அவந்திகாவே இறங்கிவந்து தனக்கு இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் தருமாறு கேட்டதால் அப்போதைக்கு அந்த வீட்டில் நிலவிய குழப்பம் மறைந்து அமைதி கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தொடங்கியது.
ராகவின் அம்மா ராதிகா கௌசல்யாவிடம் அவந்திகாவைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று சொல்ல அவரும் அதை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார். பிரச்சனை முடிந்ததால் வருண் பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு ராகவையும் ராதிகாவையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். செல்வதற்கு முன் உஷாவிடம் அவந்திகாவைக் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுத்தான் சென்றான்.
அவர்கள் சென்றதும் ரகுவரன் தன் மகளுடன் சேர்ந்து சாதாரணமாகப் பேச ஆரம்பிக்கவும் எல்லாரும் அவந்திகா சமாதானமாகிவிட்டதாகவே நினைக்கத் தொடங்கினர்.
இரவுணவு முடிந்து உஷாவையும் ரித்திமாவையும் உறங்கச் சொல்லிவிட்டு மறுநாள் சங்கீத்துக்கு என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினாள் அவந்திகா. சங்கீத்துடன் மெஹந்தியும் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று பிரியா விரும்பியதால் இரு நிகழ்வுகளுக்கும் தேவையான ஏற்பாடுகளை ஓரளவுக்கு முடித்து வைத்திருந்தாள் ரித்திமா.
மலர் அலங்காரம் மட்டுமே மாற்ற வேண்டியதிருந்ததால் மற்ற அனைத்துமே ஏறத்தாழ முடிந்துவிட்டது.
மலர் அலங்காரம் என்றதும் இன்றைய நிகழ்வுகள் மீண்டும் நினைவுக்கு வர அதைப் பற்றி யோசிக்க விரும்பாதவள் லேப்டாப்பை மூடிவைத்துவிட்டுத் தூங்கச் சென்றாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதே நேரம் கபூர் குடும்பத்தின் மூத்த மருமகளும் வருணின் தாயுமான பிரியாவும், ராகவின் அம்மா ராதிகாவும் நடந்த திடீர் திருமணத்தைத் தங்கள் மாமியாரும் குடும்பத்தின் மூத்த பெண்மணியுமான சுமித்ராவிடம் எவ்வாறு சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தனர்.
ராதிகா கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரியா “எப்பிடியோ கல்யாணம் முடிஞ்சாச்சு! அவளும் நம்ம வீட்டு மருமகள்தான! நியாயப்படி இப்போ அவ நம்ம வீட்ல இருக்கணும்., நீ அவளுக்கு யோசிக்க டைம் குடுத்தது எல்லாம் ஓகே., ஆனா இந்தக் காரணத்த நாளைக்கு வரப்போற நம்ம அத்தைகிட்ட நாம சொல்ல முடியாது ராதிகா” என்று யோசனையுடன் கூறினார்.
“சரிதான் அக்கா., ஆனா அவந்திகாவும் பாவம்., திடீர்னு இப்பிடி ஆகும்னு அவ யோசிச்சிருக்கக் கூட மாட்டா., அந்தப் பொண்ணு நெலைமைல இருந்து யோசிச்சாதான் நமக்கு அவ கஷ்டம் புரியும். அத்தைய நான் சமாளிச்சிக்கிறேன். நீங்க டென்ஷன் இல்லாம நம்ம வருண் கல்யாண வேலையைப் பாருங்க” என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு அவரை அழைத்துக்கொண்டு நாளைய நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை இருவரும் அமைதியாக ஆலோசிக்கத் தோட்டத்திற்குச் சென்றனர்.
ஆனால் ராகவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அறையின் பால்கனியில் நின்று அவனது உதவியாளருக்கு அழைத்தவன் “இந்த நியூஸ் எப்பிடி மீடியா பீப்பிள்கு போச்சு? ஐ வாண்ட் ஃபுல் டீடெய்ல்ஸ் வித்தின் 24 ஹவர்ஸ்… ஓகே” என்று போனில் தன் உதவியாளருக்குக் கட்டளையிட்டவன் தூக்கம் வராமல் பால்கனியில் அங்குமிங்கும் நடந்தான்.
பெட்டில் அவனது சட்டையில் இருந்த சிவப்பு நிறப்புள்ளிகள் இன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் கண் முன் கொண்டு வர அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன் ஆள்காட்டி விரலால் நெற்றியில் தட்டிக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
“இந்த ஜான்சி ராணிய எப்பிடிச் சமாளிக்கப் போறேனு புரியலயே. நாளைக்கு வேற தாதி வர்றாங்க. ஃபர்ஸ்ட் அவங்களைச் சமாதானப்படுத்தணும் ராகவ். தென் இந்த மேரேஜ் முடியுறதுக்கு முன்னாடி ரெண்டு ஃபேமிலிகிட்டயும் எங்க நெலமையச் சொல்லிச் சீக்கிரமா ஒரு நல்ல முடிவுக்கு வரணும்” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான்.
பின்னர் யோசனையுடன் “ஐ நோ இந்த ரிலேஷன்ஷிப் ரொம்ப நாளுக்கு நீடிக்காது. பட் அதை ரெண்டு ஃபேமிலில உள்ளவங்களுக்குப் புரிய வைக்கணும். அந்த வேலைய முதல்ல பாக்கணும்” என்று பலவாறான எண்ணங்களுடன் தூங்கச் சென்றான் ராகவ்.
மறுநாள் காலை….
கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் அந்த அரண்மனையைச் சொர்க்கலோகமாக மாற்றிக் கொண்டிருக்கும் அழகான காலை வேளையில் சோம்பல் முறித்தபடி எழுந்தாள் அவந்திகா. மெதுவாகக் கண்ணைக் கசக்கியவளின் பார்வையில் விழுந்தது அவளின் கழுத்தில் ராகவ் அணிவித்த கருகமணி தாலி. ஒரு நிமிடம் எவ்வித யோசனையுமின்றி அதை வெறித்தவள் பின்னர் குளிப்பதற்காகச் சென்றுவிட்டாள்.
குளித்து உடை மாற்றிவிட்டு அவந்திகா பரபரப்பாகக் கல்யாண வேலைகளைக் கவனித்துக்கொண்டபடி சுற்றிக் கொண்டிருந்தாள். அவளைக் கேள்வியுடன் பார்த்தவர்களுக்குச் சிரிப்பை மட்டும் பரிசாக அளித்துவிட்டு மாலை நிகழ்வுக்கான வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள் அவள்.
கௌசல்யாவுக்கு இவள் திருமணமான பெண் மாதிரியா நடந்துகொள்கிறாள் என்ற ஆதங்கம். ஏனெனில் கழுத்தில் இருந்த கருகமணியைக் குளிப்பதற்காகக் கழற்றியவள் அதை அணிய மறந்தது மட்டுமின்றி முன் நெற்றியில் குங்குமம் வைக்கவும் மறந்துவிட்டாள் அவள். கௌசல்யா அவளை வருத்தத்துடன் பார்ப்பதை அறிந்தவளின் கைகள் அவளறியாமல் கழுத்தைத் தடவ கருகமணி இல்லாததை உணர்ந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவள்.
சிறிது நேரத்தில் ராகவும் அவளும் ஆர்டர் செய்த டுலிப் மலர்கள் வரவும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ரித்திமா ஐடியா கொடுக்க அரண்மனை வேலையாட்கள் அவர்கள் இருவரும் கூறியவாறு மலர் அலங்காரத்தைச் செய்யத் தொடங்கினர்.
அப்போது பார்க்கிங்கில் கார் நிற்கும் சத்தம் கேட்கவே விருந்தினர்கள் தான் என்று நினைத்த இருவரும் அதைக் கண்டுகொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தனர்.
“நான் என் வீட்டு மருமகளைப் பாக்க ஆசைப்பட்டது ஒண்ணும் அவ்ளோ பெரிய தப்பு இல்லையே! நீ கொஞ்ச நேரம் சும்மா இரு ராதிகா., பிரியா நாம வந்திருக்கோம்., இங்க யாருமே நம்மக் கண்டுக்கவே இல்ல” என்று ஒரு வயதான பெண்மணியின் வெண்கலக்குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க அங்கு கல்யாணிதேவியின் வயதில் ஒரு பெண்மணி நிற்க ராதிகாவும் பிரியாவும் செய்வதறியாது கையைப் பிசைந்தபடி அவர் அருகில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களை அழைத்து வந்திருந்த கிஷோர் அவர்களிடமிருந்து விலகி ரித்திமாவிடம் சென்று “அவங்க எங்க தாதி. மாப்பிள்ளை வீட்டோட பெரிய மனுஷி வந்திருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் பொறுப்பு இல்லாம இப்பிடி உக்காந்திருந்தா என்ன அர்த்தம்? கம் ஆன், ஸ்டாண்ட் அப் மை டியர் யங் லேடீஸ்” என்று சொல்லவும் அவந்திகா எழுந்துகொண்டாள்.
இன்னும் அமர்ந்திருந்த ரித்திமாவைப் பார்த்தவன் “உங்களுக்கு எழுந்திருக்க அவ்ளோ கஷ்டமா இருக்குனா நான் வேணா உங்களைத் தூக்கி விடவா பேபி?” என்று கிண்டலாகக் கேட்டவாறே அருகில் வர ரித்திமா அவசரமாக எழுந்துகொண்டாள்.
அவனை முறைத்தவள் “லிசன்! இனிமே நீ என்னைப் பேபினு கூப்பிட்டனு வை, வருணோட தம்பினு கூடப் பாக்கமாட்டேன்., ஐ வில் கில் யூ” என்று அவனைத் திட்டவும் கிஷோர் சிரித்தான்.
“ஐயாம் ரெடி டு டை பேபி” என்று சொல்லிக் கண் சிமிட்டவும் அவந்திகாவிற்கு இவன் நிஜமாகவே ராகவ் குடும்பத்தைச் சேர்ந்தவன்தானா என்ற சந்தேகம் வந்தது.
“அவன் சிரிக்கிறதுக்கே காசு கேப்பான். ஜோக்லாம் அவனுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. வருணும் கிஷோரும் மட்டும் அந்தக் குடும்பத்துல தப்பிப் பொறந்துட்டாங்க போல” என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
அதற்குள் கல்யாணிதேவியே நேரில் வந்து வரவேற்கவும் அந்தப் பெண்மணி சமாதானமானார். அவர்கள் பேசிக்கொண்டே உள்ளே செல்லவும் கௌசல்யா அவந்திகாவையும் ரித்திமாவையும் உள்ளே வருமாறு கண் ஜாடை காட்டிவிட்டுச் சென்றார்.
மூவரும் உள்ளே செல்லும்போது உஷா சுமித்ராவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தாள்.
“நல்லா இரும்மா” என்று அவளை ஆசீர்வதித்தவர் தன் அருகிலேயே அவளை அமரவைத்துக்கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தார்.
கிஷோர் அவந்திகாவின் காதில் “நெக்ஸ்ட் நீங்கதான் அண்ணி” என்று சொல்லவும் அவனைப் பார்த்துத் திருதிருவென்று முழித்தவள் “நான் என்ன பண்ணணும் கிஷோர்?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஆசிர்வாதம் வாங்குறதச் சொன்னேன் அண்ணி., டோண்ட் கெட் டென்ஷன்” என்று புன்னகைத்தான்.
இப்போ இது ஒண்ணுதான் கொறைச்சலாக்கும் என்று மனதிற்குள் நொடித்தாள் அவந்திகா.
“எங்க என்னோட சின்ன மருமக?” என்று சுமித்ரா கேட்கவும் அவந்திகாவின் கால்கள் அவளையறியாமல் அவர் முன் சென்று நின்றது.
அவளைத் தலையிலிருந்து கால் வரை பார்த்தவர் “ஒரு சுமங்கலிப் பொண்ணு காலையிலேயே இப்பிடியா இருப்பா? தலைமுடிலாம் கலைஞ்சு முகம் எல்லாம் வேர்வையோட! ஆமா உன்னோட தாலி எங்க போச்சு?” என்று அவர் கண்டிக்கவும் கௌசல்யாவுக்குப் பதற்றமாயிற்று. எங்கே அவந்திகா அவரை மதிக்காமல் கோபமாகப் பேசிவிடுவாளோ என்று அவளைக் கண்ணில் ஒரு கெஞ்சலுடன் பார்த்தார்.
அவள் தன்னைத்தானே அமைதிப்படுத்திக்கொண்டு “நான் கொஞ்சம் வேலையா இருந்தேன் தாதி! அதான் இப்பிடி ஓவரா வேர்த்துடுச்சு. இப்போ வந்துடுறேன் தாதி” என்று சொல்லிவிட்டு அவளது அறைக்குச் சென்றாள்.
உள்ளே சென்றவள் கண்ணாடியைப் பார்த்து “ஏன்? எனக்கு என்ன? நான் இப்போ கூடப் பாக்க ஏஞ்சல் மாதிரிதான் இருக்கேன். இந்த ராகவோட பாட்டிக்குதான் கண்ணுல ப்ராப்ளம். ஐயோ! இந்த ஓல்ட் லேடியச் சமாளிக்க வேற நான் இப்போ டிராமா பண்ணணுமா? பெருமாளே! இந்தப் ஃபேமிலிகிட்ட இருந்து என்னைச் சீக்கிரமா காப்பாத்து” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்துத் தயாரானவள் மறக்காமல் தாலியை அணிந்துகொண்டாள். கண்ணாடியில் பார்த்துத் திருப்திப்பட்டவள் கீழே செல்ல ஆயத்தமானாள்.
அங்கே ஹாலில் சுமித்ரா மைதிலியிடமும் கௌசல்யாவிடமும் அவந்திகாவைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அறையிலிருந்து கீழே வந்த அவந்திகா நேராக அவர் முன்னே சென்று அவரது காலில் விழுந்து “ஆசிர்வாதம் பண்ணுங்க தாதி” என்று சொல்லவும் அவர் “நல்லா இரும்மா” என்று சொல்லிவிட்டு அவளை எழுப்பிவிட்டார்.
பின்னர் அவளது முகத்தைப் பார்த்துவிட்டு “என்ன மருமகளே உன்னோட சித்தி உனக்குச் சொல்லிக் குடுக்கலையா? ஒரு கல்யாணமான பொண்ணு நெத்தில குங்குமம் வைக்க மறக்கக்கூடாதுனு” என்று கேட்கவும் கௌசல்யா அவந்திகாவை அழைத்துக் குங்குமச்சிமிழை நீட்ட அவள் வைக்கப்போகும் தருணத்தில் வந்து சேர்ந்தான் ராகவ்.
நேற்று அவந்திகாவின் கோபம் யாரையும் விட்டுவைக்காததைக் கண்டு பதற்றத்தில்தான் அவன் அங்கு வந்திருந்தான். கோபத்தில் அவள் தாதியை எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று வேகமாக வந்தவன் அவன் நினைத்தவாறே சுமித்ரா அவளை ஏதோ சொல்லவும் வேகமாக அந்த அறையில் வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் அவந்திகா முறைத்தவாறுகுங்குமத்தை நெற்றியில் வைக்காமல் கையைக் கீழே போடவும் அவன் கௌசல்யாவிடமிருந்து சிமிழை வாங்கி அவனே நெற்றியில் வைத்துவிட அதைப் பார்த்த சுமித்ரா சந்தோஷமானார்.
முறைத்த அவந்திகாவைப் பொருட்படுத்தாது தன் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடுவில் சென்று அமர்ந்தவன் அவர்களுடன் உரையாட ஆரம்பிக்க ரித்திமாவைக் கண்ணால் அழைத்த அவந்திகா அவளுடன் சேர்ந்து செல்ல முற்பட்டாள்.
அந்நேரத்தில் “அம்மாடி சின்ன மருமகளே! அவந்திகாதான உன்னோட பேரு. உன்னோட புகுந்த வீட்ல இருந்து வந்தவங்களுக்குக் காபி டீ குடுக்கணும்னு கூடவா உனக்குத் தெரியாது?” என்ற சுமித்ராவின் குரலில் தன்னுடைய பொறுமையை முற்றிலுமாக இழந்தாள்.
ரித்திமாவை நிற்கச் சொல்லிவிட்டுத் திரும்பி அவரைப் பார்த்தவளை நோக்கிக்கொண்டே “உன் புருஷனுக்காச்சும் குடுப்பியா? இல்லையா? உன்னோட சித்தி இதையுமா சொல்லிக் குடுக்கல?” என்று கண்டிக்கும் தொனியுடன் கேட்டார்.
பொறுமையை இழந்த அவந்திகா “இல்ல தாதி., என்னோட சித்தி எனக்குத் தைரியமா பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணக் கத்துக் குடுத்துருக்காங்க. பெரியவங்களோ சின்னவங்களோ நமக்கு மரியாதை குடுத்தா அத திருப்பிக் குடுக்கணும்னு சொல்லிக் குடுத்திருக்காங்க. ஆனா நீங்க சொல்லுற இந்த டூ ஓல்ட் ஃபார்மாலிட்டீஸ் எதுவும் எனக்கு அவங்க சொல்லிக் குடுக்கல. பிகாஸ் நான் ஒண்ணும் பொறக்குறப்போவே ராகவ் கபூரோட மனைவி ஆகணும்கிற வரம் வாங்கிட்டுப் பொறக்கலயே! பை தி வே, காபியோ டீயோ வேணும்னா பல்ராம் பய்யாகிட்ட கேளுங்க! அவர் போட்டுக் குடுப்பார். ஐயாம் நாட் அ குக்! டு யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று மெதுவான ஆனால் தெளிவான குரலில் சொல்லிவிட்டு ரித்திமாவைக் கூட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
அவளுடன் வந்த ரித்திமா “என்னடி இப்பிடி சொல்லிட்ட? இப்போ அந்தப் பாட்டி என்ன கூத்துப் பண்ணப் போகுதோ?” என்று டென்ஷனுடன் சொல்ல அதற்கு நக்கலாகப் புன்னகைத்த அவந்திகா “என்ன சொல்லுவாங்க? இந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டானு சொல்லுவாங்க. ஐ டோண்ட் கேர் பேபி., என் கண்ணு முன்னாடியே அவங்க என் சித்தியை இப்பிடிப் பேசுனா நான் சும்மா இருக்கணுமா? ஃபர்ஸ்ட் அவங்க பேரனை அவங்க ஒழுங்கா வளத்திருக்காங்களா? வந்துட்டாங்க எனக்கு அட்வைஸ் பண்ண” என்று உதட்டுச் சுளிப்புடன் சொல்லி முடித்தாள்.
பின்னர் ஒரு பெருமூச்சுடன் “அவங்களைச் சொல்லி ஒண்ணும் இல்ல! இந்த மைதா மாவு பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க ரித்து? நான் சொன்னதைக் கேட்டு டெஃபனிட்டா என்னைத் திமிரு பிடிச்ச பொண்ணுனு முடிவே பண்ணிருப்பாங்க” என்றாள் அவந்திகா.
உள்ளே சுமித்ரா அவள் நினைத்ததற்கு மாறாகச் சத்தமாகச் சிரித்துவிட்டுக் கௌசல்யாவைப் பார்த்து “உன்ன ஒரு வார்த்தை சொன்னதும் உன் பொண்ணுக்குக் கோவத்த பாத்தியா? சும்மா சொல்லக்கூடாது. நீ உண்மையாவே உன்னோட பொண்ணை ரொம்பத் தைரியமா வளத்திருக்கமா. எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சிருக்கு” என்று புன்னகையுடன் மனதாரக் கூறினார்.
கௌசல்யா அவந்திகா பேசிவிட்டுப் போனதை நினைத்துத் தர்மசங்கடத்துடன் “அம்மா! அவ சின்னப் பொண்ணு. அவ பேசுனதைத் தப்பா நெனச்சுக்காதீங்க” என்று கூற சுமித்ரா “அவ வயசுல நான் எப்பிடி இருந்தேனோ அதே மாதிரி அதே தைரியம், கம்பீரத்தை நான் இன்னைக்கு அவகிட்ட பாத்தேன். என்னோட ராகவுக்கு நானே தேடிருந்தா கூட இப்பிடி ஒரு பொண்ணு கெடச்சிருக்க மாட்டா” என்று பெருமையாகக் கூறவும் கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
ஒவ்வொருவரும் அவளை நினைத்துப் பதற்றமான மனநிலையிலிலேயே இருக்க, அவந்திகாவோ எந்தக் கவலையுமின்றி மின்விளக்குச் சரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
ராகவ் கிஷோருடன் அங்கே வந்தவன் அவந்திகாவைப் பார்த்தவாறே “லுக்., இவளால நான் டென்ஷனோட இங்க வந்தா இவ ரிலாக்ஸா கார்டன்ல ஃப்ரெண்ட்கூட பேசிட்டு இருக்கா. டேய் கிஷோர்! என்னைக்கும் இந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணிடாதடா. இது என்னோட ஹம்பிள் ரிக்வெஸ்ட். அப்புறம் நீதான் எல்லாத் தப்பையும் பண்ணுனனு சொல்லி உன்ன பனிஷ் பண்ணிடுவாங்க” என்று சொன்னவனைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தான் கிஷோர்.
“சிரிக்கிறியா? எல்லாம் என் தலை எழுத்து” என்று பெருவிரலால் நெற்றியில் கோடிழுத்துக் காட்டியவாறு அவளைப் பார்த்தான் ராகவ்.
அங்கே விழாவுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. மெஹந்தி சங்கீத் இரண்டுமே தோட்டத்தில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது பெரியவர்களின் எண்ணம்.
அவந்திகாவுக்கும் ரித்திமாவுக்கும் அதுவே சரியென்று தோன்றவே அங்கேயே அழகான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பிண்ணனியுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டது. அனைவரும் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற டுலிப் மலர் அலங்காரத்தைப் பாராட்டவே ராகவ் புருவம் உயர்த்தி அவந்திகாவைப் பார்க்க அவளும் அவன் பார்வையை எதிர்பார்த்தது போலக் கேலியாக உதட்டை வளைத்துவிட்டு அவனைக் கிண்டலாகப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
தோளைக் குலுக்கியவன் சுமித்ராவைப் பார்க்க அவர் அவந்திகாவிடம் காதில் ஏதோ ரகசியமாகக் கூற அவளோ அதைக் கேட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு அவரிடம் தலையை ஆட்டிப் பதிலளித்தாள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று புரியாததால் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.
அதே நேரம் ரித்திமா எழுந்து “ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்! லிசன் ஹியர்! இன்னைக்குச் சங்கீத் டிரஸ் கோட் பிங்க் அண்ட் ஒயிட். அதை மறந்துடாதீங்க. கம் ஆன் ஹனிபி! ஸ்டேஜ் டெக்கரேஷன் ஒர்க்கைக் கவனிப்போம்” என்று கூறிவிட்டு அவளைக் கையோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.
தோட்டத்தின் நுழைவுவாயிலில் பூ அலங்காரம் அவந்திகாவுக்குத் திருப்தியாக இல்லை. பல்ராமிடம் சொல்லி இதோடு பத்து முறை மாற்றியும் ரித்திமா போட்டுக் கொடுத்த டிசைன் வரவில்லை.
ஏணி மீது நின்றுகொண்டிருந்த பல்ராமை இறங்கச் சொல்லிவிட்டு அவள் ஏறி அதைச் சரி செய்யத் தொடங்கினாள். அவள் ஏறும்போதே “குட்டிமா பாத்து ஏறுடா” என்று ரகுவரன் எச்சரித்தார். அவள் புன்னகைத்துவிட்டு “டோண்ட் வொர்ரி சித்தப்பா. ஐ வில் மேனேஜ்” என்று கூறிவிட்டு அலங்காரத்தைச் சரி செய்ய ஆரம்பித்தாள்.
அவள் ஏறும்போதே ஏணியின் கால்கள் சமதளத்தில் இல்லாததைக் கவனித்த ராகவ்தான் ரகுவரனிடம் அவளைக் காட்டிக் கூறினான். அவள் தானே பார்த்துக் கொள்வதாகக் கூறியதும் “இந்த ஜான்சிராணிக்குக் கீழ விழுந்தாதான் அறிவு வரும்” என்று கூறிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாலும் அவன் கண்கள் அவள் கவனமாகத்தான் நிற்கிறாளா என்று கண்காணித்துக்கொண்டே இருந்தன.
அரை மணி நேரம் செலவழித்து அதைச் சரிசெய்த பின் அவள் முகம் திருப்தியானது. “நீ கை வச்சா சரியாகாத பிரச்சனை ஏதும் இருக்கா என்ன?” என்று தன்னைத்தானே பாராட்டியபடியே இறுதியாக ஒரு பூவை எம்பி வைத்தவள் ஏணி சரிவதை உணரவில்லை.
தன் கால்கள் நழுவுவதை அவள் உணர்ந்தபோது அவள் உடல் ஏணியை விட்டுச் சரிய ஆரம்பித்திருந்தது. பிடிமானம் ஏதும் இல்லாமல் கீழே விழத் தொடங்கியவள் “அம்மா” என்ற கூவலுடன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அடுத்து என்ன நிகழ்ந்தது என்று அவள் புத்தியில் உரைக்கவில்லை. கண்ணைத் திறக்கவும் பயந்து எதையோ இறுக்கமாகப் பற்றிக் கொண்டவளின் காதில் “கண்ணைத் திறந்து பாரு அவந்திகா. யூ ஆர் சேஃப் நவ்” என்ற ராகவின் குரல் விழவும் அதிர்ச்சியுடன் கண்ணைத் திறந்தவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான் ராகவ்.
பயத்தில் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தவளின் கண்கள் அவன் கண்களிலிருந்து எதையோ தெரிந்துகொள்ள முயன்று முடியாமல் தோற்றது.
“அவந்திகா!” என்ற சத்தத்துடன் ஓடி வந்த ரித்திமாவின் குரலில் இருவரும் சுயநினைவுக்கு வந்தனர். அவர்கள் மட்டுமன்றி அங்கிருந்த அவர்களின் குடும்பத்தினர் முழுவதும் அப்போதுதான் அதிர்ச்சியிலிருந்து மீண்டனர். ராகவின் கைகளில் அவளைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
“ஜான்சிராணி! கீழ இறங்குற மாதிரி ஐடியா ஏதாச்சும் இருக்கா?” என்று ஹஸ்கி வாய்ஸில் அழகான சிரிப்புடன் அவளைக் கூர்மையாகப் பார்த்தவாறு கேட்டான் ராகவ்.
முதல் முறையாக அவனது சிரிப்பைக் கண்டாள் அவந்திகா. இதழோடு சேர்ந்து கண்ணும் மலரும் அந்த மாயச்சிரிப்பில் தன்னைச் சுற்றி இருக்கும் குடும்பமோ, அவளை நினைத்துப் பதறிய தோழியோ எதுவுமே கருத்தில் பதியாது போகத் தன்னை மறந்தாள் அவந்திகா.
அந்தச் சிரிப்பிலும் பார்வையிலும் ஒரு கணம் தன்னை மறந்து “ஹான்! என்ன சொன்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள் அவந்திகா.
“ஐ நோ! நீ ஒண்ணும் அவ்ளோ வெயிட் இல்ல. ஒரு 55 கேஜி இருப்பியா? பட் 55 கிலோவ கைல வச்சிருக்க அளவுக்கு என்னோட பாடி கண்டிஷன் இல்ல” என்று குறும்புடன் அவளைக் கிண்டலடிக்கவும் கடுப்பான அவந்திகா அவன் கையிலிருந்து திமிறி இறங்கினாள்.
தன்னைச் சமனப்படுத்திக்கொண்டவள் அருகிலிருந்த ரித்திமாவைக் கவனிக்காது “ஹலோ! நான் ஒண்ணும் 55 கேஜிலாம் இல்ல. ஜஸ்ட் 49 கேஜிதான். அப்புறம் இன்னொரு விஷயம். நீ இன்னொரு தடவை இப்பிடிச் சிரிக்காத” என்று முகத்தைச் சுருக்கிக் குழந்தை போலக் கூறினாள்.
“சிரிச்சா என்ன மேடம்? இந்த உலகத்துல சிரிக்கிறதுக்குக் கூடவா ஃப்ரீடம் கெடையாது!” என்று அதே கேலியுடன் ராகவ் கேட்க அவனை முறைத்தவள் “நீ அப்பிடிச் சிரிச்சா எனக்குச் சுத்தி என்ன நடக்குதுனு மறந்து போயிடுது மேன்” என்று குழந்தை மாதிரி அவனைக் குற்றம் சாட்ட ராகவ் அவள் குற்றம் சாட்டிய விதத்தில் சத்தமாகச் சிரித்துவிட்டு “பிராப்ளம் என் சிரிப்பு இல்ல. உன்னோட பிரைன். அது இன்னும் வளராம 5 வயசுக் குழந்தை மாதிரி இருந்தா இப்பிடிதான் ஆகும். சீக்கிரமா 23 வயசுப் பொண்ணு மாதிரி யோசிக்கக் கத்துக்கோ! எல்லாம் புரியும்” என்று சொல்லிக் கண் சிமிட்டியவன் அதற்கு அவள் கோபத்தில் முகம் சிவந்ததை ரசித்தவாறு பெரியவர்களிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டுக் கிஷோரையும் கூடவே அழைத்துச் சென்றுவிட்டான்.
கோபத்துடன் திரும்பியவள் அங்கே அவர்களையே இவ்வளவு நேரம் குழப்பத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரித்திமாவைப் பார்த்து “நீ எப்போ வந்த ரித்தி? இப்போ எதுக்கு இவ்ளோ ஷாக் உன் முகத்துல?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.
“நான் எப்போவோ வந்துட்டேன்., ஆமா இங்க என்ன நடக்குது?” என்று அவளைக் கேலி செய்தாள் ரித்திமா.
“அதுவா ரித்தி? அவன் இப்போ சிரிச்சான் நீ பாத்தியா. இந்த மாதிரி அவன் சிரிச்சா என்னைச் சுத்தி என்ன நடக்குதுனு எனக்கு மறந்து போயிடுது ரித்தி” என்று அவள் குறைபடவும் தலையில் அடித்த ரித்திமா “ராகவ் சொன்ன மாதிரி 23 வயசுப் பொண்ணு மாதிரி யோசி.,” என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.
அவந்திகாவோ இதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளாமல் சாயங்கால நிகழ்ச்சிக்காகத் தயாராக ஆரம்பித்தாள்.
அனைவரும் எதிர்பார்த்த அந்த மங்கும் மாலை நேரம் ஒருவாறு வந்துவிட்டது.
கபூர் குடும்பத்தினரின் பங்களா…
“பய்யா! ரெடியா? எவ்ளோ நேரம்தான் எடுத்துக்குவீங்க?” என்று சலித்தவாறு சோஃபாவில் உட்கார்ந்துகொண்டான் கிஷோர்.
“அவன்தான் இன்னைக்கு ஃபங்ஷனோட ஹீரோ., சோ கொஞ்சம் டைம் எடுத்துதான் ரெடி ஆவான்” என்று வருணைக் காப்பாற்றினார் ராதிகா.
அப்போது அங்கே வந்த ராகவைப் பார்த்த சுமித்ரா “ஒரு பேரன் வருங்காலப் பொண்டாட்டியப் பாக்கறதுக்கே இவ்ளோ நேரம் நேரம் செலவழிச்சு ரெடியாகுறான். இன்னொருத்தன் பொண்டாட்டினு ஒருத்தி இருக்கிறதயே மறந்துட்டுப் போனும் கையுமா சுத்திட்டு இருக்கான்!” என்று குறைப்பட்டார்.
அவர் அருகில் வந்து உட்கார்ந்து தோளில் கை போட்ட ராகவ் “தாதி! அவந்திகாவுக்காக நான் ஏன் ஸ்பெஷலா ரெடியாகணும்? எப்பிடியும் அவ என்னைக் கண்டுக்கக் கூட மாட்டா. அந்த ஜான்சி ராணிக்கு அங்க இங்க சுத்தி வர்றதுக்கே டைம் சரியா இருக்கும்” என்றான்.
“சோ பய்யா., உங்களப் பாபி பாக்கலங்கிறதுதான் இப்போ உங்களோட வருத்தமா?” என்று கண்ணடித்தான் கிஷோர்.
“அவ என்னை எதுவும் திட்டாம இருந்தாலே எனக்குச் சந்தோஷம்தான் டா. நீ வேற” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பத் தயாரானான்.
அவன் வெளியே கிளம்பத் தயாராவதைக் கண்ட சுமித்ரா “ராகவ்! நீ சங்கீத்கு வரல?” என்று கேட்க ராகவ் “நான் அங்க வந்து என்ன பண்ணப் போறேன் தாதி? எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீங்க எல்லாரும் போங்க. என்னோட வேலை முடிஞ்சுதுனா நான் உங்க கூட வந்து ஜாயிண்ட் பண்ணிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டுக் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
காரில் சென்றபடியே ப்ளூடூத்தில் பேசிக்கொண்டிருந்தான் ராகவ்.
“சோ இதுக்கு எல்லாம் காரணம் அந்த சிராஜ் மெஹ்ரா தானா?. அவனை நான் பாத்துக்கிறேன். நீ அவன் பி.ஏ கூடவே இருந்து அவனோட நெக்ஸ்ட் மூவ்மெண்ட் என்னனு எனக்கு இன்ஃபார்ம் பண்ணு” என்று கூறிவிட்டுக் காலை கட் செய்தான்.
அவன் சென்றுகொண்டிருந்தது ஜெய்ப்பூரிலிருந்த ஹோட்டல் ராஜஸ்தான் பேலஸிற்க்கு! சிராஜ் அங்கு தங்கியிருப்பதை அவனுடைய உதவியாளர் வாயிலாக அறிந்தவன் அவனை நேரில் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றான்.
காரைப் பார்க் செய்துவிட்டு ஹோட்டல் லாபிக்குச் சென்றவன் தான் ஒரு ரிப்போர்ட்டர் என்றும் சிராஜ் மெஹ்ராவைப் பார்க்க வந்திருப்பதாகவும் கூறினான்.
ஹோட்டலில் பணியாள் இதைச் சொல்லவும் ஹோட்டல் ரூமிலிருந்த சிராஜ் கோபத்தின் உச்சியில் சென்றான். உடனே போனை எடுத்தவன் “விவேக்., அந்த ரிப்போர்ட்டர் இப்போ எதுக்கு என்னைப் பாக்க ஹோட்டலுக்கு வந்திருக்கான்? அவனை நீயே டீல் பண்ணிக்கோனு நான் ஆல்ரெடி உன்கிட்ட சொல்லியும் அவன் ஏன் இங்க வந்திருக்கான்? இடியட். போனை வை” என்று சொல்லிவிட்டு அவனைச் சந்திக்கக் கீழே சென்றான்.
அங்கே அவனுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருந்தவனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் “ஏய் இடியட், உன்னை விவேக்கிகிட்ட எதுனாலும் பேசிக்கோனு சொல்லியும் என்னைப் பாக்க வந்திருக்க., அவ்ளோ தைரியமா உனக்கு?” என்று அடிக்குரலில் சீறினான்.
அதைக் கேட்டபடி முதுகு காட்டி அமர்ந்திருந்தவன் “ஐயோ! எனக்கு ரொம்ப பயமா இருக்கே” என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் அவனைப் பார்த்த சிராஜ் ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து நின்றான்.
பின் சுதாரித்துவிட்டு “ஹலோ மிஸ்டர் ராகவ் கபூர்.. ஹவ் ஆர் யூ? ரீசண்டா மேரேஜ் ஆனதா நியூஸ்ல பாத்தேன். வைஃப் கூட வந்திருக்கீங்களா?” என்று டென்ஷனை மறைத்தவாறு கேட்டான்.
அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த ராகவ் “நோ நோ! மிஸ்டர் சிராஜ்! என்னோட வைஃப் இப்போ அவ ஃப்ரெண்ட் மேரேஜ்ல பிஸியா இருக்கிறாங்க! சோ நான் அவங்க கூட வரல. நான் உன்னைப் பாக்கத்தாண்டா வந்தேன்” என்று கோபத்தை அடக்கிய இறுக்கமான குரலில் பல்லைக் கடித்தபடிக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட சிராஜுக்கு உள்ளே வெடவெடத்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் “உனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிட்டு போல., அப்போ என்னோட வேலையும் ஈஸி ஆயிடுச்சு” என்று சாவகாசமாகக் கூறியபடியே ராகவின் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
பின்னர் “உன்னோட இந்தக் கல்யாணம் அவசரகாலமா நடந்ததுக்கு நான்தான் காரணம். என்ன பண்ண முடியும் உன்னால? மல்டி மில்லியனரோட டாட்டரைக் கல்யாணம் பண்ணணும்கிற உன்னோட ப்ளான் ஃப்ளாப் ஆனத நெனச்சா எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். உன்னோட வைஃப் ஒரு ஆர்டினரி மிடில் கிளாஸ் கேர்ள்னு கேள்விப்பட்டேன். சோ சேட்” என்று பரிதாபப்படுவது போலக் கேலி செய்தான்.
அவன் கூறியதைக் கேட்ட ராகவுக்கு ஜிவுஜிவென்று கோபம் தலைக்கு ஏறினாலும் அவன் திமிரை அடக்க எண்ணி “வாட்? நீ இவ்ளோ வருத்தப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்கல ப்ரோ! ஆக்சுவலி நான் உனக்குத் தேங்க்ஸ் சொல்ல வந்தேன்” என்று அவனைப் பார்த்துப் பிரகாசமான முகத்துடன் கூறினான்.
அவன் குழம்புவதைத் திருப்தியுடன் பார்த்துவிட்டுத் தொடர்ந்தவன் “யெஸ் ப்ரோ! ஆக்சுவலி ஐ லவ் அவந்திகா. பட் அவ கொஞ்சம் டிஃபரெண்ட் டைப். ஹை கிளாஸ் பையன்கிட்ட ட்ரூ லவ் இருக்காதுனு யோசிக்கிறவகிட்ட எப்பிடி என்னோட லவ்வச் சொல்லி அவள மேரேஜுக்குச் சம்மதிக்க வைக்குறதுனு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். கடவுள்தான் என்னோட லவ்வச் சேத்து வைக்க உன்ன இந்த மாதிரி ப்ளான் பண்ண வச்சிருக்கார் ப்ரோ. இது புரியாம நீ வேற காமெடி பண்ணிட்டு இருக்க” என்று அவன் கேலி போல் சொல்லிச் சிரிக்கவும் சிராஜுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
எல்லா விஷயத்தையும் சொன்ன வீர் இந்தக் காதல் விஷயத்தை மட்டும் ஏன் மறைத்தான் என்று மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்தவனைக் கிண்டலாகப் பார்த்த ராகவ் “இனிமே இந்த மாதிரி சீப்பா பிளே பண்ணாம என்னோட ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி பிளான் போடு. இப்போ நான் கெளம்புறேன். என்னோட வைஃப் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா., பை!” என்று அவனை வெறுப்பேத்திவிட்டுச் சென்றான் ராகவ்.
அவன் சென்ற பிறகு கோபத்துடன் தன் கைகளை மேஜையில் அடித்த சிராஜ் “எவ்ளோ தைரியம் இருந்தா என் இடத்துக்கே வந்து என்னை அவமானப்படுத்திட்டுப் போவ ராகவ். விட மாட்டேன்! உன்னோட வைஃபை ரொம்ப லவ் பண்ணுறல்ல! அவளை என்ன பண்ணுறேனு மட்டும் பாரு, இந்தத் தடவை நான் குடுக்கப் போற அடியில் நீ திரும்பி எழுந்திருக்கவே மாட்ட ராகவ்” என்று வன்மத்துடன் உரைத்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


