NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
கண் திருஷ்டி - Evil...
 
Share:
Notifications
Clear all

கண் திருஷ்டி - Evil Eye

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ரொம்ப நாள் கழிச்சு unfiltered by nithya பகுதி நம்ம சைட்ல வருது. எனக்கு ரொம்ப நாளா ஒரு நம்பிக்கை உண்டு. 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது'. யெஸ், நான் கண் திருஷ்டிய ரொம்பவே நம்புற ஆளு. சில அனுபவங்களும் உண்டுனு வச்சுக்கோங்களேன்! அதைப் பத்தி உங்க கிட்ட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்தேன். இதுவரை கண் திருஷ்டிங்கிற கான்செப்டே தெரியாத ஆள் யாரும் இருக்கிங்களா? அவங்களுக்குக் குட்டியா ஒரு விளக்கம்!

நம்ம ஊர்ல, ஒருத்தவங்க ரொம்ப நல்லா இருக்காங்கன்னா, அழகா இருக்காங்கன்னா, இல்லன்னா ஏதாவது புதுசா வாங்குனாங்கன்னா, 'கண் திருஷ்டி பட்டுடும்'னு சொல்லுவாங்க. அதாவது, மத்தவங்க அவங்க மேல வைக்கிற பொறாமையான, மோசமான பார்வைதான் இந்த 'ஈவில் ஐ' (Evil Eye) இல்லன்னா 'கண் திருஷ்டி'.

சத்தியமா சொல்றேன், யாராவது ஒருத்தவங்க மனசாரப் பார்த்து, "அடடா! இவங்க எவ்வளவு நல்லா இருக்காங்க!"னு நினைச்சாக்கூட, அதுவே ஒரு கெட்ட சக்தியைக் கொண்டு வந்து, நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும்னுதான் பல பேர் நம்புறாங்க.

இதனாலதான், வீடுகளுக்கு முன்னாடி பூசணிக்காய் கட்டி, புது வண்டிக்கு கறுப்புப் பொட்டு வச்சு, குழந்தைங்களுக்கு காதுக்குப் பின்னாடி மை வச்சு விடுறதுன்னு ஏகப்பட்ட சடங்குகளைப் பண்றோம்.

மத்த வாயெல்லாம் பேசுறோமே, இந்தக் கண் திருஷ்டிய மட்டும் ஏன் பிடிச்சிக்கிட்டுத் தொங்குறோம்னு என்னை நானே கேவலமா திட்டிக்கிட்ட தருணங்கள் அனேகம் மக்களே! என்ன பண்ணுறது? நமக்கு ஒரு கெட்டது நடக்குறப்ப அதுக்கான காரணம் புரியலனா திருஷ்டி மேல பழிய தூக்கிப் போட்டுட்டு நகருறது கொஞ்சம் மனசுக்கு ரிலீஃபை குடுக்குறதால இதை நான் நம்புறேனோனு எனக்கு என் மேலயே சந்தேகமும் உண்டு. சரி நமக்குள்ளவே பேசிக்கிட்டா என்ன அர்த்தம்? கூகுள் கிட்ட இதைப் பத்தி கேப்போமேனு கேட்டு வாங்குன தகவல்களையும் இங்க பகிர்ந்துக்கிறேன். கண் திருஷ்டிங்கிற கான்செப்டுக்குப் பின்னாடி இருக்குற சைக்காலஜிய கொஞ்சம் புரிஞ்சிப்போமே!

📜 1. வரலாறு (History)

கண் திருஷ்டிங்கிற இந்த நம்பிக்கை, இப்போ வந்தது இல்லை. இது 5,000 வருஷங்களுக்கும் மேல பழமையானது. நம்ம நாட்டுக்கு வர்ற முன்னாடியே பழைய நாகரிகங்கள்ல கண் திருஷ்டி கான்செப்ட் இருந்ததுக்கான பதிவு இருக்குதாம்.

  • தோற்றம்: மெசபடோமியா, சுமேரியா, பண்டைய கிரீஸ் (Ancient Greece), ரோமானியப் பேரரசு (Rome) போன்ற உலக நாகரிகங்கள்லதான் இந்த நம்பிக்கை முதல்ல பதிவு செய்யப்பட்டிருக்கு.

  • பழங்காலப் பெயர்கள்: கிரேக்கத்துல இதை 'பாஸ்கானியா' (Baskania) என்றும், ரோமானியர்கள்ல 'ஆக்குலஸ் மாலஸ்' (Oculus Malus) என்றும் சொன்னாங்க.

  • பயம் என்ன? ஒருத்தவங்க மேல பொறாமையோட பார்க்குற பார்வை அல்லது மனசுல வன்மத்தோட பார்க்குற பார்வை, அந்த நபருக்கு கெடுதலையும், நோயையும், துரதிர்ஷ்டத்தையும் (Misfortune) உண்டாக்கும்னு அவங்க நம்புனாங்க.

  • உலகளாவிய பரவல்: மத்தியத் தரைக்கடல் நாடுகள் (Mediterranean), மத்திய கிழக்கு (Middle East), ஆப்பிரிக்கா, ஆசியா (இந்தியா உட்பட) மற்றும் லத்தீன் அமெரிக்கா வரைக்கும் இந்த நம்பிக்கை இன்னமும் ரொம்பப் பலமா இருக்கு.

  • அடையாளங்கள்: அதனாலதான், பொறாமையான பார்வையைப் பார்க்கிறவங்களையே திரும்பிப் பார்க்கச் செய்ய, நீல நிறக் கண்ணாடிக் கற்கள் (Nazar Amulet) அல்லது ஹம்சா கை (Hamsa) போன்ற தாயத்துக்களைக் (Talismans) கண்டுபிடிச்சு அணிய ஆரம்பிச்சாங்க.

 

🧠 2. மனோதத்துவம் மற்றும் முக்கியத்துவம் (Psychology & Significance)

ஈவில் ஐ-க்கு நேரடியான அறிவியல் ஆதாரம் இல்லைனாலும், இது ஏன் உலகம் முழுவதும் இருக்குன்னு மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்கன்னா, அதுக்கு முக்கியமான சமூக மற்றும் மனக் காரணங்கள் இருக்கு.

(அ) பொறாமை மீதான பயம் (Fear of Envy)

  • அடிப்படை உணர்வு: எல்லா மனிதர்களுக்குள்ளேயும் இருக்கிற பொறாமை (Envy) மற்றும் வெறுப்பு (Jealousy) உணர்வுதான் இந்த நம்பிக்கைக்கு அடிப்படை.

  • சமூகக் கட்டுப்பாடு: நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்கன்னாலோ, இல்லைன்னா உங்க வெற்றியைப் பத்தி மத்தவங்ககிட்ட ரொம்பப் பெருமையடிச்சாலோ, உங்களுக்குக் கெடுதல் நடக்கும்னு இந்த நம்பிக்கை ஒரு எச்சரிக்கை கொடுக்குது. இது என்ன பண்ணுதுன்னா, சமூகத்துல எல்லாரும் அடக்கமா இருக்கவும், ஒருத்தர் வெற்றியை ஒருத்தர் ரொம்பக் கொடிபிடிச்சுக் கொண்டாடாம இருக்கவும் உதவுது. அதாவது, சமூக ஒற்றுமையைப் பேண இது ஒரு மறைமுகக் கருவியா செயல்படுது. சுருக்கமா சொன்னா ஷோ ஆப் பேர்வழிகள் கொஞ்சம் எச்சரிக்கையோட நடப்பாங்க கண் திருஷ்டிங்கிற கான்செப்டை நம்புனா மட்டும்.

(ஆ) துரதிர்ஷ்டத்துக்கான விளக்கம் (Explaining Misfortune)

இந்தப் பகுதிதான் என்னோட பொருந்துதுனு நான் நினைக்குறேன்.

  • மன நிம்மதி: வாழ்க்கையில திடீர்னு ஒரு பெரிய கெட்ட விஷயம் நடக்கும்போது (உதாரணம்: விபத்து, நோய்), அதுக்கு நம்மகிட்ட சரியான காரணம் இருக்காது. அப்போ, "இதுக்குக் காரணம் யாரோ வச்ச திருஷ்டிதான்" அப்படின்னு சொல்லி, ஒரு வெளிப்படையான காரணத்தைக் கண்டுபிடிச்சுக்கிறாங்க.

  • கட்டுப்பாடு (Sense of Control): அப்படி ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சப்புறம், 'திருஷ்டி கழிக்கிற சடங்கு' மூலமா, நமக்கு நடந்த கெட்ட விஷயத்தை நம்மால கட்டுப்படுத்த முடியும்ங்கிற ஒரு நம்பிக்கை மனசுக்குள்ள வருது. இது மன ரீதியா ஒரு நிம்மதியைக் கொடுக்குது.

(இ) பாதுகாப்பின் உணர்வு (Feeling of Protection)

  • தாயத்துக்களின் பங்கு: கண் திருஷ்டி தாயத்துக்களை (Amulets) அணிவது, ஒரு கவசத்தை (Shield) அணிவது போலன்னு பலர் நம்புறாங்க. இந்த தாயத்துக்கள், நம்ம மேல வரக்கூடிய எதிர்மறை ஆற்றலை (Negative Energy) உடனே திருப்பி அனுப்பிடும்னு நினைக்கிறது, அவங்க மன அழுத்தத்தைக் குறைச்சு, மன தைரியத்தைக் கொடுக்குது.

சுருக்கமா சொல்லணும்னா, கண் திருஷ்டிங்கிறது, மனிதர்களுக்குள்ள இருக்கும் பொறாமை உணர்வையும், வாழ்க்கையில் நடக்கும் திடீர் துரதிர்ஷ்டங்களையும் சமாளிக்க, பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தும் ஒரு கலாச்சார மற்றும் மனோதத்துவ பாதுகாப்புத் திட்டம்தான்னு கூகுள்ல நான் படிச்ச கட்டுரை ஒன்னு சொல்லுது. இனியும் இதை நான் நம்புவேனானு தெரியல.

ஆனா வாழ்க்கைல கிடைச்ச நல்லதுகளைப் பத்தி சுயதம்பட்டம் அடிக்காம, ஐயோ இவங்க இப்பிடி வாழுறாங்களேனு அடுத்தவங்களை ஏங்க விடாம, வாழ்க்கையோட அழகான மொமண்டுகளை ப்ரைவேட்டா செலிப்ரேட் பண்ணுறதுக்கு என்னைத் தூண்டுனதே இந்தக் கண் திருஷ்டி கான்செப்ட் தான். மத்தபடி தன்னடக்கம் எல்லாம் தானா வரல, கண் திருஷ்டி பயத்துல வந்ததுதான். இதைச் சொல்ல கூச்சமா இருந்தாலும் அதுதான் உண்மை!

ஓகே மக்களே! உங்கள்ல யாருக்குலாம் கண் திருஷ்டி மேல நம்பிக்கை இருக்கு? எந்த சைக்காலஜிக்கல் காரணி உங்க நம்பிக்கையோட ஒத்து போகுது? விருப்பமிருந்தா கமெண்ட்ல பகிர்ந்துக்கோங்க. அடுத்த வாரம் வேற ஒரு கான்செப்டோட வர்றேன். குட் நைட்! ஹேவ் அ ஹேப்பி வீக்கெண்ட்! நாளைக்கு கர்ணன் மிருணாளினி டீசர் வடிவத்துல வருவாங்க. நோ எபி! 

 
1763816274-WhatsApp-Image-2025-11-22-at-182344_49eba611.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : November 22, 2025 6:27 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

பாதிப்பு அதிகம் தான் 😞😞😞

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 23, 2025 10:16 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari எனக்கும் நம்பிக்கை  உண்டுக்கா. நான் நிறைய விசயங்களை ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணுறதை விட்டதே கண் திருஷ்டி ப்ராப்ளத்தாலதான்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : November 23, 2025 2:45 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index