.
.
என்னடா வெள்ளிகிழமை Unfiltered by Nithya பகுதி வந்திருக்கேனு யோசிக்குறிங்களா? நாளைக்கு வரைக்கு வெயிட் பண்ண முடியாத ஒரு தகவலை உடனே ஷேர் பண்ணிக்க தோணுச்சு. அதான் நாளைக்கு கோவில் டீட்டெய்ல் போடலாம்னு மாத்திட்டேன்.
நாஸ்டால்ஜியா (Nostalgia) இந்த வார்த்தைய கேள்விப்பட்டிருக்கிங்களா? கடந்த காலத்தோட இனிமையான தருணங்களை நினைவுபடுத்துறப்ப இந்த வார்த்தைய பயன்படுத்துவோம்.
90s kidsகு நிறைய நாஸ்டால்ஜியா மொமண்ட் உண்டு. சக்திமான்ல ஆரம்பிச்சு ஆசை சாக்லேட் வரைக்கும் நம்ம நினைச்சு பாத்தா இப்பவும் இனிக்குற எத்தனையோ மொமண்ட்ஸ் நமக்குச் சொந்தமா இருக்கு.
அப்பிடி ஒரு நாஸ்டால்ஜியா மொமண்ட் தான் நேத்து நெட்ல சும்மா எதையோ தேடுனப்ப ஒரு புக் கவரைப் பார்த்ததும் தோணுச்சு.
அது 1970 செப்டம்பர்ல வெளிவந்த கல்கி மேகசின்தான் அது. இப்ப கல்கி மேகசின் புக்கா வர்றதில்லனு கொஞ்சநாளுக்கு முன்னாடி தான் வீணாக்கா சொல்லிட்டிருந்தாங்க. அதோட பழைய பதிப்பை பாத்ததும் ரொம்ப சர்ப்ரைசா இருந்துச்சு.
கிட்டத்தட்ட 55 வருசத்துக்கு முந்தைய பதிப்பு அது.
அதைப் பாத்ததும் நாஸ்டால்ஜியா மொமண்ட் வந்தது எனக்கில்ல. எங்கம்மாக்கு. அம்மா ஒரு புத்தகப் பிரியை. அந்தக் காலத்துல சர்க்குலேசன்ல புக் வாங்கி படிச்சதை எல்லாம் கதை கதையா சொல்லுவாங்க.
நான் நெட்ல பாத்த புக் அவங்க பிறக்குறதுக்கு முன்னாடி வந்த பதிப்பாம், விலை நாப்பது காசு!
எடுத்த உடனே ஃபார்முலா மில்க் விளம்பரம் ஒன்னு கண்ணுல பட்டுச்சு. அமுல் கம்பெனியோட ப்ராடக்ட் அது. பேர் அமுல் ஸ்ப்ரேனு போட்டிருந்துச்சு. அது எங்கம்மா பாத்ததில்லனு சொன்னாங்க.
அடுத்து இருந்த விளம்பரம் ‘டாடா டெக்ஸ்டைல்ஸ்’. உடனே ஜூடியோ, வெஸ்ட்சைட்னு அவங்களோட இப்ப உள்ள க்ளாத் ப்ராண்ட் எல்லாம் ஞாபகம் வந்துச்சு.
அடுத்த விளம்பரம் பெப்ஸ்னு ஒரு இருமல் மருந்து. அப்பவே 50 ஆண்டுகள் பாரம்பரியம்னு போட்டிருந்தாங்க. அப்ப 1920லயே இருந்த ப்ராண்ட் போல.
அடுத்து டார்ஸ்லைட் விளம்பரம். டார்ச் லைட் போய் எமர்ஜென்சி லேம்ப் வந்து காலம் எவ்ளோ மாறிடுச்சுல்லனு நானும் அம்மாவும் பேசிக்கிட்டோம்.
அடுத்து வந்துச்சு ஹார்லிக்ஸ் விளம்பரம். திக்கான பாலுடன் கோதுமை மற்றும் மால்டெட் பார்லியோட சத்துனு பெருசா விளம்பரம் பண்ணிருந்தாங்க. இப்ப டாலர் ஸ்ட்ராங்கர் ஷார்ப்பர் வரைக்கும் விளம்பர யுக்தி வேற மாதிரி மாறிடுச்சு. டேஸ்ட் கூட மாறிடுச்சுனு அம்மா சொன்னாங்க.
அடுத்து வந்தது அனாசின் மாத்திரை விளம்பரம். அமிர்தாஞ்சன்ல வந்த க்ரைப் வாட்டர் விளம்பரம். இவ்ளோ விளம்பரங்களுக்கு அடுத்து தான் உள்ளடக்கமே வந்துச்சு. பத்திரிகைகள் மட்டும்தான் அப்ப விளம்பரங்களுக்குனு இருந்த ஊடகம் போல.
அப்புறம் தலையங்கம், இந்திரா காந்தியையும் ஹிட்லரையும் கம்பேர் பண்ணி ஒரு கார்ட்டூன், எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மாவோட கச்சேரி கலா மந்திர்ல நடக்குதுனு ஒரு விளம்பரம், சின்த்தால் பவுடர் விளம்பரம்னு சர்வம் விளம்பரமயம்.
அப்புறம் அட்டைப்படத்துக்குச் சம்பந்தப்பட்ட கதை ஒன்னு வந்துச்சு. தெலுங்கு கதையோட தமிழ் மொழிபெயர்ப்பு.
அப்புறம் இந்தியன் பேங்க் விளம்பரம், அரைக்கீரை தைலம்னு முடி வளர தேய்க்க வேண்டிய தைலம் பத்தி விளம்பரம் (இப்ப இன்ஸ்டால உள்ள அக்காக்கள் செய்யுற அளவுக்கு ஹேர் ஆயில் பிசினஸ் ஞாபகம் வந்துச்சு) இப்பிடி ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்துச்சு மை ஃபேவரைட் ‘பொன்னியின் செல்வன்’ அந்த பதிப்புக்கான அத்தியாயங்கள். தொடர்கதையா வந்த சமயம் போல.
குந்தவை, ஆழ்வார்க்கடியான், அனிருத்தரோட படங்களை ரசிச்சு அந்த ரெண்டு அத்தியாயத்தையும் வாசிச்சு முடிச்சாச்சு.
அப்புறம் ராஜாஜியோட ‘ராமாயணம்’. அனுமன் கடலைத் தாண்டுன பகுதி. அடுத்து வந்த பகுதி ஒரு சின்ன காமிக்ஸ் கதை.
இப்ப திரை விமர்சனம் மாதிரி அப்ப நாடக விமர்சன் இருந்திருக்கு. தர்ம யுத்தம்னு ஒரு நாடகத்தை விமர்சனம் பண்ணிருந்தாங்க.
அடுத்து மீண்டும் விளம்பரம். டாட்டாவோட சோப் ப்ராண்ட் ஒன்னு – ஜிகினா தாள் போட்ட ஒரே சோப்னு விளம்பரப்படுத்திருந்தாங்க. சிரிப்பு தான் வந்துச்சு அதைப் படிச்சதும். We are using face wash and cleanser broனு ஆட்டோமேட்டிக்கா மைண்ட்வாய்ஸ் வேற தோணுச்சு!
இந்திரா பார்த்தசாரதி எழுதுன ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ என்ற கதை. அதுல ஒரு கேரக்டர் பேரு நித்யா. வாசிச்சப்ப, வாவ் ஃபீலிங்!
அடுத்து மீண்டும் விளம்பரம் – டிவிஎஸ்சோட சுந்தரம் க்ளெய்டன், பிரிட்டாணியாவோட அனிமல் வடிவ பிஸ்கட், பஜாஜோட ஹோம் அப்லையன்சஸ், பான்ஸ் பவுடர், போர்ன் விட்டா விளம்பரம், கடைசியா காட்ரேஜோட பூட்டு விளம்பரத்தோட மேகசின் முடிஞ்சுது.
படிச்சு முடிச்சதும் ‘நாஸ்டால்ஜியா’ மொமண்ட் அம்மாக்கு. இன்னைக்கு இருக்குற ப்ராண்ட்ஸ்ல சிலது அப்பவே இருந்த ஆச்சரியம் எனக்கு. இதோட unfiltered by nithya முடியுது.
அடுத்த வாரம் ஏதாச்சும் சுவாரசியமா சிக்குதானு காத்திருப்போம்; குட் நைட்!
Share your Reaction
Super ah irukku.... 😍
Share your Reaction
Sister padika padika orey coosepumps
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan