NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
கண்ணாமூச்சி ஏனடா
 
Share:
Notifications
Clear all

கண்ணாமூச்சி ஏனடா

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

நான் கண்ணாடிப் பொருள் போலடா”

பாடலுக்கேற்றபடி விரல்களில் அபிநயம் பிடித்து ஆடிக்கொண்டிருந்த ரோஹிணியின் விழிகள் எதேச்சையாய் அந்த நடன பயிற்சி அறையின் எண்ணற்ற வாயில்களில் ஒன்றின் பக்கம் அலைபாய மந்தகாசப் புன்னகை இதழில் தவழ நண்பனின் தோளில் கை போட்டு ஏதோ தீவிரமாய் பேசிக்கொண்டே அந்த அறைக்குள் அடியெடுத்து வைத்தான் உதய்.

அவனது பிரசன்னம் அவளைச் சிலையாக்கி விட அவளைத் தவிர்த்து மற்ற மாணவிகள் அனைவரும் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தனர்.

அவனைக் கண்டதும் “ஹாய் சீனியர்” என்று மரியாதை நிமித்தம் கையாட்டினர் மாணவர்கள் சிலர்.

அது ஒரு கல்லூரியின் நடன பயிற்சி ஹால்! அபிநயம் பிடித்து ஆடிய போதே கண்கள் அலைபாய்ந்த அந்த ரோஹிணி வணிகவியல் இரண்டாமாண்டு மாணவி.

கல்லூரிகளுக்கிடையேயான கல்சுரல்சில் அவர்களது வகுப்பு சார்பாக நடனப்போட்டியில் பெயர் கொடுத்திருந்தனர் ரோஹிணி மற்றும் அவளது தோழியர். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அவன் வந்துவிட்டான்.

ஏனோ அவனைக் கண்டால் ஐம்புலன்களும் அடங்கி மனம் அவன் பால் நாய்க்குட்டியாய் ஓடத் துவங்கி விடும் ரோஹிணிக்கு. அது அவளது தோழியர் குழாமிற்கு நன்றாகத் தெரியுமென்பதால் அவளது இப்போதைய ஸ்டாச்சு மோடிலிருந்து நார்மல் மோடிற்கு அழைத்து வருவதற்காக அவள் கையில் கிள்ளி வைத்தாள் மாலதி.

கையில் எறும்பு கடித்தது போல சுளீரென்று வலிக்கவும் வேதனையில் “எவடி அவ என்னைக் கிள்ளுனது?” என்று இத்தனை நேரம் இருந்த அடக்கம் ஒடுக்கம் சுக்குநூறாய் உடைய கடுப்பில் கத்தினாள் ரோஹிணி.

அவளின் இந்த சிம்ம கர்ஜனை நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களோடு சேர்த்து உதயையும் திரும்பி பார்க்க வைத்தது. அவனது பார்வை திரும்பவும் முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்ட ரோஹிணி அசட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

அவளருகே நின்ற மாலதி “ஆத்தா ரெண்டு அடி கூட அடிச்சுக்க.. இப்பிடி ஈனு இளிச்சு வைக்காத... பச்சைப்புள்ள நானு” என்று நேரங்கெட்ட நேரத்தில் கலாய்க்க

இன்னொருத்தியோ “இப்போ நீ இவளை என்ன கலாய்ச்சாலும் அவ காதுல ஏறாதுடி... மேடம் கண்ணு முழுக்க சீனியர் மேல இருக்கு” என்று தூரமாய் நின்று நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்த உதயைச் சுட்டிக் காட்ட சொன்னது போலவே ரோஹிணியின் விழிகளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.

மாலதி அவள் வைத்தக் கண் வாங்காது பார்த்ததில் கடுப்புற்றவள் இன்னும் ஒரு முறை நறுக்கென்று கிள்ளி “பொம்பளைப்புள்ள இப்பிடியா வச்சக் கண் வாங்காம பாத்து வைப்ப? சீனியர் மட்டும் திரும்புனா நீ செத்த மகளே” என்று அவசரமாக மொழிய

“ப்ச்... சும்மா நொய்நொய்ங்காத மாலு... நான் என்ன பெரிய தப்பு பண்ணீட்டேன்? ஜஸ்ட் சைட் அடிக்கிறேன்டி... ஹீ இஸ் மை கிரஷ்... அவரை சைட் அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றாள் ரோஹிணி உதய்யின் மீதிருந்த பார்வையை விலக்காதவளாய்.

தோழிகள் கலகலவென நகைக்க மீண்டும் உதய்யின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பியது. அவன் பொதுவாக அனைவரையும் தான் பார்த்து வைத்தான். ஆனால் ரோஹிணிக்கு என்னவோ அவன் தன்னை மட்டும் பார்ப்பது போன்ற பிரமை!

இது இன்று நேற்று தோன்றிய பிரமை அல்ல! இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே கல்லூரியில் அட்மிசனுக்காக அன்னையுடன் வந்தவள் அவனை முதன் முதலாகக் கண்ட போதே உதயமான பிரமை!

“போம்மா! இதுல்லாம் ஒரு காலேஜா? மனுசி படிப்பாளா இங்க? ரூல்சை பாரு... சுடிதார் தவிர வேற எந்த மாடர்ன் ட்ரஸ்சும் போடக்கூடாதாம்... மொபைல் யூஸ் பண்ணக்கூடாதாம்... பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் பேசவே கூடாதாம்.. இது காலேஜா ஜெயிலா? உனக்கு ஆசை இருந்துச்சுனா நீயே இங்க டிகிரி படி... நான் படிக்காத தற்குறியா இருந்தாலும் பரவால்ல... இந்த ஜெயில்ல எனக்கு அட்மிசன் வேண்டாம்”

மூச்சு பிடிக்க கத்திவிட்டு கால்களைத் தொப்தொப்பென்று எடுத்து வைத்து நடந்தவள் கோபத்தில் எதிரே வந்தவனை கவனிக்கவில்லை. இருவரும் மோதிக்கொள்ள அதில் சேதாரம் அவளுக்கே! அவனது தோளில் நங்கென்று முட்டிக்கொண்ட மூக்கின் வலி உச்சந்தலையைத் தாக்கி பொறி கலங்க வைத்துவிட்டது.

“அடேய் இடிமாடு பாத்து வரமாட்டியா? என் மூக்குல அடிபட்டு என்னோட பெர்சனாலிட்டிக்கு மட்டும் எதும் பாதிப்பு வந்துச்சுனா உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று கடுப்புடன் கத்தியவளுக்கு மூக்கின் வலியில் கண்கள் கலங்கியது.

கலங்கிய கண்களால் அருகே நின்றவனை ஏறிட்டவள் அப்போது தான் உதய்யை முதல் முதலாகப் பார்த்தாள். ஆறடி உயரம் அழகிய உருவம் என்ற அர்த்தமற்ற வர்ணனைகள் ஏதும் தேவையற்ற சராசரி உயரத்தில் ஆளுமை துலங்கும் வதனம்! நிதானமாய் ஏறிடும் விழிகள், எப்போதுமே குறுஞ்சிரிப்பு ஒளிந்திருப்பது போன்ற மாயையை உண்டாக்கும் இதழ்கள்!

இது போதாதா? “வாவ்! கண்டேன் கிரஷ்சை” என்றாள் அவள் மெதுவாக. அந்தக் குரலில் அவளுள் இருந்த மனசாட்சி விழித்துக்கொண்டு உதயை ஸ்கேன் செய்ய துவங்கியது.

“ஆர் யூ ஓகே? வலிக்குதா?” ஆழ்ந்த கவலை தொனிக்கும் குரலில் இயல்பாய் ஒட்டியிருந்த கம்பீரம் அவளது செவியில் விழவும் இல்லையென தலையாட்டினாள் ரோஹிணி.

“என்ன குரல்யா? என் கிட்ட மட்டும் மொபைல் இருந்துச்சுனா இதை ரெக்கார்ட் பண்ணி ரிங்டோனா செட் பண்ணிப்பேன்” மனதிற்குள் பேசிக்கொண்டாள் அவள்.

“லுக்! உன்னோட நோஸ் சிவந்துடுச்சு... ப்ளீடிங் எதுவும் ஆகுறதுக்குள்ள ஐஸ் கியூப் வச்சுக்கிறியா?” தன்னை விட சிறு பெண் என்பதால் உதய் ஒருமைக்குத் தாவ அதையும் ரோஹிணியின் பாழாய் போன கிரஷ் மனம் ரசித்தது. அவள் ரசிக்கும் ஆண்மகன் அவளுக்காக யோசிக்கிறான்!

“அடியே இதுக்குப் பேரு ஹியூமானிட்டி” இவ்வளவு நேர ஸ்கேனிங்  செயல்பாட்டிற்கு பிறகு நீதிமான் அவதாரம் எடுத்த மனசாட்சி கிண்டல் செய்தது அவளை.

உடனே “இல்ல... ஜஸ்ட் வலிச்சுது அவ்ளோ தான்” என்று சிரித்துச் சமாளித்தவளிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்று மந்தகாசப்புன்னகையுடன் அவளைக் கடந்தான் உதய்.

ரோஹிணி செல்பவனைப் பார்த்துவிட்டு செய்த அடுத்தக் காரியமே அவளது அன்னையிடம் போய் நின்றது தான்.

“உனக்கு இந்த காலேஜ் வேண்டாம் பாப்பா... வா நம்ம கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல போய் அப்ளிகேசன் வாங்குவோம்”

“என்னது?” ஏதோ சொல்லக்கூடாத வார்த்தையை அன்னை சொன்னது போல அதிர்ந்தாள் ரோஹிணி.

“நீ தான சொன்ன, இது காலேஜ் இல்ல, ஜெயில்னு... அவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் இங்க படிக்கணும்? வா” என்று அவளது கரத்தைப் பற்றியவரை தடுத்தாள் ரோஹிணி.

“என்னம்மா நீ புரியாம பேசுற? அவங்க யாருக்காக ரூல்ஸ் போடுறாங்க, எங்களுக்காக தான... நான் யோசிச்சு பாத்தேன்மா, எனக்கு இந்தக் காலேஜ் ரொம்ப பிடிச்சிருக்கு... முக்கியமா இங்க இருக்குற ரூல்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு”

அவளது அன்னை அவளை நம்பவில்லை.

“ஏய் நல்லா யோசிச்சுக்க... இங்க சுடிதார் தவிர வேற எந்த மாடர்ன் டிரஸ்சும் போடக்கூடாது... துப்பட்டாவ ரெண்டு பக்கமும் பின் பண்ணித் தான் போடணும்... காலேஜ் ஹவர்ஸ்ல வெளியே போகக்கூடாது”

“எல்லா ரூல்சும் நான் பாத்துட்டேன் என்னைப் பெத்த தெய்வமே... வா போய் அப்ளிகேசன் வாங்குவோம்”

எல்லாம் சரியாகப் போனது, அப்ளிகேசன் நிரப்பும் இடத்தில் “கூப்பிட்டீங்களா மேம்?” என்ற கேள்வியுடன் உதய் வந்து நிற்கும் வரை!

அவனைப் பார்த்ததும் துளிர்த்த பரபரப்பில் ‘Father’s occupation’ என்ற இடத்தில் ‘டிரைவர்’ என்று எழுதுவதற்கு பதில் ‘டாக்டர்’ என்று எழுதி வைத்தாள் ரோஹிணி.

அதை கவனித்துவிட்ட அவளது அன்னை அவள் தலையில் நறுக்கென்று குட்டி “டாக்டராம் டாக்டர்... எந்த உலகத்துல இருக்க நீ? உன்னால அப்ளிகேசன் வேஸ்ட் ஆயிடுச்சு... இன்னொன்னு கிடைக்குமோ என்னவோ?” என்று கோபமாய் திட்ட ஆரம்பிக்க உதய்யும் அவனை அழைத்த பேராசிரியையும் ஆபத்பாந்தவர்களாய் வந்து அவளைக் காத்தனர்.

“விடுங்கம்மா.. இப்போ தான ஸ்கூல் முடிச்சிருக்கா... சின்னப்பொண்ணு, விளையாட்டா என்னவோ பண்ணீட்டா... உதய் நீ இவங்களை ஆபிஸ்கு கூட்டிட்டுப் போய் இன்னொரு அப்ளிகேசன் வாங்கி குடுக்கிறீயா? அங்க கேட்டாங்கனா பத்மப்ரியா மேம் அனுப்புனாங்கனு சொல்லு”

“ஐ! என் கிரஷ்சோட நேம் உதய்... சூப்பரா இருக்குல்ல” தனக்குள்ளே குதூகலித்தவள் அவன் விண்ணப்பத்தை வாங்கி வந்து நீட்டவும் நிரப்ப ஆரம்பித்தாள். அதே நாளில் அவள் மனதில் நிரம்பி போனவன் தான் உதய்.

பின்னர் கல்லூரியில் சேர்ந்த பின்னர் எத்தனையோ முறை அவனை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறாள்! அவனும் வணிகவியலில் முதுகலை பயில்பவன் என்பதால் துறைத்தலைவர் அலுவலகத்தில் அவனைக் கடந்திருக்கிறாள்!

அப்போதெல்லாம் அவளைக் கவர்ந்தது அவனது அக்மார்க் மந்தகாசப் புன்னகை தான்! அதில் இருக்கும் ஈர்ப்புவிசை அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்றெல்லாம் தோழியரிடம் உளறி கொட்டி கேலிப்பேச்சை வாங்கி கட்டிக்கொள்வாள் ரோஹிணி.

ஆனால் அவன் மீதான ஈர்ப்பு மட்டும் குறைவேனா என்று அடம்பிடித்தது. நூலகத்திற்கு செல்லும் போதும், கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் போதும் அவன் எதிர்பட்டு விட்டால் அன்றைய தினம் ரோஹிணிக்குக் கொண்டாட்டம் தான்.

ஒரு முறை மாலதி கூட நீ சீனியரைக் காதலிக்கிறாயா என்று கேட்டுவிட்டாள். அவளை அற்பமே என்பது போல பார்த்த ரோஹிணி

“இது லவ் இல்லடி எருமை... இது ஒரு மாதிரி குட் ஃபீல்... எனக்குச் சீனியரைப் பாத்தா வயித்துல இருந்து ஹார்ட்டுக்கு தவுசண்ட் பட்டர்ஃப்ளைஸ் பறக்குற ஃபீல் வரும்... அவரோட ஸ்மைல் இருக்கே, ப்பா சான்ஸ்லெஸ்! லவ்னா இது எல்லாமே எனக்கு மட்டுமே சொந்தமாகணும்னு எனக்குள்ள ஒரு சுயநலம் வந்திருக்கும்.. இது லவ் இல்ல... எனக்கு அவரை பாத்தா மனசுக்கு நல்லபடி ஃபீல் ஆகுது... அவரோட வாய்ஸ், மேனரிசம் இதெல்லாம் கூஸ்பம்ப் உண்டாக்குது... இது வெறும் க்ரஷ் மட்டும் தான்”

இப்போதும் அப்படி தான்! அவனை ரசிக்க எனக்குப் பிடிக்கிறது! அவனது குரலைக் கேட்க பிடிக்கிறது! என்னை நோக்கி அவன் வீசும் மந்தகாசப்புன்னகை எனும் மாயச்சுழலில் சிக்கி காணாமல் போக பிடிக்கிறது! ஆனால் இவை அனைத்தும் காலம் முழுக்க எனக்கே; இவன் எனக்குரியவன் என்ற எண்ணம் மட்டும் தோணவேயில்லை! இது என்ன மாதிரி உணர்வு?

தன் சிந்தனை போன திசையிலிருந்து மீண்டவளின் செவிகளில் பாடல் ஒலித்தது.

அந்த நதியின் கரையை நான் கேட்டேன்  

அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன்  விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்

பாடலுக்கு ஏற்ப ஆட ஆயத்தமானவளின் விழியில் மீண்டும் உதய்யின் புன்னகை தவழும் முகம் சிக்கிக்கொள்ள “உங்களோட சிரிப்பு மட்டும் போதும் சீனியர், எனக்கு இந்த உலகமே எல்.ஈ.டி பல்ப் போட்ட மாதிரி பளிச்சுனு தெரியுது” என்று முணுமுணுத்தபடி ஆடத் துவங்கினாள் ரோஹிணி.

பதின்வயதின் இறுதியில் தோன்றும் இன்னது தான் என்று வரையறுக்கப்படாத இந்த உணர்வுக்குப் பெயரும் இல்லை! அதில் கல்மிஷமும் இல்லை! சுயநலமும் பொறாமையும் இல்லை!  மொத்தத்தில் இது உணர்வுகளின் கண்ணாமூச்சி!

************

ஹலோ மக்களே

இந்தச் சிறுகதை ஜூன் 2, 2021ல் பிரதிலிபி தினசரி தலைப்புக்காக எழுதுனேன். அப்புறம் இதையே டெவலப் பண்ணி நாவலா எழுதி அருணோதயம் மூலமா 'கண்ணாமூச்சி ஏனடி ரதியே'ங்கிற டைட்டில்ல புக்கா வந்துச்சு. அடுத்த ஞாயிறு இன்னொரு சிறுகதையோட வர்றேன். குட்நைட்!

1757851302-WhatsApp-Image-2025-09-14-at-173033_8b6f8022.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 14, 2025 5:31 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

wow செமயா இருக்கு ❤️ ..... முடிஞ்சா அந்த கதையையும் ரீரன் பண்ணுங்க அக்கா..... கான்செப்ட் நல்லா இருக்கு.... 😍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 14, 2025 9:00 PM
(@crvs2797)
Reputable Member Member
  1. சூப்பர், இதுவும் லவ்ல ஒரு வகை  போலயிருக்கு.
  2. பாதி பொண்ணுங்க இந்த மாதிரி மைண்ட் செட்ல தான் சுத்திட்டி இருக்காங்கன்னே தோணுது போங்க.

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 14, 2025 9:08 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@hn5 Aduthu intha kathaiya rerun paniduvom... 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : September 14, 2025 9:17 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 gen z problem 😍 😍 😍 but avanga happya thaan irukkanga 😎 😎 😎 😎 😎 😎

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : September 14, 2025 9:20 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

@nithyamariappankngmail-com aama aama 🤣

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 18, 2025 5:52 PM
(@ananthi)
Trusted Member Member

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 23, 2025 2:46 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@ananthi தேங்க்யூ 😍 😍 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : October 23, 2025 7:01 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images