NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
ஓகே பூமர் - வரலாறு
 
Share:
Notifications
Clear all

ஓகே பூமர் - வரலாறு

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

Unfiltered by Nithya – இன்னைக்கு பூமர்ஸ் பத்தி பேசலாமா? அடிக்கடி யூஸ் பண்ணுற வார்த்தையா அது மாறிடுச்சு. காரணம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு பயன்படுத்துனா நல்லா இருக்குமே!

 

பூமர் – இந்த வார்த்தைய டெய்லி ஒரு தடவையாச்சும் நான் யூஸ் பண்ணிடுவேன். ரொம்ப பழைய விசயத்தை, பாடாவதியான விசயத்தை யார் சொன்னாலும் அடுத்த நொடி என்னையறியாம பூமர்ங்கிற வார்த்தை வந்துடும். ஆக்சுவலி பூமர்ங்கிற வார்த்தை வயசானவங்களைக் குறிக்கிறதுனு நிறைய பேருக்கு ஒரு எண்ணம் இருக்கு. ஆனா அது உண்மை இல்ல.

 

பழமையான சிந்தனைகளைப் பேசுறவங்க, நாங்கல்லாம் அந்தக் காலத்துலனு ஆரம்பிச்சு இளைய தலைமுறைய குற்றம் சொல்லுறவங்க, புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாம, புதிய மாற்றங்களுக்குத் தங்களை தகுதிபடுத்திக்க தயாரா இல்லாதவங்களைத்தான் பூமர்னு இணைய சமூகம் சொல்லுது.

 

இந்த பூமர்ங்கிற வார்த்தை எங்க இருந்து வந்துச்சு தெரியுமா? சிலருக்குத் தெரிஞ்சிருக்கலாம். ஆக்டர் ராம்கி ஒரு இண்டர்வியூல இந்த வார்த்தையோட ஆரிஜினை சொல்லிருப்பார். அதை பாக்காதவங்களுக்கு நானே சொல்லிடுறேன்.

 

பூமர்'னு சொல்றது, உண்மையில் ‘பேபி பூமர்’னு ஒரு தலைமுறையோட சுருக்கப் பேருதான். இரண்டாம் உலகப் போர் முடிஞ்சதுக்கு அப்புறம், 1946ல இருந்து 1964 வரைக்கும் பிறந்தவங்களைத்தான் "பேபி பூமர்ஸ்"னு சொல்லுவாங்க. போர் முடிஞ்ச பிறகு நிறைய குழந்தைங்க பிறந்ததால (ஒரு 'பேபி பூம்' நடந்ததால) இந்தப் பேரு வந்துச்சு.

 

சரி இணைய சமூகம் ஏன் பழமைவாதிகளை பூமர்னு சொல்லுதுனு பாப்போமா?

 

கால இடைவெளி:

ஒவ்வொரு தலைமுறைக்கும் அவங்க அவங்க அனுபவங்கள், நம்பிக்கைகள், உலகத்தைப் பார்க்கிற பார்வைனு தனித்தனியா இருக்கும். பேபி பூமர் தலைமுறை வாழ்ந்த காலத்துக்கும், இன்னிக்கு இருக்கிற சின்ன பசங்க (மில்லியனியல்ஸ், ஜென் Z) வாழற காலத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஆனா பூமர்சால அதை ஏத்துக்க முடியுறதில்ல. தங்களோட காலம் பொற்காலம், மில்லியனியல்ஸும் ஜென் ஜீயும் வாழுறது கற்காலம்ங்கிற ரேஞ்சுக்குப் பேசுவாங்க.

மாற்றத்தை ஏத்துக்காத மனசு: பூமர்ஸ் தலைமுறையினர் அவங்க வாழ்க்கையில நிறைய பொருளாதார வளர்ச்சி, சமூகம் நிலையா இருந்ததுனு நிறைய நல்ல விஷயங்களை அனுபவிச்சவங்க. ஆனா, இன்னிக்கு இருக்கிற டிஜிட்டல் உலகம், சமூக மாற்றங்கள், புது புது சிந்தனைகள்னு வர்றப்போ, அவங்களுக்கு அதை புரிஞ்சுக்கவோ, ஏத்துக்கவோ சில நேரம் கஷ்டமா இருக்கலாம்.

 

பழைய சிந்தனைகள் :

எல்லா நேரமும் பழைய பாட்டையே பாடுறது, நாங்க எல்லாம் அந்தக் காலத்துல  நடந்து போய் ஸ்கூல்ல படிச்சோம், நாங்கல்லாம் இளமைல கஷ்டப்பட்டோம் நீங்க இப்பவே அனுபவிக்கிறிங்க, எங்க காலத்துல இந்த டெக்னாலஜிலாம் இல்லாததால நாங்க ஒழுங்கா இருந்தோம் எல்லா கேட்டுக்கும் காரணம் டெக்னாலஜிதான், அம்மில அரைச்சப்ப லேடீஸ் ஒல்லியா இருந்தாங்க, அப்ப அவங்களுக்கு சுகபிரசவம் ஆச்சு – இப்படிப்பட்ட உருட்டுகளை அவர்களிடம் காணலாம்.

என் ஒபீனியன்படி டெக்னாலஜி வளரலைனா இன்னைக்கும் நீங்களும் நானும் அம்மில அரைச்சு, உரல்ல மாவு இடிச்சும் விறகெடுப்புல சமைச்சு தான் வாழ்ந்திருப்போம். ஒரு சின்ன தகவலை ஒருத்தருக்குச் சொல்லணும்னா கூட ‘நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா’னு லெட்டர் எழுதிட்டிருந்திருப்போம்.

டெக்னாலஜி என்னைக்கும் கேடானது இல்ல. அதை பயன்படுத்துற மனுசங்களுக்குத்தான் கேடான எண்ணம் வரும். சோ டெக்னாலஜிய குறை சொல்லுற  பூமர்சை மட்டும் என்னால ஏத்துக்கவே முடியாது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே வாழ்க்கைக்கு அழகு! சிந்தனைகளுக்கும் அதுதான் அழகு! அதுதான் இயல்பும் கூட.  பரிணாம வளர்ச்சில வந்த மாற்றங்களை ஏத்துகிட்டதாலதான் இன்னைக்கு மனித இனம் பூமில இருக்கு. மாற்றங்களுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கிட்ட மனுசங்க, தங்களோட சிந்தனைகளையும் புதிய மாற்றங்களுக்கு ஏத்தபடி விசாலாமாக்குறது நல்லதுதானே!

 

ஓகே பூமர்:

2019 – 2020 டைம்ல ‘ஒகே பூமர்’ங்கிற சொல்லாடல் ரொம்ப பிரபலமாச்சு. யாராச்சும் பழமைவாதம் பேசுனா அவங்களை ‘ஓகே பூமர்’னு சொல்லி ஆஃப் பண்ணுறது நெட்டிசன்களுக்கு ஒரு பொழுதுபோக்கா இருந்துச்சு.

சோ பூமர்'னு சொல்றது, வெறும் பேபி பூமர் தலைமுறையைச் சேர்ந்தவங்களை மட்டும் இல்ல. வயசு வித்தியாசமே இல்லாம, யார் ஒருத்தர் பழங்காலத்து கருத்துக்களையோ, இல்ல இன்னிக்கு இருக்கிற பசங்களோட சிந்தனைகளைப் புரிஞ்சுக்காத மாதிரியோ பேசுறாங்களோ, அவங்களையும் குறிப்பிடப் பயன்படுத்துறாங்க. இது பெரும்பாலும் கொஞ்சம் கிண்டலா அல்லது சலிப்போட சொல்ற ஒரு வார்த்தை. சுருக்கமா சொல்லணும்னா, 'பூமர்'ங்கறது ஒரு தலைமுறையோட பேரா ஆரம்பிச்சு, இப்போ பழைய, இந்த காலத்துக்கு ஒத்து வராத யோசனைகளை பேசுறவங்களைக் குறிக்கிற ஒரு பொதுவான வார்த்தையா மாறிடுச்சு.

அவ்ளோதான் மக்களே! இது  யாரையும் காயப்படுத்துறதுக்கான பதிவு இல்ல. என் மனசுல தோணுனதைச் சொல்லிருக்கேன். அடுத்த வாரம் வேற ஒரு டாபிக்கோட வர்றேன். குட் நைட்! ஹேப்பி வீக்கெண்ட்! நாளைக்கு மகிழ்மாறன் கதைக்கு நோ எபி. டீசர் உண்டு. மானிங் வந்துடும். திங்கள்கிழமை ஹீரோயின் அறிமுகம் வரும். டாட்டா!

 

 

 

 

1752333977-WhatsApp-Image-2025-07-12-at-205250_7e2206c0.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : July 12, 2025 8:56 PM
(@gowsalya-m)
Active Member Member

Wow ka... Clear ah sollitinga!..

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 10, 2025 4:44 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@gowsalya-m thanks ma 🤩

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 17, 2025 6:37 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index