NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

விட்டிலாபுரம் பாண்ட...
 
Share:
Notifications
Clear all

விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

தூத்துக்குடி விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவில்: தென்பண்டரிபுரம் இதுதான்!

தூத்துக்குடி மாவட்டத்துல இருக்குற விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவில், ரொம்ப பழமையானதும், அதே சமயம் புதுமையாவும் இருக்குற ஒரு இடம். வடநாட்டுல பண்டரிபுரம்னு ஒரு கோவில் இருக்குற மாதிரி, நம்ம ஊர்ல இதை 'தென் பண்டரிபுரம்'னு கூப்பிடுறாங்க. அங்க வட பண்டரிபுரத்துக்குப் போய் முடிக்க முடியாத காரியங்கள்லாம் இங்க வந்து செஞ்சா பலிக்கும்னு சொல்வாங்க!

தல வரலாறு

விஜயநகரப் பேரரசு செழிப்பா இருந்த காலம். அவங்களோட பிரதிநிதிகள் பல இடத்துலயும் ஆட்சி செஞ்சுட்டு இருந்தாங்க. அப்படி விட்டலராயர்னு ஒரு ராஜா, நம்ம தென்பகுதியோட பிரதிநிதியா, தாமிரபரணி ஆத்துக்குக் கரைல இருக்குற முறப்பநாட்டைத் தலைநகரா வெச்சு ஆட்சி பண்ணிட்டு இருந்தார். அவருக்கு பண்டரிபுரத்துல இருக்குற பாண்டுரங்க விட்டலர் மேல ரொம்ப பக்தி. 'தினமும் அவரை நேர்ல போய் கும்பிடணும்'னு ஆசைப்பட்டார். ஆனா ஆபீஸ் வேலை காரணமா அவரால வடநாடு போகவே முடியல.

ஒருநாள் திடீர்னு ராஜாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு. 'மக்கள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை தரணும்னா, அது கடவுளால மட்டும்தான் முடியும். அதுவும் பாண்டுரங்கனாலதான் முடியும். அதனால, பாண்டுரங்க விட்டலருக்கு இங்கயே ஒரு கோவில் கட்டணும்'னு முடிவு பண்ணினார்.

அந்த நாள் வர்ற வரைக்கும் பாண்டுரங்கரை மனசுல நெனச்சு தியானம் பண்ண ஆரம்பிச்சார். ஒருநாள் ராஜா கனவுல பாண்டுரங்கர் வந்து, "ராஜா! தாமிரபரணி ஆத்துல ஒரு எலுமிச்சை பழம் மிதக்கும். அதுக்குப் பின்னாடியே போனா ஒரு இடத்துல அந்தப் பழம் சுத்திக்கிட்டு அப்படியே தண்ணியில நிக்கும். அங்க தோண்டுனா என் சிலை கிடைக்கும். அப்போ உன் தலைக்கு மேல ஒரு கருடன் சுத்தும். அந்தக் கருடன் வழிகாட்டினபடி மேற்கு பக்கம் போய், கருடன் அடையாளம் காட்டுற இடத்துல என்னை பிரதிஷ்டை பண்ணி கும்பிடு"ன்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டார்.

பாண்டுரங்கர் வருவார்னு காத்துட்டு இருந்த ராஜாவுக்கு இது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தாமிரபரணி ஆத்துக்குக் கரைக்கு தன்னோட வீரர்களோட போனார். அப்போ தாமிரபரணி ஆத்துல ஒரு எலுமிச்சை பழம் மிதந்து போச்சு. ராஜாவும், படை வீரர்களும் அந்தப் பழத்தைப் பின்னாடியே போனாங்க. அது ஒரு இடத்துல சுத்திக்கிட்டு நின்னுச்சு. அதுக்கு மேல கருடன் வட்டமிட்டுச்சு. அங்க தோண்டுனதும், பாண்டுரங்கனோட உற்சவர் சிலை கிடைச்சுது. அப்புறம் கருடன் போன பாதையிலயே, பாண்டுரங்கனை நெஞ்சோட அணைச்சபடி நடந்தார் ராஜா.

அப்படியே கருடன் ஒரு இடத்துல உக்காந்து இடம் காட்டுன பகுதியில, பாண்டுரங்கரை பிரதிஷ்டை பண்ணி கோவிலைக் கட்டினார். கோவிலைச் சுத்தி ஊர் உருவாச்சு. ராஜாவோட பேர்லயே 'விட்டிலாபுரம்'னு அந்த ஊரைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. கோவில் உருவானதும் ராஜா தினமும் அங்க போய் பூஜைகள் செஞ்சுட்டு வந்தார். வட பண்டரிபுரம் போக முடியாதவங்க, இங்க வந்து கும்பிட்டாலே எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும்னு சொல்றாங்க.

இங்க மூலவர் 'பாண்டுரங்க விட்டலர்'னு பேர்ல கிழக்கு திசையை பார்த்து நின்னுக்கிட்டு அருள்பாலிக்கிறார். பக்கத்துல ருக்மணி, சத்யபாமா அம்மாளும் இருக்காங்க. ராஜா கண்டுபிடிச்ச உற்சவமூர்த்தி 'பாண்டுரங்கர்'னு பேர்ல, ரெண்டு கையையும் இடுப்புல வெச்சுக்கிட்டும், மத்த ரெண்டு கையில சங்கு, சக்கரமும் வெச்சு காட்சி தர்றார். உற்சவர் பக்கத்துல ருக்மணி, சத்யபாமா, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீலாதேவி அப்படின்னு எல்லாரும் இருக்காங்க.

கோவிலுக்கு முன்னாடி முதல்ல 16 தூண்கள் கொண்ட மண்டபம் இருக்கு. அடுத்து பெரிய மண்டபத்துல பலிபீடம், கொடிமரம் இருக்கு. இந்த கொடிமரம் ரொம்ப உயரமா இருக்குறது, சாமியோட அருளை காட்டுதாம். அடுத்து கருடாழ்வார் சன்னிதி மேற்கு திசையை பார்த்து இருக்கு. கோவிலுக்குள்ள ருக்மணி, சத்யபாமா, சேனை முதல்வர், உடையவர்களுக்குனு தனித்தனி சன்னிதிகள் இருக்கு. கோவில் தூண்கள்ல குட்டி குட்டி சிற்பங்கள்லாம் அழகா செதுக்கி இருக்காங்க.

இங்க மார்கழி மாசத்துல நடக்குற வைகுண்ட ஏகாதசி விழா, அந்தக் காலத்துல ரொம்ப பிரமாண்டமா நடந்திருக்கு. இந்த கோவில் பூலோக வைகுண்டம்னு சொல்றதால, இங்க பரமபத வாசல் கிடையாது. விட்டிலாபுரத்துல நம்ம ஆழ்வார் சிலை வந்த காலத்துல இந்தக் கோவில் ரொம்ப சிறப்பா இருந்திருக்கு. இசை, நாட்டியத்துல கெட்டிக்காரங்கல்லாம் அரங்கேற்றம் பண்றதுக்கு முன்னாடி, பாண்டுரங்க விட்டலரை கும்பிட்டுட்டுப் போய் அவங்களோட அரங்கேற்றத்தை நடத்துறாங்க.

இங்க சாமிக்கு படைக்கப்படுற திரட்டுப்பால், பால்பாயசம் ரொம்ப விசேஷம். கல்யாணம் ஆகணும்னு நெனைக்கிறவங்களும், குழந்தை வேணும்னு கேக்குற பக்தர்களும் இங்க திரட்டுப்பால் செஞ்சு வழிபட்டு பலன் அடையறாங்க. குழந்தைங்க படிப்புல நல்லா வரணும்னு சில பக்தர்கள் பால்பாயசம் குடுத்து வழிபடுறாங்க.

தடைகளை தாண்டி எழுந்த கோவில்:

இந்த கோவிலைக் கட்டின ராஜா, முதல்ல இதை வடநாட்டுல இருக்குற பாண்டுரங்கன் கோவில் மாதிரியே கட்ட ட்ரை பண்ணிருக்கார். அதுக்காக தன்னோட வீரர்களை வடக்கே அனுப்பி அங்க இருக்குற சிற்பிகளை கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கார். ஆனா அவங்க வர்றதுக்கு லேட் ஆனதால, இங்க இருக்குற சிற்பிகளை வெச்சே கோவிலுக்குள்ள இருக்குற ருக்மணி சன்னிதியை ரொம்ப அழகா, நிறைய வேலைப்பாடோட கட்டி முடிச்சார். மூலவர் கருவறையைக் கட்ட ட்ரை பண்ணப்போ திருவாங்கூர் மகாராஜா, விஜயநகரப் பேரரசுக்குக் கட்ட வேண்டிய கப்பம் (பணம்) கட்டாததால, அந்த ராஜா மேல விட்டல் ராஜா படையெடுக்க வேண்டியதா போச்சு.

இதனால மத்த பகுதிகளை அவசர அவசரமா கட்டி முடிச்சார். மன்னன் இந்தக் கோவிலை 1547-ல கட்டினதா கல்வெட்டுல இருக்குற தகவல் சொல்லுது. நிறைய சண்டைங்க வந்த காரணத்தால இந்தக் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்படலனு சொல்றாங்க. பிரமாண்டமான இந்த கோவில், இப்போவும் ராஜகோபுரம் இல்லாமத்தான் இருக்கு.

இந்த கோவில் தினமும் காலைல 7 மணியில இருந்து 9 மணி வரையும், சாயங்காலம் 5 மணியில இருந்து நைட் 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் பண்றதுக்காக திறந்து இருக்கும்.

கோவில் எங்க இருக்கு?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகால விட்டிலாபுரம் கிராமம் இருக்கு. திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டுல செய்துங்கநல்லூர்ல இருந்து ஆட்டோ புடிச்சு போலாம். திருநெல்வேலி ஜங்சன்ல இருந்து டவுண் பஸ் வசதியும் இருக்கு.

ஷிவானி பிறந்தநாளுக்காக இந்தக் கோவிலுக்கு நாங்க ஃபேமிலியா போனோம். இந்த திங்கள்கிழமை அங்க கும்பாபிஷேகம் முடிஞ்சுது. எங்கப்பாவோட ஃப்ரெண்ட் அங்க அர்ச்சகரா இருக்காங்க. உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா கட்டாயம் போங்க. க்யூல நிக்கணும், ஸ்பெஷல் தரிசனம், சாதாரண தரிசனம்னு எந்தக் கெடுபிடியும் இல்லாம நிம்மதியா சாமி கும்பிட்டுட்டு வரலாம்.

 

1752221449-WhatsApp-Image-2025-07-11-at-133939_f2e73cb7.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 11, 2025 1:40 PM
(@crvs2797)
Estimable Member Member

அடேயப்பா...! கதை எழுதுறதுல தான் ஒரு கலக்கு கலக்கறிங்கன்னு நினைச்சா, கோவில் தல வரலாறு, வழி, சிறப்பம்சம் அதை சொல்றதுலயும் சூப்பர்வழிகாட்டியா இருக்கறிங்களே...

சிறப்பு, மிக மிக சிறப்பு.

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 11, 2025 6:27 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 நன்றி சிஸ்... ரொம்ப அமைதியான கோவில் இது... ஆக்சுவலி அர்ச்சகர் அங்கிள் கோவில் பிரகாரம் சுத்தியிருக்குற இடங்களைப்  ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடச் சொன்னாங்க... இன்னும் நிறைய பேருக்கு இந்தக் கோவில் பத்தி தெரியாது.. அவங்க தெரிஞ்சிக்க உதவியா இருக்கும்னு தான் இந்த பதிவு போட்டிருக்கேன்

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 11, 2025 7:33 PM

.

.