.
.
“வேண்டாம் மாறன்! இவனுக்கு வாட்டர் பாட்டில் மட்டும் வாங்கிக்கிறேன். இந்த புக்ஸ் எல்லாம் அமேசான், ஃப்ளிப்கார்ட்ல இதை விட மலிவா கிடைக்கும்”
ஒரு பெண்ணின் குரல் கேட்டுப் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த மலர்விழி நிமிர்ந்தாள்.
அவளது இடத்திலிருந்து வலப்பக்கம் திருப்பினால் ஸ்டேசனரி ஐட்டங்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையானப் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
அங்கே நின்றபடி ஒரு வாட்டசாட்டமான ஆடவனிடம் பேசிக்கொண்டிருந்தாள் அப்பெண். அவளருகே நின்று கொண்டிருந்த சிறுவனோ அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த வண்ணமயமானச் சிறுவர் கதை புத்தகங்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
குழந்தைக்குச் சோறூட்டவே மொபைலில் யூடியூப் காட்டும் இந்தக் காலத்தில் புத்தகத்தைப் பார்த்து ஏங்கிய அச்சிறுவன் மலர்விழிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தான்.
“மேடம்” சற்று சத்தமாக அப்பெண்ணை அழைத்தாள் அவள்.
அந்தப் பெண்ணோடு சேர்த்து அவளருகே நின்ற ஆடவனும் திரும்பினான். அப்பெண்ணின் விழிகளில் இருந்த சினேகமான பாவனை, அவளது இதழ்களில் இருந்த சிரிப்பு இந்த இரண்டும் அவனிடம் மிஸ்சிங்.
தினசரி உணவுக்குப் பதிலாக கல்லையும் கான்க்ரீட்டையும் குழைத்துச் சாப்பிடுவான் போல! அத்துணை இறுக்கம் அவனது முகத்தில்! போதாக்குறைக்கு அவன் அணிந்திருந்த ரிம்லெஸ் கண்ணாடி வேறு அந்த இறுக்கத்துக்குக் கறார் ரூபத்தை வழங்கிவிட மொத்தத்தில் எதற்காக அந்தப் பெண்ணை அழைத்தோம் என்பதையே மறந்து நின்றாள் மலர்விழி.
“சொல்லுங்க” என்று அந்தப் பெண் அழுத்தமாக உரைக்கவும்
“அது… குழந்தைக்குக் கதை புத்தகம் பிடிச்சிருக்குனு நினைக்குறேன்” என்றாள் அச்சிறுவன் பார்த்துக்கொண்டிருந்த புத்தகத்தைக் காட்டி.
அப்பெண்ணோ மறுத்தாள்.
“ட்ரெயின் ட்ராவல் முடியுறதுக்குள்ள புக்கைக் கிழிச்சிடுவான்” என்றாள்.
“நோ மம்மி! இந்தத் தடவை நான் கிழிக்க மாட்டேன். ப்ராமிஸ்”
சிறுவன் சத்தியம் செய்தபடி அந்த ஆடவனைப் பார்த்தான்.
‘எனக்காகப் பேசேன்’ என்ற செய்தி அவனது விழிகளில்.
அவ்வளவுதான்! இவ்வளவு நேரம் கல்லும் கான்க்ரீட்டும் என கற்பனை செய்தவளுக்கே அதிர்ச்சியூட்டும் விதமாக மெல்லிய புன்னகை அந்த ஆடவனின் இதழில்!
ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அளவாய் தெரிந்த மீசையோடு அவன் புன்னகைப்பதைப் பார்க்க அத்துணை வசீகரமாக இருந்தது.
‘அழகாகச் சிரிப்பவர்கள் பெரும்பாலும் சிரிப்பதேயில்லை’
மனதுக்குள் நினைத்துக்கொண்டவள் “அமேசான், ஃப்ளிப்கார்ட்ல விலை குறைவா இருக்கலாம். ஆனா புக்கோட அட்டையைத் தொட்டு ரசிச்சு, அதுக்குள்ள இருந்து வர்ற வாசனையை நுகர்ந்து அனுபவிச்சு வாங்குறது கடைல மட்டும்தானே சாத்தியம் மேடம். வாசிப்பு பழக்கமே இல்லாத தலைமுறைல உங்க மகன் புக் வேணும்னு கேக்குறது பெரிய விசயம். ஒரே ஒரு தடவை வாங்கி குடுங்க. இதைக் கிழிச்சான்னா ‘புக் சரஸ்வதி, அதை கிழிக்கக்கூடாதுனு’ சொல்லுங்க. அவன் கேட்டுப்பான். அப்பிடித்தானே குட்டிப்பையா?” என்று அச்சிறுவனைக் கேட்க
“ஆமா ஆன்ட்டி” என்று சொல்லி மலர்விழியின் குட்டி இதயத்தில் அணுகுண்டு வீசினான் அவன்.
“ஆன்ட்டியா?” உதடு துடிக்க, சிறுபிள்ளை போல கேட்டுவிட்டு அவன் கை காட்டிய புத்தகத்தை எடுக்கச் சென்றவளுக்கு ரிம்லெஸ் கண்ணாடி ஆடவனின் உதட்டுக்குள் சிறைபட்ட சிரிப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புத்தகத்தை வாங்கியதும்தான் சிறுவனின் முகத்தில் எவ்வளவு சந்தோசம்!
“எவ்ளோ?” அந்த ஆடவன் கேட்க
“மு…முப்ப… முன்னூறு சார்” என்றாள் மலர்விழி தடுமாற்றத்துடன்.
“டிஸ்கவுண்ட்?”
“ஹான்?”
“வெளிய போர்டுல குழந்தைங்க படிக்கிற புக்சுக்கு பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட்னு போட்டு இருக்குதே! டிஸ்கவுண்ட் எவ்ளோனு கேட்டேன்”
அவன் சாதாரணமாகத்தான் பேசினான். ஆனால் மலர்விழிக்குத்தான் அது அதட்டல் தொனியாகத் தோன்றியது.
“டிஸ்கவுண்ட்” என்று பரபரத்தவள் கால்குலேட்டரைத் தேடினாள்.
“இங்க இருக்கு” தனக்கு அருகே இருந்த புத்தக அடுக்கின்மீது வைக்கப்பட்டிருந்த கேசியோ கால்குலேட்டரை அவன் எடுத்து நீட்டவும் மலர்விழிக்குச் சங்கடமாகப் போனது.
‘என்னவாயிற்று எனக்கு? இப்படி இவன் முன்னே ஏன் தடுமாறித் தொலைக்கிறேன்?’
படபடத்த மனதை அடக்கிக்கொண்டு தள்ளுபடி கழித்து மிச்சமுள்ள தொகைக்குப் பில் போட்டுப் புத்தகத்தை நீட்டினாள் அவள்.
“கடைக்கு வர்ற கஷ்டமர்ஸ் கிட்ட லாவகமா பேசத் தெரிஞ்சா மட்டும் போதாது. டென்சன் இல்லாம சூழ்நிலைய கையாளவும் தெரியணும்”
அமர்த்தலாக, அதட்டலாக அவளிடம் சொல்லிவிட்டுப் புத்தகம் இருந்த பையை வாங்கிக்கொண்டு கிளம்பினான் அந்த ரிம்லெஸ் கண்ணாடிக்காரன்.
மலர்விழியால் மலங்க மலங்க விழிக்க மட்டுமே முடிந்தது அப்போது! இப்போது போலவே!
அந்த ரிம்லெஸ் கண்ணாடிக்காரனே கல்லூரியின் கரஸ்பாண்டெண்ட் மற்றும் சேர்மனாக வந்து அமர்வான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?
“நான் ஒரு கேள்வி கேட்டேன்! அதுக்கு இன்னும் பதில் வரல” அதிகாரமாய்க் கேட்டவனின் முன்னே மேஜையிலிருந்த பெயர்ப்பலகையில் ‘மகிழ்மாறன் – கரஸ்பாண்டெண்ட் & சேர்மன்’ என்று எழுதியிருந்ததை வாசித்தவளுக்கு மெல்ல கண்கள் இருட்டிவிட கல்லூரியின் கரெஸ்பாண்டெண்ட் அலுவலக அறையின் தரையில் பொத்தென மயங்கி விழுந்தாள் மலர்விழி.
************
ஹலோ மக்களே!
மலர்விழியும் மகிழ்மாறனும் நாளை முதல் தளத்தில் வருவாங்க. இதுவும் டெய்லி எபி வரும். கதை முடிஞ்சதும் லாக் பண்ணிடுவேன். அதனால இப்ப இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்! நன்றி!
Share your Reaction
Correspondent na eppdi kanji kudichcha maari verappaa thaan erukkanumo 😝😝😝😝
Share your Reaction
Enna da ithu ipadi heroine ah teaser la yae mayakam potu vizhavachitan oru vela ithu than azhaga la mayangi vizhuratho 🤔🤔
Share your Reaction
அட...இந்த மலர்விழி என்ன பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்ங்கிற கேட்டகரியை சேர்ந்தவளோ...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@sasikumarmareeswari ஆமா ரொம்ப ஸ்ட்ரிக்டு
Share your Reaction
@kavibharathi அழகுல இல்ல, அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டா... பாவம் 🤣 🤣 🤣
Share your Reaction
Ivan yen ivalo verappa irukkaan?? 1st meet laye heroine ah bayappada vechitaan.... Paavam payapula mayangi vilundhuruchu... 🤣
Waitting....
Share your Reaction
Waiting for the epi sis🔥
Share your Reaction
@hn5 எல்லாம் ஒரு ஆட்டிட்டியூட் தான் 😉 😉 😉
Share your Reaction
@sakthi நாளைக்கு எபியோட வந்துடுவேன் 🤩
Share your Reaction
கரஸ் அழகுல மயங்கி விழலியே அதட்டலில் தானே மயங்கி விழுந்திருக்கா
Share your Reaction
👌👌
Share your Reaction
- மலர் மாறன் ஜோடி சூப்பர்.
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan