test post

கத்தரிக்காய் கடையல்

இது எங்கம்மா கிட்ட இப்ப கத்துக்கிட்ட ரெசிபி மக்களே. இட்லி, தோசை, சாதம்னு எதுக்கு வேனும்னாலும் இதை க்ரேவியா வச்சுக்கலாம். வாங்க சிம்பிள் கத்தரிக்காய் கடையல் பத்தி பாக்கலாம்!

தேவையான பொருட்கள்:

  1. கத்தரிக்காய்       – கால் கிலோ
  2. தக்காளி            – 2
  3. உருளைக்கிழங்கு – 2 (தோல் சீவியது)
  4. பச்சை மிளகாய் – 1 (நீளவாக்கில் கீறியது)
  5. வெள்ளைப்பூண்டு – 7 பற்கள்
  6. நல்லெண்ணெய்  – தாளிப்புக்கு
  7. கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிப்புக்கு
  8. கறிவேப்பிலை   – ஒரு கொத்து
  9. கொத்துமல்லி தழை – பொடியாக நறுக்கியது
  10. மல்லித்தூள் (தனியா) – 3 டேபிள் ஸ்பூன்
  11. சாம்பார் தூள்          – 1 டேபிள் ஸ்பூன்
  12. மஞ்சள் தூள்          – 1 டீஸ்பூன்
  13. உப்பு                  – தேவையான அளவு

செய்முறை:

  • கத்தரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் வைத்து, அவற்றுடன் உரித்த வெள்ளைப்பூண்டு பற்களையும் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு 4 விசில்கள் ஹை ஃப்ளேமில் வைக்கவும். ஐந்தாவது விசில் மட்டும் சிம்மில் வைத்து விட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
  • பதினைந்து நிமிடங்கள் கழித்து குக்கரைத் திறந்து வேகவைத்த கத்தரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு கலவையை மத்து அல்லது மாஷர் வைத்து மசித்துக்கொள்ளவும்.
  • பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துவிட்டு மசித்தக் கலவையை அதில் ஊற்றவும்.
  • மல்லித்தூள் மற்றும் சாம்பார் பொடி மேற்சொன்ன அளவில் கலந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
  • நன்றாகக் கொதித்து மனம் வந்த பிறகு கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

குறிப்புகள்:

  • பூண்டு சேர்க்காதவர்கள் அதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
  • தாளிக்கும்போது பூண்டைத் தோலுடன் இடித்துப் போட்டு தாளித்தால் இன்னும் மணமாக இருக்கும்.
  • குழம்பு கொதிக்கும்போது விரும்பினால் பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.

நேத்து இந்தக் குழம்புதான் இங்க வச்சோம். லஞ்ச் அண்ட் டின்னருக்குச்  சரியா இருந்துச்சு. ட்ரை பண்ணி பாருங்க. வீக்லி ஏழு நாள்ல ஒரு நாள் இந்தக் குழம்பு கட்டாயம் வைக்குற அளவுக்கு உங்களுக்கு இதோட டேஸ்ட் பிடிச்சுப் போயிடும்.

PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

அடுத்த வாரம் வேற ஒரு ரெசிபியோட வர்றேன். குட் நைட் மக்களே!

NM Tamil Novel World

📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!

 

Share your Reaction

Loading spinner