NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
கேஸ்லைட்டிங் - Gasl...
 
Share:
Notifications
Clear all

கேஸ்லைட்டிங் - Gaslighting

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

Unfiltered by Nithya – இன்னைக்கு கேஸ்லைட்டிங் (Gaslighting) பத்தி  பாக்கலாமா?

கேஸ்லைட்டிங்னா என்ன?

உங்களுக்கு நெருக்கமான, உங்களோட பழகுற ஒரு நபர் நீங்க என்ன செஞ்சாலும் அது தப்பானது, குறைவானதுங்கிற எண்ணத்தை உங்களுக்குள்ள விதைக்குக்குறதுதான், அந்த நபர் தன்னை உயர்வா காட்டிக்கிறதுக்காக, நல்லவங்களா காட்டிக்கிறதுக்காக நம்ம மனசுல நம்மலை பத்தி குறைவான எண்ணங்களை விதைப்பாங்க.

அவங்க ஒரு தப்பே செஞ்சாலும் ‘நான் ஏதோ உரிமைல பண்ணுனேன், அதை நீ குதர்க்கமா எடுத்துக்குறியேனு’ நம்ம தான் அவங்களோட இருந்த உறவுக்கு அநியாயம் பண்ணுன மாதிரியான எண்ணத்தை விதைப்பாங்க.

சுருக்கமா சொல்லணும்னா கேஸ்லைட்டிங்னா என்னன்னு கேட்டா, ஒருத்தரோட மூளையையே வாஷ் பண்ற மாதிரி. "நான் அப்படி சொல்லவே இல்லை", "நீ தான் மனசுல வச்சுட்டு இருக்க", "உனக்குத்தான் இது ஒரு பெரிய பிரச்சனையா தெரியுது", அப்படின்னு சொல்லி, அவங்களோட யோசனை, அவங்களோட ஞாபக சக்தி, அவங்க என்ன உணர்றாங்க அப்படின்ற எல்லாத்தையும் தப்பு, கேவலமானதுனு நம்ப வைக்கிறதுதான்.

எப்படி இதை செய்வாங்க?

  • உண்மையை மாத்தி சொல்றது: நீங்க ஒரு விஷயத்தை "இப்படித்தான் நடந்தது"ன்னு சொன்னா, "ஐயையோ, அப்படியெல்லாம் நடக்கவே இல்லை, நீதான் தப்பா புரிஞ்சுக்கிட்ட"ன்னு சொல்வாங்க. ஒரு கட்டத்துல, உண்மையிலேயே என்னதான் நடந்ததுன்னு உங்களுக்கே சந்தேகம் வர ஆரம்பிச்சுடும்.
  • உங்க உணர்வுகளை மதிக்காதது: நீங்க ஒரு விஷயத்துக்காக வருத்தப்பட்டா, "எதுக்கு இவ்ளோ ஓவரா ரியாக்ட் பண்ற? இதுக்கெல்லாம் போய் வருத்தப்படுவாங்களா?"ன்னு சொல்லி, உங்க ஃபீலிங்ஸ்க்கு மரியாதை கொடுக்க மாட்டாங்க. அதனால வருத்தப்படுறதே தப்போன்னு நீங்க நினைக்க ஆரம்பிச்சுடுவீங்க.
  • பொய் சொல்றது: ஒரு பொய்யை மறுபடியும் மறுபடியும் சொல்றது மூலமா, அதுவே உண்மைன்னு உங்களை நம்ப வைப்பாங்க. அவங்க சொல்றதுதான் சரி, நீங்க தப்புன்னு நினைக்க வைப்பாங்க.
  • உங்களைத் தனியாக்குறது: உங்க ஃப்ரெண்ட்ஸோ, ஃபேமிலியோ அவங்களுக்குப் பிடிக்கலைன்னு சொல்லி, "அவங்க உனக்கு நல்லது செய்ய மாட்டாங்க", "உன்னை அவங்க தனியாத்தான் பாப்பாங்க"ன்னு உங்களைப் பிரிச்சு விடுவாங்க. அப்புறம் நீங்க அவங்களை மட்டுமே சார்ந்து இருக்கற மாதிரி ஆகிடும்.
  • கன்பியூஸ் பண்றது: ஒரே விஷயத்தைப் பத்தி ஒரு நேரத்துல ஒன்னும், இன்னொரு நேரத்துல வேற ஒன்னும் சொல்லுவாங்க. நீங்க எதை நம்பறது, எதை விடுறதுன்னு குழம்பிப் போவீங்க.

ஏன் இப்படிச் செய்றாங்க?

‘நான் எல்லாருக்கும் நல்லவன்’னு காட்டிக்குறது இவங்களோட குணம். இதை வச்சு இவங்களை அடையாளம் கண்டுக்கலாம். அது மூலமா தன்னை உயர்ந்த இடத்துல வச்சு நம்ம ரொம்ப மோசம்னு சொல்லிக் காட்டுவாங்க.

இதெல்லாம் ஏன் பண்றாங்கன்னா, உங்களை அவங்களோட கண்ட்ரோல்ல வச்சுக்கணும்ன்றதுக்காகத்தான். உங்களை மனசளவுல பலவீனமாக்கி, "நான் சொல்றதுதான் சரி"ன்னு உங்களை நம்ப வைப்பாங்க. அப்போ நீங்க அவங்க சொல்ற எல்லாத்தையும் கேட்டு நடப்பீங்க.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில இருந்தா என்ன பண்றது?

இந்த மாதிரி ஒரு உறவுல நீங்க இருந்தீங்கன்னா, அது உங்க சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாதிக்கும். அதனால ஒரு சைக்காலஜிஸ்ட் கிட்ட பேசி ஆலோசனை கேட்கலாம். முடிஞ்சளவுக்கு கேஸ்லைட் செய்யுற நபர்கள் கிட்ட இருந்து விலகியிருங்க. அதுதான் உங்களோட உடல் மற்றும் மனநலத்துக்கு நல்லது. அதே போல நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ கேஸ்லைட்டிங் செய்யுற நபரா இருந்திங்கனா அந்தக் குணத்தைக் கொஞ்சம்கொஞ்சமா மாத்த ட்ரை பண்ணுங்க.

உலகத்துல  பிறந்த எல்லாரும் புனிதர்கள் இல்ல. குற்றம் குறை உள்ள சாதாரண மனுசங்க. ‘பாரேன் நான் எவ்ளோ அற்புதமான ப்யூர் சோல், ஆனா நீ எல்லார் கிட்டவும் பிரச்சனைய மட்டுமே பண்ணுற, குறைகளை மட்டுமே பாக்குற, இது பெரிய தப்புனு’ அட்வைசை தூக்கிட்டு வர்றவங்க கிட்ட இருந்து ஒதுங்கிடுங்க. யாரோ ஒருத்தர் புனித ஆத்மாவா தெரியுறதுக்காக நீங்க ஏன் உங்களை குறைவா நினைக்கணும்?

கேஸ்லைட்டிங் பத்தி எனக்குத் தெரிஞ்சது, ஏ.ஐ சொன்னதை எல்லாம் ஷேர் பண்ணியாச்சு. விழிப்பாக இருங்கள்! நாளைக்கு மலர் மகிழ் லீவு. டீசர் உண்டு. குட் நைட்!

 

1754150397-WhatsApp-Image-2025-08-02-at-212915_e60b4bcc.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 2, 2025 9:29 PM
(@gowsalya-m)
Active Member Member

Kavanika pada vendiya mukkiyamana vishayam ka idhu!... FB vanthu na therinchukita oru vishayam!

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 10, 2025 4:57 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

Posted by: @gowsalya-m

Kavanika pada vendiya mukkiyamana vishayam ka idhu!... FB vanthu na therinchukita oru vishayam!

நானும் இந்த மூஞ்சிபுக் வந்த அப்புறம் தான் தெரிஞ்சுகிட்டேன்😐😐😐

 

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 17, 2025 6:40 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images