NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

எழுத்துலகம் பற்றி க...
 
Share:
Notifications
Clear all

எழுத்துலகம் பற்றி கொஞ்சம் பாக்கலாமா?

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

எழுத்துலகம் – இதுல எக்கச்சக்க பாலிடிக்ஸ், ஏகப்பட்ட பஞ்சாயத்துகள், சண்டைகள்னு சென்சேசனுக்கு குறைவே கிடையாது. வாரம் ஒரு பஞ்சாயத்து வந்து நம்ம பொழுதை சுவாரசியமாக்க தவறுவதில்லை. இந்தப் பதிவு எழுத்துலகம் சார்ந்தது. கொஞ்சம் 18+ வகையறா. சிறுபிள்ளைகள் தவிர்க்கலாம். பெரியவங்க படிங்க.

 

எழுத்துலகத்தின் பொதுவான பஞ்சாயத்துகள்:

  1. ஆன்டி ஹீரோ எழுதலாமா?
  2. எழுத்தாளர்களுக்கு ஒழுக்கவிதிகள்னு ஒன்னு உண்டா இல்லயா?
  3. சைகோத்தனமான கதைகளை படித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் போஸ்டுகள்
  4. என்னது சிவாஜி செத்துட்டாரா என்ற ரீதியில் எப்பவோ தெரிஞ்ச விசயங்களை இப்ப தான் கண்டுபிடிச்ச மாதிரி போடப்படும் அசட்டுத்தனமான/ கவன ஈர்ப்பு போஸ்டுகள்.
  5. இப்ப ஆபாச கதைகள் பெருகிடுச்சு. எங்க போகுது ஆன்லைன் எழுத்துலகம் என்பவை போன்ற கவலையோடு கூடிய போஸ்டுகள்.

 

இதெல்லாம் பாத்தா எனக்கு என்ன தோணும்?

யாரும் எதை வேனாலும் எழுதலாம். பிகாஸ் அதுக்கான உரிமை  நமக்கு இருக்கு. அதே போல யாரும் எதை வேணாலும் படிக்கலாம். அதுக்கும் அவங்களுக்கு உரிமை இருக்கு. நீ இதை செய்னு யாரும் யாருக்கும் கட்டளை போட முடியாது. வாசிப்பும் எழுத்தும் அவரவர் விருப்பம்.

ரைட்டர்சுக்குனு ஒழுக்கவிதிகள் கிடையாதா?

ஒழுக்க விதிகள் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். ஒழுக்கம் மீறிய செயல்கள் பத்தின டெஃபனிசனும் மாறுபடும். அதை கடைபிடிக்குறதும் கண்டுக்காம விடுறதும் எழுத்தாளரோட தனிப்பட்ட உரிமை.

எனக்கு இந்தக் கண்டெண்ட் செட் ஆகாது, அதனால எழுதமாட்டேன்ங்கிற முடிவை ரைட்டர் மட்டுமே எடுக்க முடியும். மாரல் போலீஸ் பண்ணி எல்லாம் எந்த ஒழுக்க விதியையும் திணிக்க முடியாது.

 

ஆபாச கதைகள் சமூக சீர்கேடை  உருவாக்குமா?

கண்டிப்பா உருவாக்கும். பார்ன் வீடியோக்கும் பார்ன் கதைகளுக்கும் பெருசா வித்தியாசம் இல்லங்கிறது என் ஒபீனியன்.

ஆனா எழுத்துலகத்துல அந்த மாதிரியான பார்ன் டைப் கதைகளை ஒரிஜினல் ரொமான்ஸ்னு கொண்டாடப்படும்போது அறியாமைய நினைச்சு சிரிக்கத்தான் முடியுது.

ஃபீல் குட்டா நாகரிகமா காதலையும் காமத்தையும் சொல்லும் கதைகள், எக்ஸ்ட்ரீமான காமத்தை மட்டுமே காட்சிப்படுத்தும் கதைகளை எழுதுறவங்களால நக்கலடிக்கப்  படுறதையும் அடிக்கடி கவனிக்கலாம்.

 

ஆபாசக் கதைகள் மனசுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தமே இல்லாத ஆசைகள்

இந்த ஆபாசக் கதைகள்ல பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில நடக்காத, நம்ப முடியாத உறவுகளையும், சூழ்நிலைகளையும் காட்டுவாங்க. இதைப் பார்த்துட்டு, நம்ம நிஜமான உறவுகள் கிட்டயும் இப்படித்தான் நடக்கணும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவோம். இதனால, நிஜ உறவுகள்ல திருப்தி இல்லாம போயிடும், ஏமாற்றமா இருக்கும். பொண்டாட்டி, புருஷன் உறவுக்குள்ளயே கூட சண்டைகள் வரும்.

ஒருவித அடிக்சன் போல மாறுவது :

சில பேருக்கு இந்த ஆபாசக் கதைகளைப் படிக்குற பழக்கம் ஒரு போதை மாதிரி ஆகிடும். ஒரு கட்டத்துல, இது இல்லாம இருக்கவே முடியாதுங்கிற நிலைமை வந்துடும். சாதாரணமாவே ஆபாசமான விஷயங்களைத் தேட ஆரம்பிச்சிடுவாங்க. இதனால அவங்களோட அன்றாட வாழ்க்கை ரொம்பவே பாதிக்கப்படும். வேலை, படிப்பு, உறவுகள்ன்னு எல்லாத்துலயும் கவனம் சிதறிப் போகும்.

மனசுல பாரம், குற்ற உணர்வு:

ஆபாசக் கதைகள்ல மூழ்கிப் போற சில பேரு மனசுல ஒரு பாரத்தோடயும், தப்பு செஞ்சுட்டோம்ங்கிற குற்ற உணர்வோடயும் இருப்பாங்க. தான் பார்க்குறது தப்புன்னு அவங்களுக்குத் தெரிஞ்சாலும், அதிலிருந்து வெளிய வர முடியாம கஷ்டப்படுவாங்க. இது மனசுக்குள்ள ஒரு பெரிய அழுத்தத்தை உண்டாக்கும்.

தனிமை, விலகிப்போகுதல்

இந்த மாதிரி ஆபாசப் பழக்கங்கள் சிலரைத் தனிமைப்படுத்திடும். நிஜ உலகத்துல இருந்து விலகி, ஆபாச உலகத்திலேயே மூழ்கிப் போறதுனால, நிஜ மனுஷங்க கூட பழகறதுல ஆர்வம் குறையும். சமூக நிகழ்ச்சிகள்ல கலந்துக்க மாட்டாங்க. இது ரொம்ப நாளைக்கு நீடிச்சா, தனிமையும், மன உளைச்சலும் வந்துடும்.

பொண்ணுங்க மேல தப்பான பார்வை

பெரும்பாலான ஆபாசக் கதைகள்ல பொண்ணுங்களை வெறும் ஒரு போகப்பொருளாத்தான் காட்டுவாங்க. இது பசங்களுக்கு பொண்ணுங்க மேல தப்பான எண்ணங்களை உண்டாக்கும். பொண்ணுங்க வெறும் உடலுறவுக்கு மட்டும்தான்கிற மாதிரி ஒரு எண்ணத்தை வளர்த்துவிடும். இது சமூகத்துல பொண்ணுங்களுக்கு எதிரான அநியாயங்களுக்கும், தவறான செயல்களுக்கும் வழி வகுக்கும்.

உடலுறவுல ஆர்வம் குறையறது அல்லது அதிகமாகறது

சிலருக்கு ஆபாசக் கதைகளைப் படிக்குறதுனால நிஜ வாழ்க்கையில உடலுறவுல ஆர்வம் குறையலாம். இல்லன்னா, ஆபாசக் கதைகள்ல வர்ற மாதிரி வினோதமான விஷயங்களை நிஜ வாழ்க்கையிலயும் முயற்சி செய்யணும்னு தூண்டலாம். இது உறவுகளுக்குள்ள பிரச்சினையை உண்டாக்கும். உதாரணம் ரிதன்யா  பொண்ணு கேஸ். அங்க பார்ன் வீடியோ தான் பிரச்சனைனு ஒரு வாதம் நிலவுது.

வன்முறையான எண்ணங்கள்

சில ஆபாசக் கதைகள்ல வன்முறை கலந்த உடலுறவுகளைக் காட்டுவாங்க. இதைப் பார்க்குறதுனால சில பேருக்கு வன்முறை எண்ணங்கள் தூண்டப்படலாம். மத்தவங்க மேல, குறிப்பா பொண்ணுங்க மேல வன்முறையை ஏவலாம்ங்கிற எண்ணம் வரலாம். இது ரொம்பவே ஆபத்தானது.

மூளை செயல்பாட்டுல மாற்றம்

ஆபாசப் பட அடிமைத்தனம் ஒரு கண்டறியக்கூடிய மனநலப் பிரச்சினையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், இது மூளையின் வெகுமதி மையத்தில் (reward center) மாற்றங்களை ஏற்படுத்தலாம், நெருங்கிய உறவுகளில் சிக்கல்களை உருவாக்கலாம் மற்றும் துணையின் சுயமரியாதையை எதிர்மறையாகப் பாதிக்கலாம். சுமார் 3% முதல் 6% பெரியவர்கள் ஆபாசப் பட அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

கூடுதல் தகவல்: ஆபாசப் படங்களைப் பார்ப்பது மூளையின் டோபமைன் வெளியீட்டைத் தூண்டி, காலப்போக்கில் டோபமைன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும், இது மனச்சோர்வு உணர்வுகளை உருவாக்கும். இது ஒரு சுழற்சியை உருவாக்குகிறது, அங்கு ஒருவர் மீண்டும் மீண்டும் ஆபாசப் படங்களைத் தேடி, டோபமைன் அளவை மேலும் குறைக்கிறது.

 

சட்டம் என்ன சொல்லுது?

ஆபாசப்படங்கள், ஆபாச கதைகள் இதெல்லாம் இந்தியாவில் குற்றம். அமேசான்ல புக்  போடுறப்ப வெளிப்படையான பாலியல் காட்சிகள் இருக்குதானு ஒரு பகுதில கேட்பாங்க. அதுல ஆம் குடுத்தா நம்ம புக் இந்தியால விசிபிள் ஆகாது. இந்தியன் பீனல் கோட்படி அது தப்பு. அப்பிடி செய்யுற யாரும் தண்டிக்கப்படலையேனு நீங்க கேக்கலாம். ஆபாச வீடியோ போட்டு கார் வாங்குறாங்கனு சமூக வலைதளங்கள்ல ஒரு மீம் கூட வைரலாச்சு. இதெல்லாம் அரசாங்கம் கண்டுக்கலையாங்கிற கேள்வி உங்களுக்கு வரலாம், யாராவது ஒரு வழக்கறிஞர் சம்பந்தப்பட்டவங்க மீது பொதுநல வழக்கு போட்டாலோ, சம்பந்தப்பட்ட தளங்கள் மீது புகாரளித்தாலோ தான் அதோட விளைவுகள் எப்பிடினு தெரிய வரும். தினசரி நிறைய கதைசொல்லி ஆப்கள் செக்சை மட்டுமே வச்சு விளம்பரம் போடுறது நமக்கும் தெரியும். யாராவது அவங்க மேல புகார் கொடுத்தாலோ வழக்கு தொடுத்தாலோ சட்டரீதியான பிரச்சனைகளை அவங்க சந்திக்க நேரிடும். அதுவரை சுதந்திரமா கல்லா கட்டலாம்.

இதுக்கு உதாரணமா ஒரு கேஸ் கூட இருக்கு.

Baazee.com கேஸ்ல Baazee.com (அதுக்கப்புறம் eBay இந்தியான்னு பேர் மாத்திட்டாங்க)ங்குற ஆன்லைன் வெப்சைட்ல, ஒரு ஆபாசமான MMS வீடியோவை வித்தது சம்பந்தமா ஒரு பெரிய பிரச்சனை வந்துச்சு. இதுக்கு அதிகாரப்பூர்வமா அவ்னிஷ் பஜாஜ் மேல டெல்லி மாநிலம் கேஸ் போட்டதுதான்.

இந்த கேஸ் இந்திய சைபர் சட்டத்துல ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதாவது, வெப்சைட்ல யூசர்கள் (மக்கள்) போடுற விஷயங்களுக்கு, அந்த வெப்சைட் நிர்வாகத்துக்கு எவ்வளவு பொறுப்பு இருக்குங்குற பெரிய கேள்வி வந்துச்சு.

Baazee.com ஓட சி.இ.ஓ. (தலைமை நிர்வாக அதிகாரி) அவ்னிஷ் பஜாஜ் மேல கேஸ் போட்டாங்க. அந்த ஆபாசமான வீடியோவை விக்காம தடுத்திருக்கணும், ஆனா தடுக்கலைங்குறதுக்காக, 2000-ம் வருஷ தகவல் தொழில்நுட்ப சட்டத்துல இருக்கிற பிரிவு 67-ன் கீழ் அவர் மேல குற்றம் சாட்டுனாங்க.

இந்த கேஸ் என்ன காமிச்சுதுன்னா, ஆன்லைன் வெப்சைட்டுகளுக்கும், அதுல வீடியோ, போட்டோ போடுறவங்களுக்கும் என்ன வித்தியாசம், ஒரு வெப்சைட்ல மத்தவங்க போடுற விஷயங்களுக்கு அந்த வெப்சைட்டுக்கு என்ன பொறுப்புங்குறதுக்கு தெளிவான சட்டங்கள் தேவைனு இந்த கேஸ் தெளிவா உணர்த்துச்சு.

 

ஆபாசக் கதைகளைத் தடுக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகள் (Information Technology Act Sections Prohibiting Obscene Content)

ஆபாசமான கதைகள் மற்றும் உள்ளடக்கங்களைப் பரப்புவதைத் தடுக்க தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (Information Technology Act, 2000) முக்கியப் பங்காற்றுகிறது. இந்தக் குற்றங்களை நேரடியாகக் கையாளும் சில முக்கியப் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முக்கியப் பிரிவுகள்:

  • பிரிவு 67: மின்னணு வடிவில் ஆபாசமான பொருட்களை வெளியிடுதல் அல்லது அனுப்புதல் (Punishment for publishing or transmitting obscene material in electronic form).
    • இந்தப் பிரிவு, கணினி அல்லது வேறு எந்த மின்னணு வடிவத்திலும், "காம உணர்வைத் தூண்டும்" அல்லது "மக்களைச் சீரழிக்கும்" எந்தவொரு ஆபாசப் பொருளையும் வெளியிடுவது அல்லது பரப்புவது குற்றமாகும் என்று சொல்கிறது.
    • தண்டனை:
      • முதல் முறை தவறு செய்தால்: 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் வரை அபராதம்.
      • மீண்டும் அதே தவறை செய்தால்: 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 2 லட்சம் வரை அபராதம்.
  • பிரிவு 67A: பாலியல் வெளிப்படையான செயல்களைக் கொண்ட பொருட்களை வெளியிடுதல் அல்லது அனுப்புதல் (Punishment for publishing or transmitting material containing sexually explicit act, etc., in electronic form).
    • இந்தப் பிரிவு, பாலியல் வெளிப்படையான செயல்கள் அல்லது நடத்தைகளைக் காட்டும் உள்ளடக்கத்தை மின்னணு வடிவில் வெளியிடுவது அல்லது அனுப்புவதை தடை செய்கிறது. இது பிரிவு 67-ஐ விடக் கடுமையானது, ஏனெனில் இது "பாலியல் வெளிப்படையான" உள்ளடக்கத்தைக் குறிக்கிறது.
    • தண்டனை:
      • முதல் முறை தவறு செய்தால்: 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் வரை அபராதம்.
      • மீண்டும் அதே தவறை செய்தால்: 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் வரை அபராதம்.

 

இதெல்லாம் நான் கானல் பொய்கை கதைக்கு சேகரிச்ச தரவுகள்ல ஒரு பகுதி. எனக்கு எல்லை தாண்டிய எதுவும் செட் ஆகாது. அது ரொமான்சாக இருந்தாலும் சரி, நகைச்சுவையாக இருந்தாலும் சரி. அதனால அந்தப் பக்கம் நான் போறதில்ல.

இதை  படிக்குறவங்க, எழுதுறவங்களுக்கு அறிவுரை சொல்லவும் நான் இந்தப் பதிவை போடல. வணிகமயமான இந்த உலகத்துல ரொம்ப ஃபேண்டசியான விசயம் மனுசங்களோட அந்தரங்கம். அதை காட்சிப்படுத்துற எந்த  கண்டெண்டுக்கும் வரவேற்பு அதிகம். அதோட வருமானமும் அதிகம். அதனாலயே இந்த மாதிரி கண்டெண்டுகள் பெருகுனதா நான் நினைக்குறேன். நாம செய்யுற காரியம் மனதளவுலயும் சட்டரீதியாவும் உருவாக்குற விளைவுகளைப் புரிஞ்சிக்கணும்ங்கிறதுக்காக மட்டுமே இந்தப் பதிவு.

ரைட்டர்ஸ் வருமானம் எதிர்பார்ப்பது தவறா?

தவறேயில்ல. ஒரு ஆக்டர் கோடிக்கணக்குல சம்பளம் வாங்குனா எதுவுமே சொல்லாத சமுதாயம் தானே நாம். ஆனா ஒரு ரைட்டர் வருமானம் வருமானு கேட்டா மட்டும் கேலி செய்யுறோம். ஒவ்வொருத்தரும் நேரம், உழைப்பை எழுத்துல கொட்டுறோம். அதுக்கான ரிட்டனை எதிர்பாக்குறது தவறேயில்ல.

எப்ப இந்த எண்ணம் தவறாகும்?

சிம்பிள்! காசு தான் முக்கியம்னு எழுத்துல கோட்டை விடுறப்ப இது தவறாகுது. காசு மேல உள்ள நாட்டம் உங்களுக்குள்ள இருக்குற படைப்பாளிய சிந்திக்கவே விடாது. இப்ப என்ன ட்ரெண்டோ அது பின்னாடி ஓட வைக்கும். நீங்க பேசனுக்காக எழுத வந்த ஆளா இருந்தா ஒரு கட்டத்துல உங்களுக்குள்ள குழப்பம் வரும்.

பணம் முக்கியமா? க்ரியேட்டிவிட்டி முக்கியமா? இப்பிடி குழம்புவிங்க. பணம் முக்கியம்னு நினைச்சா அரைச்ச மாவு டெம்ப்ளேட்டுகள், ஆன்டி ஹீரோக்கள், சைகோ ஹீரோக்கள் பின்னாடி போகணும்.

கிரியேட்டிவிட்டி முக்கியம்னா நம்ம மூளைய கசக்கி கதைல சமுதாயத்துல நடக்குற  பிரச்சனைகளைப் பேசணும். இதுல நான் எந்த  பக்கம் போறதுங்கிற குழப்பம் வரும்.

என்னைக் கேட்டா The choice is yours. ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுனா உங்களால இங்க சர்வைவ் பண்ண முடியும். இல்லனா இங்க உள்ள ரைட்டர்கள் சமுத்திரத்துல காணாம போயிடுறதுக்கான வாய்ப்புகள் அதிகம்.

 

ஒரு எழுத்தாளரோட படைப்பு எப்பிடி இருக்கணும்?

2019ல தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்துல ஒரு போட்டி நடந்துச்சு. அந்தப் போட்டிக்கு ஜட்ஜா இந்திரா சௌந்திரராஜன் சார் வந்தாங்க. அவங்களோட அட்வைஸை தான் நான் எப்பவும் ஃபாலோ பண்ணுறேன்.

"நீங்க எதை வேணாலும் எழுதலாம். ஆனா உங்க எழுத்து சமகாலத்துல நடக்குற சம்பவங்களை  பிரதிபலிக்கணும். நாலு சுவருக்குள்ள நடக்குறதை மட்டுமே எழுதாம சுத்தி உள்ள மத்த பிரச்சனைகளையும் எழுதணும். 2100ல உங்க கதைய ஒருத்தர் படிக்குறப்ப ‘ஓஹ்! 2019ல சமுதாயம் இப்பிடி இருந்திச்சா!’னு அவங்களுக்குத் தெரியப்படுத்தணும்"

இதுதான் சார் சொன்ன அட்வைஸ். அதைத்தான் நான் ஃபாலோ பண்ணுறேன்.

ஒரே மாதிரியான குடும்ப அரசியல், ஆன்டி ஹீரோ, சைக்கோ ஹீரோனு எழுதுனா கண்டிப்பா வரவேற்பு கிடைக்கும். குறுகிய காலத்துல பிரபலத்துவமும் கிடைக்கும்.

ஆனா அது மட்டுமே எழுத்துனு நினைச்சுட்டு திரும்ப திரும்ப எழுதுறது ஒரு கட்டத்துல எழுதுறவங்களுக்கும் படிக்குறவங்களுக்கும் சலிப்பைக் குடுக்கும். அதனால தான் இடையில வேற ஜேனர் ட்ரை  பண்ணுறது. அதுக்கு வரவேற்பே இல்லனாலும், ரீடர்ஸ் ஆதரவு குறைஞ்சாலும் எனக்குள்ள இருக்குற படைப்பாளிக்கு அதை எழுதுனா தான் திருப்தியாகும்.

எல்லாருக்கும் இதே எண்ணவோட்டம் இருக்கணும்னு நான் சொல்லமுடியாது. ஒவ்வொருத்தருக்கும் இது மாறுபடலாம். உங்களுக்குள்ள இருக்குற ரீடர்/ ரைட்டர் உயிர்ப்போட இருக்க நீங்க என்ன செஞ்சா சரியா இருக்கும்னு உங்களுக்குத்தானே தெரியும்!

ஓகே! இன்னைக்கு ரொம்ப அதிகமா பேசியாச்சு. போஸ்ட் பத்தி உங்க கருத்தை ஷேர்  பண்ணுங்க. நாளைக்கு மலர், மாறனுக்கு லீவ். டீசர் மட்டும் மானிங் குரூப்புல வரும். சைட்டுல நியூஸ் லெட்டர் ஆப்சன் வச்சிருக்கேன். விரும்புறவங்க அதை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. டெய்லி பதிவுகள் உங்க மெயிலுக்கு வரும். குட் நைட்! ஹேப்பி வீக்கெண்ட் மக்களே!

 

 

1752939650-WhatsApp-Image-2025-07-19-at-190127_d4249979.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 19, 2025 9:10 PM
(@chanmaa)
Trusted Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 20, 2025 11:53 AM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Tharamaana pathivu da 👌 👌 👌 👌 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 20, 2025 1:36 PM

.

.