NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
தணிக்கையாளர்
 
Share:
Notifications
Clear all

தணிக்கையாளர்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“ஒரு ஆடிட்டர் எப்போவும் புரொபஷனல் எதிக்சை கைவிட்டுடக் கூடாது... நம்ம புரோபஷன்ல நமக்கு குடுக்கப்பட்டிருக்குற வேலை ஒரு நிறுவனத்துல செலவளிக்கப்பட்ட பணம் சரியான முறைல தான் செலவாயிருக்குதா? அதுக்குச் சரியான ஆதாரங்கள் இருக்குதா? பணம் கையாடல் நடந்திருக்குதா? இல்லனா செலவளிக்கப்பட்ட விதத்தை தவறா கணக்கு காட்டிருக்காங்களானு செக் பண்ணி ரிப்போர்ட் பண்ணுறது தான்... அதே நேரம் கிளையண்டோட ஒரு சுமூகமான ரிலேசன்ஷிப்ப மெயிண்டெய்ன் பண்ணணும்... an auditor is a watchdog not a bloodhound”

அன்றைய ஆடிட்டிங் வகுப்பில் நீளமாக பிரசங்கம் செய்தார் பட்டயக்கணக்காளரான பாலசுப்பிரமணியன். திருநெல்வேலியின் பிரபல கல்வி நிறுவனங்களுக்கு அவரே ஆஸ்தான தணிக்கையாளர்.

அவரிடம் தங்கள் பிள்ளைகளை ஆர்ட்டிகிள்ஷிப்பிற்கு சேர்க்கத் துடிக்கும் பெற்றோர்கள் திருநெல்வேலியில் அதிகம். பகுதி நேரமாக ஒரு பிரைவேட் இன்ஸ்டிட்டியூட்டில் பட்டயக்கணக்கு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பவர் தனது கொள்கைகளிலிருந்து விலகாதவர் என்று அவரது வட்டாரத்தில் பெயர் வாங்கியவர்.

அன்றைய தினம் ஒரு பட்டயக்கணக்காளரின் பணிகள், பொறுப்புகள் பற்றி பாடம் எடுத்தவர் விளையாட்டாகச் சொல்லிப் புரியவைத்தார்.

“இப்போ உங்க கிளையண்ட் ஆடிட்டிங் டைம்ல ஸ்டே பண்ணுறதுக்கு உங்களுக்கு ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டுக் குடுத்தார்னா நீங்க என்ன பண்ணணும்?”

“ஊர்ல இருக்குறதுலயே பெஸ்டான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணச் சொல்லணுமா சார்?”

குறும்புக்கார மாணவன் ஒருவன் கேட்கவும் பாலசுப்பிரமணியன் தனது கண்ணாடியை மூக்கின் மீது ஏற்றி விட்டவர் “நீ செஞ்சாலும் செய்வடா... ஐ.பி.சி.சிலயே இந்த வாய் உனக்கு” என்று கண்டித்தார்.

மாணவர்கள் அதை கேட்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்கவும் “சிரிக்காதீங்கடா... நமக்கான செலவை அவங்க தலைல கட்டுனோம்னா அதுக்கு அவங்க என்ன சொன்னாலும் நம்ம கேக்கவேண்டியதா இருக்கும்... எப்போ நம்ம கிளையண்ட் கிட்ட பேசுன ஃபீசை விட அதிக வசதிய எதிர்பாக்குறோமோ அப்ப நம்ம நேர்மையா வேலை செய்ய முடியாது” என்றார் கறார் குரலில்.

“சார் அப்ப சாப்பாடு?” இன்னொரு குறும்புக்காரனின் பதில்.

“அவங்க என்ன வாங்கிக் குடுக்குறாங்களோ அதை சாப்பிடணும்... அதை விட்டுட்டு நான் சாப்பிட்டா அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல்ல தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்க கூடாது” என்றார் பாலசுப்பிரமணியன்.

மீண்டும் வகுப்பில் சிரிப்பலை. சொல்ல வேண்டிய கருத்துக்களை நகைச்சுவை இழையோட சொல்லிவிட்டால் அவை என்றும் மறக்காது என்பது அவரது எண்ணம்.

வகுப்பு முடிந்ததும் கிளம்பியவர் அவரது ஆடிட்டிங் புத்தகத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட அவரிடம் கேள்வி கேட்ட குறும்புக்கார மாணவர்கள் இருவரும் அவரது வீடு இருக்கும் கோபாலசாமி கோவில் பகுதிக்கு மிதிவண்டியில் சென்றனர்.

“டேய் ஆடிட்டர் சார் சொல்லுற மாதிரி நம்மளும் நம்ம க்ளையண்ட் கிட்ட ஃபீஸ் தவிர வேற எந்தச் சலுகையும் எதிர்பாக்கக் கூடாதுடா”

பின்னே அமர்ந்திருந்தவன் கூற மிதிவண்டி ஓட்டியவனோ அலட்சியத்துடன் உச்சு கொட்டினான்.

“அட போடா! அவர் சும்மா பீலா விடுறார்... எங்க அண்ணாவோட ஆடிட்டர்லாம் ஃபேக்டரி விசிட் போறப்ப செம ஸ்ட்ரிக்டா ஹோட்டல் ரூம், ட்ராவல், ஃபுட் அரேஞ்ச்மெண்ட் பத்தி லிஸ்ட் குடுத்துடுவாராம்... அண்ணாவும் அவரோட போவான்... இங்க யாரும் எந்த சலுகையும் எதிர்பாக்காம இல்லடா... சார் சொல்லுறதுலாம் நடமுறைக்கு ஒத்துவராது... இவ்ளோ ஏன், நம்ம கிட்ட இவ்ளோ சொல்லுறார்ல அவர் கண்டிப்பா கிளையண்ட் எதாச்சும் எக்ஸ்ட்ராவா செஞ்சா வேண்டானு சொல்லுவார்னா நினைக்க?”

நண்பன் கூறியதற்கு மண்டையை ஆட்டிவைத்தான் பின் சீட்டில் அமர்ந்திருந்தவன்.

சில நிமிடங்களில் ஆடிட்டரின் வீடு வந்து விட அழைப்புமணியை அடித்துவிட்டுக் காத்திருந்தனர் இருவரும்.

சில வினாடிகளில் கதவு திறந்து சாத்வீகமான முகமொன்று புன்சிரிப்பை பூசிக்கொண்டு “அவரோட ஸ்டூடண்ட்ஸா? வாங்கப்பா... அவர் மாடில இருக்குற ஆபிஸ் ரூம்ல இருக்கார்... போய் பாருங்க” என்றது. அது வேறு யாருமல்ல, அவரது மனைவி தான்.

இருவரும் மாடியறையை நோக்கி விரையும் போது பாலசுப்பிரமணியனின் வெண்கலக்குரல் கணீரென்று கேட்டது.

“ஓகே! நோ ப்ராப்ளம்... கண்ணா மைன்ஸ் தானே... நானே டி.டி.எஸ் பிராப்ளமை பாத்துக்குறேன்... டோண்ட் ஒரி”

“அப்போ நான் கிளம்புறேன் சார்” என்றபடி ஒலித்தது இன்னொரு அமைதியான குரல். கூடவே ஷூ கால்களின் ஓசை.

இருவரும் அவரது அறை வாயிலில் நிற்கையில் அந்த இன்னொரு நபர் பாலசுப்பிரமணியனிடம் ஒரு டப்பாவை நீட்டினார்.

“ஜி.எம்மோட மச்சினர் யூ.ஏ.ஈல இருந்து பெர்ஃபியூம் குடுத்து விட்டார்... அதான் சார் உங்க கிட்ட குடுத்துட்டு வரச் சொன்னார்”

அலட்சியமாய் உச்சுக்கொட்டியவனும் அவன் நண்பனும் பாலசுப்பிரமணியன் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்று காத்திருக்க அவரோ அந்த டப்பாவை திருப்பியளித்தார்.

“தப்பா நினைச்சுக்காதீங்க... எனக்கு பெர்பியூம் போடுற பழக்கம் இல்ல... என் ஒய்புக்கு ஸ்கின் அலர்ஜி... அதனால அவளும் யூஸ் பண்ண மாட்டா... ஜி.எம் கிட்ட நான் நாளைக்கு மானிங் ஷார்ப்பா லெவன் தேர்ட்டிக்கு வந்துடுவேன்னு மட்டும் சொல்லிடுங்க... நாளைக்கு கண்ணா மைன்ஸ்ல சந்திப்போம்” என்று கரம் கூப்ப வந்தவர் நறுமண திரவியத்தை தன்னோடு எடுத்துக்கொண்டு வாயிலை நோக்கித் திரும்பினார்.

அங்கே இரு மாணவர்கள் நிற்பதை பார்த்ததும் புருவம் சுருக்க பாலசுப்பிரமணியனோ அவர்களை உள்ளே வருமாறு அழைத்தார். அவர்கள் உள்ளே வரவும் அந்த நபர் வெளியேறினார்.

“என்னடாப்பா என்ன விசயம்? எதுவும் டவுட்டா?” என்றவரிடம் இரு மாணவர்களும் புத்தகத்தை நீட்டினர்.

“ஓ மறந்துட்டேனா இதை?” என்றபடி வாங்கிக்கொண்டவர் அவர்களுக்கு நன்றி கூற மாணவர்களின் கவனம் அவரது மேஜையிலிருந்து சற்று தூரத்தில் இருந்த நீலவண்ண பெர்பியூம் பாட்டிலின் மீது படிந்தது.

பெர்பியூம் உபயோகிக்கவில்லை என்று சொன்னாரே என்ற ஐயத்துடன் அவரை பார்க்க அவரோ அவர்களின் கேள்வியைப் புரிந்துகொண்டவராய் பதிலளித்தார்.

“இப்போ வந்தவர் கண்ணா மைன்ஸோட புரொடக்சன் மேனேஜர்... டி.டி.எஸ்ல ஏகப்பட்ட குளறுபடி பண்ணிருக்காங்க... நான் நாளைக்கு ஃபேக்டரிக்குப் போய் எல்லாத்தயும் செக் பண்ணுறப்ப வேலை சரியா நடக்கணும்னா நான் சரியா இருக்கணும்... இன்னைக்கு பெர்பியூம் பாட்டிலை கைநீட்டி வாங்கிட்டா நாளைக்கு நான் கறாரா பேச முடியாதுல்ல... இதுவும் ஒரு வகை லஞ்சம் மாதிரி தான்” என்றார்.

இரண்டு மாணவர்களும் வாயடைத்துப் போயினர். இருவரும் அவரிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றவர்கள் மிதிவண்டியில் செல்லும் போது வருங்காலத்தில் தாங்களும் அவரைப் போல நேர்மையான தணிக்கையாளராக வரவேண்டுமென பேசிக்கொண்டே கோபாலசாமி கோயிலைக் கடந்து சென்றனர்.

நேர்மை பற்றி பாடம் எடுக்கும் முன்னர் அதை நாம் முதலில் பின்பற்ற வேண்டும் என்பதற்கு தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன் சிறந்த உதாரணம்.

*******

ஹலோ மக்களே

நாங்க ஸ்டூடண்ட்சா இருக்குறப்ப நடந்த சம்பவம் இது...  பிரதிலிபில தணிக்கைங்கிற பேர்ல டெய்லி டாபிக் குடுத்தப்ப ஜூலை 1, 2021ல எழுதுன சிறுகதை. அடுத்த வாரம் வேற ஒரு சிறுகதையோட வர்றேன். நன்றி!

1772365363-WhatsApp-Image-2026-03-01-at-51209-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 1, 2026 5:12 PM
(@crvs2797)
Honorable Member Member

அருமை, அருமை.. நேர்மையே வாய்மை தரும் என்கிறார் தணிக்கையாளர் சுப்ரமணியக், தவிர, முதல்ல கை சுத்தம் இருந்தால் தான் 

வாய்ல இருந்து வர வாக்கும் சுத்தமா இருக்கும் என்கிறார்.

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 1, 2026 6:32 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images