
கோவிலுக்குப் போன இடத்தில் நடந்த அனைத்தையும் மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிப்போடு புவனேந்திரனுக்காகக் காத்திருந்தாள் ஆதிரா.
அவளது கண்களில் இருந்த பரிதவிப்பும், மனதில் இருந்த பயமும் கிஞ்சித்தும் குறையவில்லை.
இவ்வளவு நேரம் மலர்விழியோடு அமர்ந்து கதிர்காமனைக் கொஞ்சியபோது இருந்த இதம் இப்போது தொலைந்து போன உணர்வு அவளுக்குள்!
‘புவனேந்திரனின் கோபம் குறைந்திருக்குமா?’
குறைந்திருக்கவேண்டுமென மனம் இஷ்டதெய்வத்திடம் வேண்டுதல் வைத்தது.
சுடிதார் துப்பட்டாவின் நுனியைத் திருகி திருகியே விரல்கள் வலியெடுத்தன.
“ஆதி” சிவகாமியின் குரல் கேட்கவும் முகத்தைச் சீராக்கிக்கொண்டாள் ஆதிரா. முகத்திலிருந்தே மனதைப் படிக்கும் ஜெகஜாலக் கில்லாடி மாமியாரிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பது பெரிய டாஸ்காக இருக்கிறது அவளுக்கு.
அவளது எண்ணங்களின் நாயகியே கண் முன் வந்து நின்றார் அங்கலாய்ப்புடன்.
“என்னத்தை?”
“இன்னும் முதலமைச்சர் நம்ம ஹோட்டல்ல இருந்து கிளம்பலையாம். இப்பதான் மாறன் கால் பண்ணி மலர் கிட்ட பேசுனான். அவர் கிளம்புன அப்புறம்தான் புவன் வருவானாம்”
இப்போது கூட தன்னிடம் அவன் சொல்லவில்லை என்ற எண்ணம் ஆதிராவின் முகத்தை வாட வைத்தது. சிவகாமி மருமகளின் முகவாட்டத்திற்கு வேறொரு காரணத்தை ஊகித்துக்கொண்டார்.
“என்னடிம்மா இதுக்காகவா டல் ஆகுற? தொழில்னா அப்பிடித்தானே ஆதி. நீயும் ஒரு பிசினசை நடத்துறவ. உனக்குத் தெரியாதா?” என ஆதுரமாகப் பேசியவர் பிடிவாதமாக அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார்.
“இன்னும் இந்த மலர் வரல பாரு” என அவர் சொல்லும்போதே மைந்தனைத் தோளில் போட்டுத் தட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள் மலர்விழி.
“கதிரை மாமா கிட்ட குடுத்துட்டு நீ சாப்பிடு பொண்ணே! குழந்தைங்க தோள் சுகம், மடி சுகம் கண்டுட்டா அம்மைய விட்டு விலாதுங்க”
நரசிம்மன் பேரனை வாங்கிக்கொள்ள மூன்று பெண்களும் சாப்பிட அமர்ந்தார்கள்.
ஆதிராவுக்குச் சாப்பாடு உள்ளே போகவே கஷ்டப்பட்டது.
“என்னாச்சு ஆதிக்கா? உடம்பு சரியில்லையா?” – மலர்விழி!
“இல்ல மலர். ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றாள் ஆதிரா அவசரமாக.
“உங்களுக்குப் பிடிக்கும்னு அத்தை ரவா கிச்சடி பண்ண சொல்லிருந்தாங்க. நீங்க என்னடானா ஸ்பூனை எடுக்குறிங்க, வைக்குறிங்க.”
“அது… அவங்க இன்னும் வரலை”
ஆதிரா தடுமாற நமட்டுச்சிரிப்போடு மலர்விழியும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“புவன் மாமா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்”
“அதெல்லாம் உன் புருஷன் குணம்டி பொண்ணே! அவன் குடுத்த ட்ரெயினிங்குல புவனும் மாறிட்டான்”
இருவரும் வேடிக்கையாகப் பேசி ஆதிராவைச் சிரிக்க வைத்தார்கள். சாப்பிட வைத்தார்கள்.
சாப்பிட்ட பிறகு “அவன் வர்றப்ப வரட்டும். நீ கண் முழிச்சுக் காத்திருக்கணும்னு அவசியமில்ல. அண்ணனும் தம்பியும் எடுத்துப் போட்டுச் சாப்பிட்டுப்பாங்க. நீ தூங்கு” என்று மூத்த மருமகளிடம் சொல்லிவிட்டு உறங்கப் போய்விட்டார் சிவகாமி.
ஆதிராவோ உறக்கமின்றி தவித்தாள். முந்தைய தினத்தில் நடந்தேறிய உரையாடலின் தாக்கம் இன்னும் அவளை விட்டு அகலவில்லை.
அனைத்தையும் விட கொடுமை புவனேந்திரனின் பாராமுகம்.
நேரம் கடந்து கொண்டே இருக்க ஒருவழியாகக் கார் வரும் சத்தம் கேட்டதும் நிம்மதியடைந்தவள் சட்டெனப் படுக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
சிவகாமி சொன்னது போலவே அண்ணனும் தம்பியும் அவர்களே சாப்பாடு பரிமாறிச் சாப்பிட்டார்கள்.
கதிர்காமன் சிணுங்கும் சத்தம் கேட்டதும் “நீ கிளம்பு மாறா. குழந்தை அழுதா மலர் தூக்கம் போயிடும்” என மகிழ்மாறனை விரட்டிய புவனேந்திரன் இருவர் சாப்பிட்ட தட்டுகளை மட்டும் அலம்பி வைத்துவிட்டுத் தனது அறைக்கு வந்தான்.
‘ஸ்லீப்பிங் பியூட்டி’ போல அழகுச்சிலையாய் சாய்ந்து அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்ததும் இழுத்துப் பிடித்தக் கோபம் பறக்கத் தயாரானது. எல்லாம் ஆதிரா கண் திறக்கும் வரை மட்டுமே!
அவளது விழிகளின் இமைகள் அசையவும் மீண்டும் விறைப்பானான் புவனேந்திரன்.
ஆதிரா எழுந்தவள் “புவன்…” என்று ஏதோ சொல்லவர அவனோ தடுத்தான்.
“தூங்கு” என்றான் கட்டளையிடும் தொனியில்.
“எனக்குத் தூக்கம் வரல”
“சாரி! எனக்குத் தாலாட்டு பாடத் தெரியாது”
அலட்சியமாய்ப் பதிலளித்தவன் சட்டையின் பட்டன்களைக் கழற்றி டீசர்ட்டுக்கு மாறினான்.
ஆதிரா அழுகையை அடக்கியபடி உம்மென்று நின்றவள் படுக்கச் சென்றவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“என் கிட்ட பேசமாட்டிங்களா?”
“நான் எப்ப பேசாம இருந்தேன்?”
“இதோ இந்த மாதிரி பேசுறதுக்குப் பேசாமலே இருக்கலாம்”
“சரி”
“புவன்” அழுத்தமாய் அழைத்தபோதே அழுகை வெடித்தது அவளிடம்.
புவனேந்திரன் இடுப்பில் கையூன்றி பின்னந்தலையில் தட்டிக்கொண்டான். பின்னர் சரணாகதி போல காட்டி “அழாத ஆதி. என்னை இப்பிடியே இருக்க விடுடி. படுத்தாத!” என்றான் அமைதியாய்.
“இப்பிடியேனா? இந்த ஒதுக்கம், விலகல் எல்லாமேவா? நான் உங்களைப் படுத்துறேனா? என்னால முடியலங்க.”
அவள் விம்மி அழ, புவனேந்திரனின் கரங்கள் அனிச்சையாக மேலெழுந்து அவளது தோள்களைப் பற்றி இழுத்துத் தன்னோடு சாய்த்துக் கொண்டன.
அவனும் கோபத்தைக் காட்ட நினைக்கிறான். தனது ஆதங்கத்தைக் கொட்ட நினைக்கிறான். ஆனால் முடியவில்லை. நேற்றிரவு அதட்டலாய்ப் பேசியதிலேயே ஆதிராவின் கண்கள் எல்லாம் கண்ணீர்!
அதை நினைக்கும்போதே அவளது செயலும் நினைவுக்கு வர சட்டென ஆதிராவை விலக்கி நிறுத்தினான் புவனேந்திரன்.
“இங்க காயப்பட்டது நான். என்னால அழ முடியாதுங்கிறதுக்காக என் காயம் சாதாரணமானதா ஆகிடாது ஆதி”
குரலில் உஷ்ணம் கூட அவன் அழுத்தமாய்க் கூறவும் மீண்டும் விக்கித்துப் போனாள் ஆதிரா.
**********
அக்டோபர் 1 முதல் கதை வரும் மக்களே
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அய்யய்யோ..! அப்படி என்ன கோபம்ன்னு நம்ம புவன் செல்லக்குட்டி, ஆதிரா மேல காட்டு நான்கு தெரியலையே ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Kaasaa panamaa kovam thaana...kazhuthaiya ....kaattittu vittranum...pidichchi thonga koodaathu buvan rasa 😝😝😝
Share your Reaction
- புவன் செம.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



