
நம்ம சைட்ல ஹெட்டர்ல வர்ற லைன்சை யாராச்சும் வாசிச்சிருக்கிங்களா? அதுல கோஸ்ட் ரைட்டர்கள் இங்க இருந்து கதைய திருடாதிங்கங்கிற வாக்கியம் வரும். அதென்ன கோஸ்ட் ரைட்டர்? பேய்க்கதை எழுதுறவங்களானு சிலர் நினைச்சிருக்கலாம். அவங்க பேய்க்கதை எல்லாம் எழுதமாட்டாங்க. அப்ப யார்தான் அவங்க? அதைத்தான் இன்னைக்கு Unfiltered by Nithya பகுதில பாக்க போறோம்.
கோஸ்ட்ரைட்டிங்: யார் இந்த நிழல் எழுத்தாளர்கள்?
கோஸ்ட்ரைட்டிங்னா என்னனு ரொம்ப சிம்பிளா சொல்லிடுறேன். ஒருத்தர் பேசுறது, கதை சொல்றது, அல்லது ஒரு விஷயத்தைப் பத்தி எழுதணும்னு நினைப்பாரு. ஆனா, அவருக்கு அதை அழகா, திறமையா எழுதத் தெரியாது, இல்லைன்னா அதுக்கு நேரம் இருக்காது. அப்ப, அவரு இன்னொரு எழுத்தாளரை வேலைக்கு அமர்த்தி, தன்னோட யோசனைகளை எல்லாம் சொல்லி, அதைப் புத்தகமா, கட்டுரையா, இல்ல பேச்சாவோ மாத்தச் சொல்லுவாரு.
இப்படி எழுதிக் கொடுக்கிறவரைத்தான் நாம "கோஸ்ட்ரைட்டர்" (Ghostwriter) னு சொல்றோம். ஏன் அப்படி சொல்றோம்னா, அவர் எழுதினாலும், அந்தப் படைப்போட ஆசிரியர் பேஜ்ல அவர் பேரு இருக்காது. அந்தப் புகழ் எல்லாம் யாருக்காக எழுதினாரோ அவருக்குத்தான். இந்தக் கோஸ்ட்ரைட்டர்களுக்குப் பணம் கிடைக்கும், ஆனா பொதுவா அவங்க பேர் வெளியில தெரியாது. இது சினிமா துறையில பின்னாடி இருந்து பாடுற "பிளேபேக் சிங்கர்" மாதிரிதான். பாடுறது அவங்க, ஆனா பேர் வாங்குறது ஹீரோ, ஹீரோயின்.
கோஸ்ட்ரைட்டிங் நிறைய இடங்கள்ல நடக்குது. அதுக்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
- பிரபலங்களின் சுயசரிதைகள்: பெரிய பெரிய நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் இவங்க வாழ்க்கைல நடந்த விஷயங்களை நாம தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். அவங்க சொல்லும்போதே நமக்கு ஆர்வம் கூடும். ஆனா அவங்களுக்கெல்லாம் புத்தகமா எழுதி முடிக்க நேரம் இருக்காது. அதனால கோஸ்ட்ரைட்டர்களை வெச்சு அவங்க வாழ்க்கைல நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை புத்தகமா மாத்துவாங்க. சமீபத்தில் இளவரசர் ஹாரியோட "ஸ்பேர்" (Spare)ங்கிற புத்தகம் வந்தப்போ, அதை எழுதினவர் ஜே. ஆர். மோரிங்கர்னு ஒரு புலிட்சர் பரிசு வாங்குன எழுத்தாளர்னு பரவலா பேசினாங்க.
- அரசியல் பேச்சுகள்: ஒரு அரசியல்வாதி மேடையில் பேசுற பேச்சு, அவரைப் பத்தி நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும். ஆனா எல்லாப் பேச்சையும் அவங்களே தயார் பண்ண மாட்டாங்க. அதுக்காகவே தனி கோஸ்ட்ரைட்டர் டீம் இருப்பாங்க. இவங்க அரசியல்வாதி மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு, அதை மக்கள் மனசுல பதியுற மாதிரி வார்த்தைகளை கோர்த்து எழுதுவாங்க. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடிக்கு டெட் சோரென்சன்னு ஒரு கோஸ்ட்ரைட்டர் இருந்தார். கென்னடியோட "புரோஃபைல்ஸ் இன் கரேஜ்" (Profiles in Courage)ங்கிற புத்தகத்தை எழுதினதுல அவருக்குப் பெரிய பங்கு இருந்ததா அப்புறமாத்தான் தெரிஞ்சது.
- வணிக மற்றும் சுய-உதவி புத்தகங்கள்: ஒரு நிறுவனத்தோட சி.இ.ஓ, அல்லது ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர், அவங்க துறையில் பெரிய ஆளா இருப்பாங்க. ஆனா அதை ஒரு புத்தகமா எழுத அவங்களுக்குத் தனி திறமை தேவைப்படும். அதனால, அவங்க யோசனைகளை எல்லாம் கோஸ்ட்ரைட்டர்கிட்ட சொல்லி, அதை புத்தகமா வெளியிடுவாங்க. பிரபலமான "தி 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ் பீப்புள்" (The 7 Habits of Highly Effective People)னு ஒரு புத்தகம் இருக்கு. அதை ஸ்டீபன் கோவி எழுதினதா இருந்தாலும், அதோட எழுத்து வேலைகளை கென் ஷெல்டன்னு ஒரு கோஸ்ட்ரைட்டர் பார்த்ததா சொல்வாங்க.
- புனைகதை தொடர்கள்: சில புத்தகத் தொடர்கள் ஒரு எழுத்தாளர் பேர்ல வரும். ஆனா, அந்தப் புத்தகம் எல்லாத்தையும் அவர் எழுதியிருக்க மாட்டார். வெவ்வேறு கோஸ்ட்ரைட்டர்கள் தொடர்ந்து எழுதுவாங்க. உதாரணத்துக்கு, "நான்சி ட்ரூ" மற்றும் "ஹார்டி பாய்ஸ்" போன்ற மர்ம நாவல் தொடர்கள். இதுல இருக்கிற எல்லாப் புத்தகங்களையும் ஒரே ஆள் எழுதலை. வெவ்வேறு எழுத்தாளர்கள் "கரோலின் கீன்" மற்றும் "ஃபிராங்க்ளின் டபிள்யூ. டிக்சன்"ங்கிற புனைப்பெயர்ல எழுதினாங்க. இதுக்கு "புக் பேக்கேஜிங்"னு ஒரு பேர் இருக்கு. இந்த புக் பேக்கேஜிங் மெத்தட்ல கூட நம்ம மூஞ்சிபுக் எழுத்துலகத்துல சிலர் எழுதுறதை கவனிச்சதுண்டு. எழுத்துநடை வித்தியாசத்தை வச்சு ஒருத்தர் எழுதுனதில்லனு கண்டுபிடிக்கலாம்.
நான் எதுக்காக கோஸ்ட்ரைட்டர்கள் பத்தி தளத்தில குறிப்பிட்டேன் தெரியுமா? எழுத்தைப் பேஷனுக்காக எழுதுறவங்க கிட்ட ஒரு எதிக்ஸ் இருக்கும். கொஞ்சம் நியாயமா இருப்பாங்க. யார் ஒருத்தர் எழுத்தை வணிகமயமா, ஒரு தொழிலா மட்டும் பாக்குறாங்களோ அவங்க எதிக்சை ஃபாலோ பண்ணுவாங்களாங்கிற சந்தேகம் இருக்கு. அவங்களுக்குத் தேவை கதை எழுதணும். அதை வச்சு காசு பாக்கணும். நான் எதையோ யோசிச்சு என்னத்தையோ எழுதுறேன். அதை கோஸ்ட் ரைட்டிங் என்ற பேர்ல திருடி யாரோ ஒருத்தருக்குக் காசுக்காக தாரை வார்த்துட்டா என்ன பண்ணுறது? இந்தக் காரணத்துக்காகத்தான் நான் கோஸ்ட் ரைட்டர்கள் என் தளத்துக்கு வர்றதை விரும்புறதில்ல. முன்னெச்சரிக்கை உணர்வுதான். வேற ஒன்னுமில்ல.
ஓகே மக்களே! உங்களுக்குக் கோஸ்ட் ரைட்டர்ஸ் பத்தி ஒரு ஐடியா கிடைச்சிருக்கும்னு நம்புறேன். அடுத்த வேற ஒரு டாபிக்கோட வர்றேன். குட் நைட்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அய்யய்யோ..! இது தெரியாம நான் இத்தனை நானா பேய் கதை எழுத்தாளர்கள், சும்மா அட்டகாசமா, பெருசா, அதிரடியா எழுதுவாங்கன்னுல்ல நினைச்சிப்போட்டேன். இதுக்கு அர்த்தம் இப்படித்தானா ? நல்லவேளை, தெளிவாக சொல்லி புரிய வைச்சிங்க.
இல்லைன்னா இப்படித்தான் தப்பாவே புரிஞ்சிகிட்டிருப்பேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@crvs2797 எனக்கு இந்த டேர்ம் பத்தி ரெண்டு வருசமாதான் தெரியும் சிஸ் 😉
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Intha muraiyum puthusa therinchukiten ka!!.. Gud one😍
Share your Reaction
Entha ghost ku eppdi oru vilakkam erukkaa 🧐🧐🧐🧐
Share your Reaction
@gowsalya-m 😍 😍 😍 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@sasikumarmareeswari நான் முதல்ல பேய்க்கதை எழுதுறவங்கனு நினைச்சேன்... எழிலக்கா மூலமா தெரிய வந்த டேர்ம் இது 🤣 🤣 🤣
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Nice information sis நான் கதை திருடுரவங்கனு தான் நெனச்சேன் ஆனால் தகவல் வேற லெவல்
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



