
நம்ம பலதரப்பட்ட மனுசங்க கூட அன்றாட வாழ்க்கைல பழகுறோம். அவங்களை கொஞ்சம் கூர்ந்து கவனிச்சோம்னா சில குணாதிசயங்களைக் கண்டுபிடிக்கலாம். அதுல ஒருவகை ஆட்கள்தான் இந்த பீபிள் ப்ளீஷர்.
பீபிள் ப்ளீசர்னா யாரு?
பீபிள் ப்ளீசர்னா, எல்லாருக்கும் நம்மளப் பிடிச்சிருக்கணும், நம்மால யாரும் வருத்தப்படக் கூடாதுன்னு நினைச்சு, எப்பவும் மத்தவங்கள சந்தோஷமா வெச்சுக்க முயற்சி பண்றவங்க. அது மூலமா தனக்கு வேண்டியதைச் சாதிச்சுப்பாங்க.
'ஐயோ, நம்மள யாரும் கண்டுக்காம போய்டுவாங்களோ' அல்லது 'நம்மள யாராவது வெறுத்துட்டா என்ன பண்றது'ன்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருக்கும். அதனாலதான் இப்படி நடந்துக்குவாங்க.
வெளியே இருந்து பார்த்தா, இவங்க ரொம்ப நல்லவங்க, உதவுற மனசு உள்ளவங்க மாதிரி தெரிவாங்க. ஆனா, அவங்களுக்குத் தன்னம்பிக்கை ரொம்பக் கம்மியா இருக்கும்.
இவங்களோட குணங்களும் மனசும் எப்படி இருக்கும்?
- பயம்தான் காரணம்: இவங்களோட எல்லாச் செயல்களுக்கும் பின்னாடி இருக்கிறது, 'நம்மளப் பத்தி தப்பா நினைச்சுட்டா என்ன பண்றது?' இல்லன்னா 'நம்மளத் தனியா விட்டுட்டா என்ன பண்றது?'ங்கிற பயம்தான்.
- தன்னம்பிக்கையே இருக்காது: அவங்க அவங்களோட திறமையை நம்ப மாட்டாங்க. மத்தவங்க 'நீ நல்லா பண்ற'ன்னு சொன்னா மட்டும்தான் அவங்களுக்குத் தன்னம்பிக்கை வரும்.
- 'வேண்டாம்'னு சொல்ல மாட்டாங்க: இவங்களால 'வேண்டாம்'னு ஒருபோதும் சொல்லவே முடியாது. அப்படிச் சொன்னா, மத்தவங்க கோபப்படுவாங்களோன்னு பயப்படுவாங்க. அதனால, மத்தவங்க இவங்கள ஈஸியாப் பயன்படுத்திக்கிட்டு ஏமாத்திடுவாங்க.
- மனசுக்குள்ள கோபம்: மத்தவங்களுக்காகவே எல்லாத்தையும் பண்றதால, தனக்கும் எல்லாரும் எல்லாமும் செய்யணும்ங்கிற எதிர்பார்ப்பு இவங்களுக்குள்ள இருக்கும். அது ஏமாற்றமானான, ஒரு கட்டத்துல மனசுக்குள்ள ஒரு கோபமும், கசப்பும் வரும். ஆனா, அதை வெளிய காட்ட முடியாது.
- நடிப்பாங்க: மத்தவங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கறதுக்காக, இவங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைக்கூடச் செய்வாங்க. அது உண்மையான மனசுல இருந்து வராது.
இதுல என்ன நல்லது, என்ன கெட்டது?
நல்லது என்னன்னா...
- சண்டை வராது: இவங்க எப்போதுமே விட்டுக் கொடுத்துப் போறதால, வீட்டுலயோ அல்லது ஆபீஸ்லயோ அதிகமா சண்டை சச்சரவு வராது.
- நல்ல பேரு கிடைக்கும்: எப்பவும் உதவுறவங்க, அன்பா பேசுறவங்கங்கறதால, இவங்களுக்கு நல்ல பேரு இருக்கும்.
கெட்டது என்னன்னா...
- உங்களையே மறந்துடுவீங்க: மத்தவங்களுக்காகவே வாழ்றதால, 'எனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன வேணும்'னு உங்களுக்கே தெரியாம போயிடும். உங்களுக்கான அடையாளமே இல்லாம போயிடும். அதே போல மத்தவங்களும் இருக்கணும்னு எதிர்பாப்பாங்க. அது நடக்காத பட்சத்துல உலகமே முழுகுன மாதிரி தன்னை பாதிக்கப்பட்ட நபரா காட்டிப்பாங்க
- மனசளவுல கஷ்டப்படுவாங்க: எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தா, மனசுக்குள்ள ஒரு பெரிய பாரம் ஏறும். இது மன அழுத்தத்தையும், டென்ஷனையும் உண்டாக்கிடும்.
- பயன்படுத்தப்படுவாங்க: 'வேண்டாம்'னு சொல்லத் தெரியாததால, இவங்கள யாராவது ஒருத்தர் ஈஸியா பயன்படுத்தி ஏமாத்திடுவாங்க.
- உறவுகள்ல சிக்கல் வரும்: உள்ளுக்குள்ள கோபத்தையும், கசப்பையும் வெச்சுக்கிட்டே உறவுகளை வெச்சுக்கறதால, அது நல்லா இருக்காது. வெளிப்படையா பேச முடியாததால, உறவுகள்ல ஒரு இடைவெளி இருக்கும்.
- உண்மையான உதவும் எண்ணம் இருக்காது: இவங்க செய்யுற உதவிகளோட அடிப்படையே தனக்குக் காரியம் ஆகணும்ங்கிற சுயநலம் தான். உண்மையான உதவும் தன்மை இவங்களுக்கு இருக்காது. எல்லாரும் தன்னைக் கவனிக்கணும், எல்லாரும் தன்னைப் புகழணும்ங்கிற நோக்கத்தோடவே இவங்களோட உதவிகள் அமையும். இது நல்ல மனநிலை இல்ல.
- சோ இந்த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து விலகி இருங்கள். நாளைக்கு மலர் மகிழ் எபி உண்டு. குட் நைட்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Yenna suththi entha aalunga thaan erukkaanga da 🫢🫢🫢ethunga evlo danger nu eppo thaan theriyithu
Share your Reaction
@sasikumarmareeswari பழகுறப்ப வெண்ணெய்ல கத்தி வழுக்குற மாதிரி பழகுவாங்க. நாம கேக்காமலே உதவிய திணிப்பாங்க. கடைசில நம்ம தான் அவங்க உதவில வாழ்ந்தோம்ங்கிற மாதிரி நம்மளை மத்தவங்க முன்னாடி சித்தரிப்பாங்க... இதுஅவங்களுக்கும் நல்லதில்ல. நமக்கும் நல்லதில்ல
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@sasikumarmareeswari பழகுறப்ப வெண்ணெய்ல கத்தி வழுக்குற மாதிரி பழகுவாங்க. நாம கேக்காமலே உதவிய திணிப்பாங்க. கடைசில நம்ம தான் அவங்க உதவில வாழ்ந்தோம்ங்கிற மாதிரி நம்மளை மத்தவங்க முன்னாடி சித்தரிப்பாங்க... இதுஅவங்களுக்கும் நல்லதில்ல. நமக்கும் நல்லதில்ல
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Ivanga romba danger aanavanga!... Namma neenga seirathu thappu nu sonna kooda namakku guilt trigger panna than pappanga!
Sensible posts ka ellame😍🔥
Share your Reaction
@gowsalya-m யாத்தே 😫 😫 😫 உண்மையோ உண்மைடா... செஞ்ச தவறையும் ஒத்துக்கமாட்டாங்க.. அடுத்தவங்க முன்னாடி நம்மளை குற்றவாளியாக்கி அவங்க விக்டிம் கேம் ப்ளே பண்ணுவாங்க... சமீபத்துல கிடைச்ச அனுபவம் 😔 😔 😔 😔
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@gowsalya-m யாத்தே 😫 😫 😫 உண்மையோ உண்மைடா... செஞ்ச தவறையும் ஒத்துக்கமாட்டாங்க.. அடுத்தவங்க முன்னாடி நம்மளை குற்றவாளியாக்கி அவங்க விக்டிம் கேம் ப்ளே பண்ணுவாங்க... சமீபத்துல கிடைச்ச அனுபவம் 😔 😔 😔 😔
😒😒😒
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



