NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
விழிகளில் ஒரு பவனி ...
 
Share:
Notifications
Clear all

விழிகளில் ஒரு பவனி கதை விமர்சனங்கள்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

கலை கார்த்தி சிஸ் ரிவியூ

விழிகளில் ஓரு பவனி கதை அருமை. எதிர்பாராத திருமணம் ஆனாலும் மகிழ் தனது மனைவியை எங்கும் விட்டு கொடுக்காமல் அவளையும் அவளின் குடும்பத்தையும் பார்த்து கொள்வது அழகு. அவளின் வெகுளிதனம் பிடிக்க அவள் அப்பாவின் குணம் போல் அவளும் . புவனேந்திரன் சிவகாமி நரசிம்மன் செம.சிகாமணி குழலி சூப்பர். ஈஸ்வரி நல்ல நட்பு. பவித்ரன் ஷண்மதி சூப்பர். மது நிலவழகி மாணிக்கம் தண்டனை சூப்பர். மகிழ் மலருக்கு புரிய வைப்பது தைரியமாக இருக்கச் செய்வது என்று சூப்பர். சிகாமணி சொத்தை மீட்டு கொடுப்பது செம. மகிழ் மலர் இவர்களுக்கு குழந்தை வருவது அவளின் ஆசையான நூலகர் ஆக்குவது என்று சூப்பர் மகிழ். அருமையான கதை. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.

1755775862-WhatsApp-Image-2025-08-21-at-165757_ab0ff2d2.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 21, 2025 5:01 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

செல்வராணிம்மா ரிவியூ

விழிகளில் ஒரு பவனி.
இந்த உலகில் நல்லவர்களாக இருந்தாலே ஏமாளிகளாகத்தான் பார்க்கப்படுவார்கள்.அப்படி ஒரு அப்பாவிக்குடும்பத்தில் மகளாகப் பிறந்த மலர்.
பெரியப்பா குடும்பத்தின் சதியால் சொத்தை இழந்து வறுமை நிலையில் வாழ்பவர்களை மகிழ் மாறனின் வரவு தலைகீழாக மாற்றுகிறது.தன் படிப்பு வேலை என்று கண்ட கனவுகளை நிறைவேற்றுகிறான்.
என் சிறுவயதில் லைப்ரேரியன் ஆகி நிறைய கதைகள் படிக்கணும்னு ஆசைப்படுவேன்!
மலரை பார்க்கும்போது அந்த நினைவு வந்தது.

1755775934-WhatsApp-Image-2025-08-21-at-165437_7a234674.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 21, 2025 5:02 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

திருமதி. சுதாகர் சிஸ் ரிவியூ

#விழிகளில்_ஒரு_பவனி❤❤❤ ஒரு ஏமாளி பெற்றோருக்கு பிறந்து தன்னோட தேவைக்கு கூட வாய் திறந்து பேச பயப்படும் நாயகி ஒரு ஆளுமையான நாயகனை சந்தர்ப்ப சூழ்நிலையால் கைப்பிடித்து அவனின் துணையோடு தன்னுடைய லட்சியத்தையும் சுயமரியாதையையும் மீட்டு எடுக்கும் நாயகி❤❤❤❤❤
மகிழ்மாறன் ❤❤❤❤என்ன ஒரு ஆளுமை❤❤அதிகம் பேசாமல், எதிரில் இருப்பவரை பேச வைத்து அவங்க மூலமாகவே எதையும் நடத்திக்கும் நாயகன்🔥🔥🔥🔥❤❤❤❤குடும்பத்தின் மேல் பாசமும், கூடுதல் பிணைப்பும், ஒருவரின் முகம் பார்த்து எண்ணங்களை படிக்கும் வித்தகன்❤❤❤❤😍😍😍
மலர்விழி❤❤❤❤ சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு நன்றி கடனில் பிணைக்கப்பட்ட பெற்றோருக்கு மகளாக தன்னுடைய சுயமரியாதையை கூட இழந்து நிற்கும் நாயகி 😔😔😔😔 எதிர்பாராத விதமா மகிழ் மாறனை கல்யாணம் பண்ணி தன் லட்சியத்தை கைவிடாமல் எந்த சூழ்நிலையையும் தானாகவே தைரியமாக எதிர் நோக்கும் திறமையையும் வளர்த்து பெற்றோருக்கு நல்ல மகளாகவும் புகுந்த வீட்டில் நல்ல மருமகளாகவும் ஸ்கோர் பண்ணிட்டா👌👌👌👌👌👌
சிகாமணி போல ஏமாளியாக இருந்தால் மாணிக்கவேல்,நிலவழகி போல சுயநல பிசாசுகளை ஒன்னும் பண்ண முடியாது😡😡😡குழலி கொஞ்சம் சுதாரிக்கவில்லை என்றால் அந்த முரளிக்கு பொண்ணை கொடுத்து இருந்தாலும் கொடுத்து இருப்பார் பட்ட நன்றி கடனுக்கு வேண்டி😡😡😡
மதுமதி போல சைகோ மாணிக்கவேல் கிடைச்ச நல்ல மரண அடி தான்😍😍😍பவிதரன், ஈஸ்வரி ஜோடியாக வாய்ப்பு இருக்கா???Sis 🤔🤔🤔🤔🤔🤔🤔பாவம் அந்த குடும்பத்தில் தப்பி பிறந்துட்டான்😔😔😔
நம்ம குடும்பத்தில் நடக்குற போல யதார்த்தமான எழுத்துநடை👌👌👌👌எங்கேயும் மிகை இல்லாமல் அழகு நடை Sis 👌👌👌👌👏👏👏👏👏ஒவ்வொரு epi க்கு பிக் எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பர் Sis 👌👌🔥❤❤❤

1755776034-WhatsApp-Image-2025-08-21-at-165617_5921111d.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 21, 2025 5:03 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

உமா கார்த்திக்கின் விமர்சனம்

 

❤கதை விமர்சனம் ❤
#விழிகளில்_ஒரு_பவனி

Nithya Mariappan

நாயகி மலர்விழி. நடுத்தர குடும்பம்.குடும்ப அரசியல் சார்ந்து கதை நகர்வு, நம்ம கூடவே இருந்து ஏமாத்துறவங்க பல பேர், ஆனா அவங்க உதவியாள தான் நம்ம உயிர் வாழ்றோம். அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி நன்றி என்னும் உணர்வ கட்டி நம்மயே அடிமையா வைச்சுப்பாங்க.. ஆனா இந்த அப்பாவிகளுக்கு நம்மல வளர விடாம ஏமாற்றுவதே இவர்கள் தான் னு தெரியாது!

இப்படி உறவுகளால் ஏமாற்றப்படுறோம் என்பது உணராத அப்பாவி தந்தையின் சிகாமணியின் மகள் தான் மலர்விழி.

தன் அண்ணன் மேல இருக்க நன்றி உணர்வால சிகாமணி தன் மகள் விருப்பம் இல்லாம கௌரவத்திற்காக ஒரு திருமணம் நடக்குது.

" இந்த உரிமையான கோபத்தையும் கல்யாணத்துக்கு சம்பந்தமா எடுத்துக்கிறேன்." அப்படி னு ஹீரோ சொல்ற இந்த டயலாக் புதுசா இருந்துச்சு!!

ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுமையாக ஒரு பகுதி உணர்வுகள் வெளிப்பாடாய் "விழியின் மொழி" அதாவது மலர் விழி அவளோட கண்ணோட்டத்தை அதுல எழுதி இருப்பாங்க.. ரைட்டர் ஒவ்வொரு விஷயமும் மலர் வாழ்க்கையில எதிர்பாராமல் நடக்கும் போது அவளோட உணர்வு என்ன? அது தான் அதுல அழகா எழுதி இருப்பாங்க. அது ரொம்ப புதுசா இருந்தது. வித்தியாசமான எழுத்து நடை பாராட்டுக்குரியது.👏👏👏👏🫂😍❤❤❤❤

உவமைகள் ரொம்ப அழகா இருந்தது.💯🫵🥰🥰🥰🥰🥰

"இசை மழையோடு வான் மழையும் சேர்ந்து நதியூரை நனைத்தது "

" நேச இழைகள் "

இதெல்லாம் வாசிக்கும் போது ரொம்ப அழகு!

" உன்ன இங்க கல்யாணம் பண்ணி கொடுத்ததால ஒரேயடியா இங்க தள்ளிட்டோம் னு அர்த்தம் இல்லை"

இந்த வார்த்தை எழுதுனதுக்கு லவ் யூ அக்கா. ❤❤❤❤❤❤🫂

அனுசரிச்சு போ.. அது தான் உன் வீடு.. இதுவும் பெத்தவங்க செய்யுற வன் கொடுமை தான்!

சரியான நேரத்தில் சொல்லப்படுற கருத்துக்கள் நல்ல மனமாற்றங்களை கொடுக்கும்.

" நாங்க இருக்கோம்" அதை விட பெரிய பாதுகாப்பு உணர்வு எதுவுமே இல்லை. ஒரு பெண்ணோட குடும்பம் தான் அந்த நம்பிக்கை குடுக்கணும்.

ஒரு பெண்ணோட வெற்றிக்கு கல்வி திறமை எவ்வளவு முக்கியமோ.. அதே அளவு எல்லா முயற்சிகள் கூடவே துணையாக இருக்க அன்பான கணவன். அக்கறையான குடும்பமும் ரொம்ப முக்கியம் என்று அழகாக காட்டி இருக்கீங்க.

ஒரு ஃபீல் குட் ஸ்டோரி..ரொம்ப ரசித்து எழுதி இருக்காங்க..ரசித்து வாசிக்கலாம் நீங்க..

"must read "

😍👉 நித்யா அக்கா.. புதுமையான முயற்ச்சிகள் தொடரட்டும். ❤🫂❤ரொம்ப தனித்துவமான எழுத்து உங்களுடையது. டிரன்ட் செட்டர் நீங்க..ரொம்ப சந்தோஷமா இன்ஸ்பயரிங் ஆ இருந்தது. வித்தியாசமான கதை அமைப்பு (pattern of writing)

நல்ல கதைகள் விதைகளாக எல்லோரிடமும் போய் சேரட்டும் என்று வேண்டுதலோடு..

நன்றிகள் கோடி

உமா கார்த்திக்

பி.கு (இவங்க மேக் பண்ணுற ஏஐ பிக்ஸ் காஸ்டியூம் டிசைன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும்.)

1756525835-WhatsApp-Image-2025-06-24-at-170916_351dd783.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 30, 2025 9:20 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

விழிகளில் ஒரு பவனி - RJ மீனாட்சி (பத்மப்ரியா)

நாவல்: விழிகளில் ஒரு பவனி
எழுதியவர்: நித்யா மாரியப்பன்

கவிதை போல இருந்தது என்பதைவிட கவிதையாகவே இருந்தது...

வழக்கமாக ஏகப்பட்ட விவரங்கள் நிறைந்து இருக்கும் இவரது கதைகளை போலவே இந்த கதையும் ஆழ்வார் திருநகரி பற்றிய விவரங்களுடன் ஆரம்பிக்கின்றது.

கதாநாயகன் பெயர் காரணம் அருமை.

நாயகியின் நூலகம் மீதான ஈர்ப்பும், அவள் உணர்வுகளை அவள் வாய்மொழியாக ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் ஆசிரியர் கடத்திய விதமும் அருமை.

எனது பொறியியல் படிப்பின் போது மனம் ஓப்பாத பல வகுப்புகள் என்னை தத்து எடுத்து கொண்டது கல்லூரி நூலகமே. ஏனோ மனம் சரி இல்லை என்றால் அங்கே சென்று விடுவது எனது வழக்கம்.

புத்தகம் வாங்கிவந்து வீட்டில் படிப்பதை விட நூலகத்தில் அமர்ந்து அந்த சூழலில் புத்தக உலகிற்குள் பயணிப்பது என்றுமே இனிய அனுபவம்.

மகிழ்மாறன் சீண்டல்கள் அத்துணை அழகு.

சிவகாமி அம்மா "பொண்ணே" என்று கூப்பிடும் போது தான் எத்துனை உரிமை உணர்வு! பூக்களின் மீதான அவரது காதல் அழகிய வர்ணனை.

புவனேந்திரன் கதாபாத்திரம் தனித்துவமானது. மதியின் நிலையை கேட்டு தெளிவு பெற்ற பிறகு ஒரு நிலையான முடிவு எடுத்த இடம் அருமை.
❤ "கொஞ்சும் மஞ்சள் பூக்கள்" - ஆவலுடன் ஒரு காத்திருப்பு...

"மகிழ்மாறன் பொண்டாட்டி ஆகனும்னு வரம் வாங்கிட்டு பிறந்தியா?" இந்த வார்த்தையின் அர்த்தம் கதையின் கருவாக.

ஒரு சில கதைகளே புலனம் வழி படித்தாலும் புத்தகமாகவும் கைகளில் தவழ வேண்டும் என ஆவல் கொள்வோம், "விழிகளில் ஒரு பவனி" அந்த வரிசையில் ஒரு இனிய இணைவு. ❤ புகைப்படங்கள் தேர்வு அருமை 👏🏽...

1756553795-Screenshot-2025-08-30-145200.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 30, 2025 5:05 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

 

Shafna Rangarajan விமர்சனம்

 

#விழிகளில்_ஒரு_பவனி_விமர்சனம்

உமா கார்த்திக் உங்கள் ரிவ்யூ பார்த்து தான் கதை படிச்சேன் ❤ இல்லனா இப்படியொரு கதைய மிஸ் பண்ணிருப்பேன்.

இது தான் Nithya Mariappan இவங்களோட முதல் கதை நான் படிப்பது ❤ மிகவும் அழகான கதை ❤

கதையின் ஆரம்பத்தில் வரும் விழியின் மொழிலயே நான் தொலஞ்சுட்டேன் ❤ மலர் விழியின் ஆசைகளும், வாய் மொழியா சொல்லாத அவளின் எண்ண ஓட்டங்கள் தான் இந்த விழியின் மொழியா எனக்கு தெரியுது ❤

மகிழ்மாறன் பார்வையிலே சும்மா தெரிக்க விடுறாரு ❤ அவரின் ஆளுமையான பேச்சும் கோபமும் நல்லா இருக்கு ❤ இவரின் குடும்பமே அவ்வளவு அழகு ❤

மலர்விழி குணம் ரொம்பவே இயல்பா இருந்தது. மகிழ் மாறன் மலர்விழியின் ஒவ்வொரு சந்திப்பும் உரையாடல்களும் அவ்வளவு அழகு ❤

சிகாமணிக்கு அவரின் அண்ணன் குடும்பம் பண்ண துரோகத்தை மகிழ் எப்படி கண்டுப்பிடிச்சு அதை வெளிக்கொண்டு வருகிறார்னு ஒரு பக்கம் கதை நகர்ந்தா . இன்னொரு பக்கம் மலர்விழியை மிஸஸ். மலர்விழியா எப்படி மாத்தி அவளின் கனவை அடைய வழி செய்கிறார்னு நகருது.
இரண்டுமே அருமை ❤❤

இயல்பான உரையாடல்களும் காதல் காட்சிகளும் ரொம்பவே அழகு 😍💓

திருமணம் முடிந்து போகும் பெண்ணிற்கு ஷண்மதியின் அறிவுறை 👌

நிறைய வரிகள் எனக்கு பிடிச்சது ஆனால் இது இரண்டும் இன்னும் மனசுல நிக்குது. 👇
🌸பொருந்தாதது பொருத்தமில்லாததுனு நாம் நினைக்கும் யாவற்றையும் பொருத்திப்பார்ப்பது தான் வாழ்க்கையின் வாடிக்கை.
🌸அழகாக சிரிப்பவர்கள் பெரும்பாலும் சிரிப்பதேயில்லை .

அங்க அங்க பூக்கள் செடிகள் மீதான ரசனையும் புத்தகம் பற்றிய பிடித்ததையும் சொன்னது அவ்வளவு அழகு ❣

புவன்க்கு இன்னொரு கதை இருக்குனு சொல்லிருந்தீங்க அதுல மலரின் தோழி யாரை கல்யாணம் பண்ணுவாங்கனு வருமா? இல்ல ஈஸ்வரிக்கு தனி கதை இருக்கா? ஏன்னா ஈஸ்வரியின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது ❤

விழிகளில் ஒரு பவனி என் மனதிலும் ஒரு ரசனையான பவனி வருகிறார்கள் இந்த மகிழ்❣விழி

1756900861.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : September 3, 2025 5:31 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index