.
.
இன்னைக்கு நம்ம பாக்க போற கோவில் எங்க ஊரோட அடையாளமான நெல்லையப்பர் கோவில். அந்தக் கோவில் மேல அவ்ளோ க்ரேஸ் சின்ன வயசுல இருந்து.
திருநெல்வேலி பெயர்க்காரணம் :
திருநெல்வேலிக்கு ஏன் இந்தப் பேரு வந்துச்சுன்னு ஒரு அருமையான கதை இருக்கு.
வேதபட்டர்ன்னு ஒருத்தர் இருந்தாரு. அவரு சிவபெருமான் மேல ரொம்ப பக்தி வச்சிருந்தாரு. அவரோட பக்தியைச் சோதிக்கணும்னு சிவன் நினைச்சார் போல, வேதபட்டரை ரொம்ப வறுமையில தள்ளிவிட்டாரு. சிவன் தன்னோட பக்தர்களை ரொம்ப சோதிப்பார்னு சொல்லுவாங்க.
அதனால, வேதபட்டர் என்ன பண்ணுவாருன்னா, சாமிக்கு நைவேத்தியம் படைக்கணுமேன்னு, தினமும் வீடு வீடாப் போய் நெல்லைச் சேகரிச்சிட்டு வருவாரு. அப்படி ஒருநாள் நெல்லை எல்லாம் சேகரிச்சுட்டு வந்து, கோயிலுக்கு முன்னாடி காயப் போட்டுட்டு, குளிக்கப் போனார்.
திடீர்னு மழை வர ஆரம்பிச்சுடுச்சு! ஐயோ, நெல் எல்லாம் நனைஞ்சுடுமேன்னு வேதபட்டர் வேகவேகமா ஓடிவந்து பார்த்தார். என்ன ஆச்சரியம் பாருங்க! மழைத் தண்ணி, நெல்லைச் சுத்தி ஒரு வட்டம் போட்டு, நெல்லைக் கொண்டு போகாம அப்படியே நிக்குது! நடுவுல நெல் மட்டும் வெயில்ல காயுற மாதிரி இருக்கு! இதைப்பார்த்ததும் வேதபட்டர் அசந்துபோயிட்டாரு.
மழை பெஞ்சுமே நெல் நனையாததை பார்த்த வேதபட்டர், இந்த அதிசயத்தை உடனே ராஜா கிட்ட சொல்ல ஓடினார். அப்போ மன்னனா இருந்த ராம பாண்டியன் உடனே ஓடோடி வந்து பார்த்தார். நெல் நனையாம இருக்கிறதை பார்த்து மன்னனும் ரொம்பவே ஆச்சரியப்பட்டார்.
அன்றைக்கே, அந்த நெல் நனையாம காத்த இறைவனுக்கு "நெல்வேலி நாதர்"னு பேர் வச்சார். அதுமட்டுமில்லாம, அதுவரைக்கும் வேணுவனம்னு இருந்த அந்தப் பகுதிக்கு, அன்னைல இருந்து "திருநெல்வேலி"ன்னு பேரை மாத்திட்டாரு.
அப்படித்தான் நம்ம திருநெல்வேலிக்கு இந்தப் பேரு வந்துச்சாம்! சூப்பரா இருக்குல்ல இந்தக் கதை!
திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டுல ‘திருநெல்வேலிப் பதிகம்’ பாடிருக்கார். சோ அப்பவே இந்தப் பேர் இருந்திருக்கு.
கோவில் அமைப்பு:
திருநெல்வேலியில இருக்குற அருள்திரு காந்திமதி நெல்லையப்பர் கோயில் இது ஆசியாவிலேயே ரொம்பப் பெரிய சிவாலயம்னு சொல்லுவாங்க.
இந்தக் கோவிலோடு ஸ்பெஷல் என்னனா அம்பாளுக்கும் (காந்திமதி அம்மன்), சுவாமிக்கும் (நெல்லையப்பர்) தனித்தனியா ரெண்டு கோயில்கள் உண்டு. ஆனா, இந்த ரெண்டு கோயிலையும் இணைக்கிற மாதிரி, நடுவுல ஒரு அழகா செதுக்கின கல் மண்டபம் இருக்கு. இது பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும்.
அம்பாள் சன்னதிக்குப் பக்கத்துலேயே, ஒரு ஆயிரம் கால் மண்டபம் இருக்கு. பேர்லயே இருக்குற மாதிரி, இந்த மண்டபத்துல ஆயிரத்துக்கும் மேல தூண்கள் இருக்கும். இதெல்லாம் எப்படி கட்டுனாங்கன்னு நினைச்சா ஆச்சரியமா இருக்கும்!
கோயிலுக்குள்ள நுழைஞ்சதும், பெரிய, பளபளன்னு ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை இருக்கும். அதைப் பார்த்தாலே ஒரு பக்தி உணர்வு வந்துடும். அது வருசம் வருசம் வளரும்னு சொல்லுவாங்க.
இரண்டாவது பிரகாரத்துல ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்னு சில தூண்கள் இருக்கும். இந்தத் தூண்களை சும்மா தட்டிப் பாருங்க! ஒவ்வொரு தூணும் ஒரு இசையை, அதாவது ஸ்வரத்தை, வெளியேற்றும். ச, ரி, க, ம, ப, த, நி... இப்படி ஒவ்வொரு சப்தத்தையும் கேட்கலாம். அந்தக் காலத்து சிற்பிகள் எப்படி இதை செஞ்சாங்கன்னு பார்த்தா மலைச்சு போயிடுவோம்!
இந்த இரண்டாவது பிரகாரத்துலதான், தாமிர சபையும் இருக்கு. இதுவும் இந்தக் கோவிலோட ஒரு முக்கியமான பகுதி.
தேரோட்டம் இதர திருவிழாக்கள்:
இந்தக் கோவில்ல வருஷம் பூரா பண்டிகைக்குக் குறைவே இருக்காது!
குறிப்பா, ஆனிப் பெருந்திருவிழா ரொம்பவே பிரம்மாண்டமா நடக்கும். இது ஒரு 10 நாள் திருவிழா! இந்த விழாவுல தேரோட்டம் தான் ரொம்பவே ஸ்பெஷல். தேரை இழுக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை தரிசிப்பாங்க. அந்த சமயத்துல திருநெல்வேலியே களைகட்டிடும்! என்னில் மோகனகீதமாய் கதையில இந்த தேரோட்டம் பத்தி எழுதிருப்பேன். போன வாரம் தான் தேரோட்டம் முடிஞ்சுது. ஷிவானி பீறந்தநாள் அன்னைக்கு. அங்க ரொம்ப கூட்டமா இருந்ததால எங்களால போக முடியல.
அது போக, ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழானு மத்த பண்டிகைகளும் இங்க ரொம்ப விமரிசையா கொண்டாடுவாங்க.
இந்தக் கோவிலோட ரதவீதில தான் திருநெல்வேலி ஸ்பெஷல் இருட்டுக்கடை அல்வா இருக்கும். திருநெல்வேலிக்கு வந்திங்கனா நெல்லையப்பர் காந்திமதியை பாக்காம போகாதிங்க.
Share your Reaction
அய்யய்யோ..! அப்படின்னா உங்களை பார்க்க வரவேணாம்ன்னு சொல்றிங்களா, உங்க ஷிவானி குட்டிமாவை பார்க்க வரவேணாம்ன்னு சொல்றிங்களா..? போங்க உங்க பேச்சு நான் கா !
ஜோக் அபார்ட்ஸ், தள வரலாறு சிறப்பு, மிக சிறப்பு. அதுவும் அந்த ஏழிசை ஸ்வரங்களை வெளிப்படுத்துற தூண்கள்
மிக மிக ஆச்சரியம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@crvs2797 தாராளமா வாங்க... ஆல்வேஸ் வெல்கம் 😍 😍 😍
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan