NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
சருமப் பாதுகாப்பில்...
 
Share:
Notifications
Clear all

சருமப் பாதுகாப்பில் நாம் செய்யும் தவறுகள் 1.2

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

சருமப் பாதுகாப்பில் நாம் செய்யும் தவறுகள் – இது ரெண்டாவது பகுதி.

இதுல உங்கள்ல சிலருக்கு மாற்று கருத்து கூட இருக்கலாம். எந்தத் தகவல் உங்களுக்குப் பொருந்துதோ அதை மட்டும் எடுத்துக்கோங்க மக்களே.

1. சருமத்துக்குப் பயன்படுத்தும் இயற்கையானப் பொருட்கள் அனைத்தும் நல்லவை.

உண்மை :

இயற்கையில கிடைக்குற எல்லாமே சருமத்துக்கு நல்லதுனு சொல்ல முடியாது. இயற்கையா கிடைக்குற எத்தனையோ செடிகள் விஷத்தன்மையோட இருக்குறது அதுக்கு உதாரணம். சருமத்துக்குச் சிலர் எண்ணெய் யூஸ் பண்ணுவாங்க. எசன்சியல் ஆயில் பயன்படுத்துறது இப்ப ட்ரெண்டாவே ஆகிடுச்சு. அந்த ஆயில்ஸ் சிலருக்கு அலர்ஜிய உருவாக்கும். ஆயிலி ஸ்கின் உள்ளவங்க முகத்துல எசன்சியல் ஆயில் பயன்படுத்துனா பிம்பிள், ஆக்னே எல்லாம் வரும். அதனால உங்க ஸ்கின்னுக்கு எது ஒத்து வருதுனு பாத்துட்டு பயன்படுத்துங்க.

 

2. ஆயிலி ஸ்கின் இருந்தா மாய்சுரைசர் போட வேண்டாம்.

உண்மை :

எல்லாவித சருமத்துக்கும் மாய்சுரைசர் போடுறது அவசியம். ஆயிலி ஸ்கின்ல மாய்சுரைசர் போடலனா சீபம் அதிகமா சுரந்து உங்களுக்கு ஆக்னே வர்றதுக்கான வாய்ப்பு அதிகம். உங்க முகத்துல இருக்குற போர்ஸ்ல தங்காத (இதை non – comedogenicனு சொல்லுவாங்க) லைட் வெயிட்டான மாய்சுரைசரை பயன்படுத்தலாம்.

 

3. ஸ்கின் பளபளனு இருக்கணும்னா தினமும் லூஃபா, ஸ்க்ரப் வச்சு அழுத்தித் தேய்க்கணும். எக்ஸ்ஃபாலிடேட் பண்ணனும்.

உண்மை :

ஓவரா ஸ்கின்னை அழுத்தித் தேய்ச்சா உங்களோட ஸ்கின் பேரியர்ல கண்ணுக்குத் தெரியாத சின்ன சின்ன காயங்கள் உருவாகும். முக்கியமா லூஃபா, காபித்தூள் ஸ்க்ரப், அரசிமாவு ஸ்க்ரப், சுகர் ஸ்க்ரப் எல்லாம் போட்டு முகத்தைக் கரகரனு தேய்க்குறது தப்பு. இதெல்லாம் செஞ்சா டெட் ஸ்கின் செல்ஸ் போகுமோ இல்லையோ முகத்துல ஹைஃபர் பிக்மெண்டேசன்னு சொல்லப்படுற கருப்பு திட்டுகள் மெதுமெதுவா உருவாகும்.

 

4. ஹோம்மேட் ரெமடி சருமத்துக்குப் பாதுகாப்பானது.

உண்மை :

நீங்க பயன்படுத்துற மாய்சுரைசர், க்ளென்சர்/ ஃபேச் வாஷ், இதர ஸ்கின் கேர் பொருட்கள்ல நிர்ணயம் செய்யப்பட்ட சரியான அளவுகள்ல பிரிசர்வேட்டிவ் இருக்கும். ஆனா வீட்டுல தயார் செஞ்சு போடுற பொருட்கள்ல அதெல்லாம் நம்ம கலக்குறதில்ல. தெரிஞ்சோ தெரியாமலோ அதுல பாக்டீரியா, பூஞ்சை வளருறதுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால வீட்டுல ரெடி பண்ணுற ஸ்கின்கேர் ரெமடிகளை முடிஞ்சளவுக்கு அன்னைக்கே காலி பண்ணிடுங்க. ஃப்ரிட்ஜ்ல வச்சு ஒரு மாசம் பயன்படுத்தலாம்னு யூடியூப்ல உருட்டுவாங்க. அதை நம்பாதிங்க.

 

5. தேங்காய் எண்ணெய் எல்லாவித சருமத்துகும் நல்லது.

உண்மை :

தேங்காய் எண்ணெய் கொமடோஜெனிக்னு சொல்லுவாங்க. அதை முகத்துல தேய்ச்சா சருமத்துல இருக்குற போர்ஸ்ல நுழைஞ்சு அடைச்சிடும். அதனால உங்களுக்கு பிம்பிள், ஆக்னே அதிகமாகும். வறண்ட சருமம் உள்ளவங்க மட்டும் தேங்காய் எண்ணெய்யை மாய்சுரைசரா முகத்துல பயன்படுத்தலாம்.

 

உங்களோட ஸ்கின்ல என்ன பிரச்சனை வந்தாலும் அதுக்கான மருத்துவரை அணுகுவது நல்லது. கை, கால் போல தோலும் ஒரு உறுப்பு. அதுதான் உள்ளுறுப்புகளை பாதுகாக்குது. சோ அதுல வர்ற பாதிப்புகளை குறைச்சு எடை போடாதிங்க.

டீனேஜ்ல பரு வர்றது நார்மல். ஆனா அதுவே அதிகமாச்சுனா டாக்டரை பாருங்க. அவங்க குடுக்குற அட்வைஸை ஃபாலோ பண்ணுங்க. அவங்க ப்ரிஸ்கிரைப் பண்ணுற பார்மசி ஸ்கின் கேரை பயன்படுத்துங்க. டீனேஜ் மட்டுமில்ல, எல்லா வயதினருக்கும் இது பொருந்தும். தனியார், அரசு மருத்துவமனைகள்ல டெர்மாடலிஜிஸ்ட் இருப்பாங்க. அவங்க கிட்ட கன்சல்ட் பண்ணலாம்.

இதோட இந்த டாபிக்கை முடிச்சிக்கலாம் மக்களே! என்னோட ஸ்கின் காம்பினேசன் ஸ்கின். எனக்கு ஹோம் ரெமடி எதுவுமே ரிசல்ட் குடுத்ததில்ல. நான் ரொம்ப லேட்டா ஸ்கின் கேர் ரொட்டீன் ஆரம்பிச்சேன். எடுத்ததும் சீரம், க்ரீம்னு போடாம ஒரு க்ளென்சர், மாய்சுரைசர், சன் ஸ்க்ரீன் இப்பிடி ஆரம்பிச்சதுதான் என்னோட ஸ்கின் கேர் ஜர்னி.

 

ஸ்கின் கேரை மேக்கப்போட சேர்த்து குழப்பிக்கிறவங்க அதிகம். ரெண்டும் வேற வேற. ஸ்கின் கேர் அத்தியாவசியம். மேக்கப் எனக்கு ஆடம்பரம். நாம கரெக்டா ஸ்கின் கேர் ரொட்டீனை ஃபாலோ பண்ணுனா மேக்கப் கூட அனாவசியமா தோணும் ஒரு கட்டத்துல. சோ யோசிங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் கேர்ள் சேனல் லிங்க் குடுக்குறேன். அவங்க வீடியோல எந்த பொருளுக்கும் விளம்பரம் செய்யமாட்டாங்க. என்ன உண்மையோ அதை சொல்லுவாங்க. விரும்புனா அவங்க வீடியோ பாருங்க. அடுத்து வேறு ஒரு டாபிக்கோட வர்றேன். நன்றி!

 

1752158659-WhatsApp-Image-2025-07-05-at-210853_e162f759.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : July 10, 2025 8:14 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : July 10, 2025 8:25 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin
(@gowsalya-m)
Active Member Member

Enakume home remedies perusa work out aanathu illa ka... Lockdown la ukkanthu neraiya try panniruken!!.. Naanume make up skincare kolaikita aaluthan... 

Aama moisturizer use panna aarambichathula irunthu face romba nalla Iruku!!... Athula irunthuthan skin care correct ah follow panren!!.. pimples ellame nallave koranchathu

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 10, 2025 4:41 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@gowsalya-m super da 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 17, 2025 6:36 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index