NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

சருமப் பராமரிப்பில்...
 
Share:
Notifications
Clear all

சருமப் பராமரிப்பில் நாம் செய்யும் தவறுகள் 1.1

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

Unfiltered by Nithya – இங்க எனக்குத் தெரிஞ்ச விசயங்கள், கருத்துகளை நான் ஷேர் பண்ணப்போறேன் மக்களே. உங்களோட கருத்துகளைச் பகிரலாம். அல்லது வழக்கம் போல அமைதியா போகலாம்! ஆனா இதுல சொன்ன விசயங்களை மறந்துடாதிங்க.

 

இன்னைக்கு எனக்கு ஷேர் பண்ணனும்னு தோணுன டாபிக் ‘ஸ்கின்கேர்’. இன்னைக்கு பணம் கொழிக்குற பிசினஸ் இதுதான். அங்க அங்க ஸ்கின்கேர் ப்ராண்ட் முளைக்குது. ஆர்கானிக், ஆயுர்வேதிக், கெமிக்கல்னு ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.

 

ஸ்கின்கேர்னு சொன்னதும் மஞ்சளும் கடலைமாவும் நிறைய பேருக்கு ஞாபகம் வரும். நானும் யூஸ் பண்ணிருக்கேன் அதெல்லாம், பெருசா எந்தப் பலனுமில்ல. மஞ்சள் பூசி வெயில்ல போய் மூஞ்சி இன்னமும் டேன் ஆனதுதான் மிச்சம். கடலைமாவு ஸ்கின்னை சாப்ட் ஆக்கும். அவ்ளோதான்… மத்தபடி ஹோம் ரெமடீஸ்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். நம்ம ஸ்கின்னுக்கு நல்லதுனு நினைக்குற ஹோம் ரெமடீஸ் நிஜமாவே நல்லதுதானா? பாத்துடலாமா?

 

  • லெமன் ஜூஸ் – பிம்பிள் வராது, ஸ்கின் கலர் ஆகும்.

 

உண்மை :

 

லெமன் ஜூஸ்ல விட்டமின் சி உண்டு. அது ஸ்கின் கலரை வெளுப்பாக்கும்ங்கிறது உண்மைதான். ஆனா அதோட பி.ஹெச் வேல்யூ ஸ்கின்னோட பி.ஹெச்சுக்கு ரொம்ப அதிகம். அதுல ஆசிட் தன்மையும் அதிகம். அதிகமா லெமன் ஜூஸ் முகத்துல போட்டா தோளோட மேல் பகுதியான பேரியர் கடுமையா பாதிக்கப்படும். ஸ்கின் பேரியர் டேமேஜ் ஆச்சுனா முகத்துல கரும்புள்ளி, அங்க அங்க திட்டு திட்டா கருப்பாகுறது எல்லாம் நடக்கும்.  அதுக்கு பதிலா அந்த லெமனை ஜூஸ் போட்டு குடிச்சா நல்லது. முகத்துக்கு போடக்கூடாது.

 

  • சோடா உப்பு / பேக்கிங் சோடா - முகத்தை க்ளீன் ஆக்கும், ஆக்னே வராம தடுக்கும்.

 

உண்மை:

 

சோடா  உப்பு ஒரு காரம் (ஆல்கலைன்). அதை முகத்துல போட்டா உங்க ஸ்கின்னோட இயற்கையான பி.ஹெச்சை மாத்திடும். முகத்துல இயல்பா சுரக்குற எண்ணெய்யைச் சுத்தமா துடைச்சு எடுத்துடும். அதனால ஸ்கின் ரொம்ப வறண்டு போகும். ஸ்கின்ல எரிச்சல், வீக்கம் எல்லாம் வந்து பிம்பிள்ஸ், ஆக்னே வரக் காரணமாகிடும்.

 

  • டூத்பேஸ்ட் – இதைப் போட்டா முகப்பரு போயிடும்.

 

உண்மை:

 

டூத்பேஸ்ட்ல பேக்கிங் சோடா, ஹைட்ரஜன் பெராக்சைடு, ஆல்கஹால் எல்லாம் உண்டு. இது உங்க முகப்பருவை தற்காலிகமா மறைய வைக்கும். ஆனா பரு போனதும் அந்த இடத்துல கருப்புத்திட்டு உருவாக்கும். சில நேரம் தழும்பும் உண்டாக்கும்.

 

  • சுடுதண்ணி வச்சு ஆவி பிடிச்சா முகத்துல உள்ள துளைகள் (போர்ஸ்) ஓப்பன் ஆகும். குளிர்ந்த தண்ணி அந்த போர்ஸை மூடும்.

 

உண்மை:

 

போர்ஸ்ல எந்த தசையும் மூடவோ திறக்கவோ இருக்காது. மிதமானச் சூட்டில் இருக்குற சுடுதண்ணி முகத்துல இருக்குற அழுக்கு, தூசியை க்ளீண் பண்ணும். ஆனா அதிகமான சூடு உள்ள தண்ணியால முகம் கழுவுனா ஸ்கின் வறண்டு போகும். குளிர்ந்த தண்ணி / ஐஸ் போட்ட தண்ணியால முகம் கழுவுறப்ப முகத்துல உள்ள இரத்தக்குழாய்கள் சுருங்கும். அதனால போர்ஸ் சின்னதான மாதிரி நமக்குத் தோணும். உண்மையாவே போர்ஸ் அளவு மாறாது.

 

இதோட இந்த எபிசோட் ஓவர். அடுத்த எபிசோட் எப்ப போடலாம்? அடுத்த சனிகிழமை? யோசிக்குறேன். எல்லாருக்கும் வீக்கெண்டை என்ஜாய் பண்ணுங்க. நாளைக்கு பூபாலன் – வான்மதிக்கு லீவ். குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் 🖐️ 

 

1751730004-WhatsApp-Image-2025-07-05-at-210853_e162f759.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 5, 2025 9:10 PM
Mathy and mayil reacted
(@nithyamariappankngmail-com)
Member Admin
(@crvs2797)
Estimable Member Member

அட ராமா..! இது தெரியாம கண்ட கண்ட கஸ்மாலத்தை எல்லாம் போட்டு முகத்தை பாழாக்கிக்கனது தான் மிச்சம் போலயிருக்கு. பேசாம தூங்க வேண்டிய நேரத்துல தூங்கி, முழிக்க வேண்டிய நேரத்துல முழிச்சு எழுந்தாலே முகம் பொலிவா இருக்கும் போல.

நான் சிம்பிளா ஒண்ணுசொல்லவா...? பன்னீர்இல்லைன்னா ரோஸ் வாட்டர்ல ஃபேஸை மட்டும் டெய்லிகழுவுனா முகம் பொலிவா பார்க்க லஷ்ணமா இருக்கும் அம்புட்டு தான்.

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 5, 2025 9:34 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 தூக்கம் சாப்பாடு தண்ணீர் இந்த மூன்றுமே ஸ்கின்னை ஹெல்தியாக்கும்

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 5, 2025 9:39 PM
(@gowsalya-m)
New Member Member

நான் இதெல்லாம் போட்டது இல்லை கா, ஆனால் கற்றாழை மட்டும் போடுவேன்!!... வேற எதுவும் போட்டது இல்லை!!..

எனக்கு அதிகம் பரு இருக்குறதுனால நிறைய பேர் நிறைய சொல்லுவாங்க, ஆனால் நான் செஞ்சது இல்லை!!... 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 6, 2025 12:14 AM
(@mayil)
Active Member Member

இந்த idia சூப்பர்.waiting for next week .

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 6, 2025 2:06 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@gowsalya-m enaku ipo neraya pimples... Thalai la dandruff vanthathala face la pimples... Na salicylic acid serum use panuven da... Athu thaan pimples uruvakkura germs aa alikum... Kuranja percentage ullathu OTC la kedaikum... Dermatologist kitta ketta Pharmacy la ulla product soluvanga.. athu good for skin

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 6, 2025 8:07 AM
Mathy reacted
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mayil inikke adutha epi eluthitruken😁😁😁 aarvama iruku

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 6, 2025 8:07 AM
(@mathy)
Eminent Member Member

Posted by: @nithyamariappankngmail-com

@gowsalya-m enaku ipo neraya pimples... Thalai la dandruff vanthathala face la pimples... Na salicylic acid serum use panuven da... Athu thaan pimples uruvakkura germs aa alikum... Kuranja percentage ullathu OTC la kedaikum... Dermatologist kitta ketta Pharmacy la ulla product soluvanga.. athu good for skin

என்னோட பொண்ணுக்கும் இதே பிரச்சனை தான் சிஸ் முகம் மட்டும் இல்லை தோள்லயும்... dandruff தான் காரணம்ன்னு சொல்லி 2 shampoo., oinment குடுத்துருக்காங்க...
15 years old அதனால seeram எல்லாம் யூஸ் பண்ண பயம்..... sunscreen ஆவது கேட்குறா இன்னும் அதிகமாயிடுமோன்னு பயம் அதனால நோ சொல்லிட்டேன்....

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 6, 2025 11:56 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy அந்த ஆயின்மெண்ட்ல சலிசிலிக் ஆசிட் இருக்கும் சிஸ்... நல்ல முகம் கழுவி நைட் மட்டும் அதை போடச் சொல்லுங்க... வாரத்துக்கு ரெண்டு தடவை டாக்டர் குடுத்த ஷாம்பூ வச்சு ஹேர் வாஷ் பண்ன சொல்லுங்க... சீப்பு, தலையணை உறை, போர்வை எல்லாம் வாரம் ஒரு தடவை க்ளீன் பண்ணுங்க. படிப்படியா குறைஞ்சிடும்... இது டீணேஜ்ல நார்மலா வர்றதுதான்... பிம்பிளை கிள்ளக்கூடாதுனு மட்டும் சொல்லுங்க. அது தழும்பா மாறிடும்...

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 6, 2025 1:18 PM
Mathy reacted
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy நான் ஷிவானிக்கே சன் ஸ்க்ரீன் யூஸ் பண்ணுறேன் சிஸ்... அதனால ஒரு பிரச்சனையும் வராது... நீங்க டாக்டர் கிட்டவே சன் ஸ்கீரீனும் எழுதி வாங்கிக்கோங்க... ஆக்னே ஸ்கின்னுக்கு ஏத்ததா அவங்க எழுதி  குடுப்பாங்க

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 6, 2025 1:19 PM
Mathy reacted
(@mathy)
Eminent Member Member

@nithyamariappankngmail-com ok sis. Thank you..

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 6, 2025 8:51 PM

.

.