NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
மாயப்பூவே வாசம் எங்...
 
Share:
Notifications
Clear all

மாயப்பூவே வாசம் எங்கே - டீசர் 2

Page 1 / 2
 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“நீங்க உள்ள போங்க மிஸ்” என்று சொல்ல

“தேங்க்ஸ் சார்” என்றவள் அடித்துப் பிடித்துக்கொண்டு விருந்தினர் மாளிகை கேட்டைத் தாண்டி உள்ளே சென்றாள்.

சுற்றி செடிகள், மரங்கள் நிறைந்த இடத்தில் நட்டநடுவில் இருந்த விருந்தினர் மாளிகையின் தாழ்வாரத்தில் யாரோ நடமாடுவது போல தெரிந்தது. அதைக் கவனியாமல் “ஸ்னோபெல்! வாஸ் வாஸ் வாஸ்” என்று பூனையை அழைத்தபடி செடிகளுக்கிடையே தேடினாள் சுபத்ரா.

“ஸ்னோபெல்”

எப்போதும் ஒரு முறை அழைத்தாலும் ஓடோடி வந்துவிடும் அவளது பூனைக்குட்டி. இப்போது இத்தனை முறை அழைத்தும் வரவில்லை என்றதும் சுபத்ராவுக்கு அழுகை முட்டியது.

இவ்வளவு நேரம் சாரலாய்த் தூவி தயை காட்டிய மழை பெருவேகமெடுத்துப் பெய்யத் துவங்கியபோது யாரோ விருந்தினர் மாளிகையிலிருந்து குடை பிடித்தபடி அவளைத் தேடி வந்தார்கள்.

யாரென அருகில் வந்ததும் கண்டுகொண்டவள் திடுக்கிட்டு அங்கிருந்து செல்ல முயல குடையை உயர்த்தி முகத்தைக் காட்டினான் பார்த்திபன்.

“பூனைக்குட்டி வேண்டாமா உனக்கு?”

சட்டெனத் திரும்பிய சுபத்ராவின் கண்கள் பரபரவென ஸ்னோபெல்லைத் தேடின.

விருந்தினர் மாளிகையை நோக்கி கை காட்டியவன் “கால்ல சின்னதா அடி பட்டிருக்கு. இப்ப தான் கட்டு போட்டேன். உள்ள வந்து பாரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் விருந்தினர் மாளிகையை நோக்கி நடந்தான்.

சுபத்ராவுக்கோ ஸ்னோபெல்லைப் பார்க்கவேண்டுமென்ற ஏக்கம்! அதே நேரம் இவனுடன் போகவேண்டுமா என்ற பயமும்!

முதல் முறை அவனைப் பற்றி விமர்சித்தபோதே காட்டமாக முறைத்தானே! ஒருவேளை மறந்திருப்பானோ!

நடந்தவன் திடுமென நின்று அவளை நோக்கி திரும்பினான்.

“நான் கேசனோவானு யோசிக்குறியா? சாரி! உன் கிட்ட எனக்கு இண்ட்ரெஸ்ட் எதுவும் வரல. என் டேஸ்ட் அவ்ளோ மட்டமில்ல. நீ தாராளமா வரலாம்”

அவன் தன்னை மட்டம் தட்டவும் பற்றிக்கொண்டு வந்தது சுபத்ராவுக்கு.

இவனைப் பற்றி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் சொல்வது அனைத்தும் உண்மைதான் போல! பெயரே அர்ஜூனனுடையதுதானே!

என்னென்னவோ யோசித்தபடி அவன் பின்னே ஓடியவள் விருந்தினர் மாளிகையின் காரிடாரை அடையும் முன்னரே தொப்பலாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு நனைந்துவிட்டாள்.

சுடிதாரின் துப்பட்டாவைக் குறுக்கே போட்டுக்கொண்டவள் பார்த்திபனின் சாயலில் ஒரு முதிர்ந்த நபரைப் பார்த்ததும் திகைத்தாள்.

“பார்த்தி”

“அந்தப் பூனைக்குட்டியோட ஓனர் வந்தாச்சு. குடுத்துடுங்கப்பா”

அமர்நாத் புன்னகைத்தவர் “கால்ல சின்னதா அடிபட்டிருக்கும்மா. வெட்னரி டாக்டர் கட்டு போட்டிருக்கார். இப்ப மழையில நனைஞ்சிட்டே கொண்டு போனா காயம் சீழ் வச்சிடும்” என்றார்.

“ஆனா சார்...”

“மழை நிக்கட்டும். அப்புறமா போகலாம். உக்காருங்க. செயிண்ட் பீட்டர்ஸ்லதானே ஒர்க் பண்ணுறிங்க? என்ன சப்ஜெக்ட் எடுக்குறிங்க?”

இதமாய்ப் பேசியபடி சோஃபாவைக் காட்டினார் அவர். சுபத்ராவுக்குத்தான் அங்கே இருப்பது முள்படுக்கைமீது நிற்பது போன்ற உணர்வு.

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவனின் பார்வை அத்தகையது.

“உக்காருங்கம்மா”

அமர்நாத் வற்புறுத்தியதும் அமர்ந்தாள் சுபத்ரா. வேலையாளிடம் அவளுக்குச் சூடாய்த் தேநீர் கொண்டு வரச் சொன்னார்.

“அவ்ளோ பாசமா பூனை குட்டி மேல?” விசாரித்தவரின் குரலில் தந்தையின் வாஞ்சை.

அதுவே சுபத்ராவை இயல்பாக்கப் போதுமானதாய்!

“எனக்கு மனுசங்க மேல பாசம் வைக்க பயம் சார்”

“ஏன்?”

“அது... நான் யார் மேலயாச்சும் பாசம் வச்சா அவங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்துடும். எல்லாரும் சொல்லி சொல்லி.... அதான் நான் யார் கூடவும் பழகுறதில்ல. இங்க எனக்கு ஸ்னோபெல் தவிர வேற யாரும் இவ்ளோ நெருக்கமில்ல”

பார்த்திபனுக்கு அவள் சொல்வதைக் கேட்க வினோதமாக இருந்தது. ஒருவேளை பொய் சொல்கிறாளோ? அவளது பெரிய விழிகளை ஆராய்ந்தவனுக்கு அதில் பாய்ந்திருந்த செவ்வரிகள் பூனையைக் காணாமல் அவள் கலங்கியதைப் பிரகடனப்படுத்திவிட்டன. உண்மையென அறிந்தவனுக்குத் தன்னை கேசனோவா என்று மட்டம் தட்டியவள் மீது கொஞ்சம் போல இளக்கம் பிறந்தது.

“அதெல்லாம் ஒன்னும் கிடையாதும்மா. பாசம், அன்பைச் சகமனுசங்க கிட்ட காட்டுறது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா? அதுவும்  போலித்தன்மை எதுவும் இல்லாம  உண்மையான அன்பையும் பாசத்தையும் கொட்டுறவங்க இந்த உலகத்துல ரொம்ப கம்மி”

தேநீர் வந்துவிட்டது. சுபத்ரா அதை அருந்தியதும் அமர்நாத் இன்னும் சில விசயங்களைப் பொதுப்படையாகப் பேச அவளும் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள்.

மழையும் நின்றது.

மூங்கிலால் மூடி போட்ட கூடை ஒன்றில் சுருண்டு படுத்துக் கிடந்த ஸ்னோபெல்லை அவளிடம் ஒப்படைத்தார் அமர்நாத்.

“தேங்க்யூ சார்” கண்கள் கலங்க நன்றி கூறினாள் சுபத்ரா.

“நான் என்னம்மா பண்ணுனேன்? எல்லாம் பார்த்தி வேலை. அவன்தான் தோட்டத்துல கத்துன உன்னோட ஸ்னோபெல்லைத் தூக்கிட்டு வந்து டாக்டரை வரவழைச்சான்” என்றார் அவர்.

சுபத்ராவின் பெரிய விழிகள் ஆராய்ச்சியாய் பார்த்திபனை நோக்க அவனோ எவ்வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் நின்றான்.

“த...தேங்க்யூ சார்” என்றாள் திக்கித் திணறி.

“தேங்க்யூக்கு இனிஷியல் எல்லாம் உண்டா?”

சிரிக்காமல் கேட்டு அவள் திணறியதைக் குறிப்பு காட்டினான்.

“பார்த்தி விடுப்பா” அமர்நாத் சிரித்தபடி வழியனுப்பி வைத்தார் அவளை.

இந்தக் குடைய பிடிச்சுட்டுப் போ. நாளைக்கு ஸ்கூல்ல ஷூட் நடக்குறப்ப என் ஃப்ரெண்ட் கிட்ட குடுத்துடு”

குடையை நீட்டினான் அவன்.

அதையும் தயக்கத்தோடு வாங்கிக்கொண்டாள் சுபத்ரா.

“ஏன் இவ்ளோ தடுமாற்றம்? அன்னைக்குக்  கேசனோவானு என்னைக் கேவலமா  பேசுனப்ப அவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்துச்சு உன் குரல்”

குத்தலாய் ஒலித்ததோ அவனது குரல்! சட்டென அவனது விழிகளைப் பார்த்தாள் சுபத்ரா.

“பி.ஆர்னு ஒன்னு உண்டு கேள்விப்பட்டிருக்கியா? அது ரொம்ப பவர்ஃபுல்லானது. என்னை மாதிரி சினிமாக்காரனை உன்னை மாதிரி சாமானிய மக்கள் கிட்ட ரியல் ஹீரோவா கொண்டு போய் காட்டுறதே அந்தப் பி.ஆர் ஒர்க்தான். அவங்களால ஹீரோவ வில்லனாவும் சித்தரிக்க முடியும். கொஞ்சம் மூளை இருந்தா அதை ஈசியா புரிஞ்சிக்கலாம்”

‘எனக்கு மூளை இல்லையா?’ சீற்றமாய் முறைத்தவள் ஸ்னோபெல்லுக்குச் செய்த உதவிக்காக அமைதியாய்க் கேட்டாள்.

“மீடியால உங்களை கேசனோவானு சித்தரிச்சது  பி.ஆர் ஸ்டண்டாவே இருக்கட்டுமே! நீங்க அதை மறுத்திருக்கலாம், அது பொய்யானச் செய்தியா இருந்தா”

நிமிர்வாக அவள் கேட்டதும் பார்த்திபனின் விழிகளில் ஒரு நொடி கனல்! பின்னரோ சுவாரசியம்!

மோவாயை நீவியவன் “எதுக்கு மறுக்கணும்? சரியாவோ தப்பாவோ என்னைப் பத்தி டெய்லி ஒரு நியூஸ் வர்றப்ப அதை ஏன் நான் மறுக்கணும்? எனி பப்ளிசிட்டி இஸ் குட் பப்ளிசிட்டி” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு “குடையும் கூடையும் பத்திரம்” என்று குறிப்பு காட்டிவிட்டு விருந்தினர் மாளிகையை நோக்கி நடக்க சுபத்ராவும் அவன் சொன்னதை நம்பவா வேண்டாமா என்ற குழப்பத்தோடு மலைப்பாதையை நோக்கி விரைந்தாள்.

❤️❤️❤️❤️❤️❤️

ஹலோ மக்களே பார்த்திபனும் சுபத்ராவும் நாளைக்கு மானிங் உங்களை மீட் பண்ண வருவாங்க. காத்திருங்கள்!

1755399850-WhatsApp-Image-2025-08-17-at-083313_821366da.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 17, 2025 8:34 AM
(@kothai-suresh)
Reputable Member Member

இன்ட்ரஸ்டிங்👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 17, 2025 9:01 AM
(@crvs2797)
Reputable Member Member
  • சுபத்ரா & பார்த்திபன் எலியும் பூனையும் காம்போன்னு நினைக்கிறேன். டீஸர்லயே கலக்குறிங்க போங்க.

    இதான் உங்க கிட்ட பிடிச்சதே, எத்தனை பிசியான செட்யூல்லயும் அட்லீஸ்ட் ஒரு டீஸரையாவது போட்டு நீங்களும் ஆக்டீவ்வா இருப்பிங்க, எங்களையும் ஆக்டீவ்வா போரடிக்க விடாம வைச்சுப்பிங்க. உங்களோட ஆட்டிட்யூட்டுக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.
    ஹாட்ஸ் ஆஃப் டூ யூ.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 17, 2025 9:51 AM
(@ananthi)
Trusted Member Member

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 17, 2025 10:59 AM
(@kavibharathi)
Estimable Member Member

Eagerly waiting for them 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 17, 2025 12:29 PM
(@priyarajan)
Active Member Member

Waiting 😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 17, 2025 6:56 PM
 Sona
(@sona)
New Member Member

Eagerly Waiting Sago....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2025 8:51 AM
(@s-sivananalakshni)
Trusted Member Member

சூப்பர்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2025 3:03 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Romba late ah pick up pannirukken 😝

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 18, 2025 10:07 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh thank you aunty 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 19, 2025 6:48 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 thank you sis 🤩

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 19, 2025 6:48 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@ananthi thank you 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 19, 2025 6:49 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi 🤩🤩🤩 padichingala

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 19, 2025 6:49 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@priyarajan thank you 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 19, 2025 6:50 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sona thank you sis 🤩

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 19, 2025 6:51 AM
Page 1 / 2
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index