#MarryMyHusband
ஹீரோயின் ரொம்ப அப்பாவி... கேன்சர் பேசண்ட்... அவ ஹஸ்பெண்ட், இன்-லா, குளோஸ் ஃப்ரெண்ட் எல்லாரும் தங்களோட சுயநலத்துக்காக அவளை யூஸ் பண்ணுவாங்க... கேன்சர் ட்ரீட்மெண்டுக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்தவளை குளோஸ் ஃப்ரெண்ட் பாத்து நம்பிக்கை குடுத்துட்டு போவா... ஹஸ்பெண்டுக்கு கால் பண்ணி பேசணும்னு ஹீரோயின் ஆசைப்படுவா... பட் அவன் போன் அட்டெண்ட் பண்ண மாட்டான்... நேர்ல போய் பார்க்கணும்னு டாக்சில கிளம்புவா...
வீட்டுல இறங்குனதும் டாக்சி டிரைவர் அவ கிட்ட பழைய ரூபாய் நோட்டு ஒன்னு குடுத்துட்டு போவாரு... வீட்டுல போய் பாத்தா, அவ ஹஸ்பெண்டும் குளோஸ் ஃப்ரெண்டும் அஃபயர்ல இருக்குறது தெரிஞ்சுடும்... அவ கோபப்பட்டு சண்டை போடுவா.. ஹீரோயினோட ஹஸ்பெண்ட் அவளை தள்ளி விட்டதுல தலை டீபாய்ல மோதி இறந்துடுவா... சாகுறப்ப எனக்கு சாக விருப்பமில்ல இன்னொரு சான்ஸ் வேணும்னு நினைச்சுக்கிட்டே செத்துப்போவா... பட் அது கனவு மாதிரி இருக்கும்..
கண் முழிச்சு பாத்தா அவ வாழ்க்கைல 10 வருசம் பின்னாடி வந்திருப்பா... வருங்காலத்தில என்ன நடக்கும் யார் துரோகம் பண்ணுவாங்கனு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் அவளுக்கு... அதை வச்சு துரோகம் பண்ணுன ஃப்ரெண்டுக்கும் ஹஸ்பெண்டா இருந்தவனுக்கும் இடைல லவ் வர வச்சு அவங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு ப்ளான் போடுவா... இதுல பெரிய ட்விஸ்ட் ஹீரோ தான்... அது என்னனு இனிமே உள்ள எபிசோட்ல தான் தெரியும்... இது webtoon animeவா வந்த கதை... அமேசான் ப்ரைம்ல இருக்கு