NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
ஸ்பகடி பாஸ்தா (சிம்...
 
Share:
Notifications
Clear all

ஸ்பகடி பாஸ்தா (சிம்பிள்)

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

சிம்பிள் ஸ்பகடி பாஸ்தா ரெசிபி

 

தேவையானப் பொருட்கள்

 

  1. ஸ்பகடி பாஸ்தா – பாக்கெட்டில் பாதி அளவு (2 பேருக்கு)
  2. ஆலிவ் ஆயில் / வெண்ணெய் – தேவையான அளவு
  3. பூண்டு – 5 பற்கள்
  4. சில்லி ஃப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
  5. கொத்துமல்லி தழை – ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
  6. சீஸ் – துருவியது

 

செய்முறை

 

  • தண்ணீரில் உப்பு, சிறிதளவு சமையல் எண்ணெய் ஊற்றி ஸ்பகடியைப் போட்டுக் கொதிக்கவிடவும்.
  • அல் டென்டே பதம் வந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஆற வைக்கவும்.
  • வாணலியில் வெண்ணெய்யை உருக்கி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸை போட்டு வதக்கவும்.
  • வதக்கிய கலவையில் ஸ்படி வேக வைத்த தண்ணீரை ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஊற்றிவிட்டு ஸ்பகடியை அதில் போட்டுக் கிளறவும்.
  • பின்னர் கொத்துமல்லி தழையைத் தூவி, சீஸைத் துருவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கவும்.
  • சிம்பிளான ஸ்பகடி பாஸ்தா தயார்.

 

குறிப்பு 

அல் – டெண்டே பதம் என்பது பாஸ்தாவை வேக வைக்கும் பதம். பாஸ்தா முழுவதுமாக வெந்துவிடக் கூடாது. ஒரு பாஸ்தாவை எடுத்துக் கத்தியால் வெட்டிப் பார்க்கையில் வெளிப்பகம் நன்றாக வெந்தும் உள்ளே சிறிதளவு வேகாத நிலையிலும் இருந்தால் அது அல் டெண்டே பதம். அடுத்தக் கட்ட சமையல் முறையில் மீண்டும் உணவுப்பொருட்களோடு பாஸ்தா சமைக்கப்படும்போது முழுவதுமாக வெந்துவிடும். (செஃப் ஃப்ரெண்ட் ஒருத்தர் சொன்ன குறிப்பு இது)

 

இதோ எங்க வீட்டுல செஞ்ச ஸ்பகடி (டயட் இருப்பதால நோ சீஸ்)

 

1750587497-WhatsApp-Image-2025-06-22-at-152246_747c842a.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 22, 2025 3:48 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images