.
.
“மதினி!”
பற்பசையோடு இருந்த ப்ரஷை கையில் பிடித்தபடி அவள் சிலையாய் நிற்க சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த சாந்தியோ
“என்னடி இது? இன்னைக்கே கடைக்குப் போறியா?” என்று கேட்க
“இங்க இருந்து என்ன செய்யப்போறேன் அத்தை? உன் மகன் எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கான்னு தெரியல... இந்த லெட்சணத்துல மறுவீட்டு விருந்து ஒன்னு தான் குறைச்சல்... கடைக்குப் போனா மாசம் முடிஞ்சதும் சம்பளமாச்சும் வரும்... நீ ஒன்னு பண்ணு, இடியாப்பத்தையே மதியானத்துக்கும் டிபன் பாக்ஸ்ல போட்டு குடுத்துடு... வெளிய சாப்பிட்டா என் சம்பளத்துக்குக் கட்டுப்படி ஆகாது அத்தை... நாளையில இருந்து நான் சீக்கிரம் எந்திரிச்சு சமைச்சுக்கிறேன்” என்றாள் அவள்.
அவளது பேச்சு மூவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமொன்றில் விற்பனைப்பெண்ணாக பணிபுரிகிறாள் ஆனந்தி. நாள் முழுக்க கால் கடுக்க நிற்கும் வேலை தான். பதினொன்றாம் வகுப்பு கூட தாண்டாதவளுக்கு வேறென்ன வேலை கிடைக்கும்?
அந்நேரம் பார்த்து வீட்டுக்குள் வந்த சரவணன் தங்கை வேலை பார்க்கும் கடைக்குக் கிளம்பி நிற்பதைக் கண்டதும் பற்களை கடித்தவன்
“நீ வீட்டு மானத்தை வாங்கணும்னு கங்கணம் கட்டிருக்கியா? நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு... இன்னைக்கு நீ வேலைக்குப் போனா தெருவுல உள்ளவங்க என்ன பேசுவாங்க?” என கத்தினான்.
ஆனந்தி காதை சுண்டுவிரலால் நிமிண்டிவிட்டு “எவன் என்ன பேசுனா எனக்கு என்ன? நான் வேலைக்குத் தானே போறேன், எவன் கூடவும் ஓடிப்போகலையே... நீ என்ன புதுசா குடும்பமானத்தைப் பத்தி கவலைப்படுற? உனக்குத் தான் நாங்க எக்கேடு கெட்டாலும் கவலை இல்லையே... அப்பா ஆக்சிடெண்ட்ல காலை இழந்து வேலைக்குப் போகமுடியாம ஆனப்ப கூட அண்ணி முந்தானைய பிடிச்சுட்டுப் போனவன் தானே நீ... அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் எங்களை நாங்க தானே பாத்துக்குறோம்... உன் பொண்டாட்டி மகராசி மட்டும் கல்யாணம் கருமாதினு எங்க வீட்டுப்படி ஏறலைனா இப்பவும் எதுவும் மாறிருக்காது... சும்மா இங்க வந்து சாமியாடாம வழிய விடு... இல்லனா அண்ணன்னு கூட பாக்க மாட்டேன்” என்று சொல்ல சரவணன் குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்து விலகி நின்றான்.
ஆவுடையப்பனையும் சாந்தியையும் பார்த்தவள் “நான் கிளம்புறேன்... உங்க மகன் வந்தா அடுத்து அவன் என்ன பண்ணலாம்னு இருக்கான்னு கேட்டு வைங்க... காலம் முழுக்க டாஸ்மாக் கடையே கதினு கிடப்பானா இல்ல வீடு குடும்பம் தங்கச்சிய பத்தி யோசிச்சு முடிவெடுப்பானானு எனக்குத் தெரியணும்... அவன் குடிச்சி கட்டமண்ணா போவேன்னு சொன்னான்னு வச்சுக்கோங்க, இந்த ஆனந்தியோட சுயரூபத்தைப் பாப்பான்... மறுபடியும் சொல்லுறேன், நான் அவனை என்ன செஞ்சாலும் நீங்க கேள்வி கேக்கக்கூடாது” என எச்சரித்துவிட்டுக் கிளம்பினாள்.
*******
ரொம்ப எதார்த்தமானக் கதை இது. நாளை முதல் தளத்தில் தினமும் ரெண்டு பதிவுகள் வரும். டீசர்கள் வரிசையா போட்டதால சிறப்பு பதிவுகள் எதுவுமே சைட்ல போடல. நாளையில இருந்து வழக்கம் போல அந்தப் பதிவுகள் வரும். குட் நைட்!
Share your Reaction
- My all time favourite story
Share your Reaction
Vaadi maappu 😝 😝 😝
Share your Reaction
@sasikumarmareeswari 😆 😆 😆 intha kathai pottale unga niyabagam vanthudumka
Share your Reaction
சூப்பர்👌👌👌👌
Share your Reaction
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Share your Reaction
One of my favorite story
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan