
தென்காசிக்கு பக்கத்துல 5 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற ஒரு ஊர் இலஞ்சி. அங்க இருக்குற கோவில் தான் இலஞ்சி குமாரர் கோவில். இலஞ்சி அப்படின்னா மகிழ மரம்னு ஒரு அர்த்தம் உண்டு.
சித்ரா நதி கரையில, கபிலர், காசிபர், துருவாசர்னு மூனு முனிவர்களுக்கு இருந்த சந்தேகங்களைத்ட் தீர்த்து வைத்து, அவங்க கேட்டதுக்கு ஏத்த மாதிரி, இங்க 'இலஞ்சி குமாரரா' வள்ளி, தெய்வானையோட சேர்ந்து காட்சி கொடுத்துக்கிட்டு இருக்காரு.
அது என்ன சந்தேகம்?
'உண்மையான கடவுள் யாரு?'ன்னு கபிலர், துர்வாசர், காசிபர் போன்றவங்க கேட்டப்போ, 'நானே பரம்பொருள்'ன்னு சொல்லி இளமைப்பருவ குமரனா அருள்பாலிச்சதால இவருக்கு குமாரசுவாமினு பேர். கேக்குற வரத்தை அப்படியே கொடுக்கறதால இவரை வரதராஜப்பெருமான்னும் கூப்பிடுறாங்க. வரதன் அப்படின்னா வரம் கொடுக்கிறவர். அதனால, இங்க இருக்கற முருகன் கேட்டவங்களுக்கு கேட்ட வரத்தை தர்றவரா இருக்காரு.
இந்தக் கோவிலோட மூலவர் சிவபெருமான். அவருக்கு இருவாலுக ஈசர்ன்னு ஒரு பேர் இருக்கு. அகத்திய முனிவர் வெண்மணலால சிவபெருமானோட லிங்கத்தைச் செஞ்சார். அம்மனோட பேரு இருவாலுக ஈசர்க்கினியாள்.
சிவனுக்கும் பார்வதிக்கும் இமயமலையில் கல்யாணம் நடந்தது. அதை பார்க்கறதுக்காக எல்லா ஊர்களிலிருந்தும் எல்லாரும் வடக்கே வந்து சேர்ந்துட்டாங்க. அதனால வடதிசை குனிஞ்சு, தென்திசை நிமிர்ந்துடுச்சு. அத சரி செய்யறதுக்காக, சிவபெருமான் அகத்திய முனிவர தெற்கு பக்கம் போகச் சொன்னார்.
இறைவன் சொன்னத அப்படியே கேட்டு, அகத்தியர் தெற்கு நோக்கி கிளம்பி, பொதிகை மலையில் இருக்கிற குற்றாலத்துக்கு வந்தார். அங்க இருந்த கோவில் விஷ்ணு கோவில். அதனால, அங்க இருந்த வைணவர்கள் அகத்தியர கோவிலுக்குள்ள விடல.
அதனால, அகத்தியர் சித்ரா நதிக்கரைக்கு வந்து, வெண் மணலால சிவலிங்கம் செஞ்சு பூஜை பண்ணினார். தேவநாகரி மொழியில வெண்மணலுக்கு "இருவாலுகம்"னு பேரு. அதனால, அந்த சிவலிங்கத்துக்கு "இருவாலுக ஈசர்"னு பேரு வந்துச்சு.
கோவில் கட்டுமானம்
இந்தக் கோவில் ரொம்பப் பழமையானது. இருந்தாலும், 14-ம் நூற்றாண்டில மாறவர்மன் குலசேகர பாண்டியன் தான் இதை மறுபடியும் புதுப்பிச்சுக் கட்டினார். அதுக்கப்புறம், 15-ம் நூற்றாண்டில சொக்கம்பட்டி ஜமீன்தாரரான காளத்திய பாண்டியன், கோவிலைச் சுத்தி மதில் சுவரை கட்டி, கோவிலுக்கு இன்னும் சிறப்பைக் கொடுத்தார்.
இலக்கியச்சிறப்பு
நீர், தாமரை எல்லாம் நிறைஞ்ச இடம்னு அர்த்தம் வர இலஞ்சிங்கிற இந்த ஊர்ல எழுந்தருளி அருள்பாலிக்கிற திரு இலஞ்சிகுமாரரை அரும்பெரும் புலவரான அருணகிரிநாதர் தன்னோட திருப்புகழ்ல பாடி வணங்கியிருக்கார்.
எப்படி போகலாம்?
இந்தப் பழமையான கோவில், தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில 5 கிலோமீட்டர் தூரத்துலயும், குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில 2 கிலோமீட்டர் தூரத்துலயும் இருக்கு.
மதுரை, திருநெல்வேலி, தென்காசி போன்ற ஊர்களிலிருந்து பஸ், ரயில், ஷேர் ஆட்டோ வசதிகள் இருக்கு.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
தம்பி எடுத்த ஃபோட்டோ
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
போட்டோ நம்பர் 2
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
போட்டோ நம்பர் 3
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
Naan yengeyllaam poganummnu list pottu vachchirukkeno athellaam nee pathivu podura ma 😘.yen appan mugan manasu vachchi seekkiram naan poganum tharicikka🙏🙏
Share your Reaction
🙏🙏🙏🙏🙏🙏🙏
Share your Reaction
@sasikumarmareeswari சீக்கிரம் போறதுக்கான வாய்ப்பை முருகன் உருவாக்குவார்க்கா... 🤩 🤩 🤩 🤩
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
@ananthi நன்றி சிஸ் 🤗 🤗 🤗
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan






