NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

தேவதையே!

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

தாம்பரம் ரெயில்வே ஸ்டேசன், இரவு 10.45

எட்டாவது பிளாட்ஃபார்மில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் அஸ்வந்த். வயது 27 ஆறடிக்கு கொஞ்சம் கம்மியான உயரத்தில் கையில் போனை வைத்து ட்ரெயின் கிளம்புவதற்கான நேரத்தை கூகுளில் பார்த்து கொண்டிருந்தவனை பார்த்து ஏதோ கமென்ட் அடித்து கொண்டிருந்தனர் அவனுக்கு பக்கத்து இருக்கையில் இருந்த இரண்டு இளைஞிகள். அவன் எதையும் சட்டை செய்யாமல் காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழற்றியவன் பேக்கை எடுத்து தோளில் மாட்டி கொண்டான் .

" பயணிகள் கவனத்திற்கு

வண்டி எண் 16191 தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக செல்லும் தாம்பரம் நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் எட்டாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும் "

அறிவிப்பை தொடர்ந்து வண்டியில் ஏறியவன் அன்று ரயிலில் கூட்டம் இல்லாததை கண்டு வியந்தான். எப்போதும் அவன் வருகையில் ரயிலில் பயணிகள் நிரம்பி வழிவார்கள். இன்று பெரும்பாலான பெட்டிகள் காலியாக அவன் போய் ஒரு இருக்கையில் அமர்ந்தான். அந்த ட்ரெயினில் அனைத்து பெட்டிகளும் அன்ரிசர்வ்ட் என்பதால் அதிக கூட்டத்தை எதிர்ப்பார்த்தவனுக்கு அன்று ஏமாற்றமே.

இன்னும் திருநெல்வேலி சென்றடைய இன்னும் 11 மணிநேரம் பாக்கியிருக்க பேச்சுத்துணைக்காவது யாரையாவது அனுப்பு கடவுளே என்று மனதில் வேண்டி கொண்டான் அவன். பின்னர் புன்னகையுடன் " என் ஏஞ்சலோட ஸ்டோரி இருக்குறப்போ எனக்கு என்ன கவலை??  அப்டி யாரும் பேச்சுத்துணைக்கு வரல்லன்னா இத மறுபடி மறுபடி படிச்சு டைம் பாஸ் பண்ணிக்க வேண்டியது தான்" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

மற்ற இளைஞர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டவன் அஸ்வந்த்.  அவனுக்கு ஏனோ கதை புத்தகங்கள் மீது தீராத காதல். அது சமீப காலங்களில் அதிகரித்து விட்டது என்று சொன்னால் மிகையாகாது. அதற்கு காரணமானவர் சபாரியா,  ஆம்! அவரது எழுத்துகளில் அவனுக்கு அவ்வளவு ஆர்வம்!  முகப்புத்தகத்தில் அவன் பின் தொடரும் ஒரு எழுத்தாளரை அவரும் பின் தொடர ஒரு ஆர்வத்தில் அவரது வலைப்பதிவை பார்த்தவன் அன்று முதல் அவரின் எழுத்துக்கு அடிமை. 

அவரின் முகப்புத்தக கமெண்ட்டுகளில் இருந்து அவர் ஒரு பெண் என்று தெரிந்து கொண்டவன் அவருக்கு மானசீகமாக சூட்டிய பெயர் தான் 'ஏஞ்சல்'.  இன்னும் அவன் அமர்ந்திருந்த கோச்சில் யாரும் ஏறாததை கண்டு பெருமூச்சு விட்டவன் புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தான்.

கதை நடந்த இடத்துக்கே சென்றவனை " டோன்ட் வொர்ரி பா. ஐ கேன் மேனேஜ்" என்ற ஒரு இனிய குரல் பிடித்து இழுத்து வந்து அந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ்ஸில் மீண்டும் அமரவைத்தது.  அந்த குரலுக்கு சொந்தகாரியை திரும்பி பார்த்தவன் உதடுகள் அவன் அறியாமல் உச்சரித்த வார்த்தை ' ஏஞ்சல்'.

வெள்ளை நிற லாங் டாப் அணிந்து தோளில் பேக்குடன் நின்றவள் " ஹலோ மே ஐ சிட் ஹியர்??" என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அந்த வெள்ளையுடை தேவதையையே பார்க்க அவளோ தான் அங்கு அமர்வது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று அவனை பார்த்தாள்.

பின்னர் " எல்லா கோட்சும் காலியா இருக்கு!  எனக்கு தனியா போய் பழக்கமில்ல சார். இஃப் யூ டோன்ட் மைண்ட், நான் இங்க உக்காந்துக்கவா?" என்று கேட்க அவன் சந்தோசமாக " வொய் நாட்? ப்ளீஸ்" என்று சொல்லி தன்னுடைய எதிர் இருக்கையை காட்டினான். அவள் மகிழ்ச்சியுடன் அமரவும் ஜன்னல் புறமாக ஒருத்தி அவளை அழைத்தாள்.

" ஹே சவுன்ட்!  திருநெல்வேலி ரீச் ஆனதும் கால் பண்ணுடி. டேக் கேர்" என்றவள் அஸ்வந்தின் புறம் திரும்பி " சார் , கொஞ்சம் அவளை பாத்துக்கோங்க" என்று சொல்லவும் அவளால் சவுன்ட் என்று விளிக்கப்பட்டவள் அவனை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தாள். பின்னர் " ஷ்! என்னடி நான் என்ன கொழந்தையா??  ஐ கேன் மேனேஜ்" என்று அவளை சமாளித்து அனுப்பி வைத்தாள்.

அவள் புன்னகையில் தன்னை தொலைத்தவன் பின்னர் தன்னை சமாளித்து கொண்டவனாய் " ஐயாம் அஸ்வந்த். நானும் திருநெல்வேலி தான் போயிட்டு இருக்கேன்" என்று சொல்ல அவள் சினேகமாய் புன்னகைத்தாள். பின்னர் " திருநெல்வேலில நீங்க எந்த ஏரியா??" என்று அவள் கேட்க " நான் பெருமாள்புரம் , நீங்க??" என்று பதிலுக்கு கேட்டான். அவள் " நான் கே.டி.சி நகர்" என்று தன் இடத்தை கூறினாள். பின்னர் பொதுப்படையாக ஊரை பற்றி பேசி கொண்டே வந்தனர் இருவரும்.

ட்ரெயின் நிற்கவும் அவள் " செங்கல்பட்டு வந்துடுச்சு போல" என்றாள். " ஆமாங்க! இன்னைக்கு ஏன் ட்ரெயின்ல கூட்டமே இல்ல?" என்று அவன் வருத்தத்துடன் கூற ஆச்சரியப்பட்டாள்.  " இதுக்கு போயா வருத்தப்படுவிங்க?" என்று கேட்டு கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .

அஸ்வந்தோ " ஆமாங்க! நான் டிரெயின்ல வர்ரதே புதுசா நாலு மனுஷங்க கூட பேசி பழக தான். எனக்கு ரயில் பயணம் மேல ஒரு காதல்னு கூட சொல்லலாம். அதே நேரம் ரிசர்வேஷன்ல போறதும் எனக்கு பிடிக்காதுங்க. அன்ரிசர்வ்ட்ல தான் நமக்கு நெறைய அழகான அனுபவங்கள் கெடைக்கும்" என்று சொல்லி  ரசனையுடன் அவளை நோக்கினான்.

பின்னர் அவன் அவளை பற்றி கேட்கவும் " ஐயாம் சௌந்தர்யா" என்று தன் பெயரை கூறினாள் அவனது ஏஞ்சல். மனதிற்குள்ளேயே "பொருத்தமாக பேர் வச்சிருக்காங்க" என்று வியந்தான் அவன். பின்னர் அவள் ஒரு பி.ஹெஸ்டி மாணவி என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள். அப்பா அம்மா இருவரும் திருநெல்வேலியில் இருப்பதாகவும் அவள் மட்டும் சென்னையில் தங்கி படிப்பை தொடர்வதாகவும் கூற, அஸ்வந்தும் தன்னை பற்றி கூறினான்.

பின்னர் அவன் கையிலிருந்த புத்தகத்தை பார்த்தவள் " ஐடில வொர்க் பண்றேன்னு சொல்லுறிங்க, நீங்க நாவல்லாம் படிப்பிங்களா??" என்று ஆச்சரியத்துடன் கேட்க அவனோ " என்னங்க இப்டி கேட்டுட்டிங்க??  எனக்கு நாவல்னா உயிர். அதுவும் என்னோட ஏஞ்சல் எழுதுன நாவல்னா சொல்லவே வேண்டாம். சோறு தண்ணி இல்லாம படிச்சிட்டே இருப்பேன்" என்று சொல்லவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் முகத்தில் குறும்பு குடி கொள்ள " அது யாருங்க உங்க ஏஞ்சல்?? " என்று கிண்டலாக கேட்டாள் சௌந்தர்யா. அஸ்வந்த்  நாக்கை கடித்து வெட்கப்படவும் அவளுக்கு ஆண்கள் கூட வெட்கப்பட்டால் அழகு தான் போல என்று அவளை அறியாமல் மனதில் தோன்ற திகைத்தாள் அவள். " நானா இது??  ஃபர்ஸ்ட் டைம் பாக்குற ஒரு பையனை பத்தி இப்டிலாம் யோசிக்கிறியே சௌந்தர்யா !  உனக்கு பைத்தியம் தான் " என்று அவளையே கடிந்து கொண்டாள்.

அதற்குள் அஸ்வந்த் வெட்கப்பட்டு முடித்தவன் " இந்த நாவலோட ஆத்தர் சபாரியா தான் என்னோட ஏஞ்சல் நம்பர் ஒன்" என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தவன் " நீ என்னோட ஏஞ்சல் நம்பர் டூ" என்று மனதிற்குள் சொல்லி கொண்டான். அவன் எழுத்தாளரின் பெயரை சொல்லவும் " அஹான்!  அவ்ளோ பிடிக்குமா அவங்களை??" என்று கேட்டாள் குறும்பாக.

" நான் அவங்களோட பயங்கரமான ஃபேன்.  அவங்களை பெத்த அப்பா மட்டும் என் கண்ணு முன்னாடி வந்தாருனா அவரோட கால்ல விழுந்து தயவு பண்ணி உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு கேக்கற அளவுக்கு எனக்கு அவங்கன்னா இஷ்டம்"

" அஹான்! பாத்துங்க! ரைட்டர்னு வேற சொல்லுறிங்க, சப்போஸ் உங்க ஏஞ்சலுக்கு ஒரு 40 இல்ல 45 வயசு ஆயிருந்தா என்ன பண்ணுவிங்க??"

" சேச்சே!  இவ்ளோ நாள் அப்படி தான் நெனச்சேங்க. இப்போ மனசை மாத்திக்கிட்டேன் "

" ஏன் உங்க ஏஞ்சலுக்கு நான் சொன்ன மாதிரி 45 வயசா??"

" ஐயோ இல்லங்க!  நான் என்னோட ஏஞ்சல் நம்பர் டூவ பாத்துட்டேன்" என்று அவன் சொல்லவும் அவள் கலகலவென்று நகைத்தாள்.  திடீரென்று ட்ரெயின் நிற்க எந்த ஸ்டேஷன் என்று எட்டி பார்த்தவள் விழுப்புரம் வந்துவிட்டதை அறிந்து போனை பார்த்தாள். இன்னும் திருநெல்வேலி வருவதற்கு ரொம்ப நேரம் இருக்கவே ஏதாவது பாடல் கேட்கலாம என்று தோண ஹெட்செட்டை மாட்டினாள்.

அந்த நேரத்தில் ஒரு பெண் தன்னுடைய ஐந்து வயது மகனுடன் ஏறியவர் மற்ற பெட்டிகள் காலியாக இருப்பதால் அவர்களுடன் அமர்ந்து கொள்ளலாமா என்று யோசிக்க அஸ்வந்த் " அக்கா நீங்க இங்க உக்காருங்க" என்று சொல்லி சௌந்தர்யாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அந்த பெண் " ரொம்ப தேங்க்ஸ் தம்பி" என்று சொல்ல அவன் புன்முறுவலை மட்டுமே பரிசாக அளித்தான் அவருக்கு.

சௌந்தர்யா ஹெட்செட்டை காதில் மாட்டி கொண்டவள் அவளை அறியாமல் தூங்கி போனாள். தன் தோளில் பொம்மை போல் சாய்ந்திருக்கும் தன்னுடைய தேவதையை பார்த்தவன் எதிர்புறமிருந்த அக்காவிடம் பேச்சை ஆரம்பித்தான். அவன் ஏதோ சொல்லி அந்த சிறுவனை சிரிக்க வைக்க அந்த சத்தத்தில் விழித்தாள் சௌந்தர்யா. மயிலாடுதுறை வந்திருந்தது ட்ரெயின்.

அஸ்வந்த் தோளில் சாய்ந்திருந்ததை நினைத்து வெட்கியவளாய் முகம் சிவக்க எழுந்தவள் ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவி கொண்டு வந்தாள். அவள் வந்த போது அஸ்வந்த் சபாரியாவை பற்றி புகழ்ந்து பேசி கொண்டிருந்தது காதில் விழ அவள் இதழில் ஒரு குறுநகை தோன்றி மறைந்தது.

" எனக்கும் சபாரியா எழுத்து அவ்ளோ பிடிக்கும் தம்பி. இந்த சின்ன வயசுல அவங்க எப்டி இவ்ளோ அழகா எழுதுறாங்கன்னு தெரியல!  நேருல பாத்தா கண்டிப்பா ஒரு செல்ஃபி எடுத்துடுவேன்" என்று அந்த அக்காவும் சிலாகித்து கொண்டே வர இருவரும் மாற்றி மாற்றி பேசி கொண்டே வந்ததில் சௌந்தர்யாவுக்கு  தூக்கம் பறந்தது. அவர்களின் பேச்சை கவனித்தவள் சிறிது நேரத்தில் அந்த சிறுவனுடன் விளையாட ஆரம்பித்தாள்.

விளையாடியபடியே அந்த அக்காவிடம் " அக்கா! அந்த ரைட்டர் ஒன்னும் பெரிய காவியம்லாம் எழுதலயே!  நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ சிலாகிச்சு பேசுறிங்களே" என்று சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் அஸ்வந்தை பார்த்தாள். அவனோ " என்னங்க இப்டி சொல்லிட்டிங்க?  அவங்க காவியம் ஒன்னும் எழுதலை தான்.  பட் அவங்க எழுதுற கதைல ஒரு ரியாலிட்டி இருக்கும், ஒரு மேஜிக் இருக்கும். அதல்லாம் அவங்க கதைய படிச்ச எங்களுக்கு தான் புரியும்" என்று வக்காலத்து வாங்கினான். இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டெ வருகையில் சௌந்தர்யாவுக்கு தூக்கம் வர அவள் கண்ணயர்ந்தாள்.

நேரம் போவதே தெரியாமல் இருக்க , வண்டி மதுரை ஜங்சனில் நின்றது . அந்த அக்கா தன் மகனுடன் இறங்க போனவர் அஸ்வந்தை பார்த்து " போயிட்டு வர்ரேன் தம்பி. உன் வைஃப் கிட்ட சொல்லிடு" என்று தூங்கி கொண்டிருந்த சௌந்தர்யாவை காட்டி விட்டு இறங்கினார்.

அவள் நன்றாக உறங்கி கொண்டிருக்க அஸ்வந்த் தன்னுடைய தேவதையை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே வந்தான். எவ்வளவு நேரம் அப்படியே பார்த்திருந்தானோ அவள் கண்ணை கசக்கி கொண்டு விழிக்க சட்டென்று ஜன்னல் புறம் திரும்பினான். சௌந்தர்யா விழித்தவள் " அந்த அக்காவ எங்க அஸ்வந்த்?" என்று கேட்க தன் ஏஞ்சலின் வாயிலிருந்து தன்னுடைய பெயர் ஒலித்ததை நினைத்து ஆனந்தமடைந்தான் அஸ்வந்த்.

" அவங்க மதுரைலயே இறங்கிட்டாங்கங்க" என்று அவன் சொல்ல அவள் தன்னுடைய போனை பார்த்தாள். நேரம் காலை ஒன்பது மணியை தொட்டது. இன்னும் மூன்று மணி நேரம் தான் என்று பெருமூச்சு விட்டவள் அதிர்ந்தாள். தான் ஏன் இவ்வாறு ஏக்க பெருமூச்சு விடுகிறோம், இந்த அஸ்வந்தை பிரிய தனக்கு மனம் இல்லையோ என்று யோசித்தவள் அவன் முகத்தை பார்த்தாள்.

விருதுநகர் வரவும் வடை காபி டீ என்று ஒவ்வொன்றாக வர சௌந்தர்யா வேண்டாமென்று மறுத்து கொண்டே இருக்க அஸ்வந்த் காபியும் வடையும் வாங்கி வந்தவன் அவளிடம் நீட்டினான். சௌந்தர்யா " வேண்டாம் அஸ்வந்த்! இது  ஹைஜீனிக்கா இருக்குமானு தெரியல" என்று முகத்தை சுருக்கி மறுத்தாள்.

அஸ்வந்த் சௌந்தர்யாவை பார்த்து புன்னகைத்தவன் " ஏங்க!  வாழ போற கொஞ்ச நாள்ல பிடிச்சதை சாப்டுட்டு நெனைச்சத செஞ்சுட்டு நிம்மதியா வாழனுங்க!  இவ்ளோ ஸ்ட்ரிக்டா இருக்கனும்னு அவசியம் இல்ல" என்று கிண்டல் போல சொல்ல அதற்கு மேலும் மறுக்காமல் அவன் நீட்டியதை வாங்கிக் கொண்டாள்.

அஸ்வந்த் புன்னகையுடன் அவள் சாப்பிடுவதை பார்த்தவன் மனநிறைவுடன் கையை பேப்பரில் துடைத்தான். இவ்வளவு நேரம் விழித்திருந்தவன் அப்போது தான் கண்ணயர தொடங்கினான். சௌந்தர்யா தூங்கி கொண்டிருக்கும் அஸ்வந்தையே கண் இமைக்காமல் பார்த்தவள் தன்னை இழுக்கும் மந்திரம் எதுவோ அவனிடம் உள்ளது என்று எண்ணிகொண்டாள். திடீரென்று நினைவு வந்தவளாக தான் மதுரை தாண்டிவிட்டதாக தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறினாள். பின்னர் அஸ்வந்தின் தலைமாட்டிலிருந்த புத்தகத்தை அவன் தூக்கம் கலையாமல் எடுத்தவள் அந்த அட்டைபடத்தை பார்த்த போது அதில் எழுத்தாளர் சபாரியா பெயரின் அருகில் அஸ்வந்த் அவனுடைய பெயரை பேனாவால் எழுதியிருக்க அதை பார்த்த செளந்தர்யா சிரித்தாள். சிரித்து முடித்தவள் அதை அங்கேயே வைத்துவிட்டாள்.

வாஞ்சி மணியாச்சி வரவும் அவனை எழுப்பியவள் மணி 11.30 ஆக போகிறது என்று சொல்லவும் அவனுக்கு இவ்வளவு நேரமா தூங்கினோம் என்று தோன்ற ரெஸ்ட் ரூமுக்கு சென்று முகம் கழுவியவன் " டேய் இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு. அதுக்குள்ள அந்த பொண்ணு கிட்ட எப்டிடா சொல்ல போற அவ தான் உன்னோட ஏஞ்சல் நம்பர் டூனு. சொன்னாலும் அவ நம்புவாளாடா??  இப்டி தூங்கி காரியத்தை கெடுத்து வச்சிட்டியே அஸ்வந்த்!" என்று அவனை அவனே திட்டியபடி அங்கிருந்து வெளியேறி தன்னுடைய இடத்தில் அமர்ந்தான்.

அவனால் சௌந்தர்யாவிடம் சொல்லவும் முடியவில்லை. இதே சஞ்சலத்துடன் இருக்க திருநெல்வேலியும் வந்தது. குழப்பத்துடன் இறங்கியவனை பார்த்த சௌந்தர்யா " என்ன அஸ்வந்த் எதோ யோசனைல இருக்கிங்க போல " என்று கேட்டு சிரிக்க அவனோ " உனக்கு என்னம்மா??  நீ சிரிச்சு சிரிச்சே என்னை ஒரு வழியாக்கிட்ட!  இப்போ நான் தான கொழம்பி போய் நிக்கிறேன்" என்று மனதில் நினைத்து கொண்டான்.

அவன் அமைதியாக இருக்கவும் சௌந்தர்யா தந்தை வருவதற்காக காத்திருந்தவள் " அஸ்வந்த் நீங்க உங்க ஏஞ்சல் ரைட்டர் பத்தி சொன்னதுல இருந்து எனக்கும் பேசாம ஒரு கதை எழுதுனா என்னன்னு தோணுது" என்று சொல்லவும் அவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான். அவனை பார்த்தபடியே தொடர்ந்தவள் " கதை ரொம்ப சிம்பிள். ஹீரோவும் ஹீரோயினும் ஃபர்ஸ்ட் டைம்  ட்ரெயின்ல மீட் பண்ணுறாங்க. பாத்த உடனே ஹீரோயினுக்கு ஹீரோவை பிடிச்சு போயிடுது. அந்த பயணத்துல அவன் மத்தவங்க கிட்ட நடந்துகிட்ட முறைகளால அட்ராக்ட் ஆயிட்டா ஹீரோயின்.  இப்போ நான் உங்களுக்கு கிளைமாக்ஸ் மட்டும் சொல்லட்டுமா?" என்று கேட்க அவன் அந்த கதையை ஆர்வமாக கேட்டவன் தலையாட்டினான்.

"கிளைமாக்ஸ்ல அந்த ஹீரோயின் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்த அவளோட அப்பா கிட்ட ஹீரோவ அவரோட மருமகன்னு அறிமுகப்படுத்துறா. எப்டி இருக்கு என்னோட ஸ்டோரி?" என்று கேட்க அவன் அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டான்.  " கிளைமாக்ஸ் சூப்பர். அதுக்கு ஹீரோ அவனோட மாமனார் கிட்ட மாமா ஆல்ரெடி உங்க பொண்ணை நான் ரொம்ப லேட்டா தான் மீட் பண்ணிருக்கேன், சோ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்னி வச்சிடுங்கன்னு சொல்லுறான். இதையும் சேத்துக்கோங்க! ஸ்டோரி செமயா இருக்கும்" என்று அவளை பார்த்து கொண்டே கூறினான்.

" என்னோட நம்பரை நோட் பண்ணிக்கோங்க! " என்று சொல்லி அவனிடம் நம்பரை கொடுத்தவள்  அவளுடைய தந்தை வரவும் " அப்பா இது அஸ்வந்த்! " என்று சொல்ல மகளின் பார்வை மாற்றத்தை புரிந்து கொண்டவர் புன்னகையுடன் அவனுக்கு கை கொடுத்தார். பின்னர் அவரை போக சொல்லிவிட்டு தான் வருவதாக சொல்லவும் மகளின் நிலையை உணர்ந்தவர் புன்னகையுடன் அவளது உடைமைகளை எடுத்து சென்றார்.

" அப்றம் ??" என்று அவன் கேள்வியுடன் பார்க்க அவளோ " கால் பண்ணுங்க! " என்று சொல்ல அவன் புன்னகையுடன் தலையாட்டினான். பின்னர் " ஓகே பை " என்று திரும்பி நடந்தவள் சில அடிகளுக்கு பின் திரும்பி " என்ன பேருல ஸ்டோரி எழுத போறேனு கேக்க மாட்டிங்களா??" என்று கேட்க அவன் யோசனையுடன் பார்த்தான். அவனது குழப்பத்தை ரசித்தவள் அவன் அருகில் வந்து " சபாரியா" என்று சொல்லவும் அவனுக்கு ஆச்சரியமானது.

" வாட்??  ஆர் யூ சபாரியா??" என்று அவன் நம்ப முடியாமல் கேட்க அவள் ஆமென்று தலையாட்டினாள். பின் அவனிடம் " ஐயாம் சௌந்தர்யா சபாபதி!  இப்போ புரிஞ்சுதா என் வருங்கால கணவரே!" என்று கேட்க அவன் சந்தோசத்துடன் தலையாட்டியவன் "இது எப்போ இருந்து??" என்று கேலி செய்தான். அவனை வெட்கத்துடன் பார்த்த சௌந்தர்யா " எல்லாம் அந்த புக்ல சபாரியா அஸ்வந்த்கிற பேரை பாத்ததுல இருந்து தான்" என்று சொல்லி முகம் சிவந்தாள்.

அஸ்வந்த் " ஃபைனலி என்னோட ஏஞ்சல் நம்பர் ஒன்னும், ஏஞ்சல் நம்பர் டூவும் ஒரே ஆள் தான்!  " என்று சொல்ல அவள் கலகலவென்று சிரித்தாள்.

பின்னர் அவனை கிண்டலாக பார்த்து " எங்கப்பா வெளியே தான் நிக்கிறாரு. சீக்கிரமா வந்து அவர் கால்ல விழுந்து பொண்ணு கேளுங்க, பாப்போம்" என்று சொல்ல அஸ்வந்த் காலரை தூக்கி விட்டு கொண்டே " வாங்க! இப்போ நான் எப்டி பெர்ஃபார்ம் பண்ணுறேனு மட்டும் பாருங்க!  அத பாத்துட்டு மாமனார் தானா அவர் பெத்த தேவதைய என் கைல  ஒப்படைப்பாரு " என்று சொல்ல சௌந்தர்யா வெட்கத்துடன் அவன் தோளில் தட்டினாள்.

அஸ்வந்த் புன்னகையுடன் அவனது தேவதையின் கையுடன் தன் கையை கோர்த்தவன் அவளுடன் சேர்ந்து அந்த ஜனக்கூட்டத்தை கடக்க தொடங்கினான்.  இந்த இரயில் பயணம் முடிந்த இடத்தில் அவர்களின் வாழ்க்கை பயணம் தொடங்கியது.....

  ************

ஹலோ  மக்களே

வாட்பேட்ல எழுதுன நான் பிரதிலிபில கால் பதிச்சப்ப போட்ட முதல் கதை இது. போட்டிக்காக எழுதுன சிறுகதை. அங்க ஜெயிச்சு அப்பவே ஆடியோவா போட்டாங்க. இங்கயும் இருக்கணுமேனு போட்டேன். கதை ஆரம்பக்கட்டத்துல எழுதுனதால எழுத்து கொஞ்சம் ஏறுக்குமாறு இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும். நாளைக்கு மலர்விழி - மகிழ்மாறனோட வர்றேன். குட் நைட்!                                                                                                                            

                                                                                                                    

1753024332-WhatsApp-Image-2025-07-20-at-182205_0c593e60.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 20, 2025 8:42 PM
(@crvs2797)
Estimable Member Member

கடைசியில அவன் காதலிச்ச தேவதை நம்பர் ஒன் கையையே பிடிச்சிட்டான்னு.... சொன்னாலும், கொஞ்சம் இடிக்குது. அதாவது அஸ்வந்த் காதலிச்சது சபாரியாவைன்னா..

அப்புறம் ஏன் தேவதை டூவுக்கும் மனசுல இடம் கொடுக்கிறான?

காதல்ல நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் எப்படி இருக்கும்...?

"உண்மை காதல் எதுவென்றால்

உன்னையும் என்னையும் தான் சொல்லும்" என்கிறது பொய்யா?

அப்ப அவனோட காதல் உண்மையில்லையோ...?

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 20, 2025 10:48 PM
(@kothai-suresh)
Estimable Member Member

அருமை 👌👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 20, 2025 10:50 PM

.

.