந்ததைப் பார்த்துக் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஹாலின் நடுவில் வந்து நின்றவர்கள் அமைதியாக அனைவரையும் பார்க்க அவந்திகா பேச ஆரம்பித்தாள்.
“முதல்ல எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க! ஏதோ கோவத்துல நான் பேசிட்டேன்! திடீர்னு இப்பிடிலாம் நடந்ததும் என்னால அத ஏத்துக்க முடியாமதான் நான் கொஞ்சம் ரூடா பிஹேவ் பண்ணிட்டேன். சாரி!” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தனர் உஷா, ரித்திமா மற்றும் கௌசல்யா. ஏனெனில் இவர்கள் மூவரும் அறிந்த வரை அவந்திகாவின் கோபம் அவ்வளவு எளிதில் தீராது என்பதுதான்.
ஆனால் அவந்திகாவைப் பொறுத்தவரை என்னதான் அவளது கோபத்தில் நியாயம் இருந்தாலும் அது வருண் உஷாவின் திருமணத்தில் குழப்பத்தை விளைவிக்கக் கூடாது என்று எண்ணினாள்.
“பட் எனக்கு இந்த ரிலேஷன்ஷிப்பை ஏத்துக்கக் கொஞ்சம் டைம் வேணும்” என்று கூறியவளைப் பார்த்த ராதிகா மகிழ்ச்சியுடன் “யூ கேன் டேக் யுவர் ஓன் டைம்! பட் சீக்கிரமா நல்ல முடிவா எடு” என்று சொல்ல அவந்திகா சரியென்று தலையசைத்தாள்.
அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராகவ் அறையில் அவந்திகா கூறிய விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தான்.
“ஓகே! எனக்கு வருணும் உஷாவும் நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்காக இந்தக் கல்யாணம் முடியுறவரைக்கும் நான் நீ சொல்றபடி கேக்குறேன். பட் அதுக்கு அப்புறமா நீ என்னோட வழில வரக்கூடாது” என்று தீர்மானமாகக் கூறியவளுக்குச் சரியென்று பதிலளித்ததை யோசித்தவன் அதை அறியாமல் சந்தோஷப்படும் குடும்பத்தினரை நினைத்துக் கலங்கினான்.
அவந்திகாவோ இது எதையும் யோசிக்காமல் இனி உஷாவின் திருமணத்தில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று மனதினுள் தீர்மானித்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


